Wednesday, July 4, 2007
ஆதியின் மூல வடிவத்தை மீட்டெடுத்தல்
குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின்மீது
படிந்திருக்கும் புனிதங்களை
எதைக் கொண்டழிப்பதெனத் தெரியவில்லை
உன் உபயோகித்த நாப்கின்கள்
இடைவிடாது பேசியபடியிருக்கும்
இப்புனிதர்களின் துவாரங்களை
அடைக்க ஏதுவாய் இருக்கலாம்
எப்படி வெளித்துப்பினாலும்
சளியின் வெண்மை திரண்டு
உள்ளேயே தங்கிவிடுகிறது வன்மத்தின் கசடுகள்
மேலும் அது
யாரும் எதிர்பாராதொரு தருணத்தில்
எதிராளியின் முகத்தில் தெறித்து
தன் இயல்பின் முகம் காட்டி
கூரிய பற்களில் சிரிக்கிறது
புனிதமும் வன்மமும் அழிந்த வெளியில்
நரம்பு துடிக்க வெளிப்படும்
ஸ்கலிதம்
பெருங்கொண்ட சிரிப்பின் மூலமாய் மீட்டெடுக்கிறது
ஆதியின் மூல வடிவங்களை
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
17 comments:
Hi..Naan thaan first...
Vazhakkam pola onnum puriyala..:-)
Neram kidaikkum pothu, padichi purinchukka muyarchi panren...:-)
ஆதி ஓரு சூப்பர் டூப்பர் பிளாப் படம், அதன் மூலம் தெலுங்கு படம் அதை போய் ஏன் மீட்டு எடுக்க போறீங்க!!!
அய்ஸ்
அய்ஸ் எப்படிங்க இப்படி படமும், பயமுறுத்துகிறது, கவிதை வார்தைகளும்
பயமுறுதுகிறது.
//"ஆதியின் மூல வடிவத்தை மீட்டெடுத்தல்//
சிவாஜி இருக்கும் வரை முடியாது.
ஆதிசேஷன் என்னும் நம் வலைப்பதிவரை மீட்டு எடுப்பது ஓக்கே! அடுத்து சதுர்வேதியா! செய்யிய்யா உன்னால எவ்வளவு முடியுமோ செய்!
//ஆதியின் மூல //
அய்யோ பாவமே அவருக்கு பைல்ஸா!
அந்த ஒற்றை ஆங்கில வார்த்தையும் தவிர்த்திருந்திருக்கலாம்.
//பெருங்கொண்ட சிரிப்பின் மூலமாய் மீட்டெடுக்கிறது ஆதியின் மூல வடிவங்களை// இந்த விஷயங்களில் மட்டும் தானா ஆதியின் மூல வடிவங்கள் மீட்டெடுக்கப்படுகின்றன? வேறு படிமமே கிடைக்காதா உங்களுக்கு? சிந்தனையை விசாலமாக்குங்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் ;-)
ஜெஸிலா காமம் என்கிற வெகு இயல்பான உணர்வை புனிதம் என்கிற பெயரில் நாம் தடைசெய்தும் சீச்சீ என்று வெறுத்து ஒதுக்கியுமாய் நம் இயல்புகளை நாம் தொலைத்து விட்டதுதான் நாட்டின், மக்களின் பெரும்பாலான குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணம்
இந்த அடிப்படை புரிதல்கள் எல்லாருக்கும் தேவைப்படுகிறது
நானே அந்த படத்தை பற்றி கவலைபடவில்லை உங்களுக்கு எதுக்கு அய்ஸ் இந்த வேலை எல்லாம்.
அய்ஸ் அங்கிள் அப்பாவையா மீட்டு எடுக்க போறீங்கா? வேண்டாம் அங்கிள் அந்த ஆளு ஒரு மாதிரி.
//குற்ற உணர்வின் நீட்டிப்பாய்
கவிழ்ந்திருக்கும் இக்கணங்களின்மீது
படிந்திருக்கும் புனிதங்களை
எதைக் கொண்டழிப்பதெனத் தெரியவில்லை//
//எப்படி வெளித்துப்பினாலும்
சளியின் வெண்மை திரண்டு
உள்ளேயே தங்கிவிடுகிறது வன்மத்தின் கசடுகள்//
நல்லாருக்குங்க அய்யனார்..
//மக்களின் பெரும்பாலான குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணம்
இந்த அடிப்படை புரிதல்கள் எல்லாருக்கும் தேவைப்படுகிறது//
உண்மைதான்!! இந்த சமூக அக்கறையோடு மற்ற விஷயங்களிலும் அக்கறை செலுத்துங்கன்னு ஜெசிலா சொல்றாங்க.. சரிதானே ஜெசிலா? :)
நவரசக்கல் பதித்த எனது மோதிரத்தை மீட்டெடுத்து தர இயலுமா நண்பரே!
உண்மைதான் காயத்ரி, நம்ம அய்யனாருக்கு புரியாம இல்லை, இருந்தாலும் அவர் சொல்வதையேதான் இன்னும் அழுத்தமா சொல்லிக்கிட்டு இருப்பார்.
//புனிதம் என்கிற பெயரில் நாம் தடைசெய்தும் சீச்சீ என்று வெறுத்து ஒதுக்கியுமாய் நம் இயல்புகளை நாம் தொலைத்து விட்டதுதான் நாட்டின், மக்களின் பெரும்பாலான குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணம்
இந்த அடிப்படை புரிதல்கள் எல்லாருக்கும் தேவைப்படுகிறது// புனிதமென்று யார் சொன்னது? அப்படியே சொன்னாலும் சிலருக்கு அப்படித்தான். அதில் தவறில்லை. 'ச்சீ'ன்னு சொல்வது இயல்புகளை தொலைக்க அல்ல வேறு யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று சமுதாயத்திற்காக போட்டுக் கொள்ளும் முகமூடி அல்லது அவர்கள் வளர்ந்த விதமும் சூழலும் அவ்வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவுதான். குழப்பங்களுக்கும் வன்முறைக்கும் காரணம் என்று சொல்வதை ஒப்புக் கொள்கிறேன், அதற்காக மக்களுடைய புரிதலுக்காக உங்களை போல சிலர் இப்படி 'புரியாம' எழுதுவது எப்படி போய் சேருமென்று நினைக்கிறீங்க? அப்ப புரிகிறவர்களுக்கு புரியட்டுமென்று எழுதினால் அவர்கள் கண்டிப்பாக உங்க கருத்தோடு ஒத்து போபவர்களாக இருப்பார்கள் என்னைப் போல். அதனால் இந்த ஒரு 'துறை'யிலேயே உங்கள் சிந்தனைகளை தொலைத்துவிடாமல்/ நின்றுவிடாமல் இது தொடர்பான மற்ற பல பிரச்சனைகளை, சமுதாய அவலங்களையும் உங்க பாணியில் எழுதுங்கள். 'கனியிருக்க காய் கவர்ந்தற்ற'ன்னு சொல்லவில்லை கசப்பான வேறு காய்களும் இருக்கு என்று சொல்கிறேன். அய்யய்யோ உங்க பதிவைவிட என் பின்னூட்டம் நீஈஈஈஈண்டு போச்சு ;-)
ரொம்ம நல்ல மேட்டர் இது. :)
ஸ்கலிதம்--- வார்த்தை பிரயோகம் சற்று விலகி நிற்கிறது. நல்ல தமிழ் வார்த்தை கவிதையின் வீரியத்தை கூட்டியிருக்கும்.
மற்றும் காமம் என்பது இயல்பான உணர்வும் அல்ல. புனிதத்தின் கனம் கூடி மேற்பூச்சு சிதைந்து சமுதாய மற்றும் அதிகார ஊடகங்களால் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் வனப்பிழந்து நிற்பது உண்மை, எனினும் அதை முறியடித்து தொடரும் தலைமுறைகளின் கவனத்தை தக்கவைத்தபடிதான் இருக்கிறது.
காரணம் மிகவும் எளிமையானது: அறிவினால் முடுக்கப்படும் உணர்வல்ல அது. நம்மில் ஊறி, நாமாகவே கிளைபரப்பி நிற்கும் அடிப்படை பரிணாம இரகசியம்.
Post a Comment