இதெல்லாம் இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல லிசி!..என்னோட நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் தீர்மானங்கள் எல்லாமே என்ன சுத்தின ஒரு புள்ளியில இருந்து தான் ஆரம்பிக்குது.எங்கங்கயோ அலைஞ்சு திரிஞ்சு மீண்டும் அதே புள்ளிலதான் வந்து முடியுது.இத்தன அலைவும் சுத்தலும் என்ன என்னிலிருந்து கூட விடுவிக்க தயாரா இல்ல அப்படிங்கிரதுதான் ஆச்சர்யமா இருக்கு.கடந்து வந்த மனிதர்கள், சூழல், வாழ்வு, படிச்சது, நேசிச்சது,சுத்தினது எதுவுமே என்ன என்னிலிருந்து விடுவிக்கல.அப்பப்ப நான் விடுபட்டதா நெனச்சது கூட சூழலின் மிகையோ அப்படின்னுதான் தோணுது. ஏன் தொடர்ச்சியா என்ன பத்தியே பேசிட்டிருக்கேன் என்ன பத்தியே சிந்திச்சிட்டிருக்கேன் என்ன பத்தியே எழுதிட்டிருக்கேன்னு நீ முகம் சுளிக்கிறியா.இந்த ‘நான்’ ‘என்’ இந்த கருமத்தலாம் கடக்க விரும்புறேன் லிசி.அதோட உன்னையும் அதாவது பெண்ணையும் முழுசா கடக்க விரும்புறேன்.அதான் எப்பவும் ஏதாவது ஒரு பெயர்ல வடிவத்துல பெண் இருக்கா. சிரிக்காதே.ஏன் சிரிக்கிற? உன்ன கடக்க முடியாதுன்னா? இல்ல என்ன கடக்க முடியாதுன்னா? இல்ல எதுக்காக கடக்கனும்னா? என்னோட நண்பன் ஒருத்தன் இருந்தான். செத்து போனா என்னாகும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்தான்.என்கிட்டலாம் கூட கேட்டான்.செத்த பிறகு நாமலாம் எங்க போவோம்னு?.எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்.இப்பவும் தெரியாதுதான்.ஆனா அப்ப அந்த கேள்விக்கு இன்னும் கொஞ்சம் நிதானமா பதில் சொல்லி இருக்கலாம்னு இப்ப குற்ற உணர்வா இருக்கு.ஆனாலும் அவன் செத்து போவானு யாருக்கு தெரியும்.அதில இருந்து தாழ்வு மனப்பான்மை இருக்க சக மனிதர்கள் கிட்ட தன்மையா நடந்துப்பேன்.எதாவது சொல்லி/கேட்டு தற்கொலை பண்ணிப்பாங்களோ அப்படிங்கிற பயம் எப்பவும் இருக்கு.ஆனா பாரு இந்த பரிதாபத்தால பயத்தால நான் நிறைய ஏமாந்திருக்கேன். ரொம்ப சுலபமா என்ன நிறைய பேர் ஏமாத்திட்டு பின்னால போய் சத்தமா சிரிச்சிருக்காங்க. சும்மா இப்படி எழுதுறன தவிர எனக்கு ஏமாற்றதுல ஒரு சந்தோசம் இருக்கு. தோற்கிறதுங்கிறது ஒரு பெரிய கலை.எந்த ஒரு விசயத்திலயும் நான் தோல்வியதான் விரும்புறேன்.தோல்வி மட்டும்தான் எப்பத்திக்குமான சாத்தியங்களை நிறைவேற்றிக் காட்டுது.வெற்றி எதுக்காக போராடினமோ அந்த உன்னதத்தை கடந்து போய்டுது.தோல்வி எப்பவும் அதிலயே திளைச்சு இருக்கு.ஆனா வெற்றி தோல்வி இப்படி எந்த ஒரு முடிவுமில்லாத ஆட்டத்த ஆடி தீர்க்கனும்.மய்யம் விளிம்பு ன்னு இரு வேறு நிலையில்லாத சூழல் எத்தன கடினமோ அத்தன கடினம்தான் இந்த வெற்றி தோல்வி அரசியலும்.ஆனா யோசிச்சி பாரேன் இந்த இரு வேறு நிலைகள் இல்லாம இருந்தா வாழ்வு எத்தன கொண்டாட்டமா இருக்கும் இல்ல! சாத்தியமே இல்லதான்.ஆனா சாத்தியமே இல்லாதத நோக்கி பயணிக்கதான் எனக்கு பிடிச்சிருக்கு. தோல்விய விரும்புற நான் எதுக்கு கொண்டாட்டத்த தேடனும்?.சாத்தியமே இல்லாததை சாத்தியப்படுத்த ஏன் மெனக்கெடனும்?அப்போ இணக்கமான ஒரு சூழல நானும் உருவாக்கனுமா?ஏன் சூழல் இணக்கமில்லாம இருக்க கூடாது?எல்லா சிந்தாந்தங்களும்,சிந்தனைகளும்,அரசியலும்,ஆழமும்,தேடலும் இணக்கமான வாழ்வுக்குதான்னா இணக்கம்னு நான் நெனச்சிட்டிருக்க ஒண்ண அடைஞ்சதும் எனக்கு சலிக்க ஆரம்பிக்குமே அப்ப என்ன பண்ணுவேன்? நிச்சயமா வேற ஒண்ண தேடி ஓடுவேன்.அப்ப இந்த ஓட்டத்துக்குலாம் முடிவே கெடயாதா.ஆமா மு டி வே கெ டை யா து.முடிவிலி.அலகிலா.எல்லையிலா.மீப்பெருவெளி.திரும்ப திரும்ப திரும்பத் திரும்பத் திரும்பத்..லிசி காது பொத்தாதே!.கேள்! நான் பேசுறத கேள்!!.நான் பேசினா சரியாகிடுவேன்.பேசப்பேச ஒற்றைத் தன்மை களையும்.நான் இதே பத்தியில எழுதி இருக்க வரிய கூட கொஞ்ச நேரம் கழிச்சி நிராகரிச்சிடுவேன்.அதுல போலித்தனம் இருக்கிறதா சொல்வேன்.எது பன்மை?எதில பன்முகத் தன்மை இருக்கு?பார்வையிலா?படைப்பிலா?ஏய் உனக்கு இன்னொன்னு சொல்லனும்.இந்த சூழல் இருக்கில்ல இது ரொம்ப ஆபத்தான ஒரு சூழல்.கணக்கு தியரம் மாதிரி எதையாச்சும் கன்னா பின்னான்னு போர்ட்ல கிறுக்கிட்டு எல் எச் இஸிக்கோட்டு ஆர் எச் னு கணக்கு வாத்தி மாதிரி சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்.உனக்கு சரியா சொல்லனும்னா சாரு மற்றும் எம்.ஜி.சுரேஷோட சில சினிமா கட்டுரைகளை உதாரணமா சொல்லலாம்.அவங்க திடீர்னு பின் நவீனத்துவ கூறுகள தமிழ் சினிமால கண்டு பிடிக்க ஆரம்பிச்சாங்க.அலைபாயுதே ஆய்த எழுத்து இதையெல்லாம் பின்நவீனப்படம் னு ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சொன்னாங்க.(மணி ரெண்டு பேருக்குமே சான்ஸ் தரலங்கிறது வேற விசயம்)இதெல்லாமே எல் எச் இஸிக்கோட்டு ஆர் எச் தான். இப்ப சக வலைப்பதிவர்களை எடுத்துக்கயேன் கெட்ட வார்த்தை வந்தா அது பின்நவீனம்.புரியலயா உடனே பிநவீனம்.வலைல அதிகமா நாறினது இந்த பின்நவீனம்ங்கிற சொல்.இத பயன்படுத்தின ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி எழுதுவான்.பின்னவீனம் பின்ணவீனம் இன்னும் கொடுமையாலாம் இந்த சொல்ல இவங்க எழுதி நான் படிச்சிருக்கேன்.நான் சமைச்சி நீ சாப்டுருக்க விஜய் சொன்னவர் ப.பு.சாந்தி கிருஷ்ணா படம் நேருக்கு நேர்.இதன் மூலமா என்ன சொல்ல வரேன்னா..ம்ம்ம்.. ஒண்ணும் இல்ல எதையாச்சிம் சொல்ரனா முடிக்கும்போது இதனால் சொல்ல வர்ரது என்னனான்னு எதையாச்சிம் சொல்லியே ஆகனுமா சும்மா பேசிட்ருக்க கூடாதா? பிநவை தெரிஞ்சவங்க மட்டும்தான் பேசனுமா என்ன? அவன் அவன் வாழ்க்கைய அவன் அவனுக்கு புடிச்சா மாதிரி வாழ்ந்துட்டு போறான். நம்ம ஊர்ல அரசியல்வாதிக்கு குத்து டேன்ஸ் ஆடத் தெரிஞ்சிருக்கிற தகுதி மட்டும் எப்படி போதுமோ அதே மாதிரி ஈ கலைப்பை இருந்தா என்ன வேணா எழுதலாம்.நீதான் தலைகீழாக்கல விரும்பறவனாச்சே.எல்லாத்தையும் கவிழ்த்துப்பார் எதையுமே புனிதமாக்காதே ன்னு வாய் கிழியுற கத்துறவனாச்சே.நீ!எதுக்கு இதுக்குலாம் டென்சனாவுற?ஏன் அரசியல்வாதி குத்து டேன்ஸ் ஆடகூடாதா? இல்ல குத்துடேன்ஸ் ஆடுரவன் அரசியல்வாதி ஆக கூடாதா?இந்த பன்மைவாதம்,பன்முகத் தன்மைலாம் பத்தி தொடர்ச்சியா பேசினா சிந்திச்சா மேல எழுதி இருக்க பத்தி மாதிரிதான் குழப்பமா இருக்குமா.எது நான்? எது நீ? எது என்னோட எதிர் குரல்னு தனிதனியா பிரிச்சிக்க முடியல மொத்தமா எல்லாமும் சேர்ந்து ஒண்ணும் புரியாம போய்டுச்சி பார்.பரவால்ல விடு அடுத்தவனுக்கு புரியனும்னு என்ன அவசியம். ஆர்வம் இருக்கவன் தேடி படிச்சிக்கிறான். அப்ப நீ பொதுவெளிக்கு ஏன் வர்ர? அய்யோ மறுபடியும் பல குரல்கள். உள்ள இருந்து பல குரல்கள். அவ குரல் கீச்சுக்குரல்.கந்தலா கிழிக்கும் மனச...ஆமா பலமுக மன்னன் ஜோ.. அய்யகோ ஆள விடு.. கால விடு..வாள எடு..வாழ விடூ..டூஊஊஉ... இப்ப நீ தெளிவா பதில் சொல்.. எது சரி? எது தப்பு? எது போலி? எது நிஜம்? எது உண்மை? எது பொய்?. எல்லாம் பொய்யா? எல்லாம் நிஜமா நீ நெனைக்கிறா மாதிரி எதுவும் இல்ல எல்லாம் சரியாத்தான் இருக்கு.நீதான் சரியில்ல நீதான் நீதான் நீதாண்டி நீதாண்டா நீஈஈஈ நீஈஈ நீ மட்டுமேதான்...........
தீயோடு போகும் வரையில் தீராது இந்தத் தனிமை
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் இங்கு நடித்திருப்போம் ஓஓஒ
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
11 comments:
//தோற்கிறதுங்கிறது ஒரு பெரிய கலை.எந்த ஒரு விசயத்திலயும் நான் தோல்வியதான் விரும்புறேன்.தோல்வி மட்டும்தான் எப்பத்திக்குமான சாத்தியங்களை நிறைவேற்றிக் காட்டுது.//
ஜெயிச்சவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
//.வலைல அதிகமா நாறினது இந்த பின்நவீனம்ங்கிற சொல்.இத பயன்படுத்தின ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி எழுதுவான்.பின்னவீனம் பின்ணவீனம் இன்னும் கொடுமையாலாம்//
எனது சிறு முயற்சி
பிண்ணவீணம்
பிண்னவீனம்
பிண்ணவீனம்
பிண்னவீணம்
பின்நவீணம்
பிண்நவீனம்.
எவ்வளவு எரிச்சலா இருக்கு பார்க்கவே இது கூட பின்நவீனம் தான்.
//பரவால்ல விடு அடுத்தவனுக்கு புரியனும்னு என்ன அவசியம்.//
அதானே! புரிஞ்சா என்ன புரியாட்டி என்ன?
அவனுக்கு தானே ”டவுசர் கிழியுது” நமக்கா?
நல்லா இருக்குங்க,
கேவலம் மொழியன்றி வேறில்லையோ நாம், மொழி என்ற ஒன்றால் கட்டமைக்கபபட்ட நினைவுக்குப்பை தான் நாமா,,,,,,,
\\தீயோடு போகும் வரையில் தீராது இந்தத் தனிமை
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் இங்கு நடித்திருப்போம் ஓஓஒ\\\
அயஸ் இதை படிச்சவுடன் ஒரே சிரிப்பு...அடப்பாவி அயஸ்ன்னு சொல்லி தனியாக சிரிச்கிட்டு இருக்கேன்.
என்னோட ஜிடாக்லையும் இதோ வரிகள் தான் ;)
\\சும்மா இப்படி எழுதுறன தவிர எனக்கு ஏமாற்றதுல ஒரு சந்தோசம் இருக்கு. தோற்கிறதுங்கிறது ஒரு பெரிய கலை.எந்த ஒரு விசயத்திலயும் நான் தோல்வியதான் விரும்புறேன்.தோல்வி மட்டும்தான் எப்பத்திக்குமான சாத்தியங்களை நிறைவேற்றிக் காட்டுது.வெற்றி எதுக்காக போராடினமோ அந்த உன்னதத்தை கடந்து போய்டுது.தோல்வி எப்பவும் அதிலயே திளைச்சு இருக்கு\\
ரைட்டு ;)
உள்மனப் புலம்பங்களை அப்படியே சொல்லியிருக்கீங்க... மனம் பேசினா அது மெய்தானே பேசும்!!
ஹே அய்யனார், உரையாடிலினி போய் லிசி வந்தாச்சா? வாழ்த்துக்கள். யார் போயினும் யாரேனும் வந்தாயினும் உன் பிதற்றல்கள் மட்டும் நின்றபாடில்லையே தோழா? இங்கே கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தால் மண்டை காய்வதுதான் மிச்சம். நின்று நிதானமாக உன் மனது நிர்மலமாக இருக்கும் போது அதனிடம் கேள் அய்யனார் 'உனக்கு என்ன வேண்டும் என்று' அதன் பின் மற்ற இரைச்சல்கள் மெல்ல அடங்கும். எனக்கு தெரிந்து நீ முதலில் யோகா க்ளாஸ் போ..சந்தோஷங்கள் வரும் போகும், ஆனால் நிம்மதி தான் அய்யனார் நிலையானது. அது கையளவேனும் நமக்குக் கிடைக்கிறதா? கடல் அளவு எண்ணக் குமிழிகளில் சிக்கிக் கொண்டு சிதறுபடாதே நண்பா. இந்தியா வந்தால் மாதாஜி உமாநந்தினி (நந்தாவிற்கு எதிர்பதம் நந்தினியாகத் தானே இருக்கவேண்டும்?) பார்த்து ஆசிர்வாதம் வாங்கினால் உனக்குப் பிடித்த பித்து சரியாகுமாம்.;)))) வழமை போலவே நல்ல பதிவு அய்யனார் கொஞ்சம் ஓவர் டோஸ் அவ்வளவே.
அயல்வெளி குறிப்புகள் எல்லாம் படிச்சாச்சு. எந்த வயல்வெளி தொலைதீர்கள் இந்த அயல்வெளி குறிப்புகளை
எழுது...!
எழுது...!!
எழுது...!!!!!
பின்நவீனம் பற்றி நீங்க சொன்னதை நிறைய யோசிச்சேன்.. :)
தேடித்தேடி வாசிச்சும் அது எனக்கு இன்னமும் தெளிவாகவில்லை...
தல என்ன பிஸியோ...?
Post a Comment