Tuesday, March 10, 2009

குளிர் தீக்கங்கு



எப்போதாவது தலை காட்டும் கடவுள்
அன்றையப் பொழுதில்
நிரந்தரமாய் தங்கிவிட்டிருந்தார்.
தேவதையின் சாயல்களிலிருந்தவள்
ஒற்றை உள்ளாடையுடுத்தி
என் மீது கால் தூக்கிப் போட்டபடி
உறங்காத தன் மூன்றாவது இரவின் மீது
ஆழமாய் வாள் பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.

அபூர்வமாய் வந்தக் கடவுளை
மகிழ்வூட்ட
குடித்தபடியும்
சத்தமாய் பாடியபடியுமாய்
அவள் கொன்றுகொண்டிருந்த இரவினுக்கு
உயிரூட்டிக் கொண்டிருந்தேன்.

விடியலில்
மலை அகலும் வெண்புகையின் சாயலில்
துயிலெழுந்த அவள்
கடவுளை எட்டி உதைத்துவிட்டு
என்னை முத்தமிட்டாள்.
அஃது
நதிக்குளிரின் நடுக்கத்தையும்
தீக்கங்கின் வெம்மைகளையும்
ஒருங்கே கொண்டிருந்தது.

20 comments:

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் தல..!

தமிழன்-கறுப்பி... said...

\\
விடியலில்
மலை அகலும் வெண்புகையின் சாயலில்
துயிலெழுந்த அவள்
\\
கொன்னுட்டிங்க தல! நிறைய ரசனையான வரிகள் அய்யனார்!

வால்பையன் said...

//எப்போதாவது தலை காட்டும் கடவுள்
அன்றையப் பொழுதில்
நிரந்தரமாய் தங்கிவிட்டிருந்தார்.//

இடவசதியெல்லாம்
ஒன்றும் பிரச்சனையில்லையே
ஏனென்றால்
அங்கே ஏதேனும்
பிரச்சனை என்றால்
என்னிடம் புலம்பி
தொலையும்
சனியன்(கடவுள்)

தமிழன்-கறுப்பி... said...

\\
தேவதையின் சாயல்களிலிருந்தவள்
ஒற்றை உள்ளாடையுடுத்தி
என் மீது கால் தூக்கிப் போட்டபடி
\\

எனக்கு நெருக்கமா இருக்கு தல
இந்த வரிகள் (பேரின்ப நாயகி)
விட மாட்டிங்க போலருக்கு...

;)

வால்பையன் said...

//தேவதையின் சாயல்களிலிருந்தவள்
ஒற்றை உள்ளாடையுடுத்தி//

சும்மா மொட்டையா ஒற்றைன்னா எப்படி?
கரைக்டா சொல்லுங்க!

வால்பையன் said...

//அபூர்வமாய் வந்தக் கடவுளை
மகிழ்வூட்ட
குடித்தபடியும்
சத்தமாய் பாடியபடியுமாய்//

இங்கே நான் பண்ண
அதே கூத்தாலத்தான்
அது அங்கே வந்தது!
அங்கேயுமா!!!!!

வால்பையன் said...

//கடவுளை எட்டி உதைத்துவிட்டு
என்னை முத்தமிட்டாள்.//

இன்னும் ரெண்டு நாளைக்கு
அது அழுதுகிட்டே இருக்கும்
(ஆங்காங்கே மழை பொழியும்)

குப்பன்.யாஹூ said...

நதிக் குளிரின் நடுக்கமும்,
தீகங்கின் வெம்மைகளையும்
ஒருங்கே கொண்டு இருந்தது.

நல்ல வரிகள்.

குப்பன்_யாஹூ

யாத்ரா said...

அருமை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்கு அய்யனார்.

Anonymous said...

அதென்னவோ இசங்கள் எனப்படும் இந்த வகை கவிதைகள் எனக்கு எளிதில் புரிவதில்லை...

இதன் அர்த்தம் புரிந்து பின் படித்தால் இவ்வகை கவிதைகளின் வாசமே தனிதான்...

விளக்குங்களேன்... நானும் ருசிக்கிறேன்.

அன்புடன்
ஷீ-நிசி

மாதவராஜ் said...

நல்லா இருக்கு!

அது என்ன ”மூன்றாவது இரவு”?

கோணங்கி பல வருடத்துக்கு முன்பு மூன்றாவது தனிமை என்று ஒரு கதை எழுதியிருந்தார்.

அவரிடமும் இதே கேள்வி கேட்டேன்.

anujanya said...

அழகு. வேறென்ன சொல்ல!

உங்கள் முந்தைய வ.வே.தொ.அ.வே.கு. நான்கையும் ஒருங்கே படிக்க வேண்டும் இன்னொரு முறை.

வால், தேவதை குழந்தையாகவும் இருக்கலாம் :)

மாதவ், இரவை 'ஜாமம்/சாமம்' ஆக்கிப் பாருங்களேன் :)

அனுஜன்யா

anujanya said...

சொல்ல மறந்தது - புகைப்படத்தின் அழகும், பொருத்தமும். நீலம் குளிரையும், சிவப்பு தீக்கங்காயும் - அருமை.

அனுஜன்யா

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நன்பர்களே..

மாதவராஜ் / அனுஜன்யா

இரண்டு இரவுகள் தொடர்ச்சியாய் அவளை தூங்கவிட்டிராதவர்களின் மீதும் ஆழமான வாள் பாய்கிறது :) ஆனாலும் அனுஜன்யாவின் பார்வையும் இன்னொரு தளமாகத்தான் இருக்கிறது..எதையும் திணிக்காமல் எழுதுவது ஆசுவாசமாய் இருக்கிறது.வாசகன் சுதந்திரம் அல்லது பன்முகத் தன்மை :))

காட்டாறு said...

நல்லாயிருக்குது அய்யனார்.

ரௌத்ரன் said...

............
..................
............
........

அறிதல்
அர்த்தம்
ஹம்பக்.....

கவிதை..வெறும் கவிதை தான்...

"மலை அகலும் வெண்புகையின் சாயலில்
துயிலெழுந்த அவள்.."

அழகான சித்திரம்...

Unknown said...

நல்லாருக்கு அய்யனார். கவிதையைவிட தலைப்பு அருமை, அதுவே குறுங் கவிதையாக..

MSK / Saravana said...

//கடவுளை எட்டி உதைத்துவிட்டு
என்னை முத்தமிட்டாள்.
அஃது
நதிக்குளிரின் நடுக்கத்தையும்
தீக்கங்கின் வெம்மைகளையும்
ஒருங்கே கொண்டிருந்தது.//

கவிதை செம அழகு அய்யனார்.. செம நச்..

Ayyanar Viswanath said...

காட்டாறு,ரெளத்ரன்,உமாசக்தி மற்றும் MSK பின்னூட்டங்களுக்கு நன்றி..

Featured Post

test

 test