அனிதாவின் தற்கொலை மொண்ணை தமிழ் சமூகத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது. எல்லா அதிகார மட்டத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் பார்ப்பனர்களைப் பதற்றப்பட வைத்திருக்கிறது. சமூக வலைத் தளங்களில் ஒரு பக்கம் இந்தப் பயங்கரவாதத்திற்கெதிரான கூக்குரல்கள், ஓலங்கள், எதிர்ப்புகள் நிரம்பினாலும் அதற்குச் சமமாய் இதை நீர்த்துப் போக வைக்கும் விஷம் தோய்ந்த பரப்புரைகளும் சம பங்கிற்கு உள்ளன. இரண்டு நாட்களாய் எல்லாவற்றையும் தவறவிடாமல் படித்து ஆட்களை அடையாளம் கண்டு கொள்கிறேன். பனிரெண்டு வருடங்களாய் இங்கு புழங்குவதால் மனிதர்களை ஓரளவிற்கு சரியாகவே யூகிக்க முடிகிறது.
அனிதா சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் ஆளும் பார்ப்பனிய அரசோடு போராடித் தோற்றுப் போய்த்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். அவளுக்கு தற்காலிக நம்பிக்கைகளை ஊட்டிய, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஒவ்வொரு அரசியல் வாதியும் இதற்குப் பொறுப்பு. இதுவரை மூடர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்த நம் தேசம், இப்போது மதவெறி பிடித்த மூடர்கள் வசம் இருப்பதால் இங்கே நீதி என்பது வெறும் கனவு மட்டுமேதான்.
எடப்பாடி, பன்னீர், ஸ்டாலின் ஆகிய மூவரும் இந்தச் சின்னஞ்சிறு தளிரின் மரணத்திற்கு நேரடிப் பொறுப்பு. இந்தக் கையாலாகத கொலைகாரர்களை ஆளத் தேர்ந்தெடுத்த நாமும் இந்தப் பிஞ்சை மறைமுகமாய் கொலை செய்தோம்.

No comments:
Post a Comment