ஆடைகளை அணிந்து கொண்டு கூந்தலைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தவளின் இதழ்களில் ஒரு வசீகரப் புன்னகை குடி கொண்டிருந்தது. சற்று இடப்புறமாய் சாய்ந்து கூந்தலைத் தொங்க விட்டபடி சரிசெய்தவளின் சித்திரம் ரவி வர்மா ஓவியம் ஒன்றினை நினைவூட்டியது. நான் அவள் தொடைகளில் முகம் புதைத்திருந்தேன். மெல்ல என் தலைவருடி எழுந்திரிங்க என்றாள். அவளின் கண்களில் சாந்தம் பெருக்கெடுத்து ஓடியது. காமம்தான் மனிதர்களுக்கு எத்தனை அற்புதமாய் இருக்கிறது!. உடலும் மனமும் ஒருமித்த கலவி என்பது உடலின் ஒவ்வொரு செல்லையும் திருப்தி படுத்தி விடுகிறது. உடலின் எல்லா சிறு சிறு துளைகளிலும் இன்பம் நிரம்பி வழிகிறது. உடலை விட மிகப் பிரமாதமான இன்பம் வேறெங்கும் கிடைத்து விடாதுதான்.
நான் படுத்தவாக்கில் அவள் தலையை என் முகத்திற்காய் இழுத்து மென்மையாய் மிக மென்மையாய் உதடுகளில் முத்தமிட்டேன்.
“நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிரேன் விஜி.. நாம ஒண்ணா சேர்ந்து வாழலாம்”
“இப்படி சொல்வீங்கன்னு தெரியும்” எனப் புன்னகைத்தாள்.
“எப்படி சொல்ர”
“நீங்க வெறுமனே என்ன தொடல.. ஒவ்வொரு அசைவிலும் உங்களோட ஆழமான காதல புரிஞ்சிக்க முடிஞ்சது… நாம பண்ணிட்டிருக்கும்போது திடீர்னு நான் எங்க செத்து போய்டுவனோன்னு பயமா இருந்தது… கொஞ்ச நேரம் கழிச்சி அப்படியே செத்து போய்டக் கூடாதான்னும் இருந்தது”
காதலின் உணர்வுப் பெருக்கம் தாளாது நான் மீண்டும் அவளைப் படுக்கையில் சாய்த்தேன். இம்முறை அவளின் மீது ஒரு மிருகத்தைப் போல பாய்ந்தேன். அப்போதுதான் அணிந்திருந்த அவளின் உடைகளைப் பிய்த்தெறிந்தேன். அவளும் இன்னொரு மிருகமானாள். மெத்தையிலிருந்து எப்போதோ உருண்டு வந்துவிட்டிருந்தோம். மூங்கில் சுவர்களில் அவளின் ஒரு காலைத் தூக்கி முட்டுக் கொடுத்து இன்னொரு காலினை என் தொடையினால் கவ்வியபடி அவளின் யோனிக்குள் இறங்க ஆரம்பித்தேன். இன்னொருபுறம் அவள் முலைகளை விழுங்கத் துடித்து தோற்றுக் கொண்டிருந்தேன். விஜியின் மகோன்னத இருபெரும் முலைகளை என் வாயினுள் திணித்துக் கொள்ள முடியாமல் போன இயலாமையின் மீது கோபம் பெருக்கெடுத்தது. ஒரு கூரிய வாளினை எடுத்து என் வாயினை அறுத்துக் கொள்ளத் துடித்தேன். உச்சத்தை நெருங்க நெருங்க நாங்கள் பைத்தியமானோம். அவளின் வளையல் துண்டொன்று என் மார்பில் குத்திக் கிழித்து எரிந்தது. அந்த எரிச்சல் வழி கசிந்த இரத்தம் உச்சத்தின் பைத்தியத்தன்மைக்கு சிவப்பு வண்ணம் பூசுவதாய் இருந்தது. உடல் களைத்துச் சோர்ந்து உச்சத்திலிருந்து உருண்டு வழுக்கி மயக்கமானோம்.
கண் விழித்துப் பார்த்த போது குடிலை இருள் கவ்வியிருந்தது. தூரத்தில் வெளிச்சப் புள்ளிகள் மூங்கில் தடுப்புகளின் வழியே மினுங்கிக் கொண்டிருந்தன. நான் எழுந்தேன். விஜி என அவளை உலுக்கினேன். வாயில் உமிழ் நீர் வழிய தூங்கிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு எழுந்தாள். இருவரும் ஆடைகளற்று இருப்பதை உணர்ந்தோம். அவள் மெல்லிதாய் நடுங்க ஆரம்பித்தாள். நான் எழுந்து ஆடைகளை அணிந்தபடி வெளியில் வந்தேன். தொலைபேசியில் உணவுக்கு சொல்லிவிட்ட பிறகுதான் குடித்தால் நன்றாக விருக்கும் போல் தோன்றியது. மீண்டும் அழைத்து ரெட் ஒயினும் பியரும் சொன்னேன்.
குளிர் பெட்டியிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன் விஜியை சோர்வு அப்பியிருந்தது. புடவையை கட்டி முடித்திருந்தாள் என்னைப் பார்த்ததும் நெருங்கி வந்து கட்டிக் கொண்டாள் செத்தே போய்ட்டன்னு நெனச்சம்பா என்றாள். தண்ணீரைக் குடிக்க சொன்னேன். முழு பாட்டிலையும் குடிக்குமளவுக்கு தாகமிருந்திருக்கிறது. காலி பாட்டிலை திருப்பித் தந்தாள். அவளுடலை கசக்கிப் பிழிந்திருக்கிறேன் என்ற குற்ற உணர்வு தலை தூக்க ஆரம்பித்தது. மெதுவாய் அவளை வெளியில் கூட்டிக் கொண்டு போனேன் “சாப்பாடு வரதுக்குள்ள கடல் வர போவமா?” என்றேன். ம்ம் என்றாள். தென்னை மர கிசுகிசுப்புகளுக்கு இடையில் நீலக் கடல் கருப்பு உடையை அணிந்திருந்தது. வானத்தில் நிலவையோ விண்மீன்களையோ காணவில்லை இருள் முழுதாய் அப்பியிருந்தது அங்கங்கே கருப்பு உருவங்களாய் மனிதர்கள் நடந்து கொண்டிருந்தனர்.
“சாப்டுட்டு நைட் வந்து குளிப்பமா? என்றேன்.
“ம்ம் பயம் ஒண்ணும் இல்லயே?” என்றாள்
“அதுலாம் ஒண்ணும் இல்ல. இன்னிக்கு நிலாவயும் காணோம்.. முழு இருட்ல.. கடலலை சப்தப் பின்னணில.. உடல் மணலில் புதையப் புதைய நாம் மீண்டும் மீண்டும் கலவி கொள்வோம் கண்ணே!” என்றேன்
அவள் ச்சீய் என வெட்கினாள்.
“நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க.. அழுத்தம் திருத்தமா.. கேட்க நல்லாருக்கு.. ஆனா சிலதுலாம் உடனே புரியவே இல்ல… அப்றமா புரிஞ்சிக்க வேண்டியதா இருக்கு… கவிதலாம் எழுதுவீங்களா?”
“இல்லமா சும்மா படிப்பேன் அவ்ளோதான்”
“என்ன வச்சி கவித எழுதுவீங்களா?”
“ம்ம் எழுதலாமே இன்னிக்கு நைட் எழுதலாம்”
“வீட்டுக்கு போவேணாமா?”
“வேணாம் குட்டி இங்கயே இருக்கலாம்”
“பயம் ஒண்ணும் இல்லயா?”
“என்ன பயம்?”
“தெர்ல ஆனா பயமா இருக்கு”
“நான் இருக்கேன் இல்ல எதுக்கு பயப்படுர”
“ம்ம்..எல்லாமே பயங்கர ஸ்பீடா நடக்குதுபா.. சரியான்னு தெரில.. இன்னிக்கு காலைலதான் பேச ஆரம்பிச்சோம்.. சாய்ந்திரம் நான் உங்க மனைவி ஆகிட்டேன்… எப்படி இதுன்னே புரியல…”
“இது விதி விஜி. இதான் விதி. நாம இணையனும்னு இருக்கு இதுக்காகத்தான் நமக்கு இவ்ளோ சிக்கலா வாழ்க்க இருந்திருக்கு..இதான் நம்மோட டெஸ்டினி”
“ம்ம்”
கடல் எங்கள் முன்னால் மென்மையாய் பொங்கிக் கொண்டிருந்தது. இந்த அடர் இருளில் கூட கடலின் நுரைகள் வெண்மை ததும்பிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. சற்று நேரத்திற்குள் கடலும் முழுமையாய் கண்களுக்கு பழகியிருந்தது. மணலை முத்தமிடும் பாதியலையில் அமர்ந்து கொண்டோம். அவள் என் தோளில் சாய்ந்திருந்தாள். எத்தனை நேரம் அமர்ந்திருந்தோமெனத் தெரியவில்லை. பசியும், களைப்பும் ஆழமாய் இருந்தது. அவள் ஏற்கனவே துவண்டு போயிருந்தாள். அவளின் பூவுடலைக் கையிலேந்திக் கொண்டபடி திரும்ப நடந்து வந்தேன். “வெயிட்டா இருப்பேன் கீழ விடுங்களேன்” என சிணுங்கினாள் அதுலாம் ஒண்னுமில்ல என்றபடியே ரிசார்ட் வரை தூக்கிக் கொண்டு வந்தேன். குடிலின் வாயிலில் உணவு தயாராய் இருந்தது. மெளனமாய் சாப்பிட்டோம். சிறிது பசியடங்கியதும் மதுக்குப்பியைத் தேடினேன். பியர் புட்டிகள் குளிர் பெட்டியில் வைக்கப் பட்டிருந்தன. வைன் உணவு மேசையின் அடியிலிருந்தது.
“நீ வைன் குடிச்சிருக்கியா?”
“அய்யோ இல்ல”
“லேசா குடிச்சி பார் நல்லாருக்கும். ஒண்னும் போதலாம் இருக்காது.”
“அய்யய்யோ எனக்கு வேணாம்பா. நீங்களும் குடிக்க வேணாமே ப்ளீஸ்”
“நோ டி நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். வாழ்க்கையே இன்னிக்குதான் முழுமையடைஞ்சதா தோணுது இந்த நாள கொண்டாடாம எப்படி?” என்றேன்.
“சரி கொஞ்சமா குடிங்க. இது ரொம்ப கசக்குமா?”
“குடிச்சி பாத்துட்டு சொல்லு”
“இரண்டு அழகிய கண்ணாடி குடுவைக்குள் அடர் சிவப்பு நிற வைனை வார்த்தேன்.”
“நம் எதிர்காலத்தினுக்கு” என்றபடி குடித்தேன்.
“அவள் ஒரு மிடறு குடித்து முகம் சுளித்தாள் பயங்கர புளிப்பா இருக்கு.
இதென்ன திராட்சை பழமா?” என்றாள்
“ஆமாடி நாம குடிக்கிற இந்த வைன் 40 வருசத்துக்கு முந்தினது. பிரான்சுல தயாரிக்கப்பட்டது. வைன் எப்படி தெரியுமா தயாரிப்பாங்க. பிரான்சின் கிராமங்களில திராட்சை தோட்டங்கள் லாம் நெறைய இருக்கும். அங்க குடும்ப தொழிலே வைன் தயாரிக்கிறதுதான். அப்றமா நாம வாக்கிங்க் இன் த க்லவுட் னு ஒரு படம் பார்க்கலாம். அதுல இந்த காட்சிகள்லாம் நல்லா எடுத்திருப்பாங்க.”
“படத்த அப்றம் பாக்கலாம். நீங்க சொல்லுங்க.” என்றபடி வைனை மெல்ல குடிக்க ஆரம்பித்தாள்.
“திராட்சை அறுவடைக் காலமே பெரிய திருவிழா மாதிரிதான் இருக்கும். உறவினர்கள்,நண்பர்கள் எல்லாம் கூடி திராட்சைகளை அறுவடை பண்ணுவாங்க. ஒரு பெரிய வாய் அகலமான கலன்ல அந்த திராட்சைகளை கொட்டி அங்க இருக்க கல்யாணமாகாத இளம் பெண்களை கால்களால மிதிக்க சொல்வாங்க. பொண்ணுங்கலாம் நீளமான ஸ்கர்டை தூக்கி இடுப்புல சொருகி கிட்டு மிதிக்க ஆரம்பிப்பாங்க… அதே நேரத்தில பெரிய பெரிய இசைக் கருவிகளலாம் சுத்தி இருக்கவங்க வாசிக்க ஆரம்பிப்பாங்க.. இந்த பெண்கள் திராட்சைகளின் மீது நடனமாடுவாங்க… திராட்சைகள் நசுங்கி, சாறு கலனை நிறைக்க ஆரம்பிக்கும்.,, அப்புறம் அந்த சாறை மரக்குடுவைக்குள்ள ஊத்தி பூமிக்கு அடியில பொதைச்சி வச்சிடுவாங்க. பல வருஷம் கழிச்சி எடுத்தா அதுதான் ஒயின். ஒரிஜினல் ஒயின்.
“அததான் நாம இப்ப குடிக்கிறமா?”
“ஆமாடி”
“நீங்க சொல்லிட்டிருக்கும்போது நான் அப்படியே அந்த திராட்சை தோட்டத்துக்கு நடுவில போய்ட்டேன். நாம அங்க போய்டுவமா மாமா?”
நான்கு மிடறு ஒயினுக்கே லேசாய் விஜி தள்ளாடினாள்.
“நான் பிரான்ஸ் டக் னு போய்டலாம் மாமு.. நான் பாண்டிச்சேரிதான... அதுனால ரொம்ப சுலபம்… இந்த ஊர், மனுசங்க எல்லாரையும் விட்டு போய்டலாம்… அங்க போய் ஏதாவது ஒரு திராட்ச தோட்டத்துல வேல செய்ஞ்சி.. சின்னதா ஒரு வீட்ல வாழலாம். போலாமா மாமு?”
“போலாம் குட்டி”
அவளின் உடல் துவண்டது. நான் இன்னும் நிரப்பத் துவங்கினேன்.
“குடி விஜி”
“வேணாம் ஒரு மாதிரி இருக்கு”
“பரவால்ல குடி நாம ரெண்டு பேரும் இந்த உலகத்தில இருந்து காணாம போய்டலாம்”
“சரி” மீண்டும் கோப்பையை எடுத்துக் கொண்டாள்.
நான் ஒயினையும் பியரையும் கலந்து குடித்தேன்.
இப்போது தென்னை மரங்களைக் கூட இருள் விழுங்கி விட்டிருந்தது. அங்கங்கே குடில்களில் மட்டும் இரவு விளக்கின் வெளிச்சம் லேசாய் இருளில் மினுங்கிக் கொண்டிருந்தது. லேசான தள்ளாட்டத்துடன் குடிலை விட்டு வெளியில் வந்து இருளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்படி ஒரு அடர்த்தியான இருளைப் பார்த்து பல வருடங்களாகிறது. தூரத்தில் அலைகளின் சப்தம் வெகுவாய் தணிந்திருந்தது.
“கடலுக்குள்ள போலாமா விஜி”
“போலாம் மாமா ஆனா இருட்டா இருக்கே”
“அதுனால என்ன போலாம்”
“நான் இரண்டு பியர் புட்டிகளை கையிலெடுத்துக் கொண்டேன்”
“ரொம்ப குளிர்ரா மாதிரி இருக்கு மாமு”
“என்ன கட்டிக்கோ”
அவள் என்னை அணைத்தபடியே தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து மணலை நெருங்கிவிட்டதை கால்கள் உணரத் துவங்கின.
கடல் அலை மிக மென்மையாகி விட்டிருந்தது போலிருந்தது. ஈர மணற்பரப்பு தாண்டி தண்ணீரில் அமர்ந்து கொண்டோம். இருளில் பழகிய கண்களூடாய் பார்க்கையில் அங்கங்கே இரண்டு மூன்று சோடிகள் மணலில் புரண்டு கொண்டிருந்தன.
“விஜி அங்க பார் நம்மள மாதிரியே”
“அய்யே ச்சீ”
“இங்க இதாண்டி பேமஸ் என்றபடி அவளை நீரில் கிடத்தினேன். புடவை ஏற்கனவே விலகிவிட்டிருந்தது.
“மாமா குடில் க்கு போய்டலாம் இங்க வேணாமே”
“பயங்கர இருட்டு குட்டி யாருக்கும் ஒண்ணும் தெரியாது”
“நம்ம கண்ணுக்கு ரெண்டு பேர் தெரிஞ்சாங்க இல்ல”
“சும்மா உருவம் மாதிரிதான தெரியுது” என்றபடியே அவளின் மீது படர்ந்தேன்.
எங்கள் இருவரின் உடலையும் கடல் நீர் பாதி மூழ்கடித்திருந்தது மணலில் கால் முட்டியூன்றி அவளின் புடவையை மேலேற்றினேன். என்னோடு சேர்ந்து கடல் நீரும் அவளுக்குள் பயணித்தது. மணற் துகள்கள் ஆழ் பயணத்தின் இடையிடையே நெருடிக் கொண்டிருந்தன. உப்பு நீரில் நனைந்தும் கூட அடர் இருளிலும் கூட அவளின் சந்தன நிற முலைகள் பளிச்சிட்டன. நான் அவள் மீது அமர்ந்தபடியே எடுத்து வந்திருந்த பியர் புட்டியினை பல்லால் கடித்து திறந்து குடிக்க ஆரம்பித்தேன். எனக்கு மாமா என்றபடி எழுந்தாள். நான் அவள் தொடைகளின் மீதமர்ந்திருந்தேன். என் கால்கள் அவள் இடுப்பை பின்னிக் கொண்டிருந்தன. அவள் இரு கைகளை பின்னால் ஊன்றி பாதி எழுந்தவாறு அமர்ந்திருந்தாள். நான் பியரை என் வாயிலிருந்து அவளுக்குப் புகட்டினேன். மிகுந்த தாகத்தோடு நாங்கள் மதுவினை குடித்தோம். இரண்டு புட்டிகளை காலி செய்தும் கூட எங்கள் தாகம் அடங்கவில்லை. விஜி மிகுந்த வன்மத்தோடு என்னை மல்லாக்கத் தள்ளி துவண்டிருந்த என் குறியினை சுவைக்க ஆரம்பித்தாள். நான் மீண்டும் பைத்தியத்தின் உச்சத்தினுக்குப் போனேன்.
இருவரும் வெகு நேரம் மணலில் கிட்டத் தட்ட மயங்கிக் கிடந்தோம். எனக்கு லேசாய் உணர்விருந்தது. விஜி சுத்தமாய் மயங்கியிருந்தாள். திடீரென வானம் அதிர ஆரம்பித்தது. ஒரு பெரிய மின்னல் என் பார்வைக்கு சமீபமாய் மிகப் பெரும் முற்கோடுகளாய் பளிச்சிட்டது. பார்த்துக் கொண்டிருந்த என் கண்கள் கூசின. விஜி மணற் நீரில் புரண்டு படுத்தாள். அவளின் புடவை பந்தாய் அடிவயிற்றில் சுருண்டிருந்தது. நீரில் வெண் தொடைகள் கூரிய வாளினைப் போல பளபளத்துக் கொண்டிருந்தன. உள்ளாடை அணிந்திராத அவளின் பின்புறத்தின் பாதி, சந்தன மேடுகளாய் ஜொலித்தது. மின்னலின் வெளிச்சம் என் போதையை துரத்தியடித்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன். திடீரென எல்லாமும் கனவு என்கிற எண்ணம் உதித்தது. நான் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதாயும் தூக்கத்தில் வந்த கனவுதாம் இவையெல்லாமும் என நம்பத் துவங்கினேன். நிஜம், கனவு, போதை என எல்லாமும் சேர்ந்து குழம்ப ஆரம்பித்தது. எது கனவு? எது நிஜம்? என்பதைப் பிரிக்க முடியவில்லை. நான் அப்படியே விஜியின் மீது படுத்துக் கொண்டேன். மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. வெகு சீக்கிரத்தில் துளிகள் பெரிதாகி சட சடவென மழை ஆரம்பித்தது. காற்று சுத்தமாய் நின்றிருக்க மழை தலைமீது நேரடியாய் மிக மென்மையாய் பொழியத் துவங்கியது. விஜி எழுந்து கொண்டாள். தூரத்தில் உருவங்கள் சின்ன சின்ன சப்தங்களோடு ஓடின. விஜி எழுந்து ஆடைகளை சரி செய்து கொண்டது வீணானது. நான் எழுந்து அவளை அணைத்துக் கொண்டேன்.
“போலாம் மாமா” என்றாள்.மெதுவாய் நடக்க ஆரம்பித்தோம்
கண்களுக்கெதிரே இன்னொரு மிகப் பெரிய மின்னல் வெட்டியது. வெளிச்சத்தில் குடில்களும் தென்னை மரங்களும் ஒளிர்ந்து மறைந்தன. விஜி என் கைகளை இறுக்கிக் கொண்டாள்.
ஒவியம் - ரவிவர்மா
மேலும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
7 comments:
arumai saar
உண்மையில் அனுபவிக்க வேண்டிய வரிகள்காமம் அற்புதமான விசயம்
குமுதம் இதழில் பவா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படமும், கட்டுரையும் வந்து உள்ளது. முடிந்தால் வாங்கவும் அங்கே.
அல்லது ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்
குமுதம் இதழில் பவா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படமும், கட்டுரையும் வந்து உள்ளது. முடிந்தால் வாங்கவும் அங்கே.
அல்லது ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்
உண்மையாகவே அற்புதம் அண்ணா, முகம் சுளிக்க வைத்துவிடாமல் காமத்தை அணு அணுவாக உணர வைப்பது உண்மையிலேயே கடினம். வேறு உலகிற்கு இட்டுச் சென்று விட்டீர்கள்.
உண்மையாகவே அற்புதம் அண்ணா, முகம் சுளிக்க வைத்துவிடாமல் காமத்தை அணு அணுவாக உணர வைப்பது உண்மையிலேயே கடினம். வேறு உலகிற்கு இட்டுச் சென்று விட்டீர்கள்.
வருக!ஆதரவு தருக!! trjprakash.blogspot.com
Post a Comment