Sunday, April 1, 2012

அ.முத்து கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

நண்பர்களுக்கு,

எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான அ.முத்து கிருஷ்ணன் துபாய் வருகிறார். சமூகம், சுற்றுப்புறச்சுழல், மனித உரிமைகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், உலகமயமாக்கல் என பல்வேறு தளங்களில் எழுதியும், பேசியும் வரும் அ.முத்துகிருஷ்ணன் ஒரு தீவிரமான சமூக செயல்பாட்டாளராக தொடர்ந்து இந்தியாவெங்கும் சுற்றிவருபவர். கடந்த ஆண்டு இவர் புதுதில்லியில் இருந்து தரை வழியாக 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாலஸ்தீனத்தின் நிலையை நேரில் கண்டு பதிவு செய்திருக்கிறார். அவருடனான கலந்துரையாடல் ஒன்றை துபாயில் ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கிறேன்.

இடம் : சிவ் ஸ்டார் பவன் உணவம், கராமா, துபாய்

நேரம் : ஏப்ரல் 03 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 7 மணி


தங்களுடைய வருகையை கீழ்காணும் அலைபேசி எண்ணுக்கு உறுதிபடுத்தினால் இரவு உணவு ஏற்பாடு செய்ய உதவியாக இருக்கும்.

அசோக் 050 9142203
அய்யனார் 055 4216250





4 comments:

சித்திரவீதிக்காரன் said...

எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மதுரையில் பசுமைநடை என்னும் அமைப்பின் மூலம் மாதந்தோறும் மதுரை மலைகளில் உள்ள தொல்லியல் சுவடுகளைக் காண எங்களை அழைத்துச் செல்கிறார். எழுத்தாளராக மட்டும் இல்லாமல் இதுபோன்ற சமூலநலப்பணிகளிலும் ஈடுபட்டு வரும் முத்துகிருஷ்ணனுடனான உங்கள் சந்திப்பு சிறக்கட்டும். பகிர்விற்கு நன்றி.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

ராம்ஜி_யாஹூ said...

உள்ளேன் அய்யா

கிரீன் கம்ம்யுநிடியில் (பசுமை சமூகம்) இருந்து வர வேண்டும்.

உணவு சாதா தோசையும், கட்டன் சாயாவும் மதி

Anonymous said...

நல்ல அருமையான சந்திப்பு மற்றும் பயனுள்ள கலந்துரையாடல் நன்றி. அசோக், ஐயனார் மற்றும் அனைத்து ஏற்ப்பாட்டாளர்களுக்கும்... - meetnaseer@gmail.com

Featured Post

test

 test