Thursday, September 20, 2007

மாலனை என்ன செய்யலாம்?

மாலனின் சமீபத்திய இடுகை மிகவும் மன வருத்தத்தை தந்தது..நாளைக்கு மூன்று பதிவுகள் மிகாமல் இடும் ஓசை செல்லா,ரவி உட்பட எந்த பதிவரும் இது குறித்தான எதிர் கருத்து எதையும் சொல்லாதிருப்பது ஏனெனத் தெரியவில்லை (சாதி சண்டை,போலி சண்டை போல ஈழத்தவர் பிரச்சினை அவ்வளவு சுவாரசியமாய் இருக்காதோ?)
உமையணனின் பின்னூட்டத்தில் தெரிந்த வேதனை இப்பதிவிட தூண்டியது

At 7:35 PM, உமையணன் said…

/மாலன்,
தயவு செய்து இந்த இடுகையை எக்காரணத்தை முன்னிட்டும் அழித்து விடாதீர்கள். ஆவணப்படுத்த வேண்டிய இடுகையிது. தமிழீழ விடுதலை போராட்டத்தை அல்லது உங்கள் பார்வையில் பயங்கரவாதத்தை இந்தியத்தமிழர்கள் ஏன் கண்டும் காணாமல் பாராமுகமாக இருந்தார்கள் அதற்கு இந்திய பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எத்தணை பங்களித்தார்கள் என்பதற்கு இந்த இடுகை ஒரு வரலாற்றுச் சான்றாக இருக்கும். இந்தியத்தமிழர்களை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்வதற்கும் உதவும்/

மாலன் இருக்கும் அதே சூழலில்தான் நெடுமாறன்களும் இருக்கிறார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன் நண்பா!

16 comments:

ரவி said...

மாலன் அவர்கள் சொன்னதை நான் ஏற்கவில்லை...

வரவணையான் இதுகுறித்து சூடான பதிவொன்றை ஏற்கனவே எழுதியுள்ளார்...

அங்கே எனது கருத்தையும் பதிவுசெய்துள்ளேன், விரைவில் வெளிவரும்..

நீங்க எதுக்கும் ஒரு எட்டு போய் அந்த பதிவை பார்த்திருங்க.

வந்தியத்தேவன் said...

ஐயா அய்யனார் அவர்களே
மாலன் போன்ற விஷக்கிருமிகளின் எந்தப் பதிவுக்கும் பின்னூட்டம் இடாமல் அவரைத் தனிமைப் படுத்தலாம். இதனை விட சிறந்த வழி வேறூ யாதும் இல்லை. இந்த வெறி பிடித்த நாய்கள் எழுவதை என்றும் நிறுத்தப்போவதில்லை. இந்த நாய்களின் எழுத்துக்களை பிரசுரிக்கும்பத்திரிகைகளும் ஒரு நாளும் ஓயப்போவதில்லை.

மாலன் போன்ற விஷக்கிருமிகளின் பதிவுகளை பகிஸ்கரியுங்கள்.

அருண்மொழி said...

கலைஞர் டீவி ஆரம்பிக்க இருக்கும் news channel தலைவராக ஆக்கலாம்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வணக்கம் நண்பரே!
வதந்திகளை திரும்ப,திரும்ப சொல்லி நம்ப வைக்கும் உத்தியை கைக்கொள்ளும் மாலனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

மாலனை அம்பலபடுத்தி இடுகைகள் எழுதி,எழுதி எல்லா நண்பர்கள் கொஞ்சம் ஓய்வாக இருக்கிறார்கள் போலிருக்கிறது :(

குசும்பன் said...

ராசா? எங்கய்யா லிங் கொடுத்து இருக்கலாம்ல...

Unknown said...

என் பெயரைக் குறிப்பிட்டு ஓர் இடுகை எழுதியதற்கு நன்றி அய்யனார்.
எனது வருத்தம் என்னவென்றால் பழ.நெடுமாறன் போன்றவர்களை பெரும்பானமையானவர்கள் ஒரு தீவிரவாதியைப்போலத்தான் பார்க்கிறார்கள். ஆனால் மாலன் போன்றவர்களின் எழுத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பெரும்பான்மையான மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
நான் நேற்று ஜெகத்தின் ஈழம், கேரளம் இடுகையைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப்பார்த்த என் அறைத்தோழன் சொல்கிறான். உங்கள் மேல் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களை போலீஸில் மாட்டிவிடப்போகிறேன் என்று. அந்த இடுகையில் ஈழப்போராட்டம் பற்றியோ, விடுதலைப்புலிகளைப் பற்றியோ ஒன்றும் இல்லை. ஆனால் ஈழம் என்ற வார்த்தையையே ஒதுக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இன்று இருக்கிறது. அத்தகைய மனப்பான்மையை இந்திய பத்திரிக்கையாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நாம் இவ்வளவு கண்டும் காணாமலும் இருந்தும் ஈழத்தமிழர்கள் இன்னும் நம்மை நேசிக்கிறார்கள். ஆனால் நாம் ஈழத்தமிழர்களையே வெறுக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

Unknown said...

அய்யனார்,
உங்கள் இடுகையை இன்னொருமுறை படித்தால் வேறுமாதிரி அர்த்தம் தோன்றுகிறது. நீங்கள் நான் சொல்வதை தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.
//இந்தியத்தமிழர்களை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளவும் உதவும்//
என்று நான் சொன்னது, இந்தியத்தமிழர்களின் சுயரூபத்தை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. நீங்களும் அப்படித்தான் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று அஞ்சுகிறேன்.
நான் சொல்ல வந்தது என்னவெனில்,
இதுபோன்ற பத்திரிக்கைகளும் பத்திரிக்கையாளர்களும் தொடர்ந்து இதேபோன்று எழுதிக்கொண்டுவருவதினால்தான் இந்தியத்தமிழர்கள் ஈழப்போராட்டத்தைப்பற்றிய தெளிவான விவரங்கள் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவேதான் சரிவர ஆதரிக்காமல் இருக்கிறார்கள் என்று ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் என்ற பொருளிலேயே எழுதினேன். ஓரளவு ஈழத்தமிழர்கள் இதைப்புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

Ayyanar Viswanath said...

உமையணன்
/இந்தியத்தமிழர்கள் ஈழப்போராட்டத்தைப்பற்றிய தெளிவான விவரங்கள் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். எனவேதான் சரிவர ஆதரிக்காமல் இருக்கிறார்கள் என்று ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்வார்கள்/

இந்த புரிதல் உங்களின் பெருந்தன்மையைத்தான் சொல்கிறது.நீங்கள் நேரடியாக சாடினாலும் அதில் எந்த தவறுமில்லை மாலனையும் ராமையும் கட்டிக்கொண்டு அழும் எங்கள் பத்திரிக்கை தர்மத்தை நீங்கள் எதை கொண்டு அடித்தால்தான் என்ன?

Thamizhan said...

அர்த்த சாஸ்த்திரத்தின் அத்தனை தந்திரங்களையும் பயன் படுத்துகிறது இந்தக் கூட்டம்.
புராண,இதிகாசங்கள் என்று தமிழனை இழிவு படுத்தும் கதைகளைத் தமிழர்கள் பணத்திலே,தமிழர்கள் வீடுகளிலேயே இதைப் பார்ப்பானை விட்டுப் பாராயணம் 28 நாட்கள் செய்தால் உங்களுக்குப் புத்திர பாக்யம் உண்டாகும் என்று சொல்லி நடக்க வைத்தனர்.

அதே கதைதான் தொடர்கிறது.
தமிழில்,தமிழர்களிடையே,தமிழையும் தமிழினத் தலைவர்களையும் கிண்டலடித்து விஷத்தைப் பரப்பி வரும் பொய்மலர்,குருமூர்த்தி கதைகள்,சோமாரி புராண விஷம்,நரசிம்மனின் நஞ்சு இதைப் படித்து ஆதரிக்கும் தமிழ் உயர்மட்டம்,இன்று ந்டக்கும் பாராயணந்தானே!
இந்த அசிங்கங்களைத் தொடக்கூடாது என்று தமிழர்களை வேண்டுகோள் விடுவோம்.தொட்டால் டெட்டால் போட்டுக் கையைக் கழுவச் சொல்லுங்கள்.

Anonymous said...

"மாலனை என்ன செய்யலாம்?"

You may ask Mr. Surveyson to conduct a poll.

அமிழ்து - Sathis M R said...

//அதைப்பார்த்த என் அறைத்தோழன் சொல்கிறான். உங்கள் மேல் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களை போலீஸில் மாட்டிவிடப்போகிறேன் என்று.//

உமையனின் இந்தக் கருத்தை நானும் வழிமொழிகிறேன். எனக்கும் இதேப் போன்ற அனுபவம் பல முறை கிடைத்துள்ளது. ஈழப்பிரச்சினையின் புரிதலுக்காக பல புத்தகங்களை ஒரே சமயத்தில் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். அறை நண்பர்களின் எச்சரிக்கைக்கு அடிக்கடி ஆளாக வேண்டியிருந்தது. வெளியே பயணிக்கும் போதும் சரி ஈழம் தொடர்பான புத்தகங்களை அவ்வளவு இயல்பாக எடுத்துப் படிக்க முடியவில்லை என்பதே உண்மை!.

இதில் இன்னொரு விசயம், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எனது நண்பனுக்குக் கூட அதன் வரலாறு முழுமையாகத் தெரியவில்லை என்பது வருத்தம்.

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

உமையணன் said...
... எனது வருத்தம் என்னவென்றால் பழ.நெடுமாறன் போன்றவர்களை பெரும்பானமையானவர்கள் ஒரு தீவிரவாதியைப்போலத்தான் பார்க்கிறார்கள். ஆனால் மாலன் போன்றவர்களின் எழுத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பெரும்பான்மையான மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
நான் நேற்று ஜெகத்தின் ஈழம், கேரளம் இடுகையைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைப்பார்த்த என் அறைத்தோழன் சொல்கிறான். உங்கள் மேல் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களை போலீஸில் மாட்டிவிடப்போகிறேன் என்று. அந்த இடுகையில் ஈழப்போராட்டம் பற்றியோ, விடுதலைப்புலிகளைப் பற்றியோ ஒன்றும் இல்லை. ஆனால் ஈழம் என்ற வார்த்தையையே ஒதுக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இன்று இருக்கிறது. அத்தகைய மனப்பான்மையை இந்திய பத்திரிக்கையாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நாம் இவ்வளவு கண்டும் காணாமலும் இருந்தும் ஈழத்தமிழர்கள் இன்னும் நம்மை நேசிக்கிறார்கள். ஆனால் நாம் ஈழத்தமிழர்களையே வெறுக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.
...

ஏன் இப்படி மானங்கெட்ட நிலையில் தமிழர் நாம் இருக்கிறோமோ... தினமணி, தினமலர், இந்து என்று தமிழுணர்வை கேலி பேசும், வெறுக்கும் கும்பலிடமே பத்திரிக்கை உலகம் இருக்கிறது, பெரும்பாலான மக்களின் கருத்துக்களை தீர்மானிக்கும் சக்தியும் இருக்கிறது.

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam said...

...
இந்த புரிதல் உங்களின் பெருந்தன்மையைத்தான் சொல்கிறது.நீங்கள் நேரடியாக சாடினாலும் அதில் எந்த தவறுமில்லை மாலனையும் ராமையும் கட்டிக்கொண்டு அழும் எங்கள் பத்திரிக்கை தர்மத்தை நீங்கள் எதை கொண்டு அடித்தால்தான் என்ன?
...

இணையப் பதிவுலகில் இவர்களின் பருப்புகள் வேவதில்லை என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

//எங்கள் பத்திரிக்கை தர்மத்தை நீங்கள் எதை கொண்டு அடித்தால்தான் என்ன?//
ஐயையோ இதென்ன கொடுமை. நானும் இந்தியத்தமிழன்தான்

தமிழ்நதி said...

'ம்...... 'இதற்குப் பெருமூச்சென்றும் பொருள்.

Featured Post

test

 test