Tuesday, January 6, 2009

தூங்கும் ஏரிகள்


சிறுவர்கள் சறுக்கிக்
குதூகலிக்கும்
இப்பனித் தரையின் கீழ்
ஏரிகள்
உறைபனி போர்த்தித்
தூங்கிக் கொண்டிருக்கலாம்.

கீஸ்லோவெஸ்கியின்
திரைப்படமொன்றில்
விழித்தெழும்
உறைபனி ஏரியொன்று
பசியில் சில சிறுவர்களை
விழுங்கி விடும்.

கவனம்,
உறைபனிக் காலங்களில்
சிறுவர்களை
விளையாட அனுப்பும் முன்
அவர்களின் இறக்கைகளை
சரிபாருங்கள்.

11 comments:

MSK / Saravana said...

தல.. பின்றீங்க போங்க.. வருடம் துவங்கிய ஏழு நாட்களுக்குள் ஐந்து பதிவுகள்.. இதே ஸ்பீடை தொடர்ந்தீங்கன்னா 2007 மாதிரி நிறைய பதிவுகள் எழுதலாம்..
என்னை போன்றோர்களின் எதிர்பார்ப்பே உங்கள் பதிவுகள்தாம்.. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்க வழக்கமான மொழி நடையிலிருந்து கொஞ்சம் வேறுபட்டிருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குங்க.

வால்பையன் said...

நான் கூட என் இறக்கை இல்லாமல் எங்கேயும் செல்வதில்லை!

அடிக்கடி ஞாபகப்படுத்துவதற்கு நன்றி

Ayyanar Viswanath said...

சரவண குமார்,சுந்தர் மற்றும் வால்பையன் நன்றிகள் :)

தமிழன்-கறுப்பி... said...

எழுத்தாளர் எஸ் ராவின் இரண்டாயிரத்தெட்டின் பிடித்த வலைப்பூக்களில் உங்கள் பெயரும் உண்டு அண்ணன்..

வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... said...

இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

கங்காவைத் தவிர்த்து இது ஆறாவது பதிவு...

ச.பிரேம்குமார் said...

//கவனம்,
உறைபனிக் காலங்களில்
சிறுவர்களை
விளையாட அனுப்பும் முன்
அவர்களின் இறக்கைகளை
சரிபாருங்கள்.
//

கொள்ளை அழகு :)

anujanya said...

கவிதை வித்தியாசமாய், அழகு. என்னவோ இருக்கு; ஆனால் என்னவோ இல்லை என்று மெல்லிய குழப்பத்தில் யோசித்தேன். சுந்தரின் அனுபவம் சரியாகக் கண்டுபிடிக்கிறது. உங்கள் 'மொழி' இல்லை. ஆனால் 'கவிதை' இருக்கிறது - வழமை போல். இன்னொரு பரிமாணத்தையும் அவ்வப்போது துலக்குங்கள்.

அனுஜன்யா

KARTHIK said...

// இதே ஸ்பீடை தொடர்ந்தீங்கன்னா 2007 மாதிரி நிறைய பதிவுகள் எழுதலாம்..
என்னை போன்றோர்களின் எதிர்பார்ப்பே உங்கள் பதிவுகள்தாம்.. :)//

அதே அதே

கவிதை ஓரளவுக்கு புரியும்படியா இருக்கு.

ஆதவா said...

வித்தியாசமான களம்... அருமையான கற்பனை..

இறக்கைகளை சரிபார்க்கும் முன்னர், அவர்களுக்கு இருக்கிறதா என்றுகூட பார்த்துவிடச் சொல்லுங்கள்....

அன்புடன்
ஆதவன்

Featured Post

test

 test