Wednesday, November 12, 2008
ஆசிப்பும் உலகத் திரைப்படங்களும்
The Diving bell and the butterfly சற்றும் எதிர்பார்க்காமல் /தேடாமல் பார்க்கக் கிடைத்தது .முதல் இருபது நிமிடங்கள் என்ன நிகழ்கிறது என்பதை சரியாய் புரிந்து கொள்ளமுடியவில்லை.உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து போன ஒருவனின் ஒரே ஒரு விழியினூடாய் மொத்த திரைப்படமும் நகர்கிறது.விழியின் முன் வந்து போகும் செவிலிகள், மருத்துவர்கள், கூரை, என படம் அலைந்தபடி இருக்கிறது.மொத்த படத்தையும் இப்படித்தான் பார்க்கநேரிடுமோ என்கிற வியப்பும் வரத்தவறவில்லை.சன்னாசியின் பக்கத்தில் இத்திரைப்படம் குறித்த சில குறிப்புகளும் உதவியாய் இருந்தன.ஒரு முறை விழியசைத்தால் ஆம் இரண்டு முறை விழியசைத்தால் இல்லை இப்புரிதல்களோடு விபத்துக்குள்ளானவர் தான் எழுத ஒத்துக்கொண்ட புத்தகத்தை எழுதி முடிக்கிறார்.படம் பார்த்து முடித்த சில நாட்களுக்கு பிறகு சுஜாதாவின் கற்றதும் பெற்றதுமை கழிவறையில் மேய்ந்துகொண்டிருந்தபோது இத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அறிதல் முறை குறித்து சில குறிப்புகள் எழுதி இருந்ததையும் படிக்க முடிந்தது.சிந்திக்கும் போது மூளையில் ஏற்படும் மெதுவான நுண் மின் அலைகலை (Slow critical potential)ஆம்/இல்லை வகை கேள்விகளுக்கு விடையாக கட்டுப்படுத்தமுடியுமாம்.யுத்தத்தில் அத்தனை இயக்கங்களையும் இழந்த போர்வீரர் ஒரு வரை பேசவைத்த குறிப்பையும் தந்திருந்தார்.
சமீபத்தில் எத்தனையாவது முறையாகவோ ஆசிப்பிற்காக desperado வை பார்க்க நேரிட்டது.Robert rodriguz ன் குருதி தெறிக்கும் அட்டகாசமான ஆரம்பகாலப் படங்கள் தமிழ் மசாலா படங்களுக்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை.ஆனாலும் மிக விறுவிறுப்பான காட்சியாக்கங்களில் பார்வையாளனை திரும்ப திரும்ப படத்தை பார்க்கவைக்கும் யுக்தி இவருக்குத் தெரிந்திருக்கிறது.El mariachi யின் சம தள கதை சொல்லலை ஹாலிவுட் மிகை வண்ணங்களைப் பூசி Desperado வாக கொடுத்திருப்பார்.ரசனை அடிப்படையில் எனக்கு el mariachi தான் பிடிந்திருந்தது என்றாலும் salma hayek கிற்காக desperado வை அதிக முறை பார்த்தேன்.இவர் திடீரென தடம் மாறி குழந்தைகளுக்கான படங்களை எடுக்கத் துவங்கியது குறுநகையை வரவழைத்தது.ஆனால் spy kids ன் இரண்டு பாகங்களையும் அக்காவின் குழந்தைகளோடு பார்க்கநேரிட்டதால் அப்படங்களையும் என்னால் ரசிக்க முடிந்தது.குழந்தைகளுடன் குழந்தைகளுக்கான சாகச படங்களை பார்க்க நேரிடுவது அலாதியானது.திரும்பவும் ரத்தம் தெறிக்கும் sinsity யை இவர் படமாக்கியபோது அதில் மிக குரூரமான காட்சிகளை comicical ஆக மாற்றியிருப்பார் இது இன்னொரு வகையில் காட்சியமைப்பின் வீர்யத்தை குறைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.2010 மற்றும் 2011 களில் sinsity யின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்.
The Dreamers திரைப்படத்தை பார்த்துவிட்டு ஆசிப் இசா இசா என புலம்பிக்கொண்டிருந்தார்.hilary duff படங்கள் பார்த்து சந்தோஷப்படும் மனிதரை இன்னும் சிறிது வதைக்க ஆசைப்பட்டு pasolini யின் Decameron யையும் மறுபடியும் பார்த்தேன்.முதல் அரை மணி நேரத்திற்கே மனிதரின் விழி பிதுங்கிவிட்டது.திரையின் மூலம் புனிதங்களை உடைத்தவர்களில் pasolini முக்கியமானவர்.கி.ரா மற்றும் கழனியூரான் தொகுத்திருந்த மறைவாய் சொன்ன கதைகள் மற்றும் கி,ராவின் நாட்டுப்புற பாலியல் கதைகளைப்போல இத்தாலியின் நாட்டுப்புற பாலியல் கதைகளை படமாக்கியிருப்பார்.இரண்டாவது கதையில் பெருக்கெடுத்து ஓடும் convent Nun களின் காமம் திருச்சபைகளின் புனிதங்களை உடைத்தது.இவரின் Oedipus Rex படம் கைவசமில்லாததால் மனிதர் தப்பித்தார்.
உச்ச வதையாக Master of Erotica என அழைக்கப்படும் Tinto Brass ன் P.O.Box Tinto Brass திரைப்படத்தைப் பார்த்தோம்.மிக அதிக பட்ச கிளர்ச்சிகளைத் தரும் படம். இத்திரைப்படம் மருத்துவருக்கு பெண்கள் அனுப்பும் கடிதங்கள், புகைப்படங்கள், வீடியோ டேப் களிலிருந்து விரிகிறது.திரை முழுக்க வரும் பெண்கள் மிக அதீதமான கவர்ச்சியுடையவர்கள்.உடலை மிக அதிக பட்சமாய் ஆராதிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் கிளர்ச்சியினைத் தூண்டுபவை.உடல் ...உடல் ...உடல்... திரை முழுக்க உடலாயும், துரோகங்களாயும், நிறைவேறாமையும் பொங்கிப் பிரவகிக்கும் படமிது.இத்திரைப்படத்தை முழுமையாய் பார்த்த புண்ணியவான்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது :)
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
11 comments:
//இத்திரைப்படத்தை முழுமையாய் பார்த்த புண்ணியவான்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது :)//
நல்லவேளை நான் அந்த புண்ணியம் செய்திருக்கவில்லை :))
Have you seen Tinto Brass' movie Caligula - uncut version?
அது என்ன கேள்வி என்று தெரிந்து கொள்வதற்க்காக அந்த படத்தை நெட்டில் தேடிக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் சொல்லியதுபோல் 'சன்னாசி'யின் பக்கங்களில் படித்திருக்கிறேன். படம் பார்க்கவில்லை இன்னும். சகலமும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஏராளமாக கண் சிமிட்டி, தொடர்பு கொள்வதற்கு எது உந்துதலாக இருக்கும். சுய பச்சாதாபத்தில் மூழ்க மாட்டார்களா? எப்படியாவது வெளியுலகுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்னும் மானுடத்தின் துடிப்பு என்று கொள்ளலாமோ. (மொக்கை கவிதை எழுதி, குறைந்தது பத்து பின்னூட்டம் எதிர்பார்க்கும் என்னால் முற்றிலும் புரிந்துக் கொள்ள முடிகிறது இந்தத் துடிப்பை).
P.O. Box Tinto Brass சிறிதும் பார்க்காத நான் பாவிகளின் உலகுக்குச் செல்லப் போகிறேனா! புகைப்படங்களுடன் வரும் உங்கள் சினிமா பதிவுகளை அலுவலகத்தில் திறக்க அச்சமாக உள்ளது. வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் :))
அனுஜன்யா
// இத்திரைப்படத்தை முழுமையாய் பார்த்த புண்ணியவான்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது //
ஒரு வாரம் பொருங்க உங்க கேள்விக்கு பதில் சொல்ல.
புண்ணியம் வேணுமா சென்ஷி :)
இல்லை அனானி..
தேடுங்கள் வால்பையன்
அனுஜன்யா
சிக்கலுக்கு வருத்தம்:)
பார்த்திட்டு சொல்லுங்க கார்த்திக்
அய்யனார் , butterfly திரைப்படம் locked in syndrome என்று கூறப்படும் முஉளை சார்ந்த நோய்.கழுத்துக்கு மேல் உள்ள மூளையின் பாகத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடும் போது ஏற்ப்படும் தாக்குதலால் ,பாதிக்கப்பட்டவருக்கு சுய நினைவு நன்றாக இருக்கும்.எனக்குத்தெரிந்து புத்தகம் எழுதி ஸிக்கிரமே இறந்துவிட்டார் .he cannot move any parts of his body.
அய்யனார் - டின்ட்டோ பிராஸின் பெயரை Tinto Br'ass' என்று படியுங்கள்!! பெயருக்கு ஏற்றாற்போல, பெரும் புட்டரசிகர்.
-சன்னாசி
எழுதாமல் விட்டது - டின்ட்டோ பிராஸின் சில படங்களில் பாத்திரங்களின் உணர்வைக் காட்ட புட்டங்களை க்ளோஸ்-அப்பில் வைத்திருப்பார் (உதாரணத்துக்கு, பெண் அழும்போது க்ளோஸ் அப்பில் முகத்தைக் காண்பிக்காமல் நிர்வாண புட்டத்தைக் காண்பிப்பது); அவரது சில சராசரிப் படங்களை தாண்டி, இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது பெரும் சுவாரஸ்யம்!!
-சன்னாசி
சீதா
மேலதிக தகவல்களுக்கு நன்றி..
சன்னாசி
Tinto Brass ன் பத்து படங்களை சமீபத்தில் வாங்கினேன்..monella (இதில் கதாசிரியர்)மற்றும் All Ladies Do it என்கிற இரு படங்களையும் பார்த்து முடித்த பின்பு உங்களின் பகிர்வைத்தான் நினைத்துக்கொண்டேன்..ஆனால் சில காட்சிகள் சலிப்பாகவிருக்கின்றன என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது..மிதிவண்டியில் புட்டம் காண்பித்து சிறகடிக்கும் அந்த பெண் தோன்றும் காட்சிகளனைத்தும் பரவசத்தின் உச்சம் :)
ஐயா சாமி, அலுவலகத்துல உங்கப் பதிவ படிக்கிற மாதிரி படங்கள் போடுங்க. எங்க டப்பா டான்ஸ் ஆடிரும் போல இருக்கே..
Post a Comment