Monday, June 28, 2010

காட்சி கண்


நிறை மது தளும்பும்
வாயுத் தொந்தியின்
மேல்
ஸர்ப்ப சுழலிறுக்கம்
உள்
மூச்சடைத்த
செம்மண் குளம்

மரமில்லா ஊரில்
இலையில்லா மரம்
நள்ளிரவில் சருகுகளை
உதிர்க்கும்
ஸப்தம் கேட்ட கொடுநாவு
சொற்களைக் குழறும்

வெட்கைப் பாலை
சாலையோர மதியத்தில்
இலைத் தெரியாப் பூச்செடி
மென் சிறு வேருக்கு
மண் புதை நீள் குழாய்
நீர் விசிறும்

சிரிக்கும்
செம் மஞ்சள் பூவில்
தோற்கும் சூரியனைப்
பார்க்க முடியா
இமை நடுங்கும்.

19 comments:

நேசமித்ரன் said...

//சிரிக்கும்
செம் மஞ்சள் பூவில்
தோற்கும் சூரியனைப்
பார்க்க முடியா
இமை நடுங்கும்//

வெப்பும், பசிய இலைகளின் இன்மையும் (இலைகளின் இன்மை இரண்டு இடங்களில் பெறும் பரிமாணம் ஒளி கடக்கும் நீரின் ஜாலம்)இறுதி வரியும் சொல்லடர்த்தியும் அருமை அருமை

Unknown said...

ம், ஒருவிதமான நடுக்கம் பற்றிக் கொள்கிறது "இமை நடுங்கும்." யென
"காட்சி கண்" விரிகையினில்.!

rvelkannan said...

//சிரிக்கும்
செம் மஞ்சள் பூவில்
தோற்கும் சூரியனைப்
பார்க்க முடியா
இமை நடுங்கும்.//
Really .... SUPER...!

பத்மா said...

இமை நடுக்கம் அருமையான பிரயோகம் ..
பல வித சிந்தனைகளை எழுப்புகிறது

மண் புதை நீள் குழாய்
நீர் விசிறும்

இது இன்னும் அழகு ! மண் புதை நீள் குழாய்.... செடியின் வேரினுடையதாகவும் உருவகிக்கத் தோணுகிறது

இருப்பினும் சூரியனை வென்ற பூவுக்கே என் வாக்கு ...

பத்மா said...

இமை நடுக்கம் அருமையான பிரயோகம் ..
பல வித சிந்தனைகளை எழுப்புகிறது

மண் புதை நீள் குழாய்
நீர் விசிறும்

இது இன்னும் அழகு ! மண் புதை நீள் குழாய்.... செடியின் வேரினுடையதாகவும் உருவகிக்கத் தோணுகிறது

இருப்பினும் சூரியனை வென்ற பூவுக்கே என் வாக்கு ...

Katz said...

மிகவும் ரசித்தேன் .

Unknown said...

//சிரிக்கும்
செம் மஞ்சள் பூவில்
தோற்கும் சூரியனைப்
பார்க்க முடியா
இமை நடுங்கும்.//

ஏதோ ஒரு வித லயத்துடன் உள்ளது இவ்வரிகள். இனம் தெரியா சோகத்துள் புதைக்க வைக்கிறது. அருமையான வரிகள் அய்யனார்.

பனித்துளி சங்கர் said...

////////வெட்கைப் பாலை
சாலையோர மதியத்தில்
இலைத் தெரியாப் பூச்செடி
மென் சிறு வேருக்கு
மண் புதை நீள் குழாய்
நீர் விசிறும்////////


Really Super

AkashSankar said...

நல்ல சொல்லாட்சி...

Pot"tea" kadai said...

//நிறை மது தளும்பும்
வாயுத் தொந்தியின்
மேல்//

Really Super

செல்வநாயகி said...

//சிரிக்கும்
செம் மஞ்சள் பூவில்
தோற்கும் சூரியனைப்
பார்க்க முடியா
இமை நடுங்கும்//


நல்ல சொல்லாட்சி.

சுந்தரவடிவேலன் said...

மிக அழகு

Anonymous said...

see my blog http://thandapayal.blogspot.com/

if u like it get its template code here https://docs.google.com/document/edit?id=1MhobBFrAyBTaM2aFh0RKvrx7YX0r9qlvPaYCf2x0gfo&hl=en#

create an archive page using

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

sakthi said...

வெட்கைப் பாலை
சாலையோர மதியத்தில்
இலைத் தெரியாப் பூச்செடி
மென் சிறு வேருக்கு
மண் புதை நீள் குழாய்
நீர் விசிறும்

சொட்டு நீர் பாசனத்தை தானே சொல்றீங்க அண்ணா!!!

sakthi said...

வார்த்தை பிரயோகங்கள் அருமையாக உள்ளது!!!!

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Anonymous said...

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

Anonymous said...

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

Anonymous said...

Hey, I can't view your site properly within Opera, I actually hope you look into fixing this.

Featured Post

test

 test