Monday, December 21, 2009

மூன்று புத்தகங்கள் : என் முப்பரிமாண உலகம்


இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்கிற தலைப்புகளில் வர இருக்கின்றன. வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து நேற்று வரை இங்கு எழுதப்படுபவைகள் புத்தகங்களுக்கான தயாரிப்புகள் அல்ல என்பதுதான் என் நம்பிக்கையாக இருந்து வந்தது. பவா மற்றும் ஷைலஜாவின் மிகுதியான அன்பே இப்புத்தகங்களுக்கான பிரதான காரணமாகும். இந்த மூன்று புத்தகங்களும் நண்பர்களின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிவிட்டுத்தான் நேர்த்தியாய் வெளிவருகின்றன.பவா அய்ந்து புத்தகங்களை கொண்டுவர விரும்பினார் என் சோம்பலும் பயமுமே அய்ந்தை மூன்றாக்கியது. இதுவரைக்கும் எழுதப்பட்ட கவிதைகளை கதைகளை தொகுத்ததில் நதியலையின் பங்கு மிக முக்கியமானது. தொகுக்கப்பட்டவற்றை புத்தக வடிவமைப்பினுக்கு மாற்ற முடியாமல் போனது யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டு வர நண்பர்கள் சகிதமாய் தலைகீழாய் நின்றும் முடியவில்லை. வம்சி நண்பர்கள் இம்மூன்று தொகுப்பையும் விரல்கள் நோக மீண்டும் தட்டச்சியிருக்கின்றனர். இறுதி கட்டத்தில் கதிர் தன் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி யூனிகோடை பேஜ்மேக்கரில் கொண்டுவந்திருக்கிறான். புகைப்படக் கலைஞர் பினு பாஸ்கர் புத்தக அட்டைகளை வடிவமைத்ததுத் தந்ததுடன் என் புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தார். தனிமையின் இசைக்கு தமிழ்நதியும் நானிலும் நுழையும் வெளிச்சத்திற்கு நதியலையும் உரையாடலினிக்கு ஜமாலனும் தங்களது பகிர்வுகளைத் தந்திருக்கின்றனர்.

இத்தனை பேரின் நேரமும் ஆற்றலும் என் தனியொருவனின் தம்பட்டங்களுக்காக வீணாகி இருப்பதை நினைக்கும்போது லேசாய் குற்ற உணர்வு எழுகிறது. புதியதொரு வாசகனை இப்புத்தகங்கள் கண்டடைய வேண்டுமென்பதற்காகத்தான் இத்தனை முயற்சியும் என்பது சற்று ஆறுதலானதுதான். ஆனால் புதிய வாசகனுக்கு/வாசகிக்கு புதிய கிளர்ச்சிகளை என் பழைய உணர்வுகள் தந்துவிடமுடியுமா என்கிற சந்தேகங்கள் இருந்தன. அது நேற்று இரவு சற்றுக் குறைந்தது. க.சீ.சிவக்குமார் தன் பக்கத்தில் என் இரண்டு தொகுப்புகளை படித்து முடித்ததும் என் அருகாமையை விரும்பியதாக குறிப்பிட்டிருந்தார். என் தொகுப்புகள் குறித்தான லேசான நிம்மதியை அக்குறிப்புகள் வரவழைத்தன. அவருக்கு என் நன்றி. மற்றபடி என்னைத் தொடர்ந்து நகர்த்தும் விசை நண்பர்களின் அன்பாக இருந்து வருகிறது.

இங்கு கொட்டப்பட்டிருக்கும் அத்தனை வார்த்தைகளுக்கும் பின்னாலிருக்கும் பெண்களை, காதலிகளை, ஸ்நேகிதிகளை, நண்பர்களை, துரோகிகளை, எதிரிகளை, அலைக் கழித்த வாழ்வை, அள்ளிக் கொடுத்த வாழ்வை மிக நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

57 comments:

☼ வெயிலான் said...

மகிழ்ச்சி!

வாழ்த்துக்கள் அய்ஸ்!

கண்ணா.. said...

வாழ்த்துகள் அண்ணா.....

//கொட்டப்பட்டிருக்கும் அத்தனை வார்த்தைகளுக்கும் பின்னாலிருக்கும் பெண்களை, காதலிகளை, ஸ்நேகிதிகளை, நண்பர்களை, துரோகிகளை, எதிரிகளை, அலைக் கழித்த வாழ்வை, அள்ளிக் கொடுத்த வாழ்வை மிக நன்றியோடு நினைவு கூர்கிறேன். //

வார்த்தைகளின் வசீகரம் வியக்க வைக்கிறது.

:)

கே.என்.சிவராமன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு அய்யனார். வாழ்த்துகள் :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அகநாழிகை said...

வாழ்த்துகள் அய்யனார்

- பொன்.வாசுதேவன்

விழியன் said...

வாழ்த்துக்கள் அய்யனார்.

சந்தனமுல்லை said...

மனமார்ந்த வாழ்த்துகள் அய்யனார்! :-)
மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

இதுதான் அந்த போஸ்டிலே சொல்லியிருந்த ஃபோட்டோவா...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

முதலில் தம்பியின் பதிவின் மூலம் அறிந்தேன். பிறகு பவாவின் பதிவில் விவரம் வந்திருந்தது.

ரொம்ப சந்தோஷமாயிருக்கு அய்ஸ். தூள் கிளப்புங்க!

குப்பன்.யாஹூ said...

வாழ்த்துக்கள்

ஆனால் எனக்கு உள்ள ஒரு கவலை, பதிவர்கள் எழுத்தாளர்கள் என்ற குறுகிய வட்டத்தை நோக்கி பயனிக்கின்றனரோ என்பதே.

எழுத்தை தொழில், பணம் ஈட்ட உதவும் ஒரு தொழிலாக கருத தொடங்கினால் படைப்பின் தீவிரம், ஆர்வம் குறையும் என்பதே நாம் கண்ட வரலாறு.

anujanya said...

நிச்சயமாக புத்தகமாக வரவேண்டியவை தாம் உங்கள் எழுத்துகள். சற்று தாமதம் என்று கூடச் சொல்லலாம்.

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ஐய்ஸ். வாழ்த்துகள்.

அனுஜன்யா

சென்ஷி said...

மகிழ்ச்சி!

வாழ்த்துக்கள் அய்ஸ்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் ,அய்யனார்.. புகைபப்டங்களும் நல்லா இருக்கு

அ.மு.செய்யது said...

வ‌ம்சி ப‌திப்பக‌ம் உங்க‌ள் புத்தக‌ங்க‌ளை வெளியிடும் த‌க‌வ‌லை உயிரெழுத்து ப‌த்திரிக்கையில் வாசித்து விட்டு ஒரு இணைய‌ எழுத்தாள‌ர் ம‌றுக‌ண‌மே தொலைபேசியில் எனக்கு அழைத்து மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்

இந்த‌ வ‌ருட‌ புத்த‌க‌ க‌ண்காட்சியில் நான் வாங்க‌ வேண்டிய‌ புத்த‌க‌ங்க‌ளின் ப‌ட்டிய‌லில் உங்க‌ளின் புத்தக‌ங்க‌ள் க‌ண்டிப்பாக‌ முத‌லிட‌ம் பிடித்து விட்ட‌து.

இந்த‌ ப‌திவுக்காக‌ தான் காத்திருந்தேன்.ந‌ன்றி !!!

chandru / RVC said...

இதத்தான் தல நாங்க ரொம்ப நாளாவே போன்லயும் மெயில்லயும் அனத்தி அனத்திக் கேட்டுட்ருந்தோம். :)
ரொம்ப மகிழ்ச்சி. புத்தகத்திருவிழாவுக்கு வருவீங்களா?
போட்டோஸ் எல்லாம் சூப்பர்.

na.jothi said...

வாழ்த்துக்கள் அய்யனார்
துபாய் வந்தா புத்தகம் கிடைக்குமா

பிச்சைப்பாத்திரம் said...

congrats, ayyanar.

ரௌத்ரன் said...

சந்தோஷம்...வாழ்த்துக்கள் அய்யனார் :))

☀நான் ஆதவன்☀ said...

வாழ்த்துகள் அய்ஸ் :)

மூன்று புத்தகத்தையும் உங்களிடமே வாங்க முடியுமா?

இளவட்டம் said...

வாழ்த்துக்கள் அய்யனார்.பாவாவின் பதிவிலேயே படித்தேன்.ஊருக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.புத்தகத்தின் வாசனையோடு தேநிரின் துணைக்கொண்டு உங்களுடைய எழுத்துக்களை வாசிப்பதற்கு.

Gowripriya said...

வாழ்த்துகள்

Ayyanar Viswanath said...

நன்றி வெயிலான்

நன்றி கண்ணா

நன்றி பைத்தியக்காரன்

நன்றி வாசு

நன்றி விழியன்

நன்றி முல்லை. ஆம்! பினு எடுத்த புகைப்படம்தான் இது

நன்றி சுந்தர்

Ayyanar Viswanath said...

நன்றி குப்பன் யாகூ. உங்கள் கருத்து ஒத்துக் கொள்ள வேண்டியதே. ஆனால் நம் சூழலில் எழுத்தை வருமானத்திற்கான வழியாகக் கருத முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை.

நன்றி அனுஜன்யா

நன்றி சென்ஷி

நன்றி முத்துலட்சுமி

நன்றி செய்யது. யார் அந்த நண்பர் ? அவருக்கும் என் நன்றி.:)

நன்றி சேகர் வரும் எண்ணம் இருக்கிறது. வந்தால் சந்திக்கலாம்.

Ayyanar Viswanath said...

நன்றி ஜோதி. விலாசம் தந்தாலும் புத்தகம் வரும் :)

நன்றி சுரேஷ் கண்ணன்

நன்றி ரெளத்ரன்

நான் ஆதவன் இங்கேயே கிடைக்கும்படி செய்கிறேன். நன்றி

மிக்க நன்றி இளவட்டம்

நன்றி கௌரிப்ரியா

Ken said...

வாழ்த்துகள் புலி எப்போ மஸ்கட் வர்ரே முகுந்தோட சேர்த்து கொண்டாடுவோம் :)

butterfly Surya said...

மகிழ்ச்சியும் வாழ்த்தும்.

அன்புடன்

சூர்யா

அன்பேசிவம் said...

வாழ்த்துக்கள் அய்யனார்.

//நிச்சயமாக புத்தகமாக வரவேண்டியவை தாம் உங்கள் எழுத்துகள். சற்று தாமதம் என்று கூடச் சொல்லலாம். //

அனுஜன்யாவைனை அப்படியே வழிமொழிகிறேன். :-)

யாழினி said...

தலைப்புகள் அருமை !!.

உங்களது முப்பரிமாண உலகத்தில் நாங்களும் உலவுவதற்கான
காத்திருப்போடு சந்தோஷம் நிறைந்த வாழ்த்துக்கள் !!!!

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அய்ஸ்!

//பைத்தியக்காரன் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு அய்யனார். வாழ்த்துகள்

தோழமையுடன்
பைத்தியக்காரன்
//

ரொம்ப பயமா இருக்கு அய்யனார்:)

Ashok D said...

வாழ்த்்ுகள்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் அய்யனார்

உங்களின் எழுத்துகளின் பகுப்பும் அதன்
பின்னிருக்கும் உழைப்பும் மிக்க மகிழ்வும் உவப்பும் தருகின்றன

மீண்டும் வாழ்த்துகள்

ச.முத்துவேல் said...

வாழ்த்துகள் அய்யனார். எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. எங்க ஊருலயிருந்து ஒரு எழுத்தாளர், புத்தகங்கள் வெளியிடுறாருல்ல.

அபிமன்யு said...

ரொம்ப நாளாகவே எதிர்பார்த்துகொண்டிருந்தேன்..வாழ்த்துகள் அய்யனார்

Balakumar Vijayaraman said...

வாழ்த்துக்கள் !

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

Deepa said...

வாழ்த்துக்கள் அய்யனார்! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
அட்டைப் படங்களும் அட்டகாசமாக இருக்கின்றன!

நிறைகுடம் தளும்பாது என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது இந்தப் பதிவு!

லேகா said...

Hearty Congrats Ayyanar!!
Keep rocking!!

Ayyanar Viswanath said...

நன்றி கென். அங்க கொண்டாட என்னய்யா இருக்கு நீங்க ரெண்டு பேரும் இங்க வாங்க :)

நன்றி சூர்யா

நன்றி முரளிகுமார்

காத்திருப்புகளுக்கு நன்றி யாழினி

நன்றி குசும்பா

நன்றி அஷோக்

Ayyanar Viswanath said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நேசமித்ரன்

நன்றி முத்து :)

நன்றி அபிமன்யு

நன்றி பாலகுமார்

நன்றி வால்

நம்பிக்கைகளுக்கு மிக்க நன்றி தீபா

Ayyanar Viswanath said...

நன்றி லேகா :)

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள் ஐயனார்!முன்பே அறிந்தேன்.ரொம்ப சந்தோசமாய் இருக்கு..

யாத்ரா said...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அய்யனார், வாழ்த்துகள். உங்கள் புத்தகங்களை வாங்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

நிறைய சந்தோசம் மற்றும் பல..
இதுக்கு நான் பின்னூட்டம் போடப்போறதில்லை அய்யனார், இப்ப இந்த பதிவு படிச்ச கணத்துல இருந்து நினைக்கிறது எல்லாத்தையும் உங்களை நேரில பாக்குறப்போ சொல்றேன்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அய்ஸ் ;))

DJ said...

தூர‌த்திலிருந்தாலும் எழுத்தால் நெருக்க‌மாய் உண‌ரும் ந‌ண்ப‌ரின் தொகுப்புக்க‌ள் வ‌ருவ‌து மிக‌வும் மக‌ழ்ச்சியாக‌ இருக்கிற‌து.வாழ்த்துக்க‌ள் அய்ய‌னார்.
....
ஏன் அந்த‌ வாசக‌'ன்' ஆக‌ இருக்க‌வேண்டும்? வாச‌கியாக‌ இருக்க‌க்கூடாதா? இவ‌ற்றில் ச‌ற்றுக் க‌வ‌ன‌ம் எடுத்தால் ந‌ல்ல‌துபோல‌த் தோன்றுகின்ற‌து, அய்ய‌னார்.

MSK / Saravana said...

மிகுந்த சந்தோஷமாயிருக்கிறது.

கலக்கல் தல. வாழ்த்துக்கள். Keep rocking. :)

புத்தகங்களின் தலைப்புகளும், படங்களும் அசத்தல்.. :)

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

அருண்மொழிவர்மன் said...

வாழ்த்துக்கள் அய்யனார்.

வம்சி வெளியீடுகள் இங்கே எப்போ கிடைக்குமோ தெரியவில்லை, ஆனால் எப்படியும் எடுப்பித்து படித்து விடுவேன்.

Ayyanar Viswanath said...

மிக்க நன்றி ராஜாராம் கருவேலநிழல் வருவது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்களும் அன்பும்.

நன்றி யாத்ரா

பேசலாம் தமிழன் விரைவில் வாருங்கள்.

நன்றி கோபி

டிசே
திருத்தங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :)

நன்றி சரவணக்குமார்

நன்றி மாதேவி

நன்றி அருண்மொழிவர்மன்

தமிழ்நதி said...

வாழ்த்துக்கள் கவிஞரே! புத்தகக் கண்காட்சிக்கு வருகிறீர்களா என்ன?

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

காஞ்சனை said...

வாழ்த்துக்கள் அய்யனார். மிக்க மகிழ்ச்சி ;-))
புத்தகங்க்களின் அட்டைப்படமும் தலைப்பும் கலக்கல்.

Ayyanar Viswanath said...

வரும் ஆசை இருக்கிறது தமிழ். சங்கிலிகளின் பிணைப்பு பலமாய் இருப்பதால் இயலுமா என தெரியவில்லை :)

நன்றி அமித்து அம்மா

நன்றி தென்றல்.

லக்ஷ்மி said...

வாழ்த்துகள் அய்யனார். அடர் கானகத்தின் தனிமையிலிருந்து விடுபட்டு புத்தக சந்தைக்குள் வருவது நல்லதுதான்.. :)

அன்புடன் அருணா said...

மனமார்ந்த வாழ்த்துகள் அய்யனார்! :-)

enbee said...

Nandri & Makizhchi

Unknown said...

nandri ayyanar...

Unknown said...

Congrates ayyanar,

Best Wishes,
Salem Ramesh.

பாண்டித்துரை said...

மகிழ்ச்சியாக இருக்கிறது

வாழ்த்துகள் அய்யனார்.

Featured Post

test

 test