Tuesday, July 17, 2007

போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ



உன் அன்பு
காதல்
பகிர்தல்கள்
சகபயணி
நித்யகாதலி
ஸ்நேகிதி
ரகசியத்தோழி
என்றைன்றைக்குமான காதல் ..
இன்னும் இத்யாதி இத்யாதிகளையெல்லாம்
மூட்டை கட்டிக்கொண்டு
இடத்தை காலி செய்

நான் முன்பே உன்னிடம் சொன்னது போல்
இது சுயம் கரைந்த வெளி
அடையாளமனைத்தும் துறந்த நிகழின் பிரதி
கனவின் குத்தகைக்காரியான நீ
வசீகர வார்த்தைகளால் மயக்கத்திலாழ்த்துகிறாய்...
இந்த ஆக்ரமிப்புகள் பழக்கமில்லையெனக்கு
வெறுமை எப்போதும் வெறுமையை மட்டுமே தரும்
உன் இருப்பு இருவேறு நிலைகளை ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது
நெடுங்காலமாய் கனன்று கொண்டிருக்கும் தணலணைக்க
மழைத்துளியையொத்த உன் நேசம் எம்மாத்திரம்?

தனிமையின் கிளைகளில் தாயின் வெம்மைகளை
ஏற்கனவே படரச்செய்தாகிவிட்டது
உருவாக்கிக் கொண்ட பிம்பங்களில்
வெகு பாதுகாப்பாய் இருக்கிறதென் உலகம்
தலையைச் சுற்றிய வட்டம் அல்லது
இரட்டைக் கொம்புகள் முளைத்தலுக்கான
காத்திருப்புகளைத் தவிர
செய்ய வேண்டியது வேரெதுவும் இல்லை

மேலதிகமாய்

உன் அதிர்வுகளில் குலைகிறதென் நிசப்தம்
உன் பிரசன்னத்தில் ஓடிப் பதுங்குகிறது என் நிழல்
உன் கட்டுக்களற்ற சொற்கள் நிறைக்கிறதென் துவாரங்களை
முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன

நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்

22 comments:

ALIF AHAMED said...

நீங்க எழுதுவதை எழுதுங்க நாங்க காலி செய்கிறோம்..!!!

மிதக்கும்வெளி said...

/உருவாக்கிக் கொண்ட பிம்பங்களில்
வெகு பாதுகாப்பாய் இருக்கிறதென் உலகம்/

இந்த வரிகள் நன்றாக இருக்கின்றன.

லொடுக்கு said...

//போஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ //

அபிஅப்பா வாங்க இங்க, அய்யனார் ஓஓஓஓஓ போட்டிருக்காரு.

லொடுக்கு said...

//நீங்க எழுதுவதை எழுதுங்க நாங்க காலி செய்கிறோம்..!!!//

:)

Jazeela said...

யாருப்பா அங்க சொன்ன பேச்சு கேட்காம அடம்பிடிக்கிறது. இப்படிலாம் மரியாதையா சொன்னா கேட்கமாட்டாங்க நம்ம பசங்கள கொஞ்சம் கும்மியடிக்க சொல்லுங்க ஓடியே போய்டுவாங்க. அபிஅப்பா உங்க மகிமை தெரியாதவங்க போல இவங்க :-)

//முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன// இது ரொம்ப நல்லா இருக்கு.

அபி அப்பா said...

வந்துட்டேன்! லொடுக்கு பாத்தீங்கலா!கொஞ்ச நேரம் ஒரு பதிவு போடலாம்ன்னு போயிட்டு வர்ரதுக்குள்ள அய்யனார் ரகளை பண்ணிட்டாரா?

மின்னல் ஸ்டாட் மீசிக்!

குசும்பன் said...

வர வர புரிகிற மாதிரி கவிதை எழுதுகிறார் அய்ஸ்...

கோபிநாத் said...

\\\குசும்பன் said...
வர வர புரிகிற மாதிரி கவிதை எழுதுகிறார் அய்ஸ்...\\

ஆமாம் அய்ஸ் உண்மை தான் ;)

சரி யாருக்கு இந்த கவிதை? யார் மேல் உங்களுக்கு கோபம்?

Ayyanar Viswanath said...

நச் கமெண்டுயா மின்னல் :)

லொடுக்கு அபிஅப்பா
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Ayyanar Viswanath said...

நன்றி சுகுணா

ஜெஸிலா கிர்ர் நன்றி :)

Ayyanar Viswanath said...

குசும்பன் கோபி

புரிஞ்சா சந்தோசம்யா..கோபி உன் மேலகூட கோபம்தான் பர்த் டே ட்ரீட் ஏமாத்திட்டியே

Unknown said...

உன் நிசப்தத்தை விரட்டு
உன்னில் நீயே சுருங்காமல்
அவளின் வசீகர வார்த்தையை ரசி, வரி
சில மாறுதல்கள்
மனிதம் வாழத்தான்

Ayyanar Viswanath said...

நன்றி சுல்தான்

காயத்ரி சித்தார்த் said...

அட குசும்பன், கோபி மாதிரியே எனக்கும் கவிதை புரிஞ்சுடுச்சுங்க அய்யனார்! நல்லா இருக்கு!! :)

காயத்ரி சித்தார்த் said...

//நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்//

உங்களுக்கு இடம் விட மாட்டேன்றாங்களா? கொஞ்சம் தள்ளி உக்காரச் சொல்லுங்க.. இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்? :)

செல்வநாயகி said...

///உருவாக்கிக் கொண்ட பிம்பங்களில்
வெகு பாதுகாப்பாய் இருக்கிறதென் உலகம்///

எனக்கும் இந்த வரிகள் பிடித்தன அய்யனார்.

தருமி said...

//தயவு செய்து இடத்தை காலி செய்//

அவனை முதலில் காலி செய்யச் சொல்லு;
நான் பண்றேன் !

லக்கிலுக் said...

எச்சரிக்கை :

உங்கள் கவிதைகளால் எங்கள் தாவு தீர்ந்து, டவுசர் கிழிந்து போவதால் முன்நவீனத்துவ வாதிகள் உங்கள் பதிவுகளை இனி கவனமுடன் பரிசீலிப்போம் என்று சொல்லிக் கொள்கிறோம்.

Ayyanar Viswanath said...

காயத்ரி சாப்டீங்களா?
:)

நன்றி செல்வநாயகி

Ayyanar Viswanath said...

தருமி ஐயா :)

லக்கி

இன்றைய கவிதையை படித்து சற்று அமைதியடையவும் :)

Anonymous said...

//முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன//

இது ரொம்ப நல்லா இருக்கு..ரொம்ப ரொம்ப!!!

Anonymous said...

முன் தீர்மாணங்களில்லாத அடுத்தநிமிடங்கள்
தற்கொலை செய்துகொள்கின்றன//

மனதின் வெறுமையை அழகாய் சொல்லும் வரிகள்!!!

Featured Post

test

 test