பெருமழையின் சப்தங்களைப்
போலிருந்ததாய் சொன்னாள்
விசும்பலில் துவங்கி
கேவல்களாய் நிறைவுற்ற
சின்னஞ் சிறு சிம்பொனி
என முறுவலித்தாள்
பாறைப் பிளவிலிருந்து கசிந்த நதி
எனச் சொல்லிச் சிரித்தாள்
….
எதுவும் நினைவிலில்லை
நான் உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை
அவளின் பெருங்கருணை முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தேன்.
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
14 comments:
//பாலருந்திக் கொண்டிருந்தேன்.//
காப்பி, கப்பசினோ எல்லாம் டிரைசெஞ்சு பாரேன்.
ம்ம்ம்ம் :)
கவிதையை உணரமுடியுது அய்ஸ். ரொம்ப நல்லாயிருக்கு.
ஹா ஹா ஹா...அட்டகாசம்!
உங்க டச்சிங் வர்ற மாதிரி ஒரு டெம்ப்ளெட் கிரியேட் பண்ணிகிட்டு இருக்கிங்க!
ஆனா அது நல்லதா கெட்டதான்னு எனக்கு தெரியல!தெரியாது!தெரிஞ்சுகவும் வேண்டாம்!
கவிதை வழக்கம் போல மிக அருமை.
உங்கள் போட்டோ எல்லாம் வலைப்பக்கத்தில் போட்டு கலக்கறீங்க. நிஜமும் நிழலும் (இனியாய் வாழ்வும்) இணையும் நேரம் வந்து விட்டது ;போல.
ம்ம்...
கவிதை படித்துவிட்டு நானும் 'குழந்தையானேன்'
////பாலருந்திக் கொண்டிருந்தேன்.//
காப்பி, கப்பசினோ எல்லாம் டிரைசெஞ்சு பாரேன்.//
இதுக்குத்தான் நான் எப்பவும் ப்ளாக் டீ சாப்பிடறது :)
சரி சரி ரொம்ப அழாதீங்க கவிதை நல்லா தான் இருக்கு
”நச்” சுன்னு இருக்கு கவிதை :)
//விசும்பலில் துவங்கி
கேவல்களாய் நிறைவுற்ற
சின்னஞ் சிறு சிம்பொனி//
நல்லாருக்கு அய்யனார்.
விழாவிற்கு சென்று பார்த்த உணர்வை கொண்டுவரும் வல்லமை உங்கள் எழுத்தில் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
குழந்தைக்கு அப்படிதான் தோணும் இல்ல..
நல்லா இருக்கு தல கவிதை. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..
Post a Comment