Saturday, July 28, 2007
வடிவங்களற்ற மேகம்
எதிர் நகர்த்துதல்களை முன் கூட்டியே தீர்மானித்தபடி
இயங்கும் உன் அணுகுமுறை வெகு நேர்த்தியானது
இந்த உணர்வுகளுக்கு இந்த வார்த்தைகளென
நீ திட்டமிட்டு வெளித்துப்பும் சொற்கள்
தனக்கான பணியை செவ்வனே முடிக்கின்றன
சில கணங்களின் திடுக்கிடலோ
சில நம்பிக்கைகளின் தகர்வுகளோ
ஒரு இதயத்தின் நொறுங்குதலோ
கேட்காத தொலைவிலிருந்தபடி
உன் இயக்கம் வெகு சீராய் இருக்கிறது.
நிகழின் பிரதியென பிரகடணப்படுத்தியபடி
கணங்களின் உணர்வுகளை
வெளித்துப்பும் இன்னொருவனை
சொற்கள் அகல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது.
நாகரீகத்தின் பூச்சுகளிலோ
நட்பின் முகமூடிக்குள்ளோ
ஒளிந்திருக்கிறது வன்மத்தின் கசடுகள்.
கோபத்தின் விதையொன்றினை
எதிராளியின் விளை நிலத்தில் ஊன்ற செய்யும் கணங்களையாவது
இனி முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.
எவ்விதத் தீர்மானங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்
பொறாமையின் கங்குகளணைக்க
அன்பின் நீர்த்துளி சுமந்தலைகிறது
வடிவங்கள் எதுவுமற்ற வெண்ணிற மேகம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
32 comments:
//எவ்விதத் தீர்மாணங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்//
சத்தியமா இப்ப புரிஞ்சுது அய்யனார். அடடா போட வச்சுட்ட அய்யனார். ஆமா நானும் இதை நெனச்சேன், ஆனா இதை கோர்க்க வார்த்தை பஞ்சம் போல இருக்கு என்னிடம். அழகா சொல்லியிருக்கப்பா அய்யனார்! சுத்தி போடனும் குழந்தைகளுக்கு!
ஃபாத்தீனும் மரியமும் போல் தீர்மானங்களற்று வாழ்வதற்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அந்த பிறாயத்தைத் தாண்டினாலே வன்மமும் நம்முடன் வளர்ந்துவிடுகிறது.
//எவ்விதத் தீர்மாணங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்//
அருமை. திடுக்கிட வைத்த வரிகள்.
//சத்தியமா இப்ப புரிஞ்சுது அய்யனார். //
அபிஅப்பா, மெய்யாலுமா?
எனக்கு பாதிதான் புரிஞ்சது. :)
அருமை அய்ஸ் ;-))
\\அபி அப்பா said...
//எவ்விதத் தீர்மாணங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்//
சத்தியமா இப்ப புரிஞ்சுது அய்யனார். அடடா போட வச்சுட்ட அய்யனார். ஆமா நானும் இதை நெனச்சேன், ஆனா இதை கோர்க்க வார்த்தை பஞ்சம் போல இருக்கு என்னிடம். அழகா சொல்லியிருக்கப்பா அய்யனார்! சுத்தி போடனும் குழந்தைகளுக்கு!\\
கண்டிப்பா சுத்தி போட சொல்லுங்க அபி அப்பா ;-))
சத்தியமா இப்ப புரிஞ்சுது அய்யனார். அடடா போட வச்சுட்ட அய்யனார். ஆமா நானும் இதை நெனச்சேன்
//
அபி அப்பா எப்படி ஓப்பன் டாக் வேண்டாம் நாம அய்யனாருக்கு எதி கோஷ்டி என்பதை தெரிவித்து கொல்கிறேன்
சுத்தி போடனும் குழந்தைகளுக்கு!\\
//
குழந்தைகளூக்காக அபி அப்பாவை சுத்தி கடலில் போடாதிங்க..:)
)/அபி அப்பா எப்படி ஓப்பன் டாக் வேண்டாம் நாம அய்யனாருக்கு எதி கோஷ்டி என்பதை தெரிவித்து கொல்கிறேன்//
ரிப்பீட்டேய்.......
//எவ்விதத் தீர்மாணங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்//
அய்யனார் இதெல்லாம் உங்க கண்ணோட்டத்தில் சரிதான்
எங்க கண்ணோட்டத்தையும் பாருங்க
next
//எவ்விதத் தீர்மாணங்களுமில்லாமல்
புல்வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
ஃபாத்தீனும் மரியமும்//
எவ்விதத் தீர்மாணங்களுமில்லாமல் கண்மணி டீச்சருக்கு ஆப்பு வச்சதை சொல்லவேயில்லை
இந்த காலத்து குழந்தைகள் ரொம்பவே தீர்மாணத்துடன் இருக்கு நல்லா கவணிச்சி பார்த்தா தெரியும்...!!!!
//நாகரீகத்தின் பூச்சுகளிலோ
நட்பின் முகமூடிக்குள்ளோ
ஒளிந்திருக்கிறது வன்மத்தின் கசடுகள்.
கோபத்தின் விதையொன்றினை
எதிராளியின் விளை நிலத்தில் ஊன்ற செய்யும் கணங்களையாவது
இனி முன்கூட்டியே தீர்மாணிக்க வேண்டும்.// அய்யனார் நேத்து எல்லாரும் சேர்ந்து உங்கள கலாய்ச்சதுக்கு இப்படியா பதிலடிக் கொடுப்பது. நல்லவேளை நீங்க அவங்களதான் திட்டுறீங்கன்னு யாருக்குமே புரியலை :-)). உங்க மேல இருக்கிற கோபத்த ஒளிவுமறைவில்லாம அப்படியே கொட்டுறாங்க அதெல்லாம் கோபத்தின் வெளிபாடுன்னு தழும்பெல்லாம் வேண்டாம் எல்லாம் வயித்தெரிச்சலின் வெளிபாடாத்தான் தெரியுது :-))))))
கராமா பார்க்கும் குழந்தைகளும் அபாரம் என் பையன் துபாய் வந்த சில நாட்கள் கழித்து கேட்டது' முஸ்லிம் னா என்னப்பா? சபாஷ் அய்யனார்.
"கடிதங்களும்
அனுப்பவேண்டாம்
மடலும்
வரையவேண்டாம்
தூதும்
செல்லவேண்டாம்
அன்புமழையைப்பொழியச்சொல்ல
இந்த
வடிவங்களற்ற மேகத்திற்கு"
உங்கள்
கவிதையும்,
மழலைச்செல்வங்களின் படமும் அருமை
அய்யனார்
நட்சத்ட்திர வாழ்த்துகள் - தாமதமாகவேனும் :-)
வரிசையாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
தீர்மாணங்களுமில்லாமல் என்றெழுதியிருக்கிறீர்களே? அழுத்தமான தீர்மானம் என்பதை நவீனமாகச் சொல்லியிருக்கிறீர்களோ?
வடிவு கொண்ட ஆகாயமென்றொரு கவுஜை எழுதட்டுமா? :-)
சாத்தான்குளத்தான்
அபிஅப்பா தாமோதர் இளா
மிக்க நன்றி
லொடுக்கு பாதி புரிஞ்சதில்ல :)
டேங்க்ஸ் கோபி
தலைப்பைப் பார்த்ததும் ஒரு தயக்கம்.
"வார்த்தை தவறிவிட்டாய் கண்ணப்பா........................"
நல்லவேளை! படம் நல்லா இருக்கு.
/குழந்தைகளூக்காக அபி அப்பாவை சுத்தி கடலில் போடாதிங்க..:) /
/கண்மணி டீச்சருக்கு ஆப்பு வச்சதை சொல்லவேயில்லை/
மின்னலு எப்படிய்யா இதெல்லாம் :))
ஜெஸிலா
ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு புரிஞ்சிக்கிறீங்களே :(
/முஸ்லிம் னா என்னப்பா/
திகைக்க வைக்கும் கேள்வி இது.குழந்தைகளின் உலகம் கள்ளமில்லாதது வாசி! நன்றி
திகழ் மிளிர் மிக்க நன்றி
அண்ணாச்சி
வாழ்த்துக்களுக்கு நன்றி..என்ன ஊர்ல ரொம்ப பிஸியா?நான் வாங்கி வர சொன்னதெல்லாம் நினைவிருக்கில்ல :)
துளசி டீச்சர்
ஆஹா! இப்படி ஞாபகம் வச்சிருக்கிங்களே :)
கைவசம் இருந்த மேட்டர்லாம் தீர்ந்திடுச்சி கவிதைன்னா இன்ஸ்டண்ட் உடனே எழுதிடலாம் அதான்..
//சில கணங்களின் திடுக்கிடலோ
சில நம்பிக்கைகளின் தகர்வுகளோ
ஒரு இதயத்தின் நொறுங்குதலோ
கேட்காத தொலைவிலிருந்தபடி
உன் இயக்கம் வெகு சீராய் இருக்கிறது.
//
ம்ம்ம்.. என்ன சொல்ல? வார்த்தைகள் எதுவும் கைவசமில்லை அய்யனார். :(
சொன்னாப்புல நீங்க இந்த வாரம் கவிதை எழுதக்கூடாதே!!!
மிகவும் அருமை அய்யனார். வடிவங்களற்ற மேகம் என்ற தலைப்பும் மிக அழகாக வடிக்கப்பட்ட உங்களின் கவிதையும்.
சிவா.
காயத்ரி மற்றும் சிவா மிக்க நன்றி
லொடுக்கு ஃப்ரீயா விடுங்க :)
ஏதோ ஒரு வகையில் தனிமையில் நாம் நம்மைக் கொண்டு எழுதும் கவிதைகள் இன்னொரு நிலையில் பொதுமை அடைந்துவிடுகின்றன. உங்கள் இக்கவிதையும் அப்படியே. கவிதையைப் பற்றி உங்களுக்குச் சொல்லப்படும் விமர்சனங்கள், கலாய்ச்சல்கள் எல்லாவறையும் விடுத்து, தொடர்ந்து எழுதுங்கள். நவீன கவிதைகள் மீது, இணையத்தில் வைக்கப்படும் கலாய்ச்சல்களில் 90% எனக்குத் தெரிந்து, கவிதையை வாசிக்காதவர்களாலேயே வைக்கப்படுகிறது. நட்பில் சிரித்துவிட்டு, தொடர்ந்து எழுதவும். நன்றி.
எல்லாஞ்சரி.. எங்க மடத்தலை நாசூக்கா கேட்ட கேள்விக்கு பதிலைக்காணோமே..
தீர்மானமா தீர்மாணமா?
"எதிர் நகர்த்துதல்களை முன் கூட்டியே தீர்மானித்தபடி
இயங்கும் உன் அணுகுமுறை வெகு நேர்த்தியானது
இந்த உணர்வுகளுக்கு இந்த வார்த்தைகளென
நீ திட்டமிட்டு வெளித்துப்பும் சொற்கள்
தனக்கான பணியை செவ்வனே முடிக்கின்றன"
---அய்யனார்,
ஆரம்பமே அட்டகாசம்.
செதுக்கிய சொற்கள்
செப்பிய மொழியில்
சொல்லோவியமாய்
சொக்கி தவிக்கிறது
நெடுமூச்சாய் தகித்து
நெஞ்சில் தகிக்கிறது
எதிர்வினை என்னவானால் என்ன
எனக்குச் சந்தோஷம் எனில், சரியே
--சரியா?
பிரசன்னா
/நவீன கவிதைகள் மீது, இணையத்தில் வைக்கப்படும் கலாய்ச்சல்களில் 90% எனக்குத் தெரிந்து, கவிதையை வாசிக்காதவர்களாலேயே வைக்கப்படுகிறது. நட்பில் சிரித்துவிட்டு, தொடர்ந்து எழுதவும். நன்றி. /
உண்மை பிரசன்னா ..முடிந்தவரை புரிந்த கொள்ள ஆவலிருப்பவர்களுக்கு உதவுவோம்..விடாப்பிடியான மேதாவிகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை மேலும் இது போன்றவர்களின் கூச்சல்கள் தொடர்ந்து செறிவாய் இயங்க தூண்டுகிறது.புரிதலுக்கும் அன்பிற்க்கும் நன்றி
சுரேஷ் தல சொல்லி மாத்தாம இருப்பனா உடனே மாத்திட்டேன்
/எதிர்வினை என்னவானால் என்ன
எனக்குச் சந்தோஷம் எனில், சரியே/
மிகச் சரி ஜீவி நமக்கு என்று சொல்வது கூட பொருத்தமாக இருக்கலாம் இல்லையா :)
Post a Comment