Saturday, July 21, 2007

மழையின் ஈரக் கைகள்



வெட்ட வெட்ட தளிர்களாய்த் துளிர்க்கிறது
கொல்லைப்புற புங்கை
வன்மத்தில் எட்டி உதைத்தாலும்
வால் குழைந்தபடி காலைச் சுற்றுகிறது ராமு
தொல்லைகள் பொறுக்காது அறையப்பட்ட
குறும்புக்காரச் சிறுமி
கதவின் பின் ஒளிந்தபடி
கண்கள் பனிக்க
எட்டிப்பார்க்கிறாள்

நீலம் மறைத்தபடி சூழ்ந்திருந்த கரு மேகங்கள்
மெல்ல இளகத் துவங்கி
மழையின் ஈரக் கைகளின் வடிவம் கொண்டு
பூமியணைக்க விரைகிறது

தகித்திருந்த நிலம்
தணிவு கொள்கிறது

21 comments:

Unknown said...

கல்யாண்ஜி தொகுப்பு எதும் படிச்சீங்களா சமீபத்தில்,

படிமம், வடிவம், பாங்கு, தனித்திறன் அனைத்தும் அவரின் கவிதை மரபொற்றி இருக்கிறது.

முன்நவீன கவுஜர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக, இப்படி ஒரு கவிதையா அய்யனார்??

Ayyanar Viswanath said...

இசை
ரெண்டு அர்த்தம் வருதே உங்க பெயர்ல எதைப் பொருள் கொள்ள? இசை-சங்கீதம்,சம்மதி
:)
சாயல்களைத் தவிர்க்க முடியறதில்லைங்க மேலதிகமாய் கல்யாண்ஜி எனக்கு ரொம்ப பிடிக்கும்
அதுவுமில்லாம எல்லார் டவுசரும் கிழியறதால கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்..

Anonymous said...

அதுவுமில்லாம எல்லார் டவுசரும் கிழியறதால கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்கேன்..
//

அடுத்த டவுசர் கிழியும் பின்னுட்டங்களை வெளீயிடாவிட்டால்..!!!

Anonymous said...

எனது பின்னுட்டாங்களை வெளியிடாவிட்டால் கடும் பின்னுட்ட விளைவுகள் ஏற்படும்

லொடுக்கு said...

இல்லை!
முடியலை!!
நம்ப முடியலை!!!

லொடுக்கு said...

Gillet Plus III கவிதைக்கு பாராட்டுக்கள் அய்யனார்!!

Jazeela said...

அது என்ன 'எடிப்பார்க்கிறாள்' - புது வார்த்தையா ? ;-)

நீங்க புதுசா இப்படிலாம் புரியுறா மாதிரி எழுதினால் நிஜமாவே வெய்யில் கொழுத்தும் துபாயில்
//மழையின் ஈரக் கைகளின் வடிவம் கொண்டு
பூமியணைக்க விரைகிறது
தகித்திருந்த நிலம்
தணிவு கொள்கிறது// நடந்திடும். :-)

Ayyanar Viswanath said...

மின்னல் எல்லாம் வெளியிடப்படும் ஆனால் ஒரிஜினலாய் வரவேண்டும் :)

லொடுக்கு

நம்பித்தான் ஆகனும் நன்றி

Ayyanar Viswanath said...

ஜெஸிலா

மாத்திட்டேன் :)

ALIF AHAMED said...

அய்யனார் said...

மின்னல் எல்லாம் வெளியிடப்படும் ஆனால் ஒரிஜினலாய் வரவேண்டும் :)
//

யாருப்பா எனக்கே பிராக்ஸி குடுப்பது..:)

Unknown said...

//இசை
ரெண்டு அர்த்தம் வருதே உங்க பெயர்ல எதைப் பொருள் கொள்ள? இசை-சங்கீதம்,சம்மதி//

இசை தன்னளவில் பொருள்விளங்கக் கூடிய ஒன்று. சம்மதி என்ற பொருளில் பெருளில் வருவது, இசைவு, இசைந்தான், இசைந்தாள்.

கல்யாண்ஜி என் விருப்பமும் கூட, எளிமை, இயலாமையை இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் பாங்கு... பலகவிதைகள் மனப்பாடம் எனக்கு. அவரைதாண்டி கவிதைத்தளம் வெகுதூரம் வந்துவிட்டாலும், தாய்வீட்டு சோறுபோல... சுகமான வாசிப்பனுபவம் அவரின் கவிதைகள்.

முன்வீன்ர்களிடம் இருந்து தப்பிக்க நடுவீனம் என்றொரு வரலாற்று முக்கியத்துவ பதிவொன்று இட்டிருக்கிறேன். படித்துவிட்டு சொல்லுங்களேன்

Anonymous said...

அய்யனார் said...

மின்னல் எல்லாம் வெளியிடப்படும் ஆனால் ஒரிஜினலாய் வரவேண்டும் :)
//

டீல் ஓகே

தினமும் 100 பின்னுட்டம்

தாவு தீரும் எனக்கும் உங்களுக்கும்

Ayyanar Viswanath said...

அன்புள்ள அனானி

நீ மெனக்கெட்டு போடும் பின்னூட்டங்களை ஜிமெயிலில் செலக்ட் செய்து டெலிட் செய்வது மிகவும் சுலபம்
வேறு வேலை ஏதாவது இருந்தால் பார் நண்பா!!

:)

சும்மா அதிருதுல said...

வேறு வேலை ஏதாவது இருந்தால் பார் நண்பா!!

:)
//

இருந்தால் பாக்கலாம் நண்பா... :)

கதிர் said...

மழைல நனைஞ்சா மாதிரியே இல்ல.

ராமுன்னா நம்ம ராயல சொல்றிங்களா?
அவரை ஏன் எட்டி உதைக்கறிங்க?

பாவம்ம்ல

காயத்ரி சித்தார்த் said...

//ராமுன்னா நம்ம ராயல சொல்றிங்களா?
அவரை ஏன் எட்டி உதைக்கறிங்க?

பாவம்ம்ல//

சின்னதல! உங்க தலை உருளுது இங்க.. அந்து எட்டிப்பாருங்க!
:)

காயத்ரி சித்தார்த் said...

//தொல்லைகள் பொறுக்காது அறையப்பட்ட
குறும்புக்காரச் சிறுமி
கதவின் பின் ஒளிந்தபடி
கண்கள் பனிக்க
எட்டிப்பார்க்கிறாள்//

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சுதுங்க அய்யனார்! படம் எப்டி தேடிப்பிடிச்சீங்க இவ்ளோ பொருத்தமா? கவிதையும் படமும் வெகு அருமை!

கோபிநாத் said...

\\லொடுக்கு said...
இல்லை!
முடியலை!!
நம்ப முடியலை!!!\\

எனக்கும் தான் தல.....ஆனா வேற வழியில்ல

கோபிநாத் said...

\\தம்பி said...
மழைல நனைஞ்சா மாதிரியே இல்ல.

ராமுன்னா நம்ம ராயல சொல்றிங்களா?
அவரை ஏன் எட்டி உதைக்கறிங்க?

பாவம்ம்ல\\

அய்யோ
பாவம்
எட்டி
உதைத்தால்
நேவும்

Ayyanar Viswanath said...

மின்னல்,இசை,தம்பி,சும்மா அதிருதில காயத்ரி கோபி

நன்றி

சும்மா அதிருதில
நீங்க போட்ட 93 கமெண்டுக்கும் நன்றி

வாசகன் said...

வெயிலின் நெருப்புக்கரங்கள்/

திரும்பத் திரும்ப
வரும் எறும்புகளை
தேய்த்தழிக்கிறான் சித்தார்த்தன்

நட்டக்கணக்கு சொல்லும்
நடைபாதி வியாபாரியிடம்
இதயமேயில்லாமல்
பணம் பிடுங்குகிறான்
போலீஸ்காரன்

பணம் கொடுத்த பின்னும்
நிறுத்தாமல் பாடுகிறான்
ரயில் பாடகன்

மேகங்களை விரட்டியபடி
உரத்த குரலில்
உறுதியை பறை சாற்றுகிறான்
கதிரவன்
யாரும் கேட்காமலே..

இயலாமை முகமெங்கும் வெடிக்க
வானம் பார்த்திருக்கிறது பூமி.

(அண்ணாச்சி அளவுக்கு இல்லாட்டாலும்....)

Featured Post

test

 test