Monday, April 9, 2007

அரூபதர்ஷினிக்கு இருப்பை நிரூபித்தல்

புணர்ந்த உடல்களிலிருந்தெழும்
வீச்சம்
மீண்டும் ஒருமுறை
தற்கொலைக்குத் தூண்டுகிறது
என்னை

குறிகள் புடைத்து
முலைகள் விம்ம
வெறி கொண்டலையும்
இப்புற உலகிலிருந்துதான்
காதலித்துத் தொலையவேண்டியிருக்கிறது
உன்னையும்

சொல்லமுடியாத மெளனத்தைப்
புரிவிக்க
இச்சமவெளிகளிலிருந்து
சேகரிக்கிறேன்
சொற்களை

என் பாசாங்கற்ற
உலகின் வேர்கள்
பிரசவித்த
முதல் பூவின்
காம்புகளைக் கொண்டு
உனது புதைவிலிருந்து
உன்னை மீட்டெடுப்பேன்

கேவலம்
இந்த சொற்களைக்
கொண்டுதான்
நிரூபிக்க வேண்டியிருக்கிறது
என் இருப்பையும்..

அரூப வெளியின்
ப்ரசன்னத்தில்
உடல் தொலைத்துக்
கலப்போம்
வா தோழி!

12 comments:

Anonymous said...

"அரூபதர்ஷினிக்கு"
"கேவலம்"
"அரூப வெளியின்"
"ப்ரசன்னத்தில்"

இவைகளுக்கு பதிலாக நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம்.
வருத்தம் ஒன்றுமில்லை. சிறு கோரிக்கை.

Anonymous said...

அனானி

அரூபதர்ஷினி யை மாத்தமுடியாது ப்பா கவிதையே அரூபிக்கு தான்..:)

கருத்துக்கு நன்றி

முபாரக் said...

அன்பின் அய்யனார்,
உங்க படைப்புகள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு. யதார்த்தத்தின் சிக்கல்களிலிருந்து பறித்துக்கொண்டு மற்றுமொரு அவஸ்தைக்குள் அழைத்துச் செல்லும் எழுத்து

//இந்த சொற்களைக்
கொண்டுதான்
நிரூபிக்க வேண்டியிருக்கிறது
என் இருப்பையும்..//

உங்கள் இருப்பை நிரூபித்துவிட்டீர்கள் இலக்கிய வெளிக்குள்.

வாழ்த்துக்கள்

சினேகபூர்வம்,
முபாரக்

Anonymous said...

உடனே மாற்ற வேண்டியதில்லை. வடமொழி வார்த்தைகளை பயன்படுத்துவதே கவிதை என்ற மனப்பான்மையிலிருந்து சற்று வெளியே வரவேண்டும். அவ்வளவுதான்.
சரி நீங்கள் வேலை பார்ப்பது technip-ஆ

Ayyanar Viswanath said...

சரி நீங்கள் வேலை பார்ப்பது technip-ஆ

அனானி

இல்லீங்களே..நான் துபாய்ல திட்டமிடும் பொறியாளனா இருக்கேன்

தொடர்புக்கு
ayyanar.v@gmail.com

Ayyanar Viswanath said...

அன்புக்கு நன்றி முபாரக்

கோபிநாத் said...

\\குறிகள் புடைத்து
முலைகள் விம்ம
வெறி கொண்டலையும்
இப்புற உலகிலிருந்துதான்
காதலித்துத் தொலையவேண்டியிருக்கிறது
உன்னையும்\\

தல
ஏனோ இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

கோபிநாத் said...

\\குறிகள் புடைத்து
முலைகள் விம்ம
வெறி கொண்டலையும்
இப்புற உலகிலிருந்துதான்
காதலித்துத் தொலையவேண்டியிருக்கிறது
உன்னையும்\\

தல
ஏனோ இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Jazeela said...

நான் சொல்ல நினைத்ததை முபாரக் சொல்லிவிட்டார். எழுதும் வேலை மிச்சம் ;-)

//அரூப வெளியின்
ப்ரசன்னத்தில்
உடல் தொலைத்துக்
கலப்போம்
வா தோழி! //

கடைசி வரி பிடிக்கவில்லை 'தோழி' என்று விளித்திருப்பது.

கவிதை அருமை.

Ayyanar Viswanath said...

கவிதை அருமை

நன்றி ஜெஸிலா :)

காயத்ரி சித்தார்த் said...

"அரூப வெளியின்
ப்ரசன்னத்தில்
உடல் தொலைத்துக்
கலப்போம்
வா தோழி!"


கலக்குறீங்கப்பா!

காயத்ரி சித்தார்த் said...

இந்த கவிதை தான் உங்கள் பக்கத்திற்கு என்னை இழுத்து வந்ததாய் நியாபகம்... இன்னும் என்னை விடாமல் தக்க வைத்திருக்கும் கவிதை!

//கேவலம்
இந்த சொற்களைக்
கொண்டுதான்
நிரூபிக்க வேண்டியிருக்கிறது
என் இருப்பையும்..
//

Featured Post

test

 test