கடந்த ஒரு வார காலமாக உளைச்சலும் எரிச்சலுமாய் கலந்த மன நிலையில் தவிக்கிறேன். அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கழுத்தில் கணினியைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து விடுகிறேன். சதா மூளையில் இந் நிகழ்வுகளே அழுத்திக் கொண்டிருக்கின்றன. சரியாய் தூங்குவதுமில்லை. இது பற்றி எழுதவே கூடாது என்கிற தற்காலிக ‘நல்ல’ தனங்களை தூக்கிலிட்டுவிட்டு இதோ இன்னொரு கொள்ளி.
சுகுணா திவாகரின் மீது நான் உள்ளிட்ட பல வலைப்பதிவர்களுக்கும் நெடுநாள் பதிவுலக வாசகர்களுக்கும் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன இடமிருக்கிறது. அதனால்தாம் வலையில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அவரின் கருத்து என்ன? என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக பெரும்பாலும் அவர் தமிழ் சினிமாவில் பார்ப்பனியக் கூறுகளை துப்பறிவதோடு தம் எல்லைகளை சுருக்கிக் கொண்டாலும் அவரின் ‘கருத்து’ மீது ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த முறையும் சுகுணா, அவரின் இரசிகர்களான எங்களை டொக்டர் விஜயைப் போல் ஏமாற்றியிருக்கிறார்.
இவர் பார்ப்பனியத்தையும் ஆண் திமிரையும் குழந்தையிலிருந்தே எதிர்த்து வருவதால் நர்சிம்மையும் அவர் எதிர்ப்பார் என்பதை நாமாகவே புரிந்துகொள்ள வேண்டும். நர்சிம் செய்தது ’பக்கா பார்ப்பனியம்’ மற்றும் ’ஆண்திமிர்’ தான் என்பதை சொல்லிவிட்டு அதிமுக்கியப் பிரச்சினையான அவரது சொந்தப் பிரச்சினைக்குத் தாவுகிறார். பொதுவில் வெளியிடப்படாத, பொதுவில் பகிராத, ஏதோ ஒரு பச்சை நம்பிக்கைத் துரோகியின் மூலம் வெளிக் கொணரப்பட்ட சிவராமனின் மடலை வெளியிடுகிறார். அதில் சுகுணாவைப் பற்றிய அவதூறுப் பகுதியை பார்த்ததும் கொதித்துப் போய் சிவராமனை பயங்கர பஞ்ச் டைலாக்குகளின் மூலம் (பார்ப்பனியம்,ஆண்திமிர்) திக்கு முக்காட வைக்கிறார். நர்சிம்மை தாக்கி சிவராமன்+ வினவு எழுதி இருந்த பதிவின் ஸ்டைலிலேயே (லாஜிக் அபத்த புரிந்துணர்வோடு) சிவராமனைத் தாக்குகிறார். டொக்டர் விஜய் பறந்து பறந்து சண்டை போடும் காட்சி கண் முன் வந்து போகிறது. கடைசியில் ரசிகர்கள் படபடவென கைத் தட்டுகிறார்கள். “சூப்பர் ஸ்டார் ரசினிகாந்த் வாழ்க!” என்கிற கோஷத்தைப் போல “வினவு நான் தான் தான் ஒரிஜினல்.. சிவராமன் டூப்ளிகேட்.. என்ன நம்பு..” என பம்முகிறார். பின்பு எரிந்து கொண்டிருந்த கொள்ளியின் மீது எச்சிலைத் துப்பி அணைத்து விட்ட புளகாங்கிதத்துடன் அறிமுகப் பாடல் ரிப்பீட்டோடு வெளியேறுகிறார். போகிற போக்கில் ’தளபதி’ ’தலை’யை நொட்டுவது போல ’அய்யனாரின் ஆண் திமிர்’ என்ற இன்னொரு ’பஞ்ச்’சையும் வைக்கிறார். இனிமேல் அடுத்த பதிவை இராவணன் வந்தவுடன் பல துப்புகளோடு விரிவாய் எழுதுவார். அதுவரை எல்லோரும் போய் வேலையைப் பாருங்கள். சுபம். மங்களம். டொண்டொண்டொய்ங். கருத்து வேண்டிக் காத்திருந்த நாம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு பதிவை விட்டு வெளியேறுகிறோம்.
நிகழ்த்தப்பட்ட துரோகங்களின் பட்டியல் நீளமானது. அதில் முதலாவதாய் நான் சுகுணாவைச் சேர்க்கிறேன். தன்னை ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என முன் நிறுத்திக் கொள்வதாலேயே அவருக்கு இந்த முதலிடம். எந்த அரசியல் செயற்பாட்டாளனும் எழுதப்படாத பகிரப்படாத அவதூறுக்கெல்லாம் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளியை எச்சில் துப்பி அணைப்பதில்லை. இவர் எவ்வித தார்மீக உணர்ச்சியுமில்லாமல் இதை செய்திருக்கிறார். அவருக்கு சமமான துரோகத்தை சிவராமனின் மின்னஞ்சலை வெளியிட்ட அவரது நம்பிக்கையாளரும் நிகழ்த்தியிருக்கிறார். எத்தனை மோசமான துரோகம் இது?
அடுத்த இடம் நர்சிம்மின் இந்த இடுகையை ஆதரித்து அவரது பதிவில் கும்மியடித்த அவரைத் தொடர்ச்சியாய் தாங்கிப் பிடித்த /பிடித்துக் கொண்டிருக்கும் அவரின் நண்பர்கள். நட்பு என்பதற்கான வியாக்கியானங்களை எழுத போரடிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நர்சிம்மை சொறிய ஒரு கூட்டம் இருந்தது. அம்மாதிரியான ஒரு கூட்டம் வளர்வதை அவர் விரும்பியிருக்கலாம். அதன் விளைவுதான் இது. எந்த ஒரு நல்ல நண்பனும் இந்த வக்கிரத்தை ஆதரித்து இருக்க மாட்டான். அதைச் செய்தவர்கள் உங்களுக்கு நண்பர்களும் அல்ல. பதிவர் நர்சிம்மை பிரபல பதிவர் ஆக்கிய அதே நண்பர்கள்தாம் இன்று ’பொறுக்கி’ நர்சிம் ஆகவும் மாற்றி இருக்கிறார்கள்.வலையில் நட்பு வளர்ப்பதை விட எழுத்தை வளர்ப்பதுதான் ஆரோக்கியமானது.
மூன்றாவதாய் ”நர்சிம் செய்தது தவறுதான் முதலில் ஏன் அவர்கள் சீண்ட வேண்டும்” என்றபடி நசுங்கிய சொம்பைத் தூக்கிக் கொண்டு நாட்டாமை செய்ய முயன்ற பதிவர்கள். சக பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து எவ்வித உணர்வுமில்லாமல் எல்லாப் பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்துக் கொண்டு ”அவர் பாவம் ஏன் இப்படி அடிஅடின்னு அடிக்கறாங்க” என பரிதாபப்படும் சக பதிவர்கள். எல்லாவற்றுக்கும் உச்சமாய் தமயந்தி என்றொரு எழுத்தாளினி. அவர் புத்தகம் வெளியிட்டிருக்காராம். அத விமர்சித்த கவிஞன் குடிகாரனாம். மேலாண்மை பொன்னுச்சாமிய பிடிக்காதாம். நர்சிம் செய்தது தப்புத்தானாம்.பஞ்சாயத்துலாம் ஒண்ணும் செய்ய தேவையில்ல ’ஹலோ மிஸ்டர் வலையுலக நாட்டாமைகளே’ன்னு எள்ளலோட ஒரு பதிவிட்டிருக்கார். அவரது எழுத்தில் தெறித்த அலட்சியத்தைப் படிக்கையில் திக்கென்கிறது. நல்லது தமயந்தி.காலம் உங்களின் புரிதல்களை விரிவுபடுத்தட்டும்.
நான்காவதாய் சிவராமன். பதிவர்கள் குறித்தான அவதூறுகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் மீதான நம்பகத் தன்மையை குழி தோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். கடன் வாங்கியிருந்தாலும் அநீதி கண்டு பொங்கிய உங்களின் நேர்மையை சென்ற வாரம் நானும் குசும்பனும் வாய் வலிக்க புகழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டே நாளில் கலைந்த உங்களின் பிம்பம் ”ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என புலம்ப வைத்துவிட்டது. மேலதிகமாய் உங்களுடைய கடவுச் சொல்லைக் கூடவா நான்கைந்து பேருக்குக் கொடுத்திருப்பீர்கள்? நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது சிவராமன், எல்லா விடயங்களிலும். நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.
இனிமேல் இப்படி ஒரு அநீதி வேறெந்த பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் திடமாகவும் உறுதியாகவுமிருக்கும் முல்லையின் மீது மதிப்பு உயருகிறது. என்னுடைய முழு ஆதரவும் பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு முல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
28 comments:
வணக்கம் அய்யனார். எனக்கு ஒட்டுமொத்த நிகழ்வைவையும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.காரணம் வெறும் எழுத்தோடு நின்று போனாதால் கூட இருக்கலாம்.
ஆயினும் உங்களின் இந்தப்பதிவு கொஞ்சம் சோம்பிக்கிடந்த நினைவை நிமிர்த்துகிறது.
முன்னதாகவே நர்சிம்மின் வலைத்தளத்தில் கண்டித்துப்பின்னூட்டமிட்ட சொற்ப நபர்களில் நீங்கள் முக்கியமானவ என்று கேள்விப்பட்டபோது.
நியாயம் இருக்கிறது என்கிற நம்பிக்கை வந்தது.
நல்லது அய்யனார்.
...........................
சந்தனமுல்லையின் வன்னிய போரத்தை துப்பறிந்தவரும் சுகுணாவே.
எரியிற வீட்டில் தன்னுடைய சுருட்டை பற்றவைத்துக்கொண்டு புகைத்துக்கொண்டு நடையை கட்டிவிட்டார்.
நன்பர்களாயிருந்தாலும் நர்சிம்மையும், அதன் பிறகு சுகுணாவையும், சிவராமனையும் கண்டிக்கும்போது, உங்கள் மேல் மதிப்பு உயர்கிறது.
இந்த விஷயத்தை வைத்து பத்து பதிவுகள் போட்டுவிட்ட வருண், நீங்கள் சொன்ன தமயந்தி உட்பட அனைவரும் பொத்திக்கொண்டிருந்தால் இது விரைவில் அனைவரின் மன உளைச்சலையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அனானி நண்பர்களுக்கு
உங்கள் நேரத்தை நீளமான புன்னூட்டமாக எழுதி வீணடிக்க வேண்டாம் கழிவுகளை நீங்கள் வைத்திருக்கும் தொட்டிகளிலேயே கொட்டிக் கொல்லவும்
[[[எரியிற வீட்டில் தன்னுடைய சுருட்டை பற்ற வைத்துக் கொண்டு புகைத்துக் கொண்டு நடையை கட்டிவிட்டார்.]]]
ரவி..
சுகுணாவின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார்.
அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு மருத்துவமனையே கதி என்று கிடக்கிறார்..!
குழந்தை வீடு திரும்பியவுடன் இணையப் பக்கம் கண்டிப்பாகத் திரும்பி வருவார்..!
நல்ல பார்வை. பிடித்திருக்கிறது. எனக்கும் இதேதான் எண்ணம், ஆனாலும் சலிப்பாக இருக்கிறது.
நான்காவதாய் சிவராமன். பதிவர்கள் குறித்தான அவதூறுகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் மீதான நம்பகத் தன்மையை குழி தோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். கடன் வாங்கியிருந்தாலும் அநீதி கண்டு பொங்கிய உங்களின் நேர்மையை சென்ற வாரம் நானும் குசும்பனும் வாய் வலிக்க புகழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டே நாளில் கலைந்த உங்களின் பிம்பம் ”ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என புலம்ப வைத்துவிட்டது. மேலதிகமாய் உங்களுடைய கடவுச் சொல்லைக் கூடவா நான்கைந்து பேருக்குக் கொடுத்திருப்பீர்கள்? நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது சிவராமன், எல்லா விடயங்களிலும். நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.
Ippothan nee kanaga puli :)
நான்காவதாய் சிவராமன். பதிவர்கள் குறித்தான அவதூறுகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் மீதான நம்பகத் தன்மையை குழி தோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். கடன் வாங்கியிருந்தாலும் அநீதி கண்டு பொங்கிய உங்களின் நேர்மையை சென்ற வாரம் நானும் குசும்பனும் வாய் வலிக்க புகழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டே நாளில் கலைந்த உங்களின் பிம்பம் ”ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என புலம்ப வைத்துவிட்டது. மேலதிகமாய் உங்களுடைய கடவுச் சொல்லைக் கூடவா நான்கைந்து பேருக்குக் கொடுத்திருப்பீர்கள்? நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது சிவராமன், எல்லா விடயங்களிலும். நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.
Ippothan nee kanaga puli :)
//சென்ற வாரம் நானும் குசும்பனும் வாய் வலிக்க புகழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டே நாளில் கலைந்த உங்களின் பிம்பம் ”//
நாசமா போவ! நீயும் என்பெயரை பதிவில் ஏத்திட்டியா?:)))நாம் புகழ்ந்தது சிவராமன் அண்ணன் நர்சிம் பதிவில் பின்னூட்டம் போட்ட பொழுது:))
விடுப்பா விடுப்பா அரசியலில் இதெல்லாம் சகஜம். யாரையும் நம்பாதே என்பது மீண்டும் ஒரு முறை நிருப்பிக்கப்பட்டு இருக்கிறது!
// மேலதிகமாய் உங்களுடைய கடவுச் சொல்லைக் கூடவா நான்கைந்து பேருக்குக் கொடுத்திருப்பீர்கள்? //
password என்பதை pass the word என நினைத்துவிட்டாரோ என்னவோ?
நேர்மையாய் எழுதியமைக்காக உள்ளே அய்யா போட்டுக்கறேன். மத்த விசயத்தில் ஆர்வமில்லை. ஏனென்றால் எவரையும் நம்புவதற்கில்லை... நூத்துல ஒரு வார்த்தை சூத்துல அடிச்ச மாதிரி...//வலையில் நட்பு வளர்ப்பதை விட எழுத்தை வளர்ப்பதுதான் ஆரோக்கியமானது. // அதை இரண்டாக்கிக்கிறேன்.
உங்களின் கருத்துக்களோடு பல இடங்களில் முரண் படுகிறேன். சில இடங்களில் உடன் படுகிறேன்.
ஆனால் உங்கள் அற்புதமான எழுத்து நடைக்கு என் நன்றிகள், வாழ்த்துக்கள்.
தெளிவான, நேர்மையான பார்வை, பதிவு. வரவேற்கிறேன்.
//நர்சிம்மின் இந்த இடுகையை ஆதரித்து அவரது பதிவில் கும்மியடித்த அவரைத் தொடர்ச்சியாய் தாங்கிப் பிடித்த /பிடித்துக் கொண்டிருக்கும் அவரின் நண்பர்கள்.\\
//”நர்சிம் செய்தது தவறுதான் முதலில் ஏன் அவர்கள் சீண்ட வேண்டும்” என்றபடி நசுங்கிய சொம்பைத் தூக்கிக் கொண்டு நாட்டாமை செய்ய முயன்ற பதிவர்கள். சக பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து எவ்வித உணர்வுமில்லாமல் எல்லாப் பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்துக் கொண்டு ”அவர் பாவம் ஏன் இப்படி அடிஅடின்னு அடிக்கறாங்க” என பரிதாபப்படும் சக பதிவர்கள்//
இப்படிப்பட்ட 'நல்லவர்கள்'வர்கள் மத்தியிலும் நியாயத்திற்கு உரத்து குரல் கொடுக்கும் உங்களைப் போல ஒரு சிலர் உள்ளது தான் பதிவர் முல்லைக்கு பலமே.
//இனிமேல் இப்படி ஒரு அநீதி வேறெந்த பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் திடமாகவும் உறுதியாகவுமிருக்கும் முல்லையின் மீது மதிப்பு உயருகிறது. என்னுடைய முழு ஆதரவும் பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு முல்லை.//
அதே, அதே!
என்னுடைய எண்ணங்களும் அதுவே
ஆழ்ந்த வருத்தங்கள் அய்ஸ்...
உண்மைக்கும் கட்டப்பட்ட உண்மைகளுக்கும் ஆகப்பெரும் வித்தியாசங்கள் உண்டு..
கடைசியில் நீங்களுமா..?
நான் இப்போதுதான் உங்கள் பதிவில் இந்த வரியை படித்தேன், அவர் போகிற போக்கில் உங்களையும் தட்டி சென்றார், எனவே அதை விளக்க இதோ பார் - எனது நீண்ட ஒரு விளக்க பதிவு என்று.
இந்த ஒரு குணம் தான் எனக்கு சலிப்பை அயர்ச்சியை ஏற்படுத்துக்கிறது.
என்னை அடிக்க நினைக்கிறான் அவன், அவனை நான் என்பக்கம் நெருங்க விட கூடாது என்ற மனோ பாவம். ஏன் நமக்கு இந்த மனோ பாவம் மாற மாட்டேன் என்கிறது, இன்னும் மிருகத் தன்மையும், நாகரீக, உணர்வு ரீதியான வளர்ச்சியும் இல்லாமல் இருப்பது ஏன்.
இவ்வளவு நாம் படிப்பது, எழுதுவது எல்லாம் ஒரு விளைவையும் நம் மனதில், குணத்தில் , உணர்வுகளில் ஏற்படுத்துவது இல்லையா.
'ஆரம்பத்திலிருந்தே நர்சிம்மை சொறிய ஒரு கூட்டம் இருந்தது. அம்மாதிரியான ஒரு கூட்டம் வளர்வதை அவர் விரும்பியிருக்கலாம். அதன் விளைவுதான் இது. எந்த ஒரு நல்ல நண்பனும் இந்த வக்கிரத்தை ஆதரித்து இருக்க மாட்டான். அதைச் செய்தவர்கள் உங்களுக்கு நண்பர்களும் அல்ல. பதிவர் நர்சிம்மை பிரபல பதிவர் ஆக்கிய அதே நண்பர்கள்தாம் இன்று ’பொறுக்கி’ நர்சிம் ஆகவும் மாற்றி இருக்கிறார்கள்.வலையில் நட்பு வளர்ப்பதை விட எழுத்தை வளர்ப்பதுதான் ஆரோக்கியமானது.
'
முழுக்க முழுக்க உடன் படுகிறேன்
மேலும் நம்ம அண்ணாத்த சாரு ஆதரிக்கும் எலாருக்கும் வரும் நாசி இவருக்கும் வந்து விட்டதோ என்றும் நினைக்கிறேன்
'நான்காவதாய் சிவராமன். பதிவர்கள் குறித்தான அவதூறுகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். உங்கள் மீதான நம்பகத் தன்மையை குழி தோண்டிப் புதைத்திருக்கிறீர்கள். கடன் வாங்கியிருந்தாலும் அநீதி கண்டு பொங்கிய உங்களின் நேர்மையை சென்ற வாரம் நானும் குசும்பனும் வாய் வலிக்க புகழ்ந்து கொண்டிருந்தோம். இரண்டே நாளில் கலைந்த உங்களின் பிம்பம் ”ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்? என புலம்ப வைத்துவிட்டது. மேலதிகமாய் உங்களுடைய கடவுச் சொல்லைக் கூடவா நான்கைந்து பேருக்குக் கொடுத்திருப்பீர்கள்? நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது சிவராமன், எல்லா விடயங்களிலும். நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. '
இதே கருத்து எனக்கும் இருக்கின்றது
மனுஷ் கவிதை ஒன்றில் சொன்னார் - "எல்லோருடனும் கடைசியில் வருத்தமே எஞ்சியது" என்று அதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.
எல்லோரும் தங்கள் பக்கத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்கள்/கிறீர்கள் - இங்கே படிக்கும் போது இது சரியாயிருக்கிறது அங்கே படிக்கும்போது அது சரியாயிருக்கிறது - நியாயம் என்று ஒன்று இந்த உலகில் இருக்கிறதா என்ன?
வெளியிட வேண்டும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.
//இனிமேல் இப்படி ஒரு அநீதி வேறெந்த பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் திடமாகவும் உறுதியாகவுமிருக்கும் முல்லையின் மீது மதிப்பு உயருகிறது. என்னுடைய முழு ஆதரவும் பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு முல்லை.//
\\இப்படிப்பட்ட 'நல்லவர்கள்'வர்கள் மத்தியிலும் நியாயத்திற்கு உரத்து குரல் கொடுக்கும் உங்களைப் போல ஒரு சிலர் உள்ளது தான் பதிவர் முல்லைக்கு பலமே.\\
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
//இனிமேல் இப்படி ஒரு அநீதி வேறெந்த பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் திடமாகவும் உறுதியாகவுமிருக்கும் முல்லையின் மீது மதிப்பு உயருகிறது. என்னுடைய முழு ஆதரவும் பாராட்டுக்களும் உங்களுக்கு எப்போதும் உண்டு முல்லை.//
\\இப்படிப்பட்ட 'நல்லவர்கள்'வர்கள் மத்தியிலும் நியாயத்திற்கு உரத்து குரல் கொடுக்கும் உங்களைப் போல ஒரு சிலர் உள்ளது தான் பதிவர் முல்லைக்கு பலமே.\\
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஒரு தவறுக்கான தீர்ப்பு தவறு செய்தவர் மாற அல்லது தவறின் வீரியம் குறித்து திருந்தத் தான் இருக்க வேண்டும்! கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற கேவலமான பிற்போக்குதனமாக இருக்கக்கூடாது, ஆனால் இந்த விசயத்தில் நர்சிம்மின் மன்னிப்பு குறித்து எந்த பதிலும் இல்லை, அல்லது சந்தனமுல்லை எதிர்பார்ப்பது என்னவென்ற தகவலும் இல்லை, இனி எதுவும் எழுதப்போவதில்லை என்பவரை இன்னும் என்ன செய்ய ஆசை, இதற்கு பின்புலத்தில் இருந்து தூண்டிவிடுபவர்களுக்கு என்ன ஆதாயம்,சந்தனமுல்லையின் பதிவில் என் ஆதரவை தெரிவித்திருக்கிறேன், நர்சிம் மீண்டும் மீண்டும் அதை நியாயபடுத்தி தன்னை நிரபராதி என்றால் நிச்சயம் பிரச்சனை பண்ணலாம், ஆனால் தப்புதான், மன்னிச்சிகோங்க என்பவரை என்ன செய்ய உத்தேசம்!
Vaal,
Narsim solvathu Minor kunju "Amam rape pannen 2000 rooba abaratham katiren" nra mathiri irukirathu.
TVK
Vaal,
The only course of action is for Mullai to take some kind of legal action.But I am not sure Indian Judiciary recognises this as a crime.After all they consider Bhopal tragedy as a minor crime caused by negligence.
@ செந்தழல் ரவி
//இந்த விஷயத்தை வைத்து பத்து பதிவுகள் போட்டுவிட்ட வருண், நீங்கள் சொன்ன தமயந்தி உட்பட அனைவரும் பொத்திக்கொண்டிருந்தால் இது விரைவில் அனைவரின் மன உளைச்சலையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.//
நீரும் "பொத்திட்டு" போய் இருந்தால் எப்பவோ இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.
////இனிமேல் இப்படி ஒரு அநீதி வேறெந்த பெண்ணுக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் திடமாகவும் உறுதியாகவுமிருக்கும் ////
இல்லேங்க. அவங்க மனசில இருக்கிறது என்ன என்று தெரியாது. ஆனால், இந்த பிரச்சினை ஆணாதிக்கம் என்ற நிலையில் இருந்து ஜாதிப் பிரச்சினையா மாறி நாளாச்சு. சிறு பெண் என்பதால் எனக்கு எதுவும் புரியாது என்று தள்ளி வைக்காதீர்கள். பெண்களுக்கான போராட்டம் அது இதுன்னு கொடுக்கிற பில்டப் எல்லாம் ஓவர். ஜாதிப்பிரச்சினையாக மாற்றிய கெட்டிக்காரர்களுக்கு முடிந்தால் ஓங்கி மூஞ்சியில் ஒரு குத்து கொடுங்கள். இது பெண்களுக்கான பிரச்சினை என்று இன்னும் நம்பிட்டு இருக்காதீங்க. ஏமாத்தறாங்க
//Narsim solvathu Minor kunju "Amam rape pannen 2000 rooba abaratham katiren" nra mathiri irukirathu.//
அப்படி சட்டம் இருந்தால் இப்படி தான் செய்வாங்க, போபாலை ஞாபக படுத்தியதால் சொல்கிறேன்!
இஸ்லாமியர்களின் பர்தாவுக்கு காரணம் ஒரு ஆன் சஞ்சலபட்டு அவளை நெருங்ககூடாது என்பதற்காக என்பது வாதம், அதற்கான சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் இவ்விசயத்தில் முதல் கல்லை எரிந்தது யார், அதற்கான எதிர்வினை பாறாங்கல்லா என்று தானே இருக்க வேண்டும்!
நான் நர்சிம்மை நியாயபடுத்த வில்லை, அது நிச்சயமாக ஆணாதிக்க திமிர், அதற்கு சிவராமன் எழுதிய நர்சிம் வன்புணர்ச்சி செய்தார் என்பது சந்தனமுல்லையை மகிழ்ச்சி படுத்துவது போல் கேவலபடுத்துவது!
எதிரிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம், துரோகிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் நீங்களே சொல்லுங்கள், டி.வி.கே!
///நீரும் "பொத்திட்டு" போய் இருந்தால் எப்பவோ இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும்.//
இதுபோன்ற அறிவுரையை எனக்கு முன்பே கொடுத்திருந்தால் நான் அமெரிக்க ஜனாதிபதியாருப்பேனே ?
//வலையில் நட்பு வளர்ப்பதை விட எழுத்தை வளர்ப்பதுதான் ஆரோக்கியமானது. //
எவ்வளவு உண்மையான உன்னதமான வார்த்தைகள் நண்பரே
இந்த எழுத்துகளை Bold Letters -ல் போடவும் நண்பரே
Post a Comment