Monday, April 30, 2007

அடர் கானகப் புலிகளின் குகை திரும்பல்கள்




எனது பிரதிகளின் துண்டொன்று உன் சுயத்தை அசைத்த சிறுபொழுதின் சலனத்தில் உன்னிடமிருந்து வெளிப்பட்ட சொற்கள் பிரயாணித்து என் இருப்பை வந்தடைந்தது.கதவு தட்டி உட்புகுந்த உன் சொற்கள் யுகங்களின் மீட்பாக,நம் ஆதி உறவின் உயிர்த்தெழலாக,சபிக்கப்பட்ட என் நிகழை மீள்பதிவித்தது.முடிவற்ற ஒன்றின் துவக்கங்கள் ஆச்சர்யங்களாய் மட்டுமே இருக்க முடியும் என்கிற விதிகளின் படி ஆச்சர்யங்களின் மொத்த உருவமாய் நீ என்னை ஆக்ரமித்தாய்.புதிதாய் என்னை மீட்டெடுத்த உன் சொற்களின் தடம் பற்றி உன்னிலிருந்து மேலும் சொற்களைப் பெற புதிதாய் நீவிரும்பும்படி என் பிரதிகளைக் கட்டமைத்தேன்.ஆதியின் வாசனைகளோடும் இருண்ட கனவுகளின் வெளித்தோன்றலாகவும் நீ என்னை ஆக்ரமித்தாய் முழுமையாய்.

குழப்பமாய் நீளும் என் கனவுகளின் நீட்சி இறுதியில் உன்னுருவம் கண்டதிர்ந்தது. அடர் கானகத்தில் நாம் புலிகளாய் அலைந்திருந்ததின் எச்சத்தை உன் கண்களில் தேக்கி வைத்திருந்தாய்.ஒரு மழையிரவில் இருள்குகையில் நம் கடைசிப் புணர்வில் உறைந்த நொடிகளை நீ உதடுகளில்தேக்கி வைத்திருந்தாய்.சாபங்கள் நிறமழியும்காலமென்பதை வெகு விரைவாய் உணரச் செய்தது உன் வாசனை.தேம்பியிருந்த என் தனிமையின் வலிகள் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியது. அழுகையின் உச்சத்தில் கரையத்தொடங்கிய சுயம் உன்னை மூழ்கடித்தது.

கர்வம் கரைந்தழிந்த வெளியில் என் பேச்சுக்கான ஏக்கங்களின் வெளிப்பாடாய் உள்புதைந்திருந்த சொற்கள் வார்த்தைகளாய் பெருகி இக்காற்றினை நிரப்பத் தொடங்கியது.இடைவிடாத பேச்சுக்களில் உறைவித்தோம் காலத்தை.நீ பல யுகங்கள் பெண்ணாகவே இருந்திருக்கிறாய். வாழ்தலின் துயரமனைத்தையும் கர்வத்தோடு சுமந்தலைந்திருக்கிறாய்.குருதி கசிந்தஉள்ளாடைகளை யாருக்கும் தெரியாமல் உன் தனியறையில் மறைத்து வைத்திருக்கிறாய்.சாபத்தின் நீட்சியாய் நானும் ஆணாகவே உயிர்த்திருந்தேன்.தனிமையின் பரிகசிப்பைத்தவிர வேறெந்த வலிகளும் என்னிடமில்லை.இதுவரை என் குறிகளை யாரும் வன்புணர்ந்ததில்லை.விறைத்து நீண்ட எந்த ஒன்றும் என் குதத்தை தீண்டியிருக்கவேயில்லை.மாற்றாய் நீ எனக்கும் சேர்த்து இழ்ந்திருக்கிறாய். உன் குருதியின் கடைசி துளிவரை உறிஞ்சப்பட்டிருக்கிறாய்.சிறுமலையென உன் அறையில் குவிந்திருந்த,ரத்தம் தோய்ந்து வெளிறிய உள்ளாடைகளை கண்டுக் கூசியதென் குதம்.

சாபங்கள் நிறமழிந்த இக்கணங்களில் நீ வந்தடைந்துவிட்டாய்.இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நம் தனிமைகளை தீயிலிடுவதே.முதலில் நம் ஞாபகக்குப்பைகளனைத்தையும் தீக்கு தின்னக் கொடுப்போம். வெப்பத்தில் உருக ஆரம்பிக்கும் நம் வலிகளின் தழும்புகளை குறுநகையோடு கண்டின்புறுவோம். பற்றி எரிய தொடங்கும் நம் சாபங்களின் பிரதிகளின் மேல் எச்சில் உமிழுவோம் வன்மத்துடன்.

வா! மனிதர்கள் அண்டியிராத நம் சொந்த அடர் கானகத்தின் குகைகளுக்கு சென்றுவிடலாம் கடைசியாய் நாம் புணர்ந்த இரவின் மீதங்கள் இன்னமும் நம்மைத் தேடி அலைந்து கொண்டிருக்கலாம். வைகறையில் மொட்டவிழும் புதிய மலரொன்றின் வாசம் நம் குகைகளில் படர கற்களின் இடுக்குகளில் செடிகளை நடுவோம். வண்ணத்துப்பூச்சிகளை தேன்குடிக்க அனுமதித்து மகரந்த சேர்க்கையை புணர்வின் நீட்சியென இருண்ட குகைகளெங்கிலும் மலர்களைத் தோற்றுவிக்கலாம்.மொத்தமாய் மொட்டவிழத் தொடங்கும் ஒரு விடியலில் யுகங்களை வென்ற களிப்பில் நாம் முத்தமிட்டுக் கொள்ளலாம் புலியின் வாசனைகளோடு.

33 comments:

பொன்ஸ்~~Poorna said...

அய்யோ தெரியாத்தனமா வந்திட்டேன்.. இனிமே இந்தப் பக்கம் வரமாட்டேன் ;) :))

Ayyanar Viswanath said...

பொன்ஸ்
கர்ர்புர்ர்ர்
:)

தமிழ்நதி said...

கடும் இருள் கவிந்த கானகத்துள் நடந்து கவிதையில் அதிர்ந்தேன். நல்ல சொற்தேர்வு. அது என்ன அய்யனார்..! நீங்களும் கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கத் தொடங்கிவிட்டீர்கள்.:))) வார்த்தைகளில் கெட்ட வார்த்தை என்று உண்டா என்ன என்று கேட்காதீர்கள்.

\\சாபங்கள் நிறமழிந்த இக்கணங்களில் நீ வந்தடைந்துவிட்டாய்.இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நம் தனிமைகளை தீயிலிடுவதே.\\

தனிமை தீயில் இடும். தனிமையையே தீயில் இடுவதென்பது சாத்தியப்படுமா நண்பரே!

பொன்ஸ்!என்ன ரொம்பப் பயந்துட்டீங்களா...:)ஒரு தடவை 'மிதக்கும் வெளி'யின் பதிவுப் பக்கத்திற்குப் போய்வந்தால் இந்தப் பயமெல்லாம் போய்விடும்.

Anonymous said...

அய்னாரு..

இதுப்போன்ற பின் நவீனத்துவ எழுத்துக்களை என்னுடைய கல்லூரி காலத்தில் அறை நன்பர் எழுதி, படி படி என்று என்னை கொல்லுவார். நான் படிக்காமல் இக்னோர் செய்தாலோ நிலைமை இன்னும் மோசமாகும். ஒரு குவார்டரை ஏற்றிக்கொண்டு வந்து கழுத்தில் கத்தியை வைத்து படிச்சு புரிந்துகொண்டு அர்த்தம் சொல்ல சொல்வார்...

துபாய் வலைப்பதிவாளர்களிடம் பேசிய போது, அய்யனாரின் பின்னவீனத்துவ எழுத்துக்கள் மிகவும் பிரபலமாக இருப்பது தெரிந்தது. நான் அதிகம் உங்கள் பதிவுகளை படிக்காததால் அதன் இம்பேக்ட் அப்போது புரியவில்லை..

ஆகா அருமையான எழுத்து...ஒரு புலியின் பிரச்சினையை ஒரு புலியின் பார்வையில் புரிந்துகொள்ளும் இந்த மனம் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

:)))))))))))))))))))))))

Jazeela said...

அடர்த்தியான கடுமையான வார்த்தைகள் மனதில் இனம்புரியாத பயத்தை தருகிறது உரைநடை கவிதையை படிக்கும் போது. மனதின் பதட்டம் இன்னும் அகலவில்லை.

இங்கே எழுதியதை அப்படி படித்துக்காட்டி கடைசியில் //வா! மனிதர்கள் அண்டியிராத நம் சொந்த அடர் கானகத்தின் குகைகளுக்கு சென்றுவிடலாம் // ன்னு அழச்சிப் பாருங்க மென்மையான மனக் கொண்ட பெண் ஓடிவிடுவாள் ;-)

இந்த மாதிரி வார்த்தை பிரயோகத்தோடு ஒரு பெண் எழுதினால் அவ்வளவுதான் உண்டு இல்லன்னு பண்ணிடும் இந்த சமுதாயம். ;-(

நல்லாயிருக்கு, நெறய எழுதுங்க.

இராம்/Raam said...

அய்யனார்,

அட்டகாசங்க...:)

உங்களின் வார்த்தை பிரயோகங்கள் நல்லா இருக்கு

MyFriend said...

அய்ஸ்..

மன்னிச்சிக்கோங்க..

என் உங்களுக்கு இந்த கொல வெறி.. நீங்க எழுதியிருக்கிறதுல எனக்கு ஒன்னுமே புரியலை.. :-(

Ayyanar Viswanath said...

/தனிமையையே தீயில் இடுவதென்பது சாத்தியப்படுமா நண்பரே! /

சாத்தியம் தான் தமிழ்நதி துணை கிடைத்தால்..:)

தனிமை பத்தின வலிகளை நான் பதிவிக்கும்போது உங்களோட தனிமை கவிதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை

Ayyanar Viswanath said...

/இதுப்போன்ற பின் நவீனத்துவ எழுத்துக்களை /

யாராவது சண்டைக்கு வரப்போறாங்க ரவி..:)
எது பிந ன்னு ஒரு சண்டையே நடந்துக்கிட்டு இருக்கு என் பங்குக்கு நான் கொஞ்சம் குழம்பனதோட விளைவுதான் இதெல்லாம்

நன்றி ரவி

Ayyanar Viswanath said...

/இந்த மாதிரி வார்த்தை பிரயோகத்தோடு ஒரு பெண் எழுதினால் அவ்வளவுதான் உண்டு இல்லன்னு பண்ணிடும் இந்த சமுதாயம். ;-(/
ஜெஸிலா குட்டி ரேவதி சுகிர்தாராணிலாம் படிச்சி பாருங்க :)
பெண்மொழி இப்போ நிறைய கட்டுக்களை உடைச்சி இருக்கு

Ayyanar Viswanath said...

அட்டகாசங்க...:)

நன்றி ராம்..நீங்க இந்த மாதிரி எழுதி வச்சிருக்கிங்க இல்ல அத சீக்கிரம் வெளியிடுங்க வித்தியாசமான ராம பாக்கா ஆவல்
:)

Ayyanar Viswanath said...

/என் உங்களுக்கு இந்த கொல வெறி/

அனு நீங்க மட்டும் பபாச தொடங்குனிங்க இல்ல ..அதான் நானும் என் பங்குக்கு :)

அபி அப்பா said...

அய்ஸ்! முத்து முத்தா எழுதியிருக்க! ஆனா பிரியலய்யா! ஆமா சேப்பு கலர்ல போட்டு பயமுறுத்துவியே இப்ப ஏன் பச்சைக்கு மாறிட்ட, நல்லாயிருய்யா:-))

Anonymous said...

பிரதிகளின்
சுயத்தை
யுகங்களின்
ஆதி
சபிக்கப்பட்ட
ஆச்சர்யங்களாய்
ஆச்சர்யங்களின்
பிரதிகளைக்
ஆக்ரமித்தாய்
சாபங்கள்
சுயம்
சாபத்தின்
சாபங்கள்

Ayyanar Viswanath said...

அபிஅப்பா
சேப்பு கலர் பாத்து குழந்தைங்க மிரண்டாங்க அதான் மாறிட்டேன்..நன்றி
:)

Ayyanar Viswanath said...

அனாணி என்ன சொல்ல வறிங்க???

Anonymous said...

//வார்த்தை பிரயோகத்தோடு //

சொற்தேர்வு அல்லது சொல் பயன்பாடு அப்படின்னு சொன்ன நல்லாயிருக்குமே.

நாகை சிவா said...

//அய்யனார் said...
அனாணி என்ன சொல்ல வறிங்க???
//

அய்யனார்,

இதையே தான் நான் உங்கள் கேட்க வருகிறேன். அது என்னங்க, வார்த்தைகளில் கணம் சேர்த்து முதல் முறை படித்தா புரியாத மாதிரி எழுதுவது. இலக்கியவாதிகள் என்றால் இப்படி தான் எழுதனும் என்று ஏதும் சட்டம் இருக்கா என்ன....

இந்த கமெண்ட் என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை என்ற கடுப்பில் எழுதப்பட்டது இல்லை.

நாகை சிவா said...

நல்ல வேளை தலைப்ப வச்சு தான் என்னால் ஒரளவு புரிந்து கொள்ள முடிந்தது.....

முதல் தடவை வரேன், நல்லா இருக்குங்க..... பொன்ஸ் மாதிரி எனக்கும் சொல்ல ஆசை தான், கர்ர்புர்ர் னு மேல பாய்ந்தா என்ன பண்ணுறது சொல்லுங்க...

அப்ப அப்ப வரேன்.... ஒகேவா...

Ayyanar Viswanath said...

புலி நம்ம உரையாடல்களை இங்க கொடுக்கிறேன் :)

இல்ல புலி இது யுகம் கடந்த காதல்
ஒரு நீளமான கத சொல்லலாம்
இதுக்கு பின்னாடி இரண்டு மனிதர்கள் எதிர்பாராது சந்திக்கிறார்கள் ரெண்டு பேர் மனசும் ஒத்துப் போவுது அந்த ஆண் இந்த நிகழ் காதலை
ஒரு புனைவியல் ரீதியா பாக்குறான்
அதாவது முன்பொரு ஜென்மத்தில் புலிகளாய் வசித்ததாகவும்
ஒரு சாபத்தினால் பிரிந்ததாகவும்
பின்பு அந்த சாபம் தீர்ந்த பின் சேருவதாகவும்
தன் காதலை புனைவித்துக் கொள்ளுகிறான்
இதான் மேட்டர்
அதாவது ஒரு பொண்ண மேஜிக்கல் ரியலிசத்தையும்..எக்ஸிஸ்டென்ஷியலியத்தையும் வச்சி கவர் பன்றது
:)

Anonymous said...

//அனாணி என்ன சொல்ல வறிங்க??? //
நான் முன்பு சொன்ன சொற்களை பயன்படுத்தாமல் நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தியிருந்தால் இது கவிதையாய் இருப்பதற்கான வாய்ப்பு இப்போதிருப்பதைவிட நன்றாக அல்லது இப்போதிருப்பதைப்போல இருந்திருக்கும்.
[இது கூட கவிதையா இருக்குமோ? :)]

Ayyanar Viswanath said...

/இது கவிதையாய் இருப்பதற்கான வாய்ப்பு இப்போதிருப்பதைவிட நன்றாக அல்லது இப்போதிருப்பதைப்போல இருந்திருக்கும்/

என்ன சொல்றிங்க அதெல்லாம் தமிழ் வார்த்தைகள் இல்லையா..அதிர்ச்சியா இருக்கு .. நீங்க குறிப்பிட்ட வார்த்தைகள் எல்லாமே வட மொழியா? அப்போ அதுக்கெல்லாம் தமிழ்ல என்ன?

ALIF AHAMED said...

ஒன்னபோயி நல்லவன்னு நெனச்சன் பாரு....:)

கதிர் said...

அடங்கவே மாட்டிங்களா சார்!

Ayyanar Viswanath said...

மின்னல்
:))

தம்பி

முடியாது

Rajasekar said...

Ennadaa Ithu..?????????

காட்டாறு said...

அய்யா... சிறிது மென்மையாக போகலாம்.

செல்வநாயகி said...

ஏற்கனவே வலையுலகப் பின்னவீனத்துவவாதிகளான திவாகர், டிசே போன்றவர்களின் பின்னால் ஒரு மௌனப் பயணம் போய்க்கிட்டிருக்கேன். இப்பத்தான் தெரியவருது நீங்களும் பி ந வாதின்னு. சரி, நீங்க பாட்டுக்குப் போற வேகத்துல போய்க்கிட்டே இருங்க, நான் அப்படியே அங்கங்க உக்காந்து உக்காந்தாவது மறுபடியும் தெம்ப வரவெச்சுக்கிட்டு மெல்லமா வந்து சேந்துக்கறேன்:))

Ayyanar Viswanath said...

ராஜசேகர்..
வா வா ..இங்க எழுதறதெல்லாம் மலைக்கோயில்ல நம்ம பேசுன விஷயங்களை விட கம்மிதான்..சீக்கிரம் வா ..பதிவுலகத்துக்கு

காட்டாறு ..:)

Ayyanar Viswanath said...

செல்வநாயகி இப்படி படிங்க..இதுதான் உண்மையும் கூட

திவாகர், டிசே,செல்வநாயகி போன்றவர்களின் பின்னால் ஒரு மௌனப் பயணம் போய்க்கிட்டிருக்கேன்
நான் அப்படியே அங்கங்க உக்காந்து உக்காந்தாவது மறுபடியும் தெம்ப வரவெச்சுக்கிட்டு மெல்லமா வந்து சேந்துக்கறேன்
:))

காயத்ரி சித்தார்த் said...

//கதவு தட்டி உட்புகுந்த உன் சொற்கள் யுகங்களின் மீட்பாக,நம் ஆதி உறவின் உயிர்த்தெழலாக,சபிக்கப்பட்ட என் நிகழை மீள்பதிவித்தது.முடிவற்ற ஒன்றின் துவக்கங்கள் ஆச்சர்யங்களாய் மட்டுமே இருக்க முடியும் என்கிற விதிகளின் படி ஆச்சர்யங்களின் மொத்த உருவமாய் நீ என்னை ஆக்ரமித்தாய்.//

இத எத்தினியாவது முறையா படிக்கிறேன் நான்? :)

நாமக்கல் சிபி said...

:)

நாமக்கல் சிபி said...

உங்க பதிவுகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இதுதான்!

Featured Post

test

 test