Friday, September 26, 2008

தர்ஷியும் பேரரசுக்களும்


'ஆடுங்கடா என்னச் சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி'

இடுப்பில் ஒரு கையை வைத்தபடியும்
ஒரு காலை தரையில் லேசாய் உதைத்தபடியும்
தலையை இடமும் வலமுமாய்
அசைத்தபடியுமாய்
என் முன்னிருந்தபடி பாடிக்கொண்டிருக்கிறாள் தர்ஷி
இரண்டாவது முறையும் அதே வரிகளை
சத்தமாய் பாடுகிறாள்
இந்த முறை அய்யனாருவில்
சிறிது அழுத்தம் சேர்த்து
லேசாய் தலை சாய்த்துச் சிரிக்கிறாள்
வாரியெடுத்துக்கொள்கிறேன்
வயிற்றிலிருந்து பீறிட்டெழும் அவளது சிரிப்பில்
தளும்புகிறது வீட்டின் கூடம்
பேரரசுக்களையும் அக்கணத்தில்
நேசித்துவிடலாம் போலத்தானிருக்கிறது...

39 comments:

வால்பையன் said...

குழந்தைகள் திட்டினால் கூட அதுவும் ஒரு அழகு தானே

ரசித்தேன்

chandru / RVC said...

என்ன சொல்றீங்க?இத்தன நாள் பேரரசை நீங்க ரசிச்சதில்லயா? :(
ஊருக்குப் போயாச்சா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாருக்கு ..:)

ஆடுமாடு said...

ம்ம்ம்!

anujanya said...

வாங்க ஐஸ். ரொம்ப நாளா எங்க போய்டீங்க! நம்ம பெயர் பாட்டில் வந்து, அதக் குழந்தைகள் தெரிந்துகொண்டு பாடும்போது, நமக்குள் மறைத்துவைக்கப்பட்ட குழந்தையும் வெளிவரும். அத்தருணங்களில் பேரரசுவும் நேசிக்கப்படுவார்.

தர்ஷி பற்றி தெரியாது. பதிவுலகில் சென்ஷீ இப்படி ஆட எல்லாத் தகுதியும் உள்ளவர்.

அனுஜன்யா

லக்கிலுக் said...

பேரரசுன்னா அவ்வளவு இளப்பமா? :-(

அவர் எனக்கு பிடித்த இயக்குனர்.

Subash said...

ஆஹா!!111

கார்க்கிபவா said...

ரொம்ப நாள் ஆச்சு சகா.. எப்படி இருக்கிங்க?

கார்க்கிபவா said...

ரொம்ப நாள் ஆச்சு சகா.. எப்படி இருக்கிங்க?

Ayyanar Viswanath said...

நன்றி வால்பையன்

சேகர் ஊர்லதான் இருக்கேன்

முத்துலட்சுமி நன்றி

ஆடுமாடுஜி !! :)

அனுஜன்யா ஊர்பக்கம் வந்திருக்கேன்..ஆமாமா சென்ஷி நல்லா ஆடுவார் :D

வளர்மதி said...

//பேரரசுக்களையும் அக்கணத்தில்
நேசித்துவிடலாம் போலத்தானிருக்கிறது...//

பரவாயில்லையே ... உங்கள் கவிதையிலும் அரசியல் கூருணர்வு வந்திருக்கிறதே :)

“அரசியல் தெரியாத அரைவேக்காடு” அப்படீன்னு உங்கள சொல்லியிருந்தாங்களே அது ஞாபகம் வந்துச்சு சாமி ;)

Ayyanar Viswanath said...

லக்கி அவரோட அடுத்த டார்கெட் எங்க ஊராமே :)

நன்றி சுபாஷ்

நல்லாருக்கேன் கார்க்கி..இனிமே தொடர்ச்சியா எழுத வேண்டியதுதான்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:)

தமிழன்-கறுப்பி... said...

எப்படி இருக்கிறீர்கள் அண்ணன்...

தமிழன்-கறுப்பி... said...

எழுதுங்க தல உங்களோட நிறைய பேச இருக்கு...

பிச்சைப்பாத்திரம் said...

நல்லா இருந்தது. :-) அப்போ விஜய்யை நேசிக்க முடியல்லையா?

கோபிநாத் said...

அய்ஸ்...ரொம்ப அழகாக இருக்கு கவிதை ;)

Ayyanar Viswanath said...

வளர்
அதென்ன அரசியல் கூருணர்வு :)
வலை நண்பர் ஒருமுற சொன்னார் வேகாம இருந்தாதான் அய்யனார் பிரச்சின.. பாதி வெந்திருந்தா சந்தோசம்தான்னு அதான் உடனே நினைவுக்கு வந்தது..

பேரரசுக்களையே மன்னிக்கும் மனநிலை அப்படிங்கிறதால சல்தா ஹை தான் :)

நன்றி வளர்..

Ayyanar Viswanath said...

நன்றி சுந்தர்

தமிழன் நலம்..பேசிடுவோம் :)

சுரேஷ்
பேரரசுக்கள் னு பன்மைல சொல்லியிருப்பதால விஜயையும் சேர்த்துக்க வேண்டியதுதான் :)

Ayyanar Viswanath said...

நன்றி கோபி

பரத் said...

//பேரரசுக்கள் னு பன்மைல சொல்லியிருப்பதால விஜயையும் சேர்த்துக்க வேண்டியதுதான் //

:))

நல்லா இருக்கு கவிதை !

லேகா said...

நல்லா இருக்கு அய்யனார் :-))

KARTHIK said...

// பேரரசுக்களையும் அக்கணத்தில்
நேசித்துவிடலாம் போலத்தானிருக்கிறது...//

அருமை :-))

சென்ஷி said...

கவிதை கலக்கல் அய்யனார் அண்ணே :)

வூட்ல என்னண்ணே விசேஷம் :)

சென்ஷி said...

//அனுஜன்யா said...

தர்ஷி பற்றி தெரியாது. பதிவுலகில் சென்ஷீ இப்படி ஆட எல்லாத் தகுதியும் உள்ளவர்.//

கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அண்ணா கவுக்கறியே...

//அய்யனார் said...

ஆமாமா சென்ஷி நல்லா ஆடுவார் :D//

அவ்வ்வ்வ்வ்வ்வ் :(

MSK / Saravana said...

வாங்க அய்யனார்..

வருக வருக..

இந்த மாதத்தில் இதுவரை இரண்டே பதிவுகள்.. இந்த வருடத்தில் இதுவரை 49 பதிவுகள்.. ஆனால் கடந்த வருடத்தில் 137 பதிவுகள்.. பதிவின் எண்ணிக்கையை முக்கியமில்லை என்று சொல்லாதீர்கள்.. நிச்சயம் எனக்கு முக்கியம்.

கடந்த ஒரு மாதத்தில் உங்களுடைய மொத்த 185 பதிவுகளையும் படித்தேன்.. ஒரு மாசம் ஆச்சி.. அத்தனையும் படிக்கிறதுக்கு.. வேலைப்பளு அதிகம் இருந்த நேரத்திலும் நேரம் ஒதுக்கி படித்தேன்.. அல்லது வேலையை ஒதுக்கி விட்டும் படித்தேன்.. :)

உங்களின் முதல் பதிவிலிருந்து [உயிர்த்திருத்தல்] படிக்க ஆரம்பித்தேன்.. உங்கள் எழுத்துகளின் பரிணாமங்களை புரிந்து கொள்ள..

இதற்கு முன் நான் இவ்வளவு விஷயங்களையோ அல்லது இந்த மாதிரியான விஷயங்களையோ படித்ததில்லை.. புனைவே இப்போது தான் அறிமுகமெனக்கு.. புனைவு என்ற ஒன்றையே புரிந்து அல்லது புரிந்த மாதிரி அல்லது புரிந்து கொள்ள முயற்சித்து படித்ததும் இப்போதுதான்..
கவிதை, புனைவு, மேஜிகல் ரியலிசம், புத்தகங்கள்.. கலக்கீடீங்க..

எழுத்து வசீகரமானது என்று நம்பி இருந்தேன்.. ஆனால் எழுத்து ஒரு போதை என்று காட்டிவிட்டீர்கள்.. என்ன ஒரு மொழி வளமை உமக்கு.. மிக சிறப்பாக எழுதி இருந்தீர்கள். எழுதுகிறீர்கள்.. சில பல தளங்களை அறிமுகம் செய்து இருந்தீர்கள்.. சில நல்ல எழுத்தாளர்களையும், புத்தகங்களையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்து வைத்ததற்கும் நன்றிகள் பல.. "இடைவெளி" புத்தகத்தின் மின் நூல் அனுப்பியதற்கு உட்பட.

இன்னும் சொல்ல போனால், சினிமாத்தனமாக சொல்வதென்றால்.. "கண்ணை தொரந்துடீங்க".. குறைந்தபட்சம் நான் விழித்து கொள்ள, உதவி செய்து இருக்கிறீர்கள்.. இன்னும் பழைய கால எழுத்துக்களை நான் எழுதுவதாக என்னை உணர செய்தமைக்கு நன்றி..

இன்னும் நிறைய பதிவர்களின் மொத்த பதிவுகளையும் இனிமேல் படிக்க போகிறேன்.. நகுலன் முதல் ரமேஷ் பிரேம் கோபி கிருஷ்ணன் புத்தகங்களை படிக்க போகிறேன்..

[அப்பாடா.. சொல்ல வந்தத ஓரளவுக்கு சொல்லிட்டேன்.. ]

இப்போது ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து நிறைய எழுதுங்கள்..நிறைய நிறைய எழுதுங்கள்.. இன்னும் நிறைய விஷயங்களை அறிமுகம் செய்யுங்கள்.. பரிட்சித்து பாருங்கள்..

ஓகே..
இப்போது விடை பெறுகிறேன்.. சங்கமித்திரையின் நினைவுகளோடு.. ஹேமாவின் நினைவுகளோடு.. கங்காவின் நினைவுகளோடு.. சாராவின் நினைவுகளோடு..

யோவ்.. எழுதுயா நெறைய.. இவ்ளோ பெரிய பின்னூட்டம் போட்டிருக்கேன்ல

[டிஸ்கி: இவ்ளோ பெரிய பின்னூட்டத்திற்கு பதில், அண்ணன் அனுஜன்யா மாதிரி பகிரங்க பின்னூட்டம் என்று ஒரு பதிவாவே போட்டிருக்கலாம்..]

MSK / Saravana said...

இந்த கவிதை நல்லா இருக்கு..
:)

MSK / Saravana said...

தர்ஷி அழகு..

//வயிற்றிலிருந்து பீறிட்டெழும் அவளது சிரிப்பில்
தளும்புகிறது வீட்டின் கூடம்//

MSK / Saravana said...

முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்திட்டேன்..

உம்முடைய ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டமிட்ட அத்துணை பேருக்கும் என் மிக்க நன்றிகள்.. மிக மிக்க நன்றிகள்..

பல தடவை பதிவை புரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் மிக உதவியாய் இருந்தது அப்பின்னூட்டங்கள்..

உண்மைத்தமிழன் said...

அரசியல், சார்பு, ஒரு நிலை, இரண்டாம் நிலை, பகடி, பகட்டு, பின் நவீனம், மேட்டுக்குடி, குடி, போதை, வலை, எழுத்து, புகழ், பொருள், காமம், வீம்பு, ஈகோ, காதல், கல்யாணம் - இதுவெல்லாம் தாண்டியும் மனதைக் கொல்லும்... பிஞ்சுகளின் அன்பும், பாசமும்..

நிறைவடைந்த உங்கள் மனதை நினைத்தால் பலர் நெஞ்சுக்கு நிம்மதி..

Ayyanar Viswanath said...

நன்றி பரத்

நன்றி லேகா

நலம் சென்ஷி ..இஃப்தார் விருந்துகளா போகுதா :)

Ayyanar Viswanath said...

சரவணக் குமார்
விரிவான பகிர்தல்களுக்கு மிக்க நன்றி..மெல்லிய பயமும் கூச்சமும் இழையோட உங்களின் நீண்ட பின்னூட்டத்தை படித்தேன் எதிர்பார்ப்புகளற்ற இப்பிரியங்களை என்ன செய்வதென்று தெரியவில்லை நன்றி என்கிற ஒற்றைச் சொல்லை மட்டும் போதாமைகளின் குறைகளோடு சொல்ல வேண்டியிருக்கிறது...

Ayyanar Viswanath said...

உண்மைத் தமிழன்
நன்றி :)

MSK / Saravana said...

நன்றி பத்தாது.. நெறைய பதிவு வேண்டும்..

"டேய்.. எனக்கு வேற வேலை வெட்டியே இல்லைன்னு நீ நெனைச்சிட்டியா" என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. :)

thamizhparavai said...

அப்பாடா... ரொம்ப நாள் கழிச்சு தல புரியுற மாதிரி ஒண்ணு எழுதி இருக்காரு...தலைப்பிலேயே 'பேரரசு'வைப் படிச்சுட்டுதான உள்ள வந்தோம்.
நல்லா இருந்தது அய்யனார்.சந்தோஷம்...

த.அரவிந்தன் said...

கவிதை அருமை. ஆனால் பேரரசுக்கு இது பெரிய அங்கீகாரம்!

Ayyanar Viswanath said...

எழுதிடலாம் சரவணக்குமார்

நன்றி தமிழ்பறவை

நன்றி அரவிந்தன்

Anonymous said...

Fantastic poem!

Anonymous said...

Anujanya is right, vaalpaiyan is not!

andha kuzhandhai thittave illaiye? chellamaa kindal pannirukku!

Featured Post

test

 test