Saturday, July 14, 2007
மதுவிடுதி நடனப்பெண் ஈயம் மற்றும் பித்தளை
செவியதிர இசையொலிக்கும் குறுகலான அறையொன்றின் மேடையில்
அவள் உட்பட எழுவர் அமர்ந்திருப்பர்
வண்ண விளக்குகளின் ஒளிச்சிதறல்கள் மேடையிலும்
மெல்லிய இருள் அறையிலும் விரவி இருக்கும்
இசையின் அதிர்வுகளுக்கென்றில்லாமல்
மிதந்து கொண்டிருக்கும் முன்னமர்ந்த விழிகளுக்காய்
தன் இறுக்கமான உடைகளிலிருந்து பிதுங்கிய சதைக்கோளத்தை எப்போதும் குலுங்கும்படி குதித்தோ முன் பின் அசைந்தோ
மதுவில் கட்டவிழ்ந்த விழி மிருகங்களுக்கு இரையாக்கியபடி
இரவை நிறைத்துக்கொண்டிருப்பர்.
எனக்கான ப்ரத்யேகமான புன்னகைகளை கொண்ட
அல்லது அப்படி நினைத்துக்கொண்ட பெண் மட்டும்
வெகு சிரத்தையாய் நடனமாடுவாள்.
பாடல்வரிகளை பாவனைகள் மூலமும்
இசையதிர்வை உடலின் மூலமுமாய்
வெகு நேர்த்தியாய வெளிப்படுத்துவாள்.
குறிப்பிட்ட பாடலுக்கு மட்டும் என்றில்லாமல்
அவளுக்கு பிடித்தமான ஒன்றின் துவக்கம் கேட்டவுடன்
எழுந்து ஆட ஆரம்பிப்பாள்.
சுழன்றும் லயித்தும் துள்ளியும் தன்னை மறந்து ஆட ஆரம்பிக்கும்போது போதை கொஞ்சம் வெளிறிப்போகும்.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
பொங்குகிறது அவள் முகம்
வரவை மறந்து செலவு செய்து
விரல்கள் விழிகளை சுட்டுகிறது
உயரப் பறந்து கொண்டாட்டுவோம்
விரல்கள் பறக்க ஆரம்பிக்கின்றன.
மாலை நியூயார்க்கில் கேபரே
இரு கைகளும் எல்லா விரல்களும் தன்னையே மீட்டியபடி
இரவில் தாய்லாந்தில் ஜாலி
வெட்கத்தால் ஒரு கையால் முகம் மறைக்கிறாள்
தம்மர தம்மர மஸ்த் மஸ்த்
தன தம்தன தம்தன மஸ்த மஸ்த்
தனதம்தன தம் தம்
என்னாசை தாவுது உன்மேலே
சுழலும் ஒரு ஓவியத்தின் சாயல்களை முன்நிறுத்தியபடி
வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே
துயரத்தில் தாழ்கிறது விழிகள்
பாத சுவடு தேடி தேடி
அடியெடுத்து நடந்தபடி துயரத்தில் மருகுகிறாள்
ஆசைய காத்துல தூதுவிட்டு
முகம் உடல் எல்லாம் சட்டென மாறுகிறது
உற்சாகமும் துள்ளலும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
மாசம் தை மாசம் வாலிபக் காலத்து நேசம்
கிறக்கமும் தவிப்புமாய் தொடர்கிறது நடனம்
காலியான மதுக்கோப்பைகளை நிறைக்கும் துப்பட்டா அணிந்திராத செழித்த சேச்சிகள் மதுவோடு கிறக்கத்தையும் சேர்த்துக் கலப்பர்
பெண், ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல், விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கு எல்லாவற்றின் மீதும்
மது நுரைபொங்க படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
19 comments:
யோவ் 10.30க்கு இறக்கிவிட்டவுடனா பார்க்கு போயிட்டியா! நெனச்சன்யா!
வலைப்பதிவர் சந்திப்பு பத்தி போடுய்யான்னா அதுக்கு பின்ன நீ நடத்துன கூத்த பதிவா போட்டுட்டியே! நல்லா இருங்கடெ!
//பெண், ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல், விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கு எல்லாவற்றின் மீதும்
மது நுரைபொங்க படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.//
செம முடிவு பா...
நீ சமீபத்துல எழுதினதுல ரொம்ப நல்ல கவிதை இதுன்னு எனக்கு படுது...
அய்யனார் நீங்கள் நேற்று சொன்னதால் முயற்சி செய்து படித்தே புரிகிறது ஆனால் கடைசியில் "ஈயம் மற்றும் பித்தளை" அப்படி என்று ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
(சரி சரி எவ்வளோவுக்கு திர்ஹாமுக்கு டோக்கன் போட்டிங்க!!!)
//பெண், ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல், விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கு எல்லாவற்றின் மீதும்
மது நுரைபொங்க படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.// ஒரு பகுதி பெண்களை மட்டும் வைத்து எடைப் போடுவதாக உள்ளது கருத்து. உடல் உள்ளம் கட்டுக்களுடைத்தாலும் ஆணாதிக்க சுமுதாயத்தில் மது நுரையில் மழுங்கடிக்கப்படுகிறது ஈயமும் பித்தளையும். நான் புரிந்துக் கொண்ட வகையில் இந்த பின்னூட்டம். தவறாக இருப்பின் வழக்கம் போல கவிதையின் கோணார் உரையை தந்துவிடலாம்.
ayyanaar,
kavithai mika nanRaaka irukkiRathu.
kaalaiyilEyE ungkaLukku pinnUttam pOtaalaamenRu ninaiththEn. mutiyavillai. engkaL aluvalaga kaNiniyil pinnUttam pOtuvathu romba siramamaaka irukkiRathu. niraiya type atiththu publish seythapOthu cannot find server enRu vanththu vittathu. atiththellAm vInaaka pOivittathu
ஒரு எள்ளலோடு கவிதை முடிவதாய் என் வாசிப்பில் தோன்றியது; அதுவே நிறைவான வாசிப்பைத் தருகின்றது. மற்றது உங்களல்லாத பிறரின்/பிறதின் வார்த்தைகளை உபயோகிக்கும்போது வித்தியாசப்படுத்திக் காட்டுவது நல்லதென நினைக்கிறேன். நன்றி.
engae nalla irukkumnu sonnaa naangalum poavumillai
அய்ஸ்...பாடல் வரிகளையும் உங்களின் வரிகளையும் வித்தியாச படுத்தியிருந்தால் ( வேற வேற கலரில்) இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
அப்புறம் குசும்பன் கேள்வி தான் என் கேள்வியும்....
சித்தார்த்
தேங்க்ஸ் மேன்..பாராட்டு போய் சேர வேண்டியதெல்லாம் அந்த பெண்ணுக்குதான் :)
குசும்பன் மற்றும் கோபி
பெண்ணியம் என்கிற வார்த்தையை ஈயம்,பித்தளை என வலையில் குறிப்பிடுகிறார்கள்
ஜெஸிலா
பெண்சார்பு கொள்கைகள் மழுங்கடிக்கப்படுகின்ற கூறுகளை, சலிப்பின் உச்சத்தில் வெளிப்படுகிற கோபத்தை எள்ளலாய் பதிவிக்க முனைந்தேன்
கோனார் உரையெல்லாம் தேவையில்லை உங்கள் புரிதல்கள் சரிதான் ஆனால் ஒரு பக்க நிலையில்லை சார்பியல் கூறுகள் நிறமிழக்கும் இடம் பற்றிய சித்திரமென இதைக் கருதலாம்
உமையணன்
நீளமாய் பின்னூட்டம் அடித்து காணாமல் போன சந்தர்ப்பங்கள்
எனக்கும் வாய்த்திருக்கிரது.:)
நன்றியும் அன்பும்
டிசே
யோசனைக்கு நன்றி சரிசெய்துவிட்டேன்
முதலில் இந்தக் கவிதைகளுக்கு விளக்கம் சொல்வதையெல்லாம் எப்பத்தான் நிறுத்தப்போறாங்களோ, தெரியலை.
தல
நீங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதில்லைன்னு யாராவது கோச்சுக்கப்போறாங்க :)
தோழிகளை இழப்பது அபத்தமில்லையா? மேலும் எனக்கு வேறு வேலையும் இல்லை.
துயத்தில்? ஏதாச்சும் கெட்ட வார்த்தையா? ;)
நன்றி பொன்ஸ் மாத்திட்டேன் :)
கிர்ர்ர் ..அதென்ன கெட்ட வார்த்தை கெடாத வார்த்தை
//சார்பியல் கூறுகள் நிறமிழக்கும் இடம் பற்றிய சித்திரமென இதைக் கருதலாம்
//
அருமை! அருமை!! வாழ்த்துக்கள். உங்கள் பின்னூட்டம் கூட கவிதையாக...
//முதலில் இந்தக் கவிதைகளுக்கு விளக்கம் சொல்வதையெல்லாம் எப்பத்தான் நிறுத்தப்போறாங்களோ, தெரியலை.//
ஜோக் சொல்லி முடிச்ச பிறகும் 'அப்புறம்' அப்படின்னு கேக்கற மாதிரி... :-))
//தோழிகளை இழப்பது அபத்தமில்லையா?//
இதற்கும் ஒரு விளக்கம் போட்டு 'உரையை' நிறைவு செய்யவும் :-))
சிலதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கமுடியாது வெங்கட் :)
Post a Comment