Friday, July 27, 2007
கங்காவைப் பற்றி சில தகவல்கள்
கங்காவிற்க்கு அப்போது வயது இருபது
கங்கா வணிகவியல் மூன்றாமாண்டு படித்து வந்தான்
கங்கா விற்க்கு அதிகம் நண்பர்களில்லை
கங்கா கூச்ச சுபாவி
கங்காவிற்க்கு பெண் தோழிகள் யாருமில்லை
கங்காவிற்க்காக காத்திருந்த அத்தைப்பெண்ணுக்கு முடி நீளம்
கங்கா எல்லா சனிக்கிழமைகளிலும் தேவிகருமாரியம்மன் கோயிலுக்குப் போவான்
கங்காவிற்க்கு இரக்க குணம் அதிகம்
கங்காவிற்க்கு குழந்தைகளைன்றால் கொள்ளைப் பிரியம்
கங்காவிற்க்கு கோபம் அதிகம் வரும்
கங்கா உடம்பை நன்றாக வைத்திருப்பான் உடற்பயிற்சிகளில் நல்ல ஆர்வம்
கங்காவின் அப்பா ஒரு சவரத் தொழிலாளி விடுமுறை தினங்களில் கங்காவும் அவருக்கு உதவியாய் முடி திருத்துவான் / சவரம் செய்வான்
கங்காவிற்க்கு பிடித்த நடிகர் பிரபு பிடித்த நடிகை நதியா
பிடித்த படம் சின்னப்பூவே மெல்லப் பேசு
கங்காவிற்க்கு சண்டைப் படங்கள் அதிகம் பிடிக்கும்
சாமோ ஹியூங்க் மற்றும் ஜாக்கி ஜான் படங்களை விரும்பிப் பார்ப்பான் அவனுக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் படம் ஆர்மட் ஃபார் ஆக்சன்.
சின்னத் தம்பி படம் பார்க்கப்போன கங்கா அங்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த மூதாட்டியை பார்த்து மனமிரங்கி கையிலிருந்த பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பினான்
வெங்கடேசன் வீடு மழையில் அடித்துக்கொண்டு போனதற்க்கு மறுநாள் கங்கா தன்னிடம் இருந்த ஒரே போர்வையை அவனுக்கு கொடுத்து விட்டான்.
கங்காவிற்க்கு இரும்புக் கை மாயாவியை பிடிக்கும் நாமும் இப்படி மறைந்தபடி எல்லாம் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென சிலாகித்துக் கொள்வான்.
கங்காவிற்க்கு பாலகுமாரனின் இரவல் கவிதை மிகவும் பிடித்த புத்தகம்
கங்கா தன்னம்பிக்கை நூல்களை அதிகம் படிப்பான் எம்.எஸ் உதயமூர்த்தியின் எண்ணங்கள் அவன் அடிக்கடி படித்தது. பொன் மொழிகள்,தன்னம்பிக்கை வரிகள் இவற்றை தனது ரஃப் நோட்டில் எழுதி வைத்துக் கொள்வான்
கங்காவிற்க்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது.கிட்டி புல் நன்றாக விளையாடுவான்.
சிறுவர்களுடன் விளையடும்போது மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு கத்தியபடி நீண்ட குச்சியை வைத்து சுடுவான்
கங்காவிற்க்கு சுயமைதுனப் பழக்கம் இருந்தது
கங்காவிற்க்கு மிகவும் பிடித்த தலைவர் பிரபாகரன்.
கங்கா சில நாட்களாய் கல்லூரி போவதை நிறுத்தியிருந்தான்
நண்பர்களைப் பார்ப்பதையும் தவிர்த்தான்
உடம்பு சரியில்லை என அடிக்கடி சுருண்டு படுத்துக் கொண்டான்
1996 ஆம் வருடம் ஜனவரி 4 ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு பெரிய அந்த வீட்டின் குறுகலான அறை ஒன்றில் கங்கா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
21 comments:
ஏன்? ஏன்? ஏன்? எதற்காக தற்கொலை
செய்து கொண்டான் கங்கா? சுயமைதுனம் பண்ணுனதாலயா?அல்லது உடம்பு சரியில்லாததாலயா?
எதுக்குன்னு சொல்லிருங்கய்யா,புண்ணியமா போயிரும்.
தலைப்பிலேயே சில தகவல்கள்ன்னு சரியாத்தான் சொன்னீங்க..அவன் ஏன் கல்லூரி யை நிறுத்தினான்..நண்பர்களை தவிர்க்க காரணம் என்ன போன்ற இன்னம் சில காரணங்கள் தெரியவில்லை . :(
ஏன் அவன் தற்கொலை பண்ணுனான் தொடரும் கூட போடலையே
யோவ் அய்யனாரே என்ன வெளாடுறீரா?
கங்கா போல் பலர் உண்டு. மனம் கனத்துப் போச்சிய்யா.
விஸ்வா... நீ ரொம்ப உணர்ச்சிப்பூர்வமா இந்த மரணத்த விவரிச்சு இருந்தா இவ்வளவு பாதிச்சிருக்குமான்னு தெரியல. அவனுக்கு கூச்சம் அதிகம், ஜாக்கி ஜான் பிடிக்கும்ன்னு தகவல் வாரிசைல அவன் தற்கொலை செஞ்சிக்கிட்டான்னு எழுதினது மனச ரொம்பவே பாதிச்சிடுச்சு. கங்கா ஏன் செத்தான்னு எனக்கு தெரியல. ஆனா அவன் சாவு எனக்கு ஒரு தகவல் தான். அந்த வரிக்க மேல இருந்த மற்ற வரிகள் எனக்கு எந்த அளவுக்கு தேவையற்றதோ அதே அளவுக்கு தேவையற்றது தான் இந்த வரியும்னு நினைக்கும்போது நாம எல்லாருமே ஒரு வகைல குரூரமானவர்கள் அப்படிங்கற பிம்பம் ஒரு நொடி தோனி மறைஞ்சிது...
அவ்வளவு அர்த்தமற்றதா மரணம்? எனில் எவ்வளவு அர்த்தமுடையது வாழ்வு?
இது மாதிரி "வாசகர்ளின் முடிவுக்கே" விடுற கதை இப்போதான் தமிழ்மணத்துல படிக்கிறேன்
தாமோதர் மற்றும் முத்துலக்ஷ்மி
இந்த ஒரு எழுத்து யுக்தி என்பதைத்தவிர வேரெதுவும் இல்லை..தாமோதர் ரொம்பவே உள்வாங்கி இருக்கிங்க..மிக்க நன்றி :)
அனானி மற்றும் திகிலன்(நல்லா பேரு வைக்கிறீங்க) :)
காட்டாறு
தற்கொலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகம் ..வலிகள் இல்லாத வாழ்வேது
சித்தார்த்
சொல்லாமல் விட்ட சம்பவங்கள் சொல்லாது விட்ட வார்த்தைகள் ஏற்படுத்தும் வலிகள் மிக அதிகம் ..தற்கொலைகள் ரணமானதுதான் சித்தார்த்..அந்த தற்கொலைக்கான பின்புலம் வாழ்வின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடும்போது வெகு அற்பம்தான்.
வாழும் நாட்களை காட்டிலும் சாகும் நேரம் அற்பம் என்பதை அழகாக தலையில் கொட்டி சொல்வதாக தெரிகிறது. :-)
இளா சரியான புரிதலுக்கு நன்றி
தாழ்வு மனப்பான்மை போவதற்கு, எம் எஸ் உதயமூர்த்தியைப் படித்தாலும் ஜாக்கி சான் பார்த்தாலும் வேறெதுவோ தேவையிருக்கிறது போலும் எனக்கொள்ளலாமா?
நன்றி ஜெஸிலா மற்றும் சுல்தான்
தல இன்னிக்கு தான் படிச்சேன்....புதுச இருக்கு தல
//அந்த வரிக்க மேல இருந்த மற்ற வரிகள் எனக்கு எந்த அளவுக்கு தேவையற்றதோ அதே அளவுக்கு தேவையற்றது தான் இந்த வரியும்னு நினைக்கும்போது நாம எல்லாருமே ஒரு வகைல குரூரமானவர்கள் அப்படிங்கற பிம்பம் ஒரு நொடி தோனி மறைஞ்சிது...
அவ்வளவு அர்த்தமற்றதா மரணம்? எனில் எவ்வளவு அர்த்தமுடையது வாழ்வு? //
உண்மை. அதிர்ச்சி தந்த பதிவு..
கோபி மற்றும் காயத்ரி மிக்க நன்றி
இந்தப் பதிவப் பத்தி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையேப் போடலாம்...ஆனால் எனக்கு அந்தப் படம் மட்டும் இல்லாது போயிருந்தால் இன்னபிற தகவல்களைப் போல் அவனது இறப்பும் ஒரு குறுந்தகவல்தான்...எந்தவொரு வலியும் இல்லை
சத்யா எழுத்துக்களைக் காட்டிலும் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சற்று அதிகம்தான்.இத விளிம்பு மய்யமற்ற கவிதை ன்னு சொல்ல முடியுமா :))
அய்யனார், கதை சொல்லி இருக்க விதம் ரொம்ப வித்தியாசமா இருக்கு!!
எஸ்.ராவின் "உறுபசி" நாவலை ஒரு பக்கத்தில் படித்தது போன்ற அனுபவம்..
Post a Comment