
தொலைதூரத்தில்
வரைபடப் புள்ளிகளாய் தெரியும்
புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ள
நிலத்தின் இதயத்திலிருந்து
கடல் துவங்குவதாகவும்
பிளந்த யோனியின் சாயல்களில்
விரிந்திருக்கும் மணற்வெளியில்
நீர் சலித்த மோகினிகளும்
வனம் சலித்த நீலிகளும்
தழுவிக் கிடப்பதாகவும்
நகரத்து யட்சியொன்று
அதன் பெரும் ஏக்கத்தை
என்னிடம் கடத்தியது
யோனி நிலக் கிளர்வுகளோடு
ஏங்கிச் செத்த நிகழ் வேட்கையின்
கொடுங்கனவில்
இலுப்பை முனியின் நீள்முடியைக்
கைவசப்படுத்திய என் முப்பாட்டித் தோன்றி
அவ்வுன்னத நிலங்களில்
மலங்கழித்துத் திரிவதாய்
கெக்கலித்தாள்
அவளறியாமல் அவளின் சுருக்குப் பையினுள்
தஞ்சம் புகுந்தேன்
காலத்தின் உறைந்த உதடுகளோடும்
புகையிலை வாசங்களோடும் பயணித்து
முடிவின்மையின் சாஸ்வதங்களை முத்தமிட்டபடி
விழுங்கக் காத்திருக்கும்
யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்
8 comments:
எப்பவும் போல மாறுப்ப்ட்ட கோணத்துடன் வித்தியாசமான கவிதை
வாழ்த்துகள்
ரசிக்கக்கூடிய வரிகள். அருமை
வழக்கம் போல் டரியல் ஆனேன்!
வால்பையன் said...
வழக்கம் போல் டரியல் ஆனேன்!
நானும் அருண்.
என்றாலும் ஐயனார்,
தனித்த பட்சி.உயரம்.அடையாளம்.
பறவையின் உயரம் பறத்தலில் அன்றோ?
அன்றோ!
:) ஒரு ஸ்மைலியோட நிறுத்திக்கிறேன் அய்ஸ்
காணி நிலம் வேண்டும் பராசக்தி
யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்//
நீ புதைந்து போவ வேறு இடமே கிடைக்கவில்லையா?:)
Post a Comment