இருக்கியா?..
ம்ம்..உள்ள வா
எப்படியிருக்க?
நல்லா..என்ன இந்த நேரத்தில
சும்மா ....நெறய மிதந்து வந்திச்சி ஒரு மாதிரி சொற்களா குவியலா பேச்சா சிந்தனையா..எங்கயாச்சிம் யார்கிட்டயாச்சிம் கொட்டனும் இல்லனா வெடிச்சிடும்.
ம்ம்.. சொல் எனக்கும் ரொம்ப சலிப்பான ஒரு நாள்தான் இது.. பெரும்பாலான நாட்கள்மாதிரி..
உன் வீடு நல்லாருக்கு.. சின்னதா, அழகா, பளிச் னு உன்ன மாதிரி... எங்கிட்டயுமா..போர்..
சரி.. நேத்து ழார் பத்தாயோட விழியின் கதை படிச்சேன்
உங்களுக்கெல்லாம் திடீர்னு என்ன ஆச்சி? ..நாகார்சுனன் பிளாக்ல பார்த்தேன்..கருமம்..கருமம்..
ஆமா.. அது ஒருமாதிரி பண்ணிடுச்சி ...படிச்சிட்டிருக்கும்போதே....பதினம வயசில இப்படி ஆனது...ம்ம்ம்.. சில மூணாந்தரங்கள்.... அதுக்கு பிறகு இப்பதான்..
என்னது?.. ஓஓ... ஓ கே..
ம்ம்...
அதுல என்ன ..... குற்ற உணர்ச்சியா?
இல்ல..ஆனா i frustrate
usual தானே god damn frustrates
Yes i know...
அப்புறம் என்ன ?..ஆடுகள் எப்போது தம்மை ஆடுகள் என உணரத் தொடங்குகிறதோ அப்போது அவை மந்தையிலிருந்து விலகத் துவங்குகின்றன நீதான் இதுன்னு முழுசா எப்ப உன்ன உணர ஆரம்பிக்கிறியோ, அப்ப முழுசா வெளில வந்துடுவ..
ம்ம்..அந்த ஆடுகள் யார் சொன்னது?
கலீல் ஜிப்ரான்
Fuck the philosophers..
ஏன்? அவங்களுக்கு என்ன?..உங்கள மாதிரி கிறுக்குங்க இல்ல.. ரொம்ப தெளிவான நிதானமான ஸ்டேட்மெண்ட்ஸ் தான்... ஆரம்பத்தில பாக்குறப்போ ரொம்ப flat ஆ தெரிஞ்சாலும் நீங்க ஆராய்ச்சி பண்ணி கிழிச்சதும் அவங்க சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணுமில்ல..
இங்க பார் இந்த தத்துவம், தத்துவவாதிங்க இவங்கள லாம் கட்டி வச்சி ஒதைக்கனும்... ரொம்ப சோம்பேறித்தனமான மேலோட்டமான பாசிஸ்ட் தெரியுமா இவங்கலாம்
யார் சொன்னா..உனக்கப்படி படுது அவ்ளோதான்..மொதல்ல accept பண்ணு ..நம்பு..எல்லாத்தையும் குறுக்கில பாக்காதே..
STOP advising me!!!
கத்தாதே..பக்கத்து வீட்ல குழந்தைங்க இருக்காங்க.. விடியற்காலை இரண்டு மணி இப்ப..
sorry
no issues..
இந்த பேச்ச விடு தத்துவம் கலை கவிழ்ப்பு ன்னு போர்..
நீதான் ஆரம்பிச்ச...சரி உன் காதலிகள் எல்லாம் எப்படியிருக்காங்க எண்பத்தி எட்டாவது காதலிய கண்டுபிடிச்சிட்டியா?
ஆமா.. நேத்து ஆர்குட் ல ஒரு பொண்ண பாத்தேன்..சுமாரா கவிதை எழுதுறா..அழகாவும் இருக்கா ....i like her
orkut ல நெறய fake நானே மூணு id வச்சிருக்கேன் :)
இல்ல இவ நெசமாத்தான் இருக்கணும்...
எப்படியோ நல்லா இருந்தா சரி..உனக்குன்னு வந்து மாட்ராளுங்க பார் அவளுங்கள சொல்லனும்....
எனக்கு ஒரு டவுட்... நீ இந்த சாரு இன்னும் எல்லா பொனைவு எழுத்தாளர்களும் காதல், காதலி, சாட், காமம் ,அது இதுன்னு அடிச்சி உடறிங்களா நெசமாவே நடக்குதா இல்ல உங்க புனைவா?...
என்னோட சிறுபிராயத்து முதல் காதலியிலிருந்து எண்பத்தி ஏழாவது காதலியான செர்ஜினா சிமோந்தி வரைக்குமானவங்களோட புகைப்படம் இருக்கு..கடிதங்கள...கடிதங்கள்..தொலைப்பேச்சுகள்..கலவி கொண்டதற்கான தடயங்கள் எல்லாம் எங்கிட்ட இருக்கு அதெல்லாம் உன்கிட்ட காமிக்கிறதில எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல..
சரி..நம்பிட்டோம்..ஆளவிடு...
ஆனா உன்னத்தான் ஒண்ணும் செய்ய முடியல
கழுத்த பிடிச்சி வெளியில தள்ளனுமா இப்ப?..
இல்ல நான் ஆரம்பிக்கல... ஆனா நீ முதல்ல இந்த புனிதக்காரியான ஒரு அடையாளத்தில இருந்து வெளில வா..
இருந்துட்டு போகட்டும்.. உன் flirt லாம் என்கிட்ட மூட்ட கட்டி வச்சிட்டு பேசரதா இருந்தா பேசு... இல்ல எடத்த காலி பண்ணு...
சரி பேச்ச மாத்து... இத நீதான் ஆரம்பிச்ச..
:) சரி..இப்ப ஒண்ணு சொல்லவா?.. உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த கூர்மையான அவதானம்தான்.. கடைசி subject ல நான் சொன்ன dialogue ஐ correct ஆ இப்ப சொல்ற..how sharp you !!
yes i know but இது பெரிய விசயம் ஒண்ணும் இல்ல க்ரேசி மோகன் கூட இன்னும் ஷார்ப்பா எழுதறான்..
பச்.. அந்த அளவுக்குலாம் தாழ்த்திக்காதே..உன்கிட்ட சரக்கு இருக்கு
yes i know
then what the hell u don't know?
i don't know :)
நீ திமிர் பிடிச்சவந்தான்...
i guss i know eve...ry..thingggg...
சரக்கு போட்ருக்கியா என்ன?
இப்ப இல்ல..காலைல எதிர் போட்டேன்... லைட்டா
இன்னும் இருக்கா?
இல்ல பளிச் னு இருக்கு..
நேத்து அதிகமா?...
ம்ம்..கொஞ்சம் அதிகம்தான்
ஏதாசசிம் படம் பாத்தியா?
frida பார்த்தேன் salma hayek படுத்திட்டா..robert rodriguz triology ல வருவா இல்ல அத விட இதுல செம அழகு.. நீ பாத்த இல்ல desparado?
இல்ல ரொம்ப ரத்தம் அதில.. பாதில மூடிட்டேன்..உன் பேச்ச நம்பி இனிமே படம் பாக்க கூடாது. இனிமே உங்கிட்ட கேக்கவும் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் நீ சொன்னன்னு perfume வாங்கினேன்..அன்னிக்கு என்னால சாப்ட முடியல் u know i vomitted..
இதான் உன்கிட்ட இருக்க பிரச்சின..குரூரம்னு லாம் எதுவும் இல்ல சொல்லப்போனா அழகியல்னு நீ நெனச்சிட்டிருக்க எல்லாம்தான் படு குரூரம்..
ப்ச் ...உன்கிட்ட இந்த சப்ஜெக்ட் பேசி சலிச்சிட்டேன்...நீயும் மாறப்போறதில்ல ..நானும் இப்படியிருக்கதான் ஆசப்படுறேன்..பேச்ச மாத்து..
tinto brass collection வாங்கினேன்
சொன்னியே..நீ அந்த கருமத்தலாம் பாக்குறதுக்கும் ஜோதி தியேட்டர் ரசிகர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?
நெறய இருக்கு..சொன்னா உனக்கு புரியாது..இல்லனா காத பொத்திப்ப..ஆளவிடு
இல்ல நீ சொல் நான் கேட்கிறேன் ஆனா உன் மைண்ட்லெஸ் ட்ங்க் க மட்டும் கொஞ்சம் அடக்கி வாசி..
சரி..காமம் கலவி இதெல்லாம் வெறுமனே நுழைப்புக்குள்ள முடிஞ்சிபோய்டுறதில்ல.பெரும்பாலான மக்கள் உச்சத்த சரியா அடையுறதும் இல்ல அத என்னன்னு உணர்ரதும் இல்ல.காமம் வெறும் சதை அசைப்புகளோடும் மனத் தூண்டுதல்களோடும் முடிஞ்சிபோய்டுது.மூளையிலிருந்து காமம் செயலுக்கு வர்ரதேயில்ல.கலவி ங்கிறது இப்ப பெரும்பாலும் நினைவின் தூண்டுதலா சுயத்தின் வெளித்துப்பலா மட்டும் தான் நிகழுது.இது மனிதனுக்கு ஆரோக்யமானதில்ல.ஓஷோ இத பத்தி பேசி இருப்பார்.மூளையின் நரம்பதிர்வுதான் உடலின் உச்சம்னா அந்த நரம்ப நொடிக்கொரு முறை துடிக்க செய்யும்படி உடல்ரீதியா விஞ்சானத்த கொண்டு அறுவ சிகிச்ச பண்ணிக்கலாம்.every five minute you can get orgasm... நம்ம விஞ்சான சோம்பேறிக் கோமாளிகள் இப்படி நரம்ப அறுவ சிகிச்சை பண்ணி, ஒரு சுவிட்ஜ் ஐ இணைச்சி கைல கொடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு ஒண்ணுமில்ல..ஏன்னா காமம் பத்தின நம்மளோட மேலோட்டமான புரிதல் நம்மை கடைசியா அங்கதான் கூட்டிப்போக போவுது..
சரி காமம் உடல் ரீதியானதுதான்..அன்பால நிறைஞ்சதுதான்.. உடலின் அதி உன்னத முயக்கம்தான் ...நிதானமான அணுஅணுவான துடிப்புதான் ....எல்லாம் ஒத்துக்குறேன்..நான் கேட்டது நீ பாக்குற போர்னோ படங்களுக்கும் ஜோதி தியேட்டர் வகையறாக்களுக்கும் என்ன பெரிய்ய வித்தியாசம்?
சதை அசைவுகள் மட்டும்தான் காமம்னு நினைக்கிறவங்களுக்கு சுயபுயணர்ச்சிக்கு தேவையான பிம்பங்களுக்காக தேடி அலைபவங்களுக்கு அது சரியா படும்.எனக்கு அப்படி இல்ல.நான் காமத்திலிருக்க அதிகாரத்த களைய விரும்புறேன்.நுழைப்புகள் தவிர்த்து உச்சத்திற்கான மாற்றுக்களைத் தேடறேன்னும் சொல்லிக்கலாம்.நீ பியானோ டீச்சர் னு ஒரு படம் பார்.மாற்று உச்சம் பத்திலாம் பிறகு பேசலாம்.உங்கிட்ட விலாவரியா சொல்லி புரிய வைக்க என்னால முடியாது.நீ பார்த்திட்டு சொல்லு அப்புறம் பேசலாம்....
நான் ஏன் பாக்க போறேன்..ஆ ன்னா ஊ ன்னா அதிகாரம் ங்கிற வார்த்தைய பயன்படுத்த ஆரம்பிச்சிடுங்கடா..பெண் வந்து எப்பவும் driven தான் அதிலதான் சந்தோசம் இதில எங்க வந்தது அதிகாரம்?
உன்னமாதிரி middle class முட்டாள்களாலதான் நம்ம சமூகம் உருப்படாம போவுது.
நெனச்சேன் இத சொல்வேன்னு...
எல்லா பெண்களும் driven தானே அப்புறம் ஏன் நம்ம சமூகத்தில இத்தன பாலியல் குற்றங்கள்.கணவனே கண்கண்ட தெய்வம்னு இருக்க வேண்டியதுதானே..
அப்ப வெறும் உடல் இச்சை மட்டும்தான் இந்த குற்றங்களுக்கான காரணம்னு சொல்றியா
ஆமா..எல்லாத்துக்கும் உடல்தான் காரணம். அதுபத்தின அரைகுறை புரிதல்தான் எல்லா வினைக்கான துவக்கங்களும்.
உடலைத் தாண்டி மனம்னு ஒண்ணு இருக்குடா அதுதான் காரணமா இருக்க முடியும்.நீ ரொம்ப குரூரமா சிந்திக்கிற..விட்டா காதல்னு ஒண்ணு கெடயவே கெடயாதும்ப...
ஆமா அப்படின்னு ஒண்ணு கெடயவே கெடயாது...
போடா எனக்கு டயர்ட் ஆ இருக்கு உன்கிட்ட பேசி
baskin robbins icecream பிடிக்குமா ஒனக்கு? இந்த நேரத்தில கட தொறந்திருக்கும் போலாமா?..
இல்ல நான் டீ போடுறேன்...
நான் உன்ன டீ போடவா
செருப்பு பிஞ்சிடும்..
அய்யோ பாவம்
லூசுடா நீ
யெஸ்...இந்த விடியற்காலை நல்லாருக்கு இல்ல..சன்னமான பனி..நீ வேற அழகா இருக்க..கொஞ்சூண்டு புத்திசாலியாவும் இருக்க..என்ன சரியா புரிஞ்சிக்க வேற செய்யுற..முக்கியமா என்ன சகிச்சிக்கிற..இதுக்குலாம் என்ன பண்ணலாம்..
அய்யா சாமி நீ ஒண்ணியுமே பண்ண வேணாம்..ஆளவிடு..உன்ன வூட்ல வுட்டது தப்பா போச்சி..பெரிசா ஆரம்பிக்கிறான்..டேய் நீ செண்டிமெண்டுக்கு விரோதி மாதிரி பேசி கிழிப்ப.. அப்புறம் அப்படியே மென்மையான கவுஞ்சனா மாறிடுவ எப்படிடா இதெல்லாம்?..
நீ என்னோட காதல் கவிதைகள் தொகுப்பு படிச்சியா..அதில ஒரு வரி வரும்.. நீரினடியில் பற்றுதலுக்காய் அலைந்துகொண்டிருக்கின்றன என் மிக மெல்லிய வேர்கள் ன்னு சொல்லப்போனா அதான் நான்..
ம்ம் ஆகாயத் தாமரை.. நல்ல படிமம் டா அது!..எங்கிருந்து பிடிக்கிற நீ இதெல்லாம்
உன்கிட்ட இருந்துதான்..உன் கண்கள்ள இருந்துதான்
யப்பா!! டேய் அடிச்சி வுட்றா...
:) எரும..
நீ அலுத்துகிட்டாலும் பரவால்ல..நான் இத சொல்லியே ஆகனும்..உனக்குள்ள ரொம்ப மென்மையான ஒரு கவிஞன் இருக்கான்டா.அவன பத்ரமா பாத்துக்கோ..உன் காதல் கவிதைகள் தொகுப்பு படிச்சி ரொம்ப சந்தோஷப்பட்டேன்..புள்ள வழிக்கு வந்திடுச்சின்னு நெனச்சேன்..நீ இன்னாடான்னா இப்பவும் இந்த வாய்கிழிய பேசுறத விடல..
நான் நெறய மாறிட்டேன்..நெட் பக்கம் வர்ரதில்ல..கண்டதையும் படிக்கிறதில்ல..போலி, நெஜம், உண்மைய தேடுறேன்னுலாம் ஒளறிக்கொட்றதில்ல..உனக்கு தெரியுமா இப்பலாம் நெறய சினிமா பாட்டு கேட்க ஆரம்பிச்சிட்டேன்..என்னோட பழைய கலெக்சன்லாம் தேடி தேடி ஓடவிட்டுட்டு இருக்கேன்..நைட்ல சத்தமா பாடுறேன்..நேத்து வைரமுத்துவ சிலாகிச்சிட்டு இருந்தேன் தெரியுமா...மலர்கையில் மலர்வாய் க்காக..எத்தன அழகான வரி அது..நான் அத்தன கவனமா கேட்டதில்ல அந்த பாட்ட..ஆசிப் தான் சொன்னார்...இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில மலரனும்யான்னு..அசந்திட்டேன்..எத்தன பெண் தன்மை அந்த வரில..உச்சம் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில நிகழ்வது அற்புதமான கலவியா இருக்க முடியும்.....
அடப்பாவி உனக்கு இப்பதான் இந்த வரிக்கான அர்த்தமே தெரியுமா?..எனக்குலாம் கேட்ட உடனே பிடிச்சது இந்த வரிதான்...எல்லாரையும் தட்டையா நிராகரிக்கடா நீ..நான் வேணா இப்ப அந்த பாட்ட பாடவா..ஸ்..நே...கிதனே...
ஆத்தா ஆளவிடு..நான் வேணா பாடுறேன்..உன் கொரல கேட்கிற தைரியம்லாம் எனக்கு இல்ல..
போடா வெண்ண..நான் சுமாரா பாடுவேன்..
அத நான் சொல்லனும்..
ஒரு கவித சொல்லேன்
எனக்கு சொல்ல வராதே
ஏன்?.. உனக்கு ஜோ வும்.. மொட்டைமாடியும் ..ஓல்ட்மங்கும் இருந்தாதான் வருமா..பெரிசா பண்ணிக்காதே..சொல்லு..
ம்ம்..சரி
கிளையிலிருந்து உதிர்ந்து
பசிய இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கின்றன
காவி நிறக் காம்புகள் கொண்ட
வெள்ள நிற பவழமல்லிப்பூக்கள்
அது உன் கண்களிலிருந்து துவங்கி
இதழ்களில் எப்போதும் தங்கியிருக்கும்
எனக்கான புன்னகையை
நினைவூட்டுகின்றது...
ம்ம்ம் சுமார்தான்.... இது என்ன பூ? பவழமல்லி?
அது ரொம்ப அழகான சின்ன்ஞ்சிறிய பூ நானும் சமீபத்திலதான் பார்த்தேன்..இந்த முறை ஊருக்குப் போயிருந்தப்போ அதிகாலைல ஊர விட்டுத் தள்ளி இருக்கும் ஒரு சிவன் கோவில்ல...அத்தன அழகு அந்த பூ ..பேர் தெரில...கதிர் ப்லாக்ல யாரோ சொல்லி இருந்தாங்க அந்த பூவுக்கு பேர் பவழமல்லின்னு..
சரி ..எனக்கு தூக்கம் வருது..நீ கெளம்பு
ம்ம்..விடிஞ்சிடுச்சி..வர்ரேன்..பை
குட் நைட் டா
குட்மார்னிங்க் :)
(முகமற்ற நேசத்தினுக்கு இந்த இருநூறாவது பதிவு....)
16 comments:
Me the first..!!???
இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் தல.. Its really great..
And Thanks.. Really thanks for blogging.. Please continue this and ROCK.. :)
அட்டகாசம்.. அமர்க்களம்..
உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசினது மாதிரி இருந்துது..
//கிளையிலிருந்து உதிர்ந்து
பசிய இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கின்றன
காவி நிறக் காம்புகள் கொண்ட
வெள்ள நிற பவழமல்லிப்பூக்கள்
அது உன் கண்களிலிருந்து துவங்கி
இதழ்களில் எப்போதும் தங்கியிருக்கும்
எனக்கான புன்னகையை
நினைவூட்டுகின்றது...//
கவிதை மிக அழகு..
//கிளையிலிருந்து உதிர்ந்து
பசிய இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கின்றன
காவி நிறக் காம்புகள் கொண்ட
வெள்ள நிற பவழமல்லிப்பூக்கள்
அது உன் கண்களிலிருந்து துவங்கி
இதழ்களில் எப்போதும் தங்கியிருக்கும்
எனக்கான புன்னகையை
நினைவூட்டுகின்றது...//
கவிதை மிக அழகு.
//நான் நெறய மாறிட்டேன்..நெட் பக்கம் வர்ரதில்ல..கண்டதையும் படிக்கிறதில்ல..போலி, நெஜம், உண்மைய தேடுறேன்னுலாம் ஒளறிக்கொட்றதில்ல..உனக்கு தெரியுமா இப்பலாம் நெறய சினிமா பாட்டு கேட்க ஆரம்பிச்சிட்டேன்..என்னோட பழைய கலெக்சன்லாம் தேடி தேடி ஓடவிட்டுட்டு இருக்கேன்..நைட்ல சத்தமா பாடுறேன்..நேத்து வைரமுத்துவ சிலாகிச்சிட்டு இருந்தேன் தெரியுமா...மலர்கையில் மலர்வாய் க்காக..எத்தன அழகான வரி அது..//
நெறைய மாறிட்டீங்களே..!!
http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா வரலாம், இது ஒரு பொழுது போக்குக்கான சினித் திரை.
//நைட்ல சத்தமா பாடுறேன்.//
தம்பி
கொறட்டை வுடுறதெல்லாம் பாட்டு கணக்குல வராதுடே :-))
ஹாய் அய்யனார்..
சமீபத்தில் கோபி கிருஷ்ணனின் உள்ளே இருந்து சில குரல்கள் புத்தகம் படித்தேன்.. அதற்கு முன்னர் One Flew Over the Cuckoo's Nest [1975] திரைப்படத்தையும் பார்த்தேன்.. இரண்டின் தளமும் ஒன்று என்பதால் அவற்றை பதிவாக எழுதி இருக்கிறேன்.. நேரம் இருக்கும் போது படிக்கவும்..
[One Flew Over the Cuckoo's Nest [1975] (ம) உள்ளேயிருந்து சில குரல்கள்...]
http://msaravanakumar.blogspot.com/2008/11/one-flew-over-cuckoos-nest-1975.html
மிக்க நன்றி சரவணா..
அண்ணாச்சி..நாங்க கொறட்ட விட்டாக்கூடா சங்கீதமமாக்கும் :0
முகமற்ற நேசம் அருமையா இருக்கு
நல்ல பதிவு அய்யனார்!
நல்ல பதிவு அய்ஸ்.
மலர்கையில் மலர்வாய் இதுக்கு இவ்ளவு அர்த்தம் இருக்கா.
உங்கள் அருகில் இருந்து கேட்பது போல் இருந்தது உரையாடல்.
அதனாலேயே சில இடங்களில் வேறு பலவற்றையும் எதிர்பார்த்தேன்.
(ஹி ஹி)
200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
அடிக்கடி உங்கள் உரையாடல் தொடர வேண்டுமென்பது என் அவா!
இரு நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அய்யனார்....
மின்னல்,உமாசக்தி,கார்த்திக்,வால்பையன் மற்றும் ரெளத்ரன் பகிர்வுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
Post a Comment