துபாய் அரபிக்களின் உருவம் போலவே இங்கே மால்கள் எல்லாம் டபுள் எக்ஸெல் சைசில்தான் இருக்கும்.இந்த வாரம் இபன் பதூத்த மால் சென்றபோது அதன் பிரம்மாண்டம் ட்ரிபிள் எக்ஸெல்லாக இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது.வெகு நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கிறது இந்த மால்.6 நாட்டு மக்களின்(இந்தியா,சீனா,பெர்சியா,எகிப்து,துனிசியா,அண்டாலூசியா)கலாச்சாரம் மற்றும் அவர்களின் பழக்க வழக்கம் பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் கட்டிட அமைப்பு மற்றும் உள்வசதிகள் செய்யப்பட்டுள்ளன.IMAX தியேட்டர் பார்த்ததும் சந்தோஷம் பொங்கியது துபாயில் இந்த மாலில் மட்டும்தன் imax வசதி இருக்கிறது.live free or die hard ஆறு மணி ஷோ விற்க்கு டிக்கெட் வாங்கிகொண்டு இருந்த 1 மணி நேரத்தில் மாலை சுற்றி வந்தோம் Abu Abdullah Muhammad Ibn Battuta என்கிற 13 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மொராக்கோ பயணியின் பெயர்தான் இந்த இபன் பதூத்.மார்க்கோபோலோவிற்க்கு நிகராக இவர் உலகை சுற்றி வந்திருக்கிறார்.சீனா கோர்ட் அட்டகாசமாய் இருந்தது.கூரை வேலைப்பாடுகள் வெகு நுணுக்கமாய் செய்யப்பட்டிருக்கிறது.கோடைகால விழாக்களின் அங்கமாக சீனப்பெண்களின் நடனம் பார்த்தோம்.அநியாயத்திற்க்கு ஒல்லியாய் இருந்த பெண்கள் வளைந்து நெளிந்து ஆடியது நன்றாக இருந்தது.இந்த மொத்த அரங்கையும் சுற்றிவர கண்டிப்பாய் ஒரு நாள் தேவைப்படும் அடுத்த முறை வரும்போது கதிரையும் ஒரு நல்ல கேமராவையும் உடன் அழைத்துக் கொண்டு வரவேண்டும்.இரண்டும் வாய்க்கும்போது விரிவாய் எழுதுகிறேன்.இவர்தாங்க இபன் பதூத் முதல் அரேபிய பயணி .
சீனா கோர்ட் பாருங்க.
புரூஸ் வில்ஸ் க்கு என்ன வயதிருக்கும் இப்போன்னு யோசிச்சிட்டெ உள்ளே நுழைந்தேன்.விறுவிறுப்புக்கு படம் எந்த குறையும் வைக்கல.நம்ம காதுல பூ சுத்தனும்னா அதுக்கு ஹாலிவுட் காரனுங்கள விட்டா ஆளே கிடையாது ஆனா கொஞ்சம் சுவாரசியமா சுத்துவானுங்க அப்படிங்கிறதால லாஜிக் எல்லாம் மறந்திடனும்.
52 வயசானாலும் மனுசன் துரு துரு.கிண்டலா படம் முழுக்க பேசியபடி ஏகப்பட்ட சாகசம் பன்றார்.இந்த முறை இந்த டீம் மென்பொருள்துறைய மய்யமா வைத்து அமெரிக்காவை தீவிரவாதிகள் எப்படி ஆக்கிரமிக்கிறாங்க அதை நம்ம ஆள் எப்படி முறியடிக்கிறார்னு ரொம்ப வித்தியாசமா சிந்திச்சி இருக்காங்க.மனுசன் கல கல ன்னு பேசியபடி அதம் பன்றார்.கணினி ஹேக்கர்ஸ் அப்படின்னு சொல்றாங்க அதாவது கோடிங்க் அல்கோரிதம் மூலமா ஒரு குறிப்பிட்ட கண்ணிய ஆக்ரமிச்சி அக்கணினிய பயன்படுத்துகிறவரை கொல்ல முடியுமாம்.அந்த மாதிரி ஒரு ஹேக்கர் ஜஸ்டின் லாங் அவரை கைது செய்ய நம்ம ஆள் போறார்.அவனை கொல்ல வரும் ஒரு பெரிய கூட்டத்திலிருந்து காப்பாத்தி fbi தலமை அலுவலகத்திற்க்கு கொண்டு போறார்.அதுக்குள்ள ஒரு தீவிரவாத கும்பல் அமெரிக்காவின் தகவல் தொடர்பு கோடிங் எல்லாம் திருடி தங்கள் வசமாக்கிடுறாங்க.தொலைபேசி,டிராபிக்,மின்சாரம் இப்படி எல்லாத்தையும் செயலிழக்க செய்திடுறாங்க.டிவில வெள்ளை மாளிகைய வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல் காண்பித்து பீதியை கிளப்புகிறார்கள்.ஒரே களேபரமான சூழலில் இந்த ஜஸ்டின் லாங் உதவியுடன் தீவிரவாதிகளை எப்படி தனியாளா அழிக்கிறார்ங்கிறதான் படம்.
வில்லியா நடிச்சிருக்க மாகி க்யூ (ஜஸ்ட் டூ மினிட்ஸா நீங்களும்:))செம க்யூட் இவரை அடித்து கொல்லும் புரூசை மன்னிக்கவே முடியல
ஹைடெக் கா சிந்திச்சிருக்கானுங்களேன்னு சந்தோஷப்படுவதற்க்குள் திருஷ்டி மாதிரி புரூஸ் பொண்ணை வில்லனுங்க கடத்தி கட்டிபோட்டுர்ரானுங்க (திருந்தவே மாட்டிகளாடா?)
எல்லாம் முடிந்த பின் வரும் போலிஸ் படை பார்த்து சிரிப்புதான் வருது யோவ் எங்க ஆளுங்களே திருந்திட்டானுங்கய்யா!
புரூஸ் சுரங்க பாதையிலிருந்து காரை கிளப்பி ஹெலிகாப்டரை வெடிக்க வைக்கிறார்.இதெல்லாம் ரொம்ப வருசத்துக்கு முந்தியே நம்ம கேப்டன் பண்ணிட்டார்.என்ன அவர் பைக்ல ஜம்ப் பண்ணி ஹெலிகாப்டர மோதிட்டு தாவி குதிப்பார்.இவிங்க கொஞ்சம் வசதி அதான் கார்.
கிளைமாக்ஸ் கிராபிக் மயமா இருந்தாலும் கலக்கல்.
நல்லா விறுவிறுன்னு ஒரு படம் நல்ல தியேட்டர்ல பாத்திங்கன்னா சவுண்ட ரசிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
27 comments:
//அடுத்த முறை வரும்போது கதிரையும் ஒரு நல்ல கேமராவையும் உடன் அழைத்துக் கொண்டு வரவேண்டும்//
அய்யனார், உன் சேர்க்கை சரி இல்லையேப்பா.....
படத்திற்கு விமர்சனம் நச்....
அவனுங்க திருந்த மாட்டானுங்க.. திருந்தவே மாட்டானுங்க...
//அடுத்த முறை வரும்போது கதிரையும் ஒரு நல்ல கேமராவையும் உடன் அழைத்துக் கொண்டு வரவேண்டும்//
ஷாப்பிங் மால்ல எல்லாரும் தலை தெறிக்க ஓடப்போறாய்ங்க!!!
யோவ் தம்பி மக்க எல்லாம் உன்மேல கொலவெறியோட இருக்காங்களே இன்னா மேட்டர்
நானு பால்புட்டி கையில வச்சிருந்தப்பவே அந்த மால்க்கு போயிட்டன்யா! நெம்ப பீத்திக்காதய்யா அய்ஸ்!!
வே அபிஅப்பா!!
நான் என்ன பாகு விலே முதன்முறையாக ன்னு சன்டிவி விளம்பரமா கொடுத்தேன் பதிவ படியுமய்யா
லொடுக்கு நீங்க வந்தா ஓடினவங்க எல்லாம் திரும்ப வருவாங்களா?
புலி நன்றி
\\அடுத்த முறை வரும்போது கதிரையும் ஒரு நல்ல கேமராவையும் உடன் அழைத்துக் கொண்டு வரவேண்டும்\\
தலைவா....எங்களுக்கும் காலம் வரும்.
விமர்சனம் நல்லா இருந்தது imax எப்படி இருந்தது...அது சரி கதிர் கதிர் என்கிறீர்களே அவர் யார் இந்த காதல் தேசம், காதலர் தினம் படம் எடுத்தாரே அவரா..அவர் உங்க நண்பரா...அவருதான் அபுதாபியில இருக்காரா கொஞ்சம் சொல்லுங்களேன் ..
\\ அய்யனார் said...
வே அபிஅப்பா!!
நான் என்ன பாகு விலே முதன்முறையாக ன்னு சன்டிவி விளம்பரமா கொடுத்தேன் பதிவ படியுமய்யா \\
யாருக்கிட்ட என்ன சொல்றிங்க...நல்ல பார்த்து சொல்லுங்க ;))
\\அபி அப்பா said...
நானு பால்புட்டி கையில வச்சிருந்தப்பவே அந்த மால்க்கு போயிட்டன்யா! நெம்ப பீத்திக்காதய்யா அய்ஸ்!! \\
அபி அப்பா உங்களுக்கும் அய்யனாருக்கும் சண்டையா? உங்க பேரை காணோம் ;))
\\குசும்பன் said...
விமர்சனம் நல்லா இருந்தது imax எப்படி இருந்தது...அது சரி கதிர் கதிர் என்கிறீர்களே அவர் யார் இந்த காதல் தேசம், காதலர் தினம் படம் எடுத்தாரே அவரா..அவர் உங்க நண்பரா...அவருதான் அபுதாபியில இருக்காரா கொஞ்சம் சொல்லுங்களேன் ..\\
தலைவா வணக்கம்...எப்படி இருக்கீங்க ?
nice ayyanar !!!!!
but u missed my name ?????
\Thiyaga said...
nice ayyanar !!!!!
but u missed my name ????? \\
நீங்களுமா?..ஐய்யோ..ஐய்யோ ஒரே காமெடி தான் போங்க ;))
இபன் பதூத் எல்லாம் ஓக்கேதான்... படத்துக்கு விமர்சனம் நீங்களா எழுதினிங்க? ஏதோ ஜனரஞ்சக வார இதழ்ல படிக்கிற மாதிரி ஒரு உணர்வு.. :(
என்னாச்சுங்க உங்களுக்கு?
Itharkku mundhaiya pathivu = Kanayaazhi
Intha Pathivu=Cinekoothu
அய்யனார்,
//இரண்டும் வாய்க்கும்போது விரிவாய் எழுதுகிறேன்.இவர்தாங்க இபன் பதூத் முதல் அரேபிய பயணி .//
அப்படியே போட்டோவும் போடலாமில்லையா என்று கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே வந்தபோது இந்த வரிகள்..
Abu Abdullah Muhammad Ibn Battuta பற்றியும் ஒரு தனி இடுகை, அல்லது தொடர் ;)
நான், படம் வந்த அன்னைக்கே பார்த்து புண்ணியம் தேடிட்டேனாக்கும். ;)
//வில்லியா நடிச்சிருக்க மாகி க்யூ (ஜஸ்ட் டூ மினிட்ஸா நீங்களும்:))செம க்யூட் இவரை அடித்து கொல்லும் புரூசை மன்னிக்கவே முடியல //
ஆனாலும் குங்ஃபூ ஷிட்னு புறுபுறுத்துக்கொண்டே அடிபின்னிட்டார்ல!
கோபி அடுத்த முறை பாசக்கார குடும்ப சகிதமா போலாம்யா ..உன் பேர விட்டதுக்கு மன்னிச்சிக்க
குசும்பன் IMAX அட்டகாசம் ..கண்டிப்பா பாருங்க
தியாகு உங்களுக்கு தனி ப்ளாக்கே தர தயாரா இருக்கோம் நீங்கதான் போய்யா வெட்டிகளா ன்னு இந்த பக்கம் வராம இருக்கிங்க
காயத்ரி மற்றும் மழைப்ரியரே !!
ஜனரஞ்சகமான ஒரு படத்தை எப்படிங்க கலைப்பூர்வமா விமர்சிக்க முடியும்.நல்லா இருங்க :)
மதி ஏற்கனவே ஹிட்ச்காக் இடுகை நிலுவைல இருக்கு அதனுடன் இபன் பதூத்தையும் சேர்த்துக்கோங்க :)
உங்க இடுகை படிச்சேன் மதி பிறகுதான் படம் பார்த்தேன்.நீங்க நிறை அதிகமா சொன்னதால நான் குறைகளை மட்டும் சொல்லியிருக்கேன்.
நிறைன்னு இல்ல. McClaneக்கு ஒரு விடைகொடுப்பு. அவ்வளவுதான். :)
ஆனாலும், அப்பப்ப மனசுக்குள்ள சின்னதா ஒரு உறுத்தல் இருந்தது. அப்பத்தான் படிச்சு முடிச்சிருந்த A Long Way Gone புத்தகத்தில் சியேரா லியோன் இராணுவத்தில் ஒரு கட்டத்தில் ராம்போ போன்ற படங்களையெல்லாம் போட்டு உசுப்பேத்தி விடுவதாகப் படித்திருந்தேன். ஒரு பையன், ஒரு கிராமத்தில் இருந்த RUFஉடன் சண்டை போடும்போது படத்திலிருந்து சில காட்சிகளைச் செயற்படுத்தி, குட்டி ராம்போ என்ற பட்டப்பெயர்கூட வாங்கினானாம். படிச்சப்ப ரொம்ப கஷ்டமாயிருந்தது.
என்னுடைய சில தமிழ்நண்பர்கள் சண்டைப்படமெல்லாம் பார்க்க மாட்டாங்க.ஒரு நாள் கேட்டப்ப, இதைவிடவும் பயங்கரமான விசயமெல்லாம் பார்த்தபடியா படங்கள்ல பார்க்க விருப்பமில்லைன்னு சுருக்கமா சொல்லிட்டு விட்டுட்டாங்க. :(
-மதி
படம் பார்த்தப்போ வந்த குற்றவுணர்ச்சிய, இராக்கில இருக்கிற அமெரிக்கப் படையினரை உசுப்பேத்துறமாதிரியான இசை ஒலிபரப்பிறத நினைச்சுக்கிட்டே கழுவி விட்டேன். :)
-மதி
நல்ல விமர்சனம்
படம் பாக்கனும்
என்ன சொல்வதென்று தெரியல மதி :(
நன்றி மின்னல்
தம்பிக்கு எதிரான வன்முறைப்பதிவு இது
சும்மா அழகாக 3மணிக்கூர் சுற்றி பார்த்ததோடு சரி. எந்த பர்சஸ் ம் இல்லை.வாங்கும் விலையா அங்கு.!!!
அசலம்
Post a Comment