தொலைந்த அடையாளம்
வெகு நாட்களுக்குப்பின்
நாம் வாழ்ந்திருந்த
அக்கடற்கரை நகரத்திற்க்கு
சென்றிருந்தேன்
இந்த நண்பகல் வெயிலில்
கடற்கரை மணற்திட்டில்
பாதச்சுவட்டில் பாதம் வைத்து
நடந்து கொண்டிருந்தது
ஒரு ஜோடி
நாம் வழக்கமாய் அமரும்
புங்கை மரத்தடி
மர பெஞ்சில்
நம் சாயல்களில் யாரோ
உள்ளங்கை பற்றியபடி
பேசிக்கொண்டிருந்தனர்
மேலும்
சருகுகள் கூட்டி வாரப்படாத
நூலக கட்டிடப் பின்புறம்
நன்றாய் புற்கள் வளர்ந்திருக்கும்
அசோக மரத்தடி
செயற்கை நீரூற்றை ஒட்டிய
சிமெண்ட் திட்டு
ராமன் தியேட்டர்
அ வரிசை கடைசி இருக்கையென
நாம் வாழ்ந்திருந்த
இடங்களின் புனிதம் கெடாது
இளம் காதலர்களே
நிரம்பியிருந்தனர்
ஒருவேளை நமக்கு முன்னர்
இவ்விடங்களை நிரப்பியவர்கள்
நம்மை போன்றவர்களாய்
இருந்திருக்கக் கூடும்
நாளை இவ்விடங்களை
நிரப்பும் இளம் காதலர்களின்
ரகசிய குறுகுறுப்புகளில்
துளிர்க்கலாம்
இழந்ததை தேடியலையும்
என்போன்றவனின்
வறண்ட இதழிலிருந்து
புன்முறுவல்கள்
மக்களே இந்த காதல் கவுஜ க்கி என்ன மன்னிச்சிடுங்க :)
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...
-
மக்கா இந்த அய்யனார்ங்கிற பேர் எப்பவுமே எனக்கு ஆவுறது இல்ல நாலு பேர் இருக்கச்ச சொல்ல முடியுதான்னு எனக்கு பேர் வச்ச பாட்டிய திட்டிட்டு இருப்பே...
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
8 comments:
தலைவா... இது நம்ம ஏரியா...
:)
சென்ஷி
அய்யனார் சும்மா சொல்லக்கூடாது....கலக்கல் ;))))
அய்ஸ்ஸே,
என்னதான் நீங்க புரியாத மொழியில் எழுதுனாலும், உங்களுடைய கவிதைகளும் சிறுகதையும் பூங்காவில் வந்திருகிறது..
அய்ஸ்ஸே, வாழ்த்துக்கள். மென்மேலும் இப்படி அடர்கானகத்திலிருந்து புரியாத மொழியில் எழுதி கலக்குங்கள். :-)
ஹாய் அய்யனார்!!! நானும் வந்திட்டேன்..
இவ்ளோ நாள்..உன் கவிதைகள் படிப்பேன்.. என்ன எழுதுறதுனு தெரியாம குழம்பி போய்டுவேன்.. இப்பத் தான் தெளிவா இருக்கேன்..
இந்த கவிதைகள்,பழைய கவிதைகள்,விமர்சனங்கள் எல்லாம் தூள்!!!
தொடர்ந்து கலக்குங்க..
அய்யனார் சேவை..
தமிழுக்குத் தேவை..
கவிதை அருமையா இருக்குங்க.ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் ஆகாது.
சென்ஷி
மன்னிச்சிடு சென்ஷி ரொம்ப பழசு இனிமே உங்க ஏரியா பக்கம் வரல :)
கோபி,
டேங்க்ஸ் கோபி
அனு,
நீ சொல்லிதான் பாத்தேன் நன்றி
அருண்
வெல்கம் டா!!!
லக்ஷ்மி
மிகவும் நன்றி :)
அதென்ன புன்முறுவல்கள்?
புன்முறுவல் போதுமே.
காதல் வருகிறது...
Post a Comment