Wednesday, May 20, 2009
ப்ளாஸ்டிக் முகங்கள்
ஒரு இனத்தினை அழித்து விட்டதாய்
கொக்கரித்துக் கொள்ளுங்கள்.
எமது மண்ணை
நீங்களும் முத்தமிடுங்கள்.
ஆளுயர கட் அவுட்டுகளையும்,
அசையாத நாற்காலிகளையும்,
சில வருடங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள்....
இங்கிருப்பவர்கள்
வழக்கம் போல்
அஞ்சலிக் கவிதை
எழுதிக் கொல்வதோடு
நின்றுவிடாது
அள்ளி முடியாத
இத்தாலிய திரெளபதியின்
கூந்தலில் சிக்கெடுக்க
உதவிக் கொண்டிருங்கள்...
ப்ளாஸ்டிக்
சோடிப்புகளின்
பின் துருத்திக் கொண்டிருக்கும்
உங்களின் துணுக்குறல்களே
எமக்கு வேண்டியது
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
11 comments:
இங்கிருப்பவர்கள்
வழக்கம் போல்
அஞ்சலிக் கவிதை
எழுதிக் கொல்வதோடு
நின்றுவிடாது
அள்ளி முடியாத
இத்தாலிய திரெளபதியின்
கூந்தலில் சிக்கெடுக்க
உதவிக் கொண்டிருங்கள்...
:(
உங்களின் வார்த்தைகள் மனதை பெருமளவு தொந்தரவு செய்தது அய்யானர், அருமை.
இந்த வருத்தத்திலும் உங்களை பாராட்டுகிறேன்.
குப்பன்_யாஹூ
இங்கு இருக்கும் அரசு ஆள்பவரை மட்டும் குறை சொல்கிறீர்களே, என் போன்ற வாக்குகளை பணத்திற்கு விற்றவர்கள் பற்றி ஏன் ஒன்றும் சொல்ல வில்லை.
நல்லா சொன்னீங்க...இன்னும் கூட நல்லா கேட்டுருக்கலாம்...இதுல வெட்கமில்லாம தமிழினத் தலைவர்ன்னு சில பேர் சொல்லிக்கிட்டாங்க,...அவங்களுக்கெல்லாம் அவங்க குடும்பம் சர்க்கரை,...தமிழ் பேசுன ஒரே காரணத்திற்காக உயிர்விட்ட ஆயிரக்கணக்கான பேரேட குடும்பம்.....என்னவோ,..போங்க...சாமி தான் காப்பாத்தனும்
ஒன்றும் செய்ய் ஏலாத கையறு நிலை அய்ஸ்.
குப்பன் எழுதியதைப் படித்து விமர்சனம் செய்வதுதான் எழுத்தாளனுக்குச் செய்யும் மரியாதை. எழுதாத ஒன்றை ஏன் எழுதவில்லை எனக் கேட்பது என்னவிதமான விமர்சனம்?
அதையும் எழுதினால் இன்னொன்றை ஏன் எழுதவில்லை எனக் கேள்வி.
எழுதத் தோன்றியதை எழுதும் சுதந்திரம் எழுத்தாளானுக்கு இருக்கட்டும். ஏதும் சட்டமிட்டு அதைக் குலைக்க வேண்டாம்.
//ப்ளாஸ்டிக்
சோடிப்புகளின்
பின் துருத்திக் கொண்டிருக்கும்
உங்களின் துணுக்குறல்களே
எமக்கு வேண்டியது //
ஆம் அய்யனார்
@ குப்பன் யாஹூ
வாக்குகளை வி்ற்கும் நிலையில் தானே வைத்திருக்கிறார்கள் நம்மை
வடகரை வேலன், நான் அன்பாகாதான் அதுவும் விண்ணப்பமாகத்தான் கேட்டேன் அய்யனாரிடம். கட்டளையாக கேட்க வில்லை,
ஒரு வேளை அப்படி என் பின்னூட்டம் இருந்தால் மன்னிக்கவும் அய்யனார், வேலன்.
குப்பன்_யாஹூ
குப்பன்,
வேலன் அவர்கள் சொன்னதை ஒரு பகிர்வாக எடுத்து கொள்ளவும்.வருந்த வேண்டிய அவசியமில்லை.அவரும் அந்த நோக்கில் சொல்லவில்லை.
புரிதலுக்கு நன்றி..
என்ன சொல்லியும் உறைக்காதபடிக்கு கண்களை மறைத்துக்கொண்டிருக்கிறது நாற்காலி மோகம்.
Fake photos? Did you guys check this out? http://news.bbc.co.uk/2/hi/south_asia/8066129.stm
If it's true, the only ray of hope for Ealam Tamils is gone. Dark clouds are looming. Sad, sad situation.
/*அஞ்சலிக் கவிதை
எழுதிக் கொல்வதோடு*/
எழுதிக் கொள்வது/கொல்வது
மற்றபடி கவிதை அருமை
Post a Comment