
நிசப்த வெளியில்
துவங்குகிறது
தனிமையின் இசை
நிறமழியும் சொற்களின்
வசீகரம் தவிர்த்து
உள்ளிருந்து எழுகிறது
நாத அதிர்வாய்..
அதிர்வின் நீட்சி
புலன்கள் பயணிக்க இயலா
என் உள்வெளியின் மடிப்புகளை
மெல்ல கட்டவிழ்க்கிறது
மலர்தலின் சாயல்களையொத்து
இப்பிரபஞ்சம் நிறையுமளவு
உள்ளில் தேங்கியுள்ள
இசையின் ஒரு அதிர்வு
எழுதுகிறது
முற்றிலுமொரு புதிய
இசைக்கோர்வையை…
10 comments:
மீ தி ஃபர்ஸ்ட்டூ அய்ஸ்.. :-D
இந்த தடவை கவிதை ஏதோ எனக்குகொஞ்சம் கொஞ்சம் புரியிற மாதிரி இருக்கு. நன்றி. :-D
ஆனாலும் இந்த ஃபர்ஸ்ட்டூ பாரா மட்டும்தான் புரிந்தது:
//ப்த வெளியில்
துவங்குகிறது
தனிமையின் இசை//
அதிவின் -> அதிர்வின்?
மொதோ மொறையா எனக்குப் பிரியுற மாதிரி ஏதோ சொல்றீங்க.. உடம்பு சரியில்லையா? ;)
விடாது துரத்துமிந்த
சப்தத்தை
விட்டு எட்டி ஓடினேன்..
தூரத்திலும்
மெல்லிய வெளிச்சம் கூட
சப்தமாய் மாறுது..
என்னை விட அதிகமாய்
துடிக்கும் இதய சப்தம்
எப்போது நிற்கும்....
பொன்ஸ் சொன்னதுதான். 'உடம்பு சரியில்லையா அய்யனார்...?':)
இப்போதுதான் அடர்கானகத்திலிருந்து வெளிவந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். புரிகிற மாதிரியும் கவித்துவமாயும் இருக்கிறது.
'முற்றிலுமொரு புதிய இசைக்கோர்வையை'எழுத முடிதல் உங்களால் சாத்தியந்தான். ஆனால்,முன்பொருகால் கேட்ட இசையிலிருந்து பெருகும் இனிய அனுபவத்தை யாரோ மறுத்தல் கூடும்? அந்தந்தக் கணங்களின் அற்புதத்தை காலமா அழிக்கும்...!
nalla irukku kavithai ays!
ungalukku thamil varumaa? :-))
நிசப்த
வசீகரம்
பிரபஞ்சம்
..... என்பன இருந்தாலும், காமவெறியாட்டம் இல்லாததால் பாராட்டுக்கள். உடம்புக்கு சரியில்லையா?
அனு, பொன்ஸ்,சென்ஷி,தமிழ்நதி,அபிஅப்பா,என் பாசக்கார அனானி எல்லாருக்கும் நன்றி.மக்களே உங்க பாசத்த என்னன்னு சொல்ல :(
இந்த அளவுக்கு பாசங்காரங்களா நீங்க எல்லாம்....இந்த கவிதை என்னோட நாட்குறிப்பில தூங்கிட்டு இருந்தது ரொம்ப அன்புடன் கேட்டவங்களுக்கு கொடுத்திட்டதால தாமதமா போயிடுச்சு வெளியிட :)
மத்தபடி சேம் ப்ளட்தான் எந்த சேஞ்சும் இல்ல ..விடறதில்ல உங்களை
நல்லதொரு முயற்சி..
நன்றாகவே வந்திருக்கிறது.
//நிறமழியும் சொற்களின்
வசீகரம் தவிர்த்து//
நிறமழிந்தப்பின் வசீகரம் ஏது?
கடைசிவரியில் எழுத்துப்பிழை:
இசைக்கோர்வையை என வரவேண்டும்.
Post a Comment