Friday, July 18, 2008
சில திரைப்படக் கவிதைகள்:அவளைப்பற்றியாதவுமிருக்கலாம்..
மீன்கள் பாதங்களில் துழாவிக் கொண்டிருந்த
மாலையில் (சில்ரன் ஆஃப் ஹெவனின் கடைசிக் காட்சியை நினைத்துக்கொள்ளுங்கள்..)
அவளென் முதுகுப்பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
பாதங்களை விடுவிக்காது தலைதிருப்பிப் பார்த்ததில்
அவளின் மிகப்பெரிய கண்கள் இன்னும் வீங்கிப் பெருத்திருந்தன.
தன் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானங்களை
எடுக்கும் தருணம் வந்துவிட்டதென்றும்
தனியாய் பேச வேண்டியுமாய் விழைந்தாள்.
நான் தலையை திருப்பிக்கொண்டு
மீண்டும் மீன்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.
சற்று நேரம் கழித்து
எதுவும் பேசாமல் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
என்னைத் துழாவிக் கொண்டிருந்த மீன்கள்
அவளின் பக்கமாய் போகவாரம்பித்தன...
******************************************
அருவியில் குதித்து செத்துப்போவதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.
பென்கிங்ஸ்லியைப்போல் மூச்சடைத்து இறப்பதையே அவள் விரும்பினாள்.
உயரத்திற்கும் தரைக்குமான இடைவெளியில்
சகலத்தையும் சில்லிடவைக்கும்
அபூர்வ நொடியினை உணர்ந்த பின்,
செத்துப்போவதின் அபரிதத்தை வலியுறுத்தியபடி இருந்தேன்.
அவள் உடல் சிதறுவதின் பயங்கரத்தை நினைத்து முகம் சுழித்தாள்.
"இறப்பு கோரமாய் இருக்கக்கூடாது"
(அவளெப்போதும் இப்படித்தான் குரூரங்களை விரும்புவதில்லை பர்ஃபியூம் பரிந்துரைத்ததினுக்காய் மூன்று நாட்கள் பேசாமலிருந்தாள்)
குரூரங்களை அழகியலாக்குவதும்
அழகியலை குரூரங்களாக்குவதும்
சூழலின் தேவை என்றேன்.
எனக்கவசியமில்லை என பதில் வந்தது,
மேலும் அழகு அழகில்லை எனவும்
குரூரம் குரூரம் இல்லை எனவும்
பிரசங்கிக்கத் தொடங்கினேன்.
அவள் தன் செருப்புகளை பொருத்திக்கொண்டாள்
விடைபெறும் நொடிக்கு முன்
மாலைத் தேநீருக்கு வரவேண்டாமென
சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
******************************************
வெப்பம் மிகுந்த இரவுகளில் நடைக்குப் போவதில்லை
இரவில் வியர்த்து வழிவது எனக்குப் பிடிக்காது.
இருப்பினும் கார்னீஷ் ஓரமாய் சந்திப்பதெனச் சொல்லியிருந்தேன்.
ஜெயமோகன்களைப் படிக்காதேவெனத் திட்டி
கோபியைக் கொடுத்திருந்தேன்.
வந்தவுடன் பிடிக்கவில்லையெனத் திருப்பிக்கொடுத்தாள்
ஏன் என்றதற்கு முனகலாய் பதில் வந்தது
"அசிங்கமா இருக்கு"
எது அசிங்கமென்றதெற்கு பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டாள்.
நான் பாலகுமாரனை கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்.
image:http://alethakuschan.blogspot.com/2007_03_01_archive.html&h=354&w=400&sz=40&hl=en&start=29&tbnid=bQe_g4oGLNp1WM:&tbnh=110&tbnw=124&prev=/images%3Fq%3Dfishes%2Bin%2Bpond%26start%3D18%26gbv%3D2%26ndsp%3D18%26hl%3Den%26sa%3DN
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
21 comments:
முதலிரண்டும் அருமை அய்யனார். மூன்றாவது, பைத்தியக்காரன் சொல்வதுபோல், செம்ம நக்கல். விட்டு விடுங்களேன்.
அனுஜன்யா
//நான் பாலகுமாரனை கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்.
////
இப்பல்லாம் இங்க கமெண்டு போடவே பயம்மாயிருக்குது..
நான் ஏதாவது எழுதப்போக அது உங்க பதிவ ஈரமாக்கி நனையவைச்சு நீர்த்துப்போய் கரையவச்சுட்டா என்ன செய்யறதுங்கற பயம்தான்.... :((
ஆனாலும் உங்க கொலவெறி பிடிச்ச எளக்கியவாசகிகள்கிட்டேந்து தப்பிக்க கவிதையப்பத்தி எதுவுமே சொல்லாம போறதுதான் எனக்கு நல்லது... :))
குசும்பா... எங்கப்பா போயிட்ட? சீக்கிரமா வந்து இந்தக் கவிதைகளுக்கு விளக்கவுரை சொல்லுப்பா...
:)
வழக்கம் போல.....! ;)
ஏன் ரமணி சந்திரனை விட்டாச்சா????
அனுஜன்யா : நன்றி
பாண்டி : ஏதோ சொல்ல வந்திக்க போல :)
சென்ஷி
அந்த ஒரு வாசகி வளர்ந்த எலக்கியவாதியாவுமிருக்கலாம் என பலமான சந்தேகமிருக்கிறது..:)
பைத்தியக்காரன் :)
கோபி :))
நந்தா ரமணிசந்திரன்லாம் உன்னோட ஏரியாவாச்சே அதான் விட்டாச்சி:))
\\உயரத்திற்கும் தரைக்குமான இடைவெளியில்
சகலத்தையும் சில்லிடவைக்கும்
அபூர்வ நொடியினை உணர்ந்த பின்\\
நல்லாருக்குங்க...
///நந்தா said...
ஏன் ரமணி சந்திரனை விட்டாச்சா????
//
நந்தாவுக்குதான் ரமணிச்சந்திரன்னாலே தனிபாசம்.
///பாண்டி : ஏதோ சொல்ல வந்திக்க போல :)/////
இல்ல அய்யனார் முத்தம்கொடுத்ததுக்கு அப்புறம் நடந்ததை நினைச்சு பார்த்தேன். வார்த்தை வெளிவராமல் அடைப்புக் குறிக்குள்ளே முடங்கிப்போச்சு!
அருமையான கவிதைகள் அய்யனார்.!
(தலைப்பு, "..: அவளைப்பற்றியதாகவுமிருக்கலாம்" என நினைக்கிறேன். சரியா?)
"தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவதில் வாசகர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்!"
மானமிகு நறுமுகய்,
சுதந்திர எழுத்துக்களை கொண்டாடும்தமிழ்மானம்
"It is not about Freedom of Expression but it is all about Expression of Freedom!"
"கடைசி பத்தி" - அப்போ இலக்கியமும், இலக்கியவாதிகள்கும் தனிப்பட்ட உபயோகத்திற்குத்தானா அய்யனார்.... :(
நன்றி:ரெளத்ரன்
பாண்டி :)
நன்றி : தாமிரா..
நன்றி : நறுமுகை
கிருத்திகா : அவனோட மனநிலை அப்படி இருந்ததுங்க அப்படித்தான்னு இல்லை :)
அற்புதமான வரிகள், ஆழ்ந்த கருத்துக்கள், அவையினரை மயங்கவைத்த கவிதை. இப்படி பலவும் சொல்லிப்பாராட்டலாம்.
முதல் கவிதை அற்புதம். என்னால் எனது மௌனத்தைத்தவிர ஏதும் தர இயலவில்லை.
இரண்டாம் கவிதை என் வாழ்கையை நினைவூட்டுவதாக இருக்கிறது. சொல்லிற்பயனில்லை.
மூன்றாவதும் அப்படியே.
அவளைப்பற்றிய உங்கள் கவிதைகள் மிக நன்று.
//நான் பாலகுமாரனை கொடுத்திருந்தால்
இன்றிவளை முத்தமிட்டிருக்கலாமென
நினைத்துக்கொண்டேன்.//
பாலகுமாரனின் மெர்குரி பூக்களே நான் படித்த முதலும் கடைசியுமான அவரது நாவல். இந்த கூற்று உண்மைதான்..
ரமணிச்சந்திரன் பற்றி கூட பேச ஆள் இருக்கின்றார்களா?
அழகிய கவிதை அனுபவித்து சொல்லப்பட்டுள்ளது அய்யனார்...இலக்கிய காதலா??!!
எப்படிங்க....!!!?? :)
ஆமா இத்தனை படங்களை எப்படி பார்த்து முடிக்கிறீர்கள்...?
அய்யனார்.."The last tango in paris" பார்த்து வீட்டீர்களா?
நல்லா இருக்கு..
ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு.. அவளைப்பற்றியாதவுமிருக்கலாம்..
நன்றி : பொற்கொடி
நன்றி : லேகா
நிறைய நேரம் கிடைக்குது தமிழன்
பார்த்திட்டேன் ரெளத்ரன் எனக்கு மிகப்பிடித்தமான படங்களில் ஒன்று
நன்றி சரவணக்குமார்
Post a Comment