
புதிரொன்றின் முடிச்சை
கட்டவிழ்க்கும் கணத்தின்
விளிம்பொன்றில்
இறுகத்தொடங்குகிறது
புதிதாய் ஒரு முடிச்சு
தனிமையின் வன்மங்கள்
நடனமிடும் நமது வெளி
சாத்தானின் இருப்பிடங்களெனவும்
அறியப்படுகிறது
முதல் சந்திப்பில்
மலர்வதென அரும்பியிருந்த
சிறுமொட்டொன்று
கருகிப்போனது
அனலெனத் தகிக்கும்
புனிதங்களின் வெளியில்
கடவுளர்கள் வகுத்த
பாதுகாப்பான எல்லைகளுக்குள்
சாத்தான்களை உலவவிட்டு
கழிவிரக்கம் நிரப்பி வாழும்
நம் உலகத்தின்
விளிம்புகளையும் மய்யத்தையும்
உடைக்க கிளர்ந்தெழுந்து வரும்
பின்நவீன கடவுளர்களின் வருகைக்காக
காத்திருக்கும் இப்பொழுதுகளில்
மாற்றி மாற்றி எழுதிக்கொள்ளலாம்
இதுபோன்ற சில அபத்தக் கவிதைகளை
3 comments:
கழிவிரக்கத்திற்கு கவிழிரக்கம் என்று இருக்கிறது..
மய்யத்தையும் என்பது மையத்தையா குறிப்பிடுகிறீர்க்ள்.
கவிதை நன்றாக இருக்கிறது.
கடைசிப்பாரா நச்...
புரிதல்களில்
தொடங்கிய தேடல்
முற்றுப்பெற்றது
வயிற்றில் பசி..
சும்மா உங்க பாதிப்புல எழுதிப்பார்த்தேன். நமக்கும் ஏதாச்சும் வருதான்னு.. :))
சென்ஷி
முத்துலக்ஷ்மி
கழிவிரக்கம் மாத்திட்டேன் நன்றி :)
மையம் தான் மய்யம்
சென்ஷி
நல்லாவே வருது ..எழுதுங்க ..அட ஏற்கனவே நீங்க கவிஞர் தான
Post a Comment