Friday, May 29, 2009

உடலைப் புசித்தல்


விழித்தெழுந்த காலையில்
அவளுடலைத் தின்னும்
வேட்கை யுதித்தது.
முழு உடலை இரண்டாய் மடித்து
லேசாய் உப்பு மிளகு தூவி,
கடித்துத் தின்று கொண்டிருந்தேன்.
உச்சியின் தகிப்பில்
சதைகளை கடித்து இழுத்து
உதடுகளில் இரத்தம் வழிய
அவளுடலைப் புசித்தேன்.
மாலைத் திரும்புகையில்
அதே உடலை நீள வாக்கில்
இரண்டாய் கீறி
பிளவுகளின் உள் நுழைந்து
பத்திரமாய் அமர்ந்து கொண்டேன்.
.....
இரவை நினைத்தால்தான்
பயமாக இருக்கிறது.

19 comments:

லேகா said...

நல்லா இருக்கு அய்யனார் :-)

குப்பன்.யாஹூ said...

அருமை அய்யனார்.

இதே போல பெண்களும் ஆண்கள் உடலை தின்னத் தொடங்கினால்?

குப்பன்_யாஹூ

நந்தாகுமாரன் said...

superb

Unknown said...

அய்யனார், Hold On படம் பாத்திருக்கீங்களா? ரத்தம், self destruction இதெல்லாம் நிறைய உண்டு அதுல..இந்த கவிதையும் அத்திரைப்படமும் ஒரு புள்ளியில்.I didnt like this poem, very sorry to say this. .மற்றபடி நலம் தானே?

சென்ஷி said...

// உமாஷக்தி said...

அய்யனார், Hold On படம் பாத்திருக்கீங்களா? //

எனக்கென்னமோ இது தீவு படக்கிளைமேக்ஸ் ரேஞ்சுல பட்டது :)

வால்பையன் said...

//இரவை நினைத்தால்தான்
பயமாக இருக்கிறது. //

அதுக்கும் ஒரு வழி இருக்கு,

கத்தியை எடுத்து
தொப்புளிலிருந்து
மேல் நோக்கி கீறி
”என்னை” எடுத்து
வெளியே போட்டேன்
பயம் போன இடம்
தெரியவில்லை!


ஹிஹிஹி

நான் அப்படி தான் பண்ணுவேணாக்கும்!

மதன் said...

எனக்கு ரொம்பப் பிடிச்சதுங்க..!

கோபிநாத் said...

எப்படி தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி சாப்பாடு கிடைக்குதோ!!?? ;)))

Unknown said...

அட...!! சூப்பர்...!!! அருமையான சிந்தனை.....!!!!

MSK / Saravana said...

அட்டகாசம் தல.. :)

அகநாழிகை said...

அய்யனார்,
கவிதையில் பூடகமாக உணர்த்தும் விஷயங்களைக் கொண்டே இக்கவிதையை ரசிக்க முடிகிறது. இதுவும் ஒருவகையான கவிமன வெளிப்பாடுதான். கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் குருரமும், ஆதிமனதின் வன்முறையும் வெளிக்கொணர்வதாக வரிகள் அமைந்துள்ளன.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தமிழன்-கறுப்பி... said...

_________அடங்கி விடுகிறது உலகம்..

அடுத்த பதிவு?

Raju said...

முடிவா என்ன சொல்றீங்க.?

Ayyanar Viswanath said...

லேகா,குப்பன்,நுந்தா,உமா,சென்ஷி,வால்,
மதன்,கோபி,லவ்டேல்மேடி,சரவணக்குமார்
அகநாழிகை மற்றும் தமிழன் பகிர்வுகளுக்கு நன்றி

டக்ளஸ் எதாச்சும் சொல்லியே ஆகனுமா:)

அருண். இரா said...

ayyanar kalakireenga!!!

Katz said...

//எப்படி தான் உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி சாப்பாடு கிடைக்குதோ!!?? ;)))//

Repeatய்ய்!

நித்தி .. said...

oruvar mel alavu kadandha pasamo eerppo varum pothu avarai 'kadithu thingalam pola iruku' endru solvom..
ungalin intha eluthukalai parkum bothu athu nijamagirathu...
rommmba nalaruku...

Anonymous said...

பரிமாற வந்தேன்...பசியாறினேன் ...

Anonymous said...

பசியாறினேன் ...

Featured Post

test

 test