உம்பர்டோ ஈகோவினால் 1980 களில் இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவல் 1986 ல் Jean-Jacques_Annaud இயக்கத்தில் சீன் கானரி மற்றும் ஸ்லேட்டர் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது.
வெகு நாட்களுக்கு முன்பே இப்படத்தை பார்த்திருப்பினும் சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் மூலமான நாவல் ஒரு பின்நவீனத்துவப் பிரதி எனத் தெரிந்து கொள்ளமுடிந்தது. மிகுந்த பதட்டங்களுடன் மீண்டும் ஒரு முறை பார்த்தபோதும் என்னால் இத்திரைப்படத்தில் பின்நவீனத்துவத்தின் சாயல்களைக் கூட பெறமுடியவில்லை.நேர்கோட்டில் சொல்லப்பட்ட ஒரு துப்பறியும் கதையாம்சம் கொண்ட திரைப்படம் அவ்வளவுதான்.புதினங்களை திரைப்படமாக்குவதில் ஏற்படும் சிதைவுகள் தமிழ்பரப்பில் மட்டுமல்ல பொதுவாக எங்கும் விரவி இருக்கும் சிக்கல்.வாசகனின் அணுகுமுறையைப் பொறுத்து புதினங்கள் திரைப்படங்களாக மாறுவதின் தர அளவுகோல்கள் நிர்ண்யிக்கப்படுகின்றன.
சகோதரர் வில்லியம் பாஸ்கர்வில்லே (சீன் கானரி) ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு நிகரான புத்திக்கூர்மை படைத்தவர். ஃப்ரான்சிஸ்கேன் எனப்படும் பதவியிலிருப்பவர்.ரோமன் கேதலிக் சபையில் மதக் கட்டளைகளை நிறைவேற்றும் பதவியிலிருப்பவரை இவ்வாறு அழைக்கிறார்கள்.இவரது சீடனாக அட்ஸோ(ஸ்லேட்டர்)இவர்கள் இருவரும் ரோமிலுள்ள மடாலயம் ஒன்றில் நிகழ்ந்த மரணத்தை விசாரிக்க செல்லுகின்றனர்.பாதிரியார்கள் வசிக்கும் அம்மடாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று அங்கு நிகழ்ந்த மரணம் குறித்த கேள்விகளுக்கு விடை காண இருவரும் செல்கின்றனர்.இறந்த மொழிபெயர்ப்பாளன் தற்கொலை செய்து கொண்டான் என அம்மடாலயம் அறிவிக்கிறது ஆனால் சீன்கானரி அது கொலையாக இருக்ககூடும் எனக் கருதுகிறார்.மேலும் அடுத்தடுத்து இரண்டு கொலைகளும் சம்பவிக்கின்றன.தொடர் கொலைகளால் பீதியடையும் மடாலய பாதிரியார்கள் சீன்கானரியின் துப்பறியும் திறமையை சந்தேகிக்கின்றனர்.புராதன நூலகம் ஒன்றில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் மற்றும் இறந்த அனைவரின் விரலிலும் நாக்கிலும் கானப்பட்ட மைக்கறைகள் மூலமாய் இக்கொலைகளுக்கு காரணம் ஏதோ ஒரு புத்தகமாயிருக்ககூடும் என கருதுகிறார் வில்லியம்.
மேலும் அந்நூலகத்தினுள் இரவு நேரத்தில் செல்ல அனுமதியும் அவருக்கு மறுக்கப்படுகிறது.நூலக உதவியாளன் கொல்லப்படுகிறான்.நூலகரின் வினோத நடவடிக்கைகள் வில்லியமின் சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது.வில்லியமும் அட்ஸோ வும் labyrinthine medieval library என சொல்லப்படும் புதிர்தன்மை நிறைந்த குழம்பச் செய்யும் வழிகளைக் கொண்ட அந்நூலகத்தினுள் சென்று அரிஸ்டாட்டிலின் இரண்டாவது புத்தகமான பொயட்டிக்ஸ் என்ற நூலை கண்டுபிடிக்கின்றனர்.இந்நூலை படிக்க முயன்ற அல்லது பிரதியெடுக்க முயன்ற அனைவரும் கொல்லப்பட்டிருப்பதை வைத்து இந்நூலை வேண்டாத ஒருவர்தான் இக்கொலைகளுக்கு காரணமாயிருக்க முடியும் என்கிற முடிவிற்க்கு வருகின்றனர்.
அதே சமயத்தில் அட்ஸோ மடாலயத்தில் மிகுந்த உணவை கொண்டு செல்லும் விளிம்புநிலைப் பெண்ணை சந்திக்கிறான்.ஒரு எதிர்பாராத தருணத்தில் அவளோடு கலவியில் ஈடுபடுகிறான்.
இருவரின் மேலும் நம்பிக்கை இழந்த மடாலயத் தலைவன் வேறொரு அதிகாரியை வரவைக்கிறான்.அவன் வந்த வேகத்தில் மடாலயத்தில் பணிபுரியும் குரூபி ஒருவனையும் உணவு திருட வரும் பெண்ணையும் கைது செய்கிறான் மடாலயத்தின் கொள்கைகள் பிடிக்காது தப்பிப்போக எண்ணும் பாதிரியார் ஒருவனையும் கைது செய்து இக்கொலைகளுக்கு அவர்தான் காரணம் என நம்பவைத்து மூவரையும் உயிரோடு கட்டி வைத்து எரிக்க மடாலயத்திடமிருந்து அனுமதி வாங்குகிறான்.
புத்தகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியின் முடிவில் இக்கொலைகளுக்கு காரணமான மடாலயத்தின் முதிர்ந்த பாதிரியாரை சந்தித்து விடுகின்றனர்.இப்புத்தகத்தை அவர் மறைத்ததற்க்கான காரனம் இப்புத்தகத்தின் அபரிதமான நகைச்சுவை நடையே என்கிறார்.

சிரிப்பென்பது கிறிஸ்து விற்க்கு எதிரான செயல் கிறிஸ்து ஒருபோதும்
சிரித்ததில்லை.சிரிக்கும்போது பயம் போய்விடுகிறது பயமில்லையெனில் அங்கே சாத்தான்
இல்லை சாத்தான் இல்லையெனில் கடவுளும் இல்லை
மத நம்பிக்கைகளின் அடிப்படையே உலுக்கிப்பார்க்கும் இது போன்ற புத்தகங்களை எவரும் படிக்க நான் விரும்பவில்லை என கத்தியபடி அந்நூலகத்தை எரிக்கிறான்.கைக்கு கிடைத்த புத்தகங்களை சேகரித்து வெளியே தப்பிக்கின்றனர் வில்லியமும் அட்ஸோ வும் கொழுந்து விட்டு எயும் தீயில் அப்பாதிரியாரும் மடிந்து போகிறான்.
தண்டனை பெற்ற மூவரையும் உயிருடன் கொளுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்போது திடீரென மடாலயம் தீப்பிடித்து எரிவதினால் எல்லாரும் குழப்பமடைந்து சிதறி ஓடுகின்றனர்.குப்பை மேடுகளில் வாழும் விளிம்பு மனிதர்கள் அப்பெண்ணை காப்பாற்றி கூட்டி செல்கின்றனர்.தப்பிக்க முயலும் விசாரணை அதிகாரியும் சில பாதிரியார்களும் கொல்லப்படுகின்றனர்.
இறுதிக்காட்சியில் வில்லியமும் அட்ஸோவும் திரும்பிச் செல்லும் வழியில் அட்ஸோவிற்க்காக காத்துக்கொண்டிருக்கும் அப்பெண்ணை தவிர்த்துப் போகிறான்.
இப்புத்தகத்தை நான் படிக்கவில்லையென்பதால் மூலம் சிதைக்கப்பட்ட கோபங்கள் எதுவும் எழவில்லை.புத்தகம் படித்து படம் பார்த்திராத சித்தார்த்தை இப்படம் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டேன்.

14 comments:
சிவாஜி டிவிடி இருக்கு வேணுமா?
this movie got any awards?
share some more details
//Anonymous said...
this movie got any awards?
share some more details
//
அய்யோ!!! இன்னும் மோர் டீடைல்ஸா????
அய்யனார் அந்த புத்தகத்தையும் படித்ததில்லை அந்த படத்தையும் பார்த்ததில்லை ஆகவே விமர்சனம் குறித்து சொல்ல ஒன்றுமில்லை. பின்நவீனத்துவத்தை தேடி கிடைக்காமல் போன வருத்தம் புரிகிறது. பார்த்த படத்தை உங்கள் பாணியில் கவிதை படைத்திருந்தால் பின்நவீனமாகிவிட்டு போகிறது சிதையாமல்.
//மத நம்பிக்கைகளின் அடிப்படையே உலுக்கிப்பார்க்கும் இது போன்ற புத்தகங்களை எவரும் படிக்க நான் விரும்பவில்லை என கத்தியபடி அந்நூலகத்தை எரிக்கிறான்.// அந்த ஆளை நம்ம வலைப்பூ பதிவுகளை படிக்க வேண்டாமென சொல்லுங்கள் இல்லையெனில் எத்தனை கணிணிகள் வீணாகும் ;-)
படத்தை பார்த்தாலே தாவு தீர்ந்துடும் போல இருக்கே?
அனானி சீன் கானரி க்கு பெஸ்ட் ஆக்டர் அவார்டு பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிசன் அமைப்பு தந்தது சிறந்த படத்திற்க்கான சீசர் விருதும் கிடைச்சிருக்கு
லொடுக்கு
அந்த கருமத்த நானும் பார்த்தேன் தியேட்டர்ல :)
ஜெஸிலா ..
புத்தகம் படிக்கலனா படத்த தாராளமா பாக்கலாம் டிவிடி வேணும்னா சொல்லுங்க அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில காலயந்திரம் + டிவிடி யோட வரேன் :)
லக்கி
உங்ககிட்ட கேக்கனும்னு இருந்தேன் தாவு ன்னா இன்னா :)
அய்யனார் லக்கி உபயோகிக்கும் 'தாவு'க்கு பொருள்:
Strength, valour, power; வலிமை. வேலைசெய்து அவனுக்குத் தாவு தீர்ந்துவிட்டது.
இங்க இவருக்கு படத்தை பார்த்தே தாவு தீர்ந்துவிட்டதாம் ;-)
//அய்யனார் said...
லக்கி
உங்ககிட்ட கேக்கனும்னு இருந்தேன் தாவு ன்னா இன்னா :)
//
அய்யனார் அண்ணா!
பின்நவீனத்துவ கவிதைகளை வாசித்ததுமே ஒரு இனம்புரியா தாகம் உமக்கு ஏற்பட்டதில்லையா? அந்த தாகத்தையே "தாவு" என்கிறோம்.
"தாவு" தீர்ந்தவர்கள் அடுத்ததாக தாகத்தை தணிக்கும் இடம் "டாஸ்மாக்"
மிகுந்த உற்சாகமளிக்கும் பதிவு.
எங்க தல... வாழ்க!
(ஒன்னும் புரியாவிட்டால் இப்படித்தான் பின்னூட்டமிடுவோம்)
லக்கி
அண்ணா ன்னு சொல்லி வயசை குறைத்துக்காதீங்க நீங்க 40+ ன்னு வலைப்பதிவற் எல்லாருக்கும் தெரியும் :)
ஒரு ரகசியம் சொல்றேன் நீங்க முதலில் டாஸ்மர்கை அனுகிட்டு அப்புறம் கவித படியுங்க அட்டகாசமா இருக்கும்
ஆமா தல, ஒன்னு கேக்கனும்னு ரொம்ப நாள் ஆகா நினைச்சுகிட்டு இருக்கோம்.
ஒங்க ப்ரோபேலில் இலக்கியம் கவிதை திரைப்படம்-னு போட்டு இருக்கீங்களே.. கவிதை இலக்கியத்தில் வராதா?
Interesting to know.
Post a Comment