Thursday, June 4, 2009
பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணாடி:கமலாதாஸ்
காதலிக்க ஒருவனைப் பெறுவதென்பது எளிதானது.
ஒரு பெண்ணாய் உன் விருப்பங்களில்
நேர்மையாய் மட்டுமிரு.
நிர்வாணமாய் அவனோடு கண்ணாடியின் முன் நில்.
அதன் மூலம் அவன் அவனை வலிமையானதாய்
பார்த்துக் கொள்ளட்டும்.
மேலும் அதை அப்படியே நம்பட்டும்.
நீ இன்னும் அதிக மென்மையானவள்.
இளமையானவள். அழகானவள்.
உன் சிலாகிப்பை அனுமதி.
அவனுடைய உறுப்புகளின் கச்சிதத்தை கவனி
குளிக்கையில் அவன் விழிகள்
சிவப்பேறிக் கொண்டிருக்கின்றன
குளியலறைத் தரையின் குறுக்கிலான
அவனது கூச்ச நடை,
அவிழும் துண்டுகள்,
உடலதிர்வோடு கூடிய அவனது ஒன்றுக்கிருத்தல்,
அவனை ஆணாக்கும்
உனக்கான ஆணாக மட்டுமாக்கும்
எல்லா விநோத உணர்வுகளையும் கவனி.
எல்லாவற்றையும் அவனுக்கு பரிசளி!
எதுவெல்லாம் உன்னை பெண்ணாக்குகிறதோ
அதையெல்லாம் அவனுக்கு பரிசளி.
நீளக் கூந்தலின் வாசத்தை,
முலைகளுக்கிடையிலான வியர்வை மணத்தை,
மென்னதிர்வுடனான மாதவிடாய் உதிரத்தை,
மேலும் உன் முடிவற்ற பெண்மையின் பசிகளை
அவனுக்குப் பரிசளி!.
ஆம்!
காதலிக்க ஒருவனைப் பெறுவதென்பது எளிதானது.
அவனில்லாமல் வாழ்வதென்பது பிறகு
எதிர்கொள்ளப்பட வேண்டியதாய் இருக்கலாம்.
உயிர்ப்பில்லாத வாழ்வை நகர்த்தியபடி,
முற்றிலும் புதியவர்களை சந்தித்தபடி,
தேடலைத் துறந்த விழிகளோடு,
அவன் கடைசியாய் உச்சரித்த உன் பெயரை
மட்டும் செவிகளில் ஒலித்தபடி,
அவன் தீண்டல்களில் மெருகேற்றப்பட்ட பித்தளையாய் ஒளிர்ந்து
இப்போது வெளிறியும்
தனித்தும் விடப்பட்ட
இதே உடலுடன்.
The Looking Glass
Getting a man to love you is easy
Only be honest about your wants as
Woman. Stand nude before the glass with him
So that he sees himself the stronger one
And believes it so, and you so much more
Softer, younger, lovelier. Admit your
Admiration. Notice the perfection
Of his limbs, his eyes reddening under
The shower, the shy walk across the bathroom floor,
Dropping towels, and the jerky way he
Urinates. All the fond details that make
Him male and your only man. Gift him all,
Gift him what makes you woman, the scent of
Long hair, the musk of sweat between the breasts,
The warm shock of menstrual blood, and all your
Endless female hungers. Oh yes, getting
A man to love is easy, but living
Without him afterwards may have to be
Faced. A living without life when you move
Around, meeting strangers, with your eyes that
Gave up their search, with ears that hear only
His last voice calling out your name and your
Body which once under his touch had gleamed
Like burnished brass, now drab and destitute.
- kamala das
ஏகப்பட்ட சுயமோகர்களை பதபதைக்கச் செய்த கவிதைக்காரி கமலாதாஸிற்கு அஞ்சலி.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
11 comments:
அஞ்சலிகள்...
நன்றி அய்யனார்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யனார்.
கூடவே கமலாதாஸ் பற்றியும் எழுதி இருக்கலாம் விரிவாக.
அடுத்த பதிவிலேனும் எழுதுங்கள்.
அன்பன்
குப்பன்_யாஹூ
Good translation நன்றி அய்யனார். படைப்பாளிகள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் ஒவ்வொரு முறை வாசிக்கப்படும்போது..she exists..
தமிழ்ப்படுத்தியது நன்றாக இருக்கிறது அய்யனார்.
கமலாதாஸ் இறந்தபின்னும் அதிர்வுகளை ஏற்படுத்தியபடியே இருப்பார்.
wonderufl ayyanaar.
Kamaladas is synonym with contradiction. People like jayamohan who think only'beautiful women i.e FAIR, slim 'can write, can dance,and even be alive may find her hard to face. HE writes his own gibberish psychology.I dont entirley agree with her views,but atleast she was honest, which i strongly feel is hugely lacking everywhere.
சீதா சொன்னதே.
very good translation
my deepest condolences to kamaladoss. and it is a beautiful trnslation. also a meaningful way
of rememberance.
Touching one. Great!
அழகிய மொழிப்பெயர்ப்பு.
மிக அழ்ந்த அனுதாபங்கள் :(((
பகிர்ந்தமைக்கு நன்றி அய்யனார்.
நன்றி.
"The Looking Glass" என்பதை “முகம் பார்க்கும் கண்ணாடி” என்று மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும்; பொருட்தெளிவும் கூடும் என்றே தோன்றுகிறது.
Post a Comment