Saturday, July 12, 2008

என் மீது பெய்யுங்களேன்...:



இப்போதைய மனநிலையில் ரத்தம் பட்டுத் தெறிக்கும்படி ஒரு கொலை செய்ய வேண்டும் போலிருக்கிறது.யோசித்துப் பாருங்களேன்..அடர் சிவப்பில்.... கொழ கொழவென... ரத்தம்..இரத்தம்..ரத்தம்....'இ' போட்டால் ரத்தத்தின் வீர்யம் குறைகிறதுதானே..அதனால் ரத்தமென்றே அழைக்கலாம்..ஏன்? யாரை? எதற்கு? என்றெல்லாம் வேண்டாம்.இப்போதைக்கு கொலை செய்ய வேண்டும் அவ்வளவுதான்.இதனால் இது என்பது எத்தனை அருவெருப்பு தெரியு்மா?மேலும் காரண காரியங்கள், எல்லாவற்றின் பின்னாலும் பருத்திருக்கும், துருத்தியிருக்கும், ஏதோ ஒன்று எனக்கு வெறுப்பூட்டுவதாய் இருக்கின்றது.எந்த தனிப்பட்ட ஒன்றும் இல்லாமல் ஒரு கொலை செய்யவேண்டும். ரத்த வாசனை... ரத்த நிறம்... ரத்தக் கொழ கொழப்பு... நினைத்தாவே சிலிர்க்கிறதுதானே!...A Clockwork Orange படம் பார்த்திருக்கி்றீர்களா? அந்த பூனைக் கண்ணனாய் என்னை நினைத்துக் கொள்ளுங்களேன்...

எனக்கு உறவுகள் மீது நம்பிக்கையில்லை..அன்பின் மீது நம்பிக்கையில்லை.. எல்லாவற்றையும் குரூரமாய் சிந்திக்கிறேன்..மிகத் தட்டையான, குறுகிய, விசாலமில்லாத, பார்வை கொண்டவன் என்பது எல்லாரின் மதிப்பீடுகளாக இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.'நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல' (இதை தமிழ் சினிமா நடிகர் பிரசாந்த் சொல்வது போல ஒரு accent ல் புரிந்துகொள்ளவும்) உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லட்டுமா நான் அன்பிற்காக ஏங்கிச் சாகிறேன்.உண்மைக்காக அல்லது அதைப் போன்ற ஒன்றினுக்காக, போலித்தனமில்லாத சொற்களுக்காக, தினம் தினம் செத்து மடிகிறேன்.அய்யோஓஓஓஓஒ என்னிடம் பொய் சொல்லாதீர்களெனக் கதறுகிறேன். என்னால் போலித்தனங்களை, பொய்களை, நம்பிக்கைத் துரோகங்களை, சம்யோசித ஏமாற்றுதல்களை, பயன்படுத்திக் கொள்ளுதலை, தாங்க முடியவில்லை.பல்வேறு இருண்ட மூலைகளிலிருந்து ஏகப்பட்ட கைகள் நீளுகின்றன. யாசகித்தும், பறித்துமாய் என்னை எதுவுமில்லாதவனாக்குவதை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.எனக்கு தோற்பதின் இனிமை உகந்ததாய் இருக்கிறது அதே சமயத்தில் தொடர்ச்சியாய் ஏமாறுவது தற்கொலைக்குத் தூண்டுகின்றது.

நேற்று சுத்தமாய் தூங்கப் பிடிக்காத பின்னிரவில் என் பால்கனியிலிருந்து குதிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.என் கண் முன்னால் என் உடல் சிதறுவதை மங்கலாய் பார்க்க முடிந்தது.முதலில் தரையைத் தட்டுவது என் தலையாகத்தான் இருந்தது நங்க்க்க்க்க்க்க்க்க்... சொத்த்த்த்ஹ்... பொத்த்த்த்த்த்த்...சத்த்த்த்..எப்படி கேட்கும் இந்த சத்தம்? அந்த சத்தத்தை கேட்கமுடிந்தால் அதை எப்படியாவது வார்த்தைகளில் வடிக்க முயலுகிறேன்..கழிவிரக்கம் தாங்க முடியாததாய் இருக்கிறது..கொஞ்சம் பாசிட்டிவாய் எழுதட்டுமா?.. அல்லது மிகைப்படுத்தி.. கற்பனைப்படுத்தி.... அல்லது 'எல்லாமே நல்ல' மனோநிலைக்கு மாறட்டுமா?மாற்றிக் கொள்ளட்டுமா..சரி இப்போது பாருங்கள்..எப்படி உற்சாகம் கரைபுரண்டு ஓடப்போகிறதென...

என்னுடைய மிகப்பெரிய பலம் என்ன தெரியுமா? என் நிதானம் ..நான் மிக மெதுவாகத்தான் குடிப்பேன்..முதல் முறை குடித்த போதும் கூட மிக மெதுவாய், ரசித்துதான் குடித்தேன். பியரின் கசப்போ,குமட்டலோ எதுவுமில்லை.நிதானமாய் அப்பொன்னிற திரவத்தை மெல்ல உள்வாங்கி மிதந்தேன்.இதுவரைக்குமான என் குடி வரலாற்றில் நான் வாந்தி எடுத்தததில்ல. அதனோடு எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்க என் உடலைத் தயாராய் வைத்திருந்தேன. நிதானம் தவருவதில்லை.நிலை பிசகுவதில்லை.ஏனென்றால் நான் குடியை நேசிக்கிறேன்.இதுவரை குடித்ததிலேயே மீராவுடன் குடித்த நாளைத்தான் நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.பாண்டிச்சேரியின் பிரெஞ்ச் வீதியில் சில காலம் வசித்திருந்தேன். என் சன்னல்களைத் திறந்தால் கடலின் நீலம் அறையை நிறைக்கும்.மூங்கில் நாற்காலிகள் போடப்பட்ட, தொட்டிச் செடிகள் வைக்கப்பட்டிருந்த பால்கனியில், சூரியன் கடல் மதுவில் பனித்துண்டங்களாய் மிதந்து கொண்டிருந்த ஒரு மாலையில், கிழக்கில் இருளாய் மேகங்கள் கவிழ்ந்து ஓரிரு மின்னல் கீற்றுக்கள் எட்டிப்பார்த்த அபூர்வ பொழுதொன்றில், நாங்கள் எங்கள் கோப்பைகளை நிரப்பினோம்.பனித்துண்டமான சூரியன் முழுதுமாய் கரைத்து கொண்டிருந்த பொழுதை பார்த்துக்கொண்டிருந்தோம்.மின்னல்கள் பெருகி மேகங்களை அசைத்ததில் விழுந்த முதல் மழைத்துளியை அவள் சரியாய்த் தன் மார்பகங்களில் வாங்கினாள்.நானொரு சக்கரவாகப் பறவையின் வடிவம் கொண்டு அம்மழைத் துளியை பருக முனைந்தேன்.அவள் என்னை உதறித் தள்ளிவிட்டு ஏற்கனவே தான் கொண்டிருந்த பறவையின் அலகினைக் கொண்டு அம்மழைநீரைச் சுவைத்தாள்.அவள் உதடுகளின் வழியாய் என் நாவினைத் துளைத்து அவளுடனினுள் இறங்கிக்கொண்டிருந்த மழைநீரை பலவந்தமாய் சுவைத்தேன்.அது மதுவின் சுவையினைத் தரைமட்டமாக்கியது..

மீரா போலித்தனங்களில்லாதவள். நிசமானவள். உண்மையானவள். நெருக்கமானவள். பின்னங்கழுத்து, மூச்சுக்காற்று, மல்லிகைப்பூ ,கொலுசு, பாவாடை, தாவணி, சுடிதார், நிலம் பார்த்தல், வெட்கம், பொய்கள், என எதுவுமில்லாதவள்.மீரா தன் தலைமுடியின் சில கற்றைகளை முன்பக்கமாய் எடுத்துவிட்டிருப்பாள்.மிகச் சிறிய கூந்தல் அவளுக்கு. இறுக்கமான ஆடைகளின் மீது மோகமிருந்தது அவளுக்கு..ஒரு பிங்க் நிற லேடி பேர்ட் சைக்கிள் வைத்திருப்பாள்.அவள் அம்மா தரும் தயிர்சாதத்தை எனக்கும்,நான் கொண்டு வரும் இறைச்சியினை அவளுமாய் அலுவலக தினங்களில் பறிமாறிக் கொள்வோம்.. என்னறையில் நான் அவிழ்த்துப்போட்ட மிக அழுக்கான லுங்கியினையோ, கால்சராயினையோ,மிகுந்த ஆர்வங்களோடு,ஒரு குழந்தையின் விழைவுகளோடு, அணிந்துகொள்வாள். நான் அவள் அவிழ்த்துப்போட்ட ப்ராவின் ஊக்குகளை நோண்டிக்கொண்டிருப்பேன்...எதுவும் பேசாமல் அமர்ந்திருப்போம்.மணிகள் சலனமற்றுக் கரையும்.கிளம்பும் நேரத்தில் வேண்டா வெறுப்பாக மிகுந்த துயரங்களோடு அவள் தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டு புறப்படத் தயாராவாள்.நானொரு ஆணாய் பிறந்ததின் குற்ற உணர்வுகள் தாங்காது ஒரு சிகரெட்டினைப் பற்றவைப்பேன்.அவளுக்கு சிகரெட் வாசம் பிடிக்காததினால் அவளிருக்கும் சமயத்தில் நான் புகைத்ததில்லை.

பின்பொரு நாள் அவள் தற்கொலை செய்துகொண்டதாய் குறுஞ்செய்தியொன்று நண்பணொருத்தனிடமிருந்து வந்தது..நானொரு கோழை என்பதினால் தற்கொலை செய்துகொள்ளவில்லை.அதனோடு மிகமோசமான சல்லிப்பயல் என்பதினால் ஒரு கவிதையை அப்போதே எழுதிவிட்டேன். பாருங்களேன் என் சல்லித்தனத்தின் நிரூபணத்தை!!.. இப்போது புனைவு என்கிற லேபிளில் அவளையும் அடைத்துவிட்டேன்.யாருக்காவது மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தால் என் மீதும், என எழுத்தின் மீதும் பீறிட்டு அடியுங்களேன்..நின்றபடி பெய்வதையே நான் வரவேற்கிறேன் என்பதால் எப்பாலினராய் இருந்தாலும் நின்றபடி மூத்திரம் பெய்யுங்களென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

44 comments:

சென்ஷி said...

:((

//யாருக்காவது மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தால் என் மீதும், என எழுத்தின் மீதும் பீறிட்டு அடியுங்களேன்..//

கம்பெனி கம்ப்யூட்டராச்சேன்னு யோசிக்க வேண்டியிருக்குது.. அடுத்த தடவ ரூமுக்கு வர்றப்ப உங்க லேப்டாப்ல டிரை பண்ணிப்பாக்குறேன்.

சென்ஷி said...

மேலே சொன்ன கமெண்ட் ஜாலிக்கு....:))

(ஸ்மைலி போடலன்னா பொடாவுல புடிச்சுட்டு போயிடுறாங்களாமே. அது உண்மையா?)

வழக்கமா சொல்றபதில்தான் இப்பவும்.. சூப்பர் :)

-/பெயரிலி. said...

மதிப்புக்குரிய அய்யனார்,
நீங்கள் மிகவும் பெரிய புரட்சியாளர். உன்னத படைப்பாளி. அதிகாரத்தினை அதன் சட்ட ஓட்டைகளூடாக உறியடிக்கும்... அதாவது முறியடிக்கும் தீரமும் கொண்டவர். நீங்களும் சக வலைப்பதிவர் என்பதனால் பெருமையடைகிறேன்.

கந்தையா ரமணீதரன்

என் மீதுள்ள அன்பினாலே உங்களைப் போன்ற, உங்களின் படைப்புத்திறன் மிக்க சக அன்பு நண்பர் ஒருவர் எனக்காகப் படைத்துத்தந்திருக்கும் எனக்கான வலைப்பதிவு
http://wandererwave.blogspot.com

பிகு: நண்பர்களின் பின்னூட்டங்களை நீங்கள் மட்டுறுத்துவதில்லை என்று அறிவேன்.

Ayyanar Viswanath said...

சென்ஷி :))

அன்புள்ள பெயரிலி
நானொரு வடிகட்டின சல்லிப்பயல் என்பதை அறிந்தே வந்திருக்கிறேன்..தொடர்ச்சியாய் இங்கே இரண்டு வருடங்களாய் குப்பைகளை சேர்த்து வந்திருப்பதால் இங்கே நிகழந்தவைகளை (உங்களுக்கும் சேர்த்து)அறிந்தே உள்ளேன்..தலைப்பு உங்களை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தப்படுகிறேன்..ஆனாலும் இந்நிகழ்வுகளில் எனக்கு உடன்பாடில்லை என்பதை சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது சல்லிப்பயலின் இன்னொரு சல்லி என்பதும் பொருத்தமாகத்தானே இருக்கிறது...

-/பெயரிலி. said...

அய்யனார்
சல்லிப்பயலாக இருப்பது பெரிதும் நல்லது; சல்லியில்லாத பயலாக இருப்பதுதான் உதைக்கும் ;-)

நிற்க. உங்களின் பதில் எப்படியாகப் பொதுமைப்படுத்துதல் பிழையாகிப்போகலாம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டவே படுகிறது.

என்னை எவ்வகையிலும் நீங்கள் புண்படுத்தவில்லை; அப்படியிருந்தாலும், புண்படுமென்றோ, அல்லது புண்படுவதைத் தாங்கமாட்டேன் என்றாலோ இங்கே பின்னூட்டியிருப்பேனா?

யோனி பிரச்சனையிலே நீங்களும் நானும் எப்படியாக ஒரே வகையிலே யோசித்தோமென்று யோசித்துக் கொண்டு எதையுமே பொதுமைப்படுத்தக்கூடாதென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு நகர்கிறேன்.

Prawintulsi said...

சூப்பருங்க....I amn't Joking. இப்படியொரு Out of Box Writingங்க நான் படிச்சதில்ல....
தொடர்ந்து இந்த மனநிலைல இருக்காவிட்டாலும், தொடர்ந்து எழுதுங்க...

thamizhparavai said...

எனக்கு முதல்ல அடுத்தவங்ககிட்ட நிறையைக் காட்டிலும்,குறையைத் தேடுவேன்.

//நிதானம் தவருவதில்லை// தவறி விட்டீர்கள்..

உங்கள் பக்கம்(வலைப்பூ) வந்தால் எனக்கு பின்னூட்டமிடத் தயக்கம்.உங்கள் எழுத்தைப் படித்தால்,எனக்கு பொய் சொல்ல மறந்து விடுகிறது.அதனால்தான் என் இயல்பை (வேலையை) வந்தவுடன் காட்டி விட்டேன்.
மற்றபடி எனக்கு நவீனத்துவம்(முன்,பின்)எதுவும் தெரியாது. ஆனால் உங்கள் எழுத்தை உணர முடிகிறது. எப்பொழுது படித்தாலும் ஒருவித மயக்கநிலையை எனக்கு ஊட்டுகிறது. சுயகழிவிறக்கம் காரணமாக இருக்கலாம்.
உங்கள் கூற்றுப்படி 'ஆசிரியன் இறந்து விட்டான்' என்கிறீர்கள்.ஆனால் நான் உங்கள் எழுத்துக்களில் உங்களை(என்னை)ப் பார்க்கிறேன்.அதனால்தான் பி.நவீனத்துவம் தெரியவில்லையோ என்னவோ..?
இந்தப் பதிவு எனக்குப் பிடிக்கிறது. ஆனால் தலைப்புதான் 'தமிழ்மண' டெம்பிளேட் பரபரப்பு தலைப்பு போல் தோன்றுகிறது.வாசகர்களை இழுக்குமோ,இழுக்காதோ என யோசிக்காமல், இன்னமும் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கலாம்.

Ayyanar Viswanath said...

பெயரிலி

நீக்கங்களை விட 'மாற்றங்கள்' வருத்தமளிக்கின்றன.யோனிக்கும் காமத்திற்குமான வித்தியாசங்களினை என்னளவில் புரிந்துகொண்டிருப்பதாலே இது.. பொதுமைப்படுத்துதலின் பிழையென எதுவுமில்லை என்றே நம்புகிறேன்..உங்களின் கருத்துகளுக்கு நன்றி...

Anonymous said...

நான் உன்னைப்போலவே ஒரு மனோநிலையில் இருக்கிறேன். ஆனால், வாசகர்களை ஈர்ப்பதற்காக இப்படிச் செய்யாதே. எல்லாமே பொய்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று அறிந்தும் ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்? இது நீ உண்மையாய் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது அய்யனார்? உன்னை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

Ayyanar Viswanath said...

நன்றி ப்ரவீண்

தமிழ்பறவை தலைப்பு திணிக்கப்பட்டதே

அனானி:அக்கறைக்கும் எல்லையற்ற உங்களின் அன்பிற்கும் நன்றி

sukan said...

விபத்துக்குள் அகப்பட்டுள்ள உணர்வுகள் இயல்பாக பேச முற்படுகின்றது. நிதானம் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும் துணிவுடன் இருப்பதாக தோன்றுகின்றது.

TBCD said...

ஏன்...எனக்கு இது் புரியவில்லை..

குசும்பன் said...

//யாரை? எதற்கு? என்றெல்லாம் வேண்டாம்.இப்போதைக்கு கொலை செய்ய வேண்டும் அவ்வளவுதான்.//

அய்யனார் இன்று நாம் சந்திப்பதாக இருந்தது காலவரையரை இன்றி தள்ளி வைக்கபடுகிறது!!!

மேலும் ரூமில் இருக்கும் பிரகாஷ் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருப்பதால் அவனை விட்டுவிட்டு வேறு யாரையாவது முயற்சி செய்து பார்க்கவும்.

குசும்பன் said...

// என் பால்கனியிலிருந்து குதிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.//

அய்யா ராசா வீட்டு அக்ரிமெண்டுக்கு என் பாஸ்போர்ட் காப்பிய கொடுத்து இருக்கிறேன் ஏதும் செஞ்சு என்னை போலீஸ் ஸ்டேசன் ஏற வெச்சிடாதய்யா:))) வேண்டும் என்றால் ஆசிப் அண்ணாச்சி வீட்டுக்கு போகும் பொழுது முயற்சி செய்யவும்.

குசும்பன் said...

// நிதானம் தவருவதில்லை.நிலை பிசகுவதில்லை.//

இதன் படித்த பின் கீழே இருக்கும் உங்கள் வரிகள் தான் :))) நினைவுக்கு வருகிறது

அய்யோஓஓஓஓஒ என்னிடம் பொய் சொல்லாதீர்களெனக் கதறுகிறேன்.

(தம்பி, தியாகு, பிரகாஷ், ஆகியோர் கண்ணில் இந்த பதிவு படாமல் பார்த்துக்கவும்)

குசும்பன் said...

//நான் அவள் அவிழ்த்துப்போட்ட ப்ராவின் ஊக்குகளை நோண்டிக்கொண்டிருப்பேன்//

அருமையான வரி:)

ilavanji said...

// உண்மைக்காக அல்லது அதைப் போன்ற ஒன்றினுக்காக, போலித்தனமில்லாத சொற்களுக்காக, தினம் தினம் செத்து மடிகிறேன்.அய்யோஓஓஓஓஒ என்னிடம் பொய் சொல்லாதீர்களெனக் கதறுகிறேன். என்னால் போலித்தனங்களை, பொய்களை, நம்பிக்கைத் துரோகங்களை, சம்யோசித ஏமாற்றுதல்களை, பயன்படுத்திக் கொள்ளுதலை, தாங்க முடியவில்லை. //


நல்ல எதிர்பார்ப்புகள் தான்! ஏன் இவையெல்லாம் நமக்கு கிடைக்கவில்லை என வருந்துகிற நேரத்தில் நாம் எத்தனை பேருக்கு இவைகளை கொடுத்திருக்கிறோம் என யோசிக்கையில் ஒருவேளை பதில் கிடைக்கலாம் (அ) அணிந்திருக்கும் முகமூடி கிழியலாம்.

நகர வாழ்க்கையில் நாலுகாசு பார்த்துக்கொண்டே கிணற்றடியும் தென்னந்தோப்பும் மண்சட்டி சோறுமே சொர்க்கம் என்று சொல்லும் கூட்டத்துக்கும், சம்பாதிப்பது அத்தனையையும் அனுபவித்துக்கொண்டே மனதோரம் இடிக்கும் குற்ற உணர்ச்சியை இரக்கமாகவும் சமூக அக்கறையாகவும் மாற்றி அதை வறுமையிலும், சாதீயத்தில் பரிதவிக்கும் ஈனர்களை கதாநாயகர்களாக்கி கதை கவிதைகளாக பரிமளித்து/படித்து அதன் மூலம் உலகத்தினை ரட்சிக்கும் இரக்கமனம் கொண்ட உன்னதமாவர்கள் என சுயமனச்சொறிதல் அடையும் மக்களுக்கும், ஒரே ஒரு மாதம்கூட விடுமுறைக்கு வந்து இங்கே அனுசரித்து இருக்கமுடியாமல் பிக்க்லும் பிடுங்கலும் புலம்பலுமாய் விட்டாப்போதுமென ஓடிப்போய் அங்கிருந்து “Proud being an Indian" என பார்வேர்டு மெயில் அனுப்பும் மக்களுக்கும் இருக்குமான மனநிலையிலேயே நீங்களும் இருப்பது ஆயாசத்தை தருகிறது! உணமையைச்சொன்னால் ஆபாசமாக இருக்கிறது. :( ஒவ்வொரு மனிதனின் சுயங்களுக்கும் ஒரு இருண்டபக்கம் இருக்கத்தான் செய்கிறது என்பது உங்களுக்கு தெரியாததல்ல! போலித்தனமில்லாத சொற்களுக்காக தினம்தினம் செத்துமடிகிறேன் என்கிற பம்மாத்தெல்லாம் அருவருப்பாகவே எனக்கு இருக்கிறது. (எங்கே? இந்த பின்னூட்டத்தில் எத்தனை போலித்தனமான சொற்கள் இருக்கிறது எனச்சொல்லுங்கள் பார்க்கலாம்! (அ) எங்கே? இந்த பதிவில் எத்தனை போலித்தனமான சொற்கள் இருக்கிறது எனச்சொல்லுங்கள் பார்க்கலாம்! )

(பி.கு: இந்த பின்னூட்டம் உங்களுக்கல்ல! உங்கள் கதை நாயகருக்கானது :) )

பதிவின் தலைப்பினை தமிழ்மணத்தின் சமீபத்திய நடவடிக்கைக்கு ஆப்பான ஒரு புத்திசாலித்தனமான செயலாக நீங்கள் செய்திருந்தால் அதற்கான என் வருத்தங்கள் மற்றும் கண்டனங்கள்! எழுத்துக்கே மாற்று வைக்கும் உங்களைப்போன்றவர்கள் நம்பும் கருத்துக்களை நிறுவும் வழிகள் இதுதானா?! :(

( அய்யனார், இது உங்களுக்கு... )

கதிர் said...

தனிமையின் புலம்பல்னு மாத்திக்கோய்யா..
உன்னோட முதல் சந்திப்புலயே பார்ல வாந்தி எடுத்து ப்ளாட் ஆன ஞாபகம் இல்லயா?

அந்த சேச்சி உன்ன பாத்து காறி துப்புச்சே... கோபி கூட சாட்சி. அத வேணா கூட்டாரேன் மூ.பெ...

எந்த விஷயத்துல வேணாலும் பொய் சொல்லலாம். குடிக்கற மேட்டர்ல பொய் சொல்லக்கூடாது. புர்தா...

உன்னையும் நல்லவன்னு ஊர் நம்புது பாருய்யா... கொடும சார்.

உங்கள் நண்பன்(சரா) said...

அன்பு அய்யனார்!

உங்களின் எழுத்து நடை மிகவும் பிடித்துள்ளது.வழக்கமான போக்கிலிருந்து பிரிந்து செல்லும் இராஜாபாட்டை போல!


உம்மைப் போல "இதற்கு" சாக நேர்ந்தால் நம் அதீதனும், லக்கியும் எத்தனை முறை சாகுவது?


நாளை மூத்திரம் அதிகம் பெய்யப் படலாம்! ஆயத்தமாக இருக்கவும்!

அன்புடன்...
சரவணன்.

குசும்பன் said...

அய்யனார் உங்க பதிவிலேயே

மிகவும் பயன் உள்ள தகவல் இதுதான்

///வலைப்பதிவு
http://wandererwave.blogspot.com//

யட்சன்... said...

பிறழ்வும், சிதைவும் மென்று துப்பிய வரிகளின் குவியல்...

Ayyanar Viswanath said...

அன்புள்ள இளவஞ்சி

என் நாயகன் / பிரதான பாத்திரம் மிகுந்த பரிதாபத்திற்குரியவன்.கழிவிரக்கத்தால்,குற்ற உணர்வுகளால், தனிமைகளால் நிரம்பியவன். அடுத்தவர்களை குற்றம் சாட்டுபவன் ,நீ.. நீ.. நீதான் எல்லாவற்றுக்கும் காரனம் என தனது பரிதாபத்தை மறைத்துக்கொள்பவன்.மிகுந்த தன்வயமானவன்,மிகக் குருரமானவன் என்னுடைய எல்லா கதைகளிலும் இக்குணம் பொதுவானதாகவே இருக்கிறது.அவனை எல்லாம் தெரிந்த புத்திசாலியாக அல்லது காந்தீயவாதீயாக அல்லது பரந்த குணம் கொன்டவனாக என்னால் படைக்கமுடியவில்லை.படைக்காத ஒன்றினுக்காக, இல்லாத ஒன்றினுக்காக அவனை இகழ்வது அல்லது தூற்றுவது இறந்த பாம்பை அடிப்பதுபோலத்தான்.அவன் பம்மாத்துக்களாள் நிரம்பியவந்தான். அவனை எப்போதும் நான் புனிதனாக்க விரும்பியதில்லை.அவனும் புனிதவனானவனில்லை. போனால் போகட்டும் பாவம் விட்டுவிடுவோம் ..:)

சமீபத்திய நடவடிக்கைகான எதிர்ப்பு எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.மேலும் இது புத்திசாலித்தனமான காரியமுமில்லை பின்னூட்டங்களிலேயே சொல்லியிருபப்துபோல் வலிந்துதிணிக்கப்பட்டதுதான்..எனக்கான எதிர்ப்பை மறுதலிப்பை எனக்கு தெரிந்த விதத்தில் நான் வெளிப்படுத்தியிருப்பது உங்களின் கண்டனுத்துக்கு உட்படுமெனில் அக்கண்டனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்..

வெண்பூ said...

//மின்னல்கள் பெருகி மேகங்களை அசைத்ததில் விழுந்த முதல் மழைத்துளியை அவள் சரியாய்த் தன் மார்பகங்களில் வாங்கினாள்.நானொரு சக்கரவாகப் பறவையின் வடிவம் கொண்டு அம்மழைத் துளியை பருக முனைந்தேன்.அவள் என்னை உதறித் தள்ளிவிட்டு ஏற்கனவே தான் கொண்டிருந்த பறவையின் அலகினைக் கொண்டு அம்மழைநீரைச் சுவைத்தாள்.அவள் உதடுகளின் வழியாய் என் நாவினைத் துளைத்து அவளுடனினுள் இறங்கிக்கொண்டிருந்த மழைநீரை பலவந்தமாய் சுவைத்தேன்.அது மதுவின் சுவையினைத் தரைமட்டமாக்கியது..//

அற்புதமான நடை. இதைப் படிக்கும்போதே காட்சிகள் கண்முன் விரிவது தவிர்க்க இயலாதது. நன்றி அய்யனார்.

அபி அப்பா said...

எனக்கு உடல்நிலை சரியில்லை 1 வாரமாக ஆனாலும் வந்து பார்த்து பிரமித்துவிட்டேன் அய்யனார். மிகவும் நல்லபதிவு, இப்படியே தொடர்ந்து எழுதினால் தான் குசும்பன் பதிவு போட்டு வாழ் முடியும். நாங்களும் சந்தோஷமாக இருக்க முடியும். பை தி பை வரும் வியாழன் மாலை கிடேசன் பார்க்கிலே மீட்டிங் வச்சுடலாமா, ஆனா 2 வது மாடியில் இருக்கும் நம் ரூமில் வைத்துக்க வேண்டாம். கீழே பார்க்கிலேயே வைத்துப்போம்!! வாழ்க வளமுடன்!!

அடுத்து தம்பி!!!! அந்த ராத்திரிக்கு நானும் சாட்சிதானே தம்பிரீஈஈஈஈ என்னை ஏன் விட்டு விட்டாய்!!!

அபி அப்பா said...

// TBCD said...
ஏன்...எனக்கு இது் புரியவில்லை..//

என்ன கொடுமை புதசெவி! என்னவோ அய்யானாரின் மத்த பதிவெல்லாம் புரிஞ்சு போன மாதிரி சோக் எல்லாம் அடிச்சுகிட்டு! உங்களுக்கு இதை எல்லாம் புளி போட்டு விளக்க முடியாது!

கதிர் said...

//கிடேசன் பார்க்கிலே மீட்டிங் வச்சுடலாமா//

தாங்கள் மது அருந்துவதை நிறுத்தி விட்டதாக தாங்களே கொடுத்த வாக்குறுதி இன்னமும் எக்ஸ்பயர் ஆகவில்லை அதற்குள் கிடேசன் பார்க் மீட்டிங் நடத்துவதென்றால்
தாங்கள் மறுபடியும் பஜனை செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?

தமிழன்-கறுப்பி... said...

இதற்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்னால் நிறைய யோசிச்சேன் ...
கடைசில அதையே பின்னூட்டமா போட்டுட்டேன்...

தமிழன்-கறுப்பி... said...

பல நாட்களுக்கு பிறகு குசும்பனின் பின்னூட்டங்கள் ...
புரிகிறது குசும்பன் அண்ணே..;)

தமிழன்-கறுப்பி... said...

சில இடங்களையும் தலைப்பையும் தவிர...:)

தமிழன்-கறுப்பி... said...

என்னை உங்கள் வாசகனாக்கியிருக்கிறீர்கள்...

கோபிநாத் said...

\\தம்பி said...
தனிமையின் புலம்பல்னு மாத்திக்கோய்யா..
உன்னோட முதல் சந்திப்புலயே பார்ல வாந்தி எடுத்து ப்ளாட் ஆன ஞாபகம் இல்லயா?

அந்த சேச்சி உன்ன பாத்து காறி துப்புச்சே... கோபி கூட சாட்சி. அத வேணா கூட்டாரேன் மூ.பெ...

எந்த விஷயத்துல வேணாலும் பொய் சொல்லலாம். குடிக்கற மேட்டர்ல பொய் சொல்லக்கூடாது. புர்தா...

உன்னையும் நல்லவன்னு ஊர் நம்புது பாருய்யா... கொடும சார்.
\\

படிக்கும் போது நான் நினைச்சேன்...நீ சொல்லிட்ட ;))

அய்ஸ்..எழுத்து நடை கலக்கல் ;)

Anonymous said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை படிப்பது படைப்பை நீர்த்துப் போக செய்கிறது என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை ஏற்கனவே குறிப்பிட்ட நினைவும் உண்டு.உங்களின் மேல் ஆரம்பத்திலிருந்து எனக்கிருக்கும் கசப்புதான் இது.உங்கள் சிந்தனைக்கும் நட்பிற்கும் சம்பந்தமே இல்லையே.ஒரு அரசியல் நிமித்தமான பதிவிலும் கும்மியா?
- ஒரு வாசகி

Anonymous said...

//உங்கள் சிந்தனைக்கும் நட்பிற்கும் சம்பந்தமே இல்லையே.//


குசும்பன்,தம்பி, கோபி,சென்ஷி, அபிஅப்பா காதுல விழுந்துச்சா?

ilavanji said...

அய்யனார்,

// அவன் பம்மாத்துக்களாள் நிரம்பியவந்தான்.அவனை எப்போதும் நான் புனிதனாக்க விரும்பியதில்லை.அவனும் புனிதவனானவனில்லை. //

அந்தவகையில் நான் உங்கள் நாயகனை மிகச்சரியாகவே உள்வாங்கிக்கொண்டுள்ளேன் என்றே நம்புகிறேன். ஆனால் என் ஆச்சரியம் என்னவெனில் தன்போலித்தனங்கள் தெரிந்த உணர்ந்த ஒருவன் இப்படி ”நான் அன்பிற்காக ஏங்கிச் சாகிறேன்.உண்மைக்காக அல்லது அதைப் போன்ற ஒன்றினுக்காக, போலித்தனமில்லாத சொற்களுக்காக, தினம் தினம் செத்து மடிகிறேன்.அய்யோஓஓஓஓஒ என்னிடம் பொய் சொல்லாதீர்களெனக் கதறுகிறேன். என்னால் போலித்தனங்களை, பொய்களை, நம்பிக்கைத் துரோகங்களை, சம்யோசித ஏமாற்றுதல்களை, பயன்படுத்திக் கொள்ளுதலை, தாங்க முடியவில்லை.” என்கிற கட்டமைக்கப்பட்ட புனிதத்துக்காக மறுகுறான் என்பதுதான் கதையோட்டத்தில் எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது!

அல்லது ”உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லட்டுமா” என ஆரம்பிக்கும் ஒருவன் இப்படியெல்லாம் புரட்டுகளாகச் சொல்கிறான் என்றால் அவனை எப்படி வெறும் செத்தபாம்பாக எடுத்துக்கொள்வது என்பது என் அடுத்த குழப்பம்!

அவன் சொன்ன ரகசியம் படித்த எனக்கு தெரிந்துவிட்டதனால் என்னிடமிருந்து வெளிப்படும் கேள்விகளுக்கு அவனது பதில் தன்னை இகழ்வது அல்லது தூற்றுவது என எடுத்துக்கொள்வானாயின் அதை அவன் “மிகுந்த தன்வயமானவன்,மிகக் குருரமானவன்” என்ற வகையில் சரியென எடுத்துக்கொள்கிறேன்!

என் பின்னூட்டங்கள் உங்கள் கதையின் மீதான என் புரிதலின் குழப்பங்களே என்றெடுத்துக்கொண்டதற்கு நன்றி! :)

லக்கிலுக் said...

//பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை படிப்பது படைப்பை நீர்த்துப் போக செய்கிறது என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை ஏற்கனவே குறிப்பிட்ட நினைவும் உண்டு.உங்களின் மேல் ஆரம்பத்திலிருந்து எனக்கிருக்கும் கசப்புதான் இது.உங்கள் சிந்தனைக்கும் நட்பிற்கும் சம்பந்தமே இல்லையே.ஒரு அரசியல் நிமித்தமான பதிவிலும் கும்மியா?
- ஒரு வாசகி//


கும்மியடித்து வாழ்வாரே வாழ்வோர் - மற்றெல்லாம்
பின்னூட்டமில்லாமல் மண்ணுக்குள் போவோர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

புதினம் ஒன்னு எழுதிகிட்டு இருக்கேன் சரியா வரமாட்டேங்குதுன்னு சொன்னீங்களே!!!!!! நல்லாத்தானே வந்திருக்கு....

வால்பையன் said...

//ரத்தம்..இரத்தம்..ரத்தம்....'இ' போட்டால் ரத்தத்தின் வீர்யம் குறைகிறதுதானே.//

ராமனுக்கு இ போட்டால் ராமனின் வீரியம் குறையுமா
:)

//பின்னங்கழுத்து, மூச்சுக்காற்று, மல்லிகைப்பூ ,கொலுசு, பாவாடை, தாவணி, சுடிதார், நிலம் பார்த்தல், வெட்கம், பொய்கள், என எதுவுமில்லாதவள்//

அப்படீன்னா மீரா ஒரு பொண்ணே இல்லைன்னு சொல்லுங்க

//எப்பாலினராய் இருந்தாலும் நின்றபடி மூத்திரம் பெய்யுங்களென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.//

இங்கே உங்கள் ஆணாதிக்கம் தலை தூக்குகிறது. அதில் என்ன அன்போடு


வால்பையன்

Ayyanar Viswanath said...

இளவஞ்சி

முதலில் உங்களின் தொடர் உரையாடலுக்கு நன்றி..இக்கதை நாயகன் மீதான அவநம்பிக்கைகளை அல்லது அவனொரு பம்மாத்துக்காரன் என்பதான விமர்சனங்களை வைத்துள்ளீர்..

முதலில் அவன் போலித்தனங்களால் நிரம்பியவன் என்று எனக்கும் படிக்கும் உங்களுக்கும்தான் தெரியும்..அவனை நான் எழுதுகிறேன் என்பது கூட தவறு. ஏற்கனவே இருந்துகொண்டிருக்கிர ஒருவனை பதிகிறேன்..பதிவதோடு என் வேலை முடிந்துபோகிறது..அவனளவில் அவனொரு குழப்பமான பைத்தியமான உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறான்.தனக்கு ஏற்படும் இழப்புகளில் பிறழ்ந்து வார்த்தைகளை கொட்டுகிறான்.கண்ணில் படுபவர்களை குத்திக் கிழித்துப்போடுகிறான்.எல்லாவற்றையும் சந்தேகிக்கிறான்.அவனிடம் போய் நாமிருவரும் மிக நல்ல குணங்களை எதிர்பார்ப்பது சரியா?..

மேலும் என்னுடைய நாயகர்கள் நல்லதை சந்தேகித்து நல்லதிலிருந்து பிறழ்ந்து அய்யந்திரிபற நல்லதைப் புரிந்து மிகத் தூய்மையான அந்நல்லதில் கலக்கவே விரும்புகிறார்கள் போலும்...

மேலும் தானொரு சல்லிப்பயல் என்றவனிடம் போய் உன் நடத்தை குழப்பமாக இருக்கிறது ..நீயொரு போலி எனவெல்லாம் விமர்சித்துக் கொண்டிருப்பது எனக்கு பரிதாபமாகத்தான் தோன்றுகிறது...

இதையெல்லாம் தாண்டி
ஒரு ஆசிரியனாய் இந்த பிரதியில் சொல்லப்பட்டிருக்கும் உளவியல் கலக்காத ஃபோர்னோ வை என்னால் ரசிக்கவே முடிகிறது..தமிழில் இதுவரை சொல்லப்பட்ட போர்னோக்கள் எல்லாம் நோய்க்கூறு தன்மை கொண்டவையே..உடலை ஆராதிக்கும் படைப்புகள் என்னால் பின்னால் எழுதிப்பார்க்க இது போன்ற வெள்ளோட்டங்கள் உதவலாம் என்றே தோன்றுகிறது.

சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி,ஆஸ்கர் லூயிஸ்,Georges Bataille, எனக் கலந்து கட்டிப் படித்துக்கொண்டிருப்பதாலோ என்னமோ இதைப்போன்ற இம்சைகளுக்கு உங்களை உட்படுத்த வேண்டியதாய்போயிற்று...

நானொரு அப்பாவி கோயிந்தாய் இருப்பதால் நீங்கள் கதை நாயகனைக் குறித்துதான் சந்தேகமெழுப்பினீர் என இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன் :)

anujanya said...

மிக வசீகரமாக இருப்பினும் அவ்வளவாக ஒன்றும் புரியவில்லை. மூன்று புத்தகங்கள் ஒரே சமயத்தில் நீங்கள் படித்தால் எங்களுக்கு எல்லாமே out of syllabus போலத் தெரிகிறது.

அனுஜன்யா

ilavanji said...

அய்யனார்,

// இக்கதை நாயகன் மீதான அவநம்பிக்கைகளை அல்லது அவனொரு பம்மாத்துக்காரன் என்பதான விமர்சனங்களை வைத்துள்ளீர்.. // இன்னமும் நான் அவைகள் விமர்சனங்கள் அல்ல.. உங்கள் கதையின் மீதான என் புரிதல்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்! :)

// அவனிடம் போய் நாமிருவரும் மிக நல்ல குணங்களை எதிர்பார்ப்பது சரியா?..// அவன் போலித்தனத்தால் நிரம்பியன் என்பதில் உங்களைப்போலவே நானும் உறுதியாக இருக்கிறேன். ஆனால் இப்படியாப்பட்ட போலித்தனமானவன் வேண்டுதல்தான் போலித்தனங்கள், பொய்கள், நம்பிக்கைத் துரோகங்கள், சம்யோசித ஏமாற்றுதல்கள் மற்றும் போலித்தனமான சொற்கள் அற்ற நல்ல குணங்களுக்காக ஏங்கிச் சாகுதல் . இப்போது சொல்லுங்கள். நல்ல குணங்களை எதிர்பார்ப்பது நாமா இல்லை அவனா?! ஒரு போலித்தனமானவன் எந்தவிதத்தில் நல்ல குணங்களுக்கு ஏங்கிச்சாகிறான் எனக்கேட்டால், அதற்கு பதிலாக ஒரு போலியிடம் நல்ல குணங்களை எதிர்பார்க்கலாமா என திருப்பிக்கேட்டால் என்ன சொல்வது எனத்தெரியவில்லை. அல்லது எங்காவது read between lines கோட்டைவிட்டுட்டேனா எனத்தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்.

// மேலும் என்னுடைய நாயகர்கள் நல்லதை சந்தேகித்து நல்லதிலிருந்து பிறழ்ந்து அய்யந்திரிபற நல்லதைப் புரிந்து மிகத் தூய்மையான அந்நல்லதில் கலக்கவே விரும்புகிறார்கள் போலும்... // சத்தியமாகப் புரியவில்லை :( ஒரு எளிய உதாரத்துடன் விளக்கமுடியுமா?! பின்னவீனதுவ இலக்கியத்தில் உதாரணங்களுக்கு இடமில்லையெனில் நான் என் வாயை இதோ மூடிக்கொண்டேன்! :)

// சல்லிப்பயல் என்றவனிடம் போய் உன் நடத்தை குழப்பமாக இருக்கிறது ..நீயொரு போலி எனவெல்லாம் விமர்சித்துக் கொண்டிருப்பது எனக்கு பரிதாபமாகத்தான் தோன்றுகிறது... //

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் “தானொரு சல்லிப்பயல்” என்ற வார்த்தைகள் கதையில் உறுதியான குணநலனைக் குறிப்பதாக இல்லை. மாண்டுபோன மீராவின் சாவுக்கு காரணமான ஒருவன் ”தான் ஒரு சல்லிப்பயல்” என சொல்லிக்கொள்வதன் மூலம் தன் குற்றவுணர்ச்சியின் நீட்சியாக இரக்கவுணர்வை கொண்டுவரவென சொல்லப்பட்டதெனவே புரிந்துகொள்கிறேன். சிவாஜி சொல்லுவாரே! “எழுதுங்கள் என் கல்லரையில்.. அவன் இரக்கமில்லாதவன் என்று... “ அந்தவகையில்! இதையும்விட சமகால இலக்கியத்தில் சொல்வதானால் போலீஸ் ஸ்டேஷனில் வடிவேலு “நானும் ரவுடிதான்யா.. என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க..”ன்னு சலம்புவாரே.. அந்தமாதிரி.. ( என்னது?! வடிவேலு நகைச்சுவை சமகால இலக்கியம் இல்லையா?! :)

// தமிழில் இதுவரை சொல்லப்பட்ட போர்னோக்கள் எல்லாம் நோய்க்கூறு தன்மை கொண்டவையே. //

தமிழில் இதுவரை வந்த போர்னோக்கள் என எதிலிருந்து ஆரம்பிக்கிறீர்கள்?! காமசூத்திரத்தையும் கொக்கோகத்தையும் சொல்லமாட்டீர்களென நினைக்கிறேன். சமகாலமெனில் எனக்குத்தெரிந்து சரோஜாதேவி, மருதம், திரைச்சித்ரா போன்றவைகள் தான் தமிழில் போர்னோ வழங்கிய பொக்கிசங்கள். போர்னோ என்பதை ஒரு கலையாக ரசிப்பவனும் போர்னோவை தன் உடல் இச்சைக்காக படிப்பவனும் ஒன்றா? போர்னோவை கலையாகப் பார்க்கும் பார்வைமட்டுமே உடலை ஆராதிக்கும் படைப்புகளா?! உடலிச்சைக்கென வெளிவரும் படைப்புகள் அதன் நோக்கத்திற்கு 100% உண்மையாக இருப்பினும் அவைகள் நோய்க்கூறு கொண்டவைகளா?! ”பெருத்த, நீண்ட, விம்பிய, துடிக்கும், கடப்பாரை, சுத்தி.. “ போன்ற வார்த்தைகள் உடைய கதைகள் நோய்க்கூறு தன்மை கொண்டவைதானா?! அல்லது “அம்மாவை, சித்தியை, பக்கத்துவீட்டு மாமியை..” என பிராய்டின் கூறுகளை முகத்தில் அடித்தாற்போல எழுதப்பட்டதால் அவைகள் நோய்க்கூறுகளாக ஆகிவிட்டதா?! இவ்வாறில்லாது பியானோ டீச்சர் வயதாகியும் தீராத காமத்தில் அம்மாவை வல்லாங்கு செய்வதென்பதாக எழுதப்படும் மேல்நாட்டு இலக்கியம் மட்டுமே உடலை ஆராதிக்கும் படைப்புகளாக எழுதப்பட்டதா?! என் உடல் இச்சைக்கு நான் வாங்கிப்படித்த சரோஜாதேவியும் மருதமும் அதற்கான நோக்கங்களை நேர்மையாகவே பூர்த்திசெய்தது. எந்தவித பம்மாத்துக்களும் இன்றி ” ராத்திரி முழுக்க கால்கள் இரண்டையும் விரித்துப்பிடித்து எகிறி எகிறி என் இடுப்பை...” என்ற வகையிலான கதைகள் என் உடல்இச்சைக்கு நேர்மையாக நேர்வழியில் கொடுத்த தீர்வுகளை விட “மார்பங்களில் மிகச்சரியாக உள்வாங்கிய மழைத்துளியை பருகிச்சுவைத்து...” என்பதான போர்னோ எந்த வகையில் நேர்மையான நோய்க்குறுகளற்ற போர்னோவாக இருக்கமுடியும் என எனக்கு விளங்கவில்லை! கழிவிரக்கம், சுயபச்சாதாபம், கோபம், இகழ்ச்சி, காமம் என அனைத்து உளவியலும் கலந்த ஒரு “காதல்” கதை என்றவகையில் இது எனக்கு மனநினைவைத் தரக்கூடும். அல்லது “ஒரு ராத்திரியில் தண்ணியப் போட்டுக்கிட்டு மப்புல இருந்தப்ப மீராவை கவுத்து அவளைப் போட்டுட்டேன்” எனபதான விவரிப்புடன் வந்திருந்தால் அது நிஜமாகவே உளவியல் கலக்காத கடமையை நேர்மையாகச் செய்யும் போர்னோவாக இருந்திருக்கக் கூடும். இது என் கருத்து மட்டுமே!

// சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி,ஆஸ்கர் லூயிஸ்,Georges Bataille, எனக் கலந்து கட்டிப் படித்துக்கொண்டிருப்பதாலோ என்னமோ இதைப்போன்ற இம்சைகளுக்கு உங்களை உட்படுத்த வேண்டியதாய்போயிற்று... // படியுங்கள் நண்பரே. நீங்கள் படித்தவற்றையும் அதன் எதிரொலியாக இருக்கும் உங்கள் படைப்புகளையும் புரிந்து கொள்ளும் முயற்சிகளுமே எனது கேள்விகள் என்ற நோக்கமிருப்பதால் நாம் எழுதிக்கொள்வது இம்சைகளாக எனக்குத் தோன்றவில்லை.

// நானொரு அப்பாவி கோயிந்தாய் இருப்பதால் நீங்கள் கதை நாயகனைக் குறித்துதான் சந்தேகமெழுப்பினீர் என இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன் :) // படிக்கும் எங்களை அப்பாவி கோயிந்தாக நினைத்து நீங்கள் இந்த பதிவினை “சிறுகதை” என வகைப்படுத்தியதால் உங்களது கதைநாயகனை விளித்துக் கேட்கும் எனது இந்த தவறு தொடர்ந்திருக்கக்கூடும். வருந்துகிறேன்.

வால்பையன் said...

இளவஞ்சியின் போர்னோவை பற்றிய கருத்து
எனக்கு உடன்பாடாக இருக்கிறது,
வேறொன்றும் பெரிதாக விளக்கம் சொல்லும் அளவுக்கு அறிவில்லை

வால்பையன்

Ayyanar Viswanath said...

இளவஞ்சி

/ஒரு போலித்தனமானவன் எந்தவிதத்தில் நல்ல குணங்களுக்கு ஏங்கிச்சாகிறான்/

அவனொரு போலித்தனமானவன் என்கிற முடிவுக்கு நம்மை வரவைப்பதே அவன் நல்லதிற்காக ஏங்கிச் சாவதான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதினால்தான்..அந்த வரியை அந்த ஏக்கத்தை அவன் வெளிப்படுத்தியிருக்கவில்லையெனில் நீங்களும் சரி நானும் சரி அவனை போலியென கண்டுபிடித்திருப்பது கடினமாகியிருக்கலாம்...
/பின்னவீனதுவ இலக்கியத்தில் உதாரணங்களுக்கு இடமில்லையெனில் /

முதலில் இந்த அடையாளத்தை நான் மிக பயத்தோடு அணுகுகிறேன்..இது பின்நவீனத்துவ இலக்கிய்மா என்பதையெல்லாம் விமர்சகர்கள்,அறிவுஜீவிகள் சொல்லட்டும் என்னளவில் எனக்கு தெரிந்ததை எழுதிக்கொண்டிருக்கிறேன்..நான் பின்நவீனத்துவ பிராண்ட் மேனேஜர் இல்லை என்பதை எத்தனாவது முறையாகவோ இங்கே மறுபடியும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..
/நல்லதை சந்தேகித்து நல்லதிலிருந்து பிறழ்ந்து அய்யந்திரிபற நல்லதைப் புரிந்து மிகத் தூய்மையான அந்நல்லதில் கலக்கவே விரும்புகிறார்கள்/
வரலாற்றை அழித்தெழுதுதல் /
சந்தேகித்தல் எனும் கூறுகளில் இந்த
நல்லதை பொருத்திப்
பார்க்கலாம்..சொல்லப்பட்ட எந்த
ஒன்றையும் அப்படியே
ஏற்றுக்கொள்ளாது தன்னளவில் முழுத்
திருப்தி அடையும் வரை சந்தேகித்து
,புரிந்து கொண்டு உண்மைத்
தன்மைக்கு மிக நெருக்கமாக
வரவிரும்புவதுதான் நல்ல
என்பதற்கான விளக்கங்கள்.இந்த சோதனை முறைகளாக தலைகீழாக்கலையும்,பிறழ்தலையும் பைத்தியமாதலையும் அணுகலாம்..

Ayyanar Viswanath said...

இள்வஞ்சி ,வால்பையன்

நோய்க்கூறுத்தன்மை கொண்டவை எனக்குறிப்பிட்டது தமிழில் வந்த இலக்கியஃபோர்னோக்களையே..சரோஜாதேவியும் மருதமும் இலக்கியமில்லையா? என்கிற கேள்விக்கு இல்லை எனத்தான் என்னால் பதில் சொல்ல முடிகிறது..இலக்கிய அளவில் ராஜேஷ்குமாருக்கும் தி.ஜானகிராமனுக்கும் இடையேயுள்ள வித்தியாசங்களாகத்தான் நான் புரிந்துகொண்டுள்ளேன்..வாசகனுக்கான திருப்தி அல்லது வாசகனின் போதாமையே இலக்கியம் என்பதற்கான வரையறைகளாக உள்ளது.சரோஜாதேவி வாசகர்களுக்கு அது போதுமானதாக இருந்தால் நல்லது. அதிலேயே திருப்தி அடைந்துவிட்டுப் போக வேண்டியதுதான். ஆனால் எனக்கு அது போதுமானதாக இல்லை.அதில் உள்ள அபத்தங்களை அதை நிராகரிக்கும் புத்தகமொன்று என்னிடம் தட்டுப்படும்போது உணர்ந்து கொள்கிறேன்.தட்டுப்பட்ட புத்தகத்தை நான் கொண்டாடுகிறேன்.
(இதுவும் கூட தற்காலிகமானதுதான்)

தமிழில் சிறந்த போர்னோ வாக நான் கருதிக்கொண்டிருந்த கோபிகிருஷ்ணனையும் ஆதவனையும் பத்தாய் நிராகரிக்கிரார்.பத்தாயை ப்யூக்கோவெஸ்கி.. என இந்த தொடர்ச்சி முடிவில்லாதது...

நமது சூழலில் போர்னோ என்பது அப்போதைய திருப்திக்கான தூக்கத்திற்கான உடற்பயிற்சியாக அணுகப்படுவது மிகக் கொடுமை.நீங்கள் சொல்லும் சரோஜா தேவிக்கள் உருவாக்கியிருக்கும் போர்னோ குறித்தான பிம்பங்கள் நம் அடிப்படையை சிதைப்பது. அல்லது இயற்கைக்கு மாறானது...காமம் என்பதை உச்சம் என்பதை வெறும் மூளைக்கு மட்டும் தூண்டுபவையாகவே நம் சரோஜாதேவிக்கள் கட்டமைக்கின்றன..பாதி பிதுங்கிய முலைகள்,தொப்புள்,தொடை,குலுக்கு நடனம்...இன்னும் தமிழின் பெரும்பாலான திரைப்படங்கள் செய்வதெல்லாம் மறைமுக திணித்தல்களையே...இவை நமது அடிப்படையை இழக்க காரணமாக இருக்கின்றன.இது எனக்கு இந்த நிமிடத்தில் அதன் கடமையை நேர்மையாக செய்கிறது என்பது தவறான, ஆபத்தான புரிதல்தான்...

காமம் என்பது அந்தநிமிடத்தின் நரம்பதிர்வுகள் அல்ல என்பதை புரிந்துகொள்வதே அதிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும்....

ilavanji said...

அய்யனார்,

// சரோஜாதேவியும் மருதமும் இலக்கியமில்லையா? என்கிற கேள்விக்கு இல்லை எனத்தான் என்னால் பதில் சொல்ல

முடிகிறது.. //

இவைகள் இலக்கியமாக இருந்தாலென்ன? இல்லாவிட்டால் என்ன? காமம் என்பதை இலக்கியம் என்ற ஊடகத்தின் வழியாக வெளிப்படுத்துகிறோம். இலக்கியத்தில் காமம் என்ற ஒன்று வரையறுக்கப்பட்டதால் மட்டுமே மனிதர்கள் அதை வாழ்வின்கூறாக வாழ்ந்துகாட்ட வறிந்து கட்டுவதில்லை. காமத்திற்கான வழிகள் அனைத்தும் மறைத்தும்
எட்டாகனியாகவும் இருக்கும் ஒரு சமூகத்தில் இவ்வகையான புத்தகங்களின் பயன்பாடு என்ன என்பதைப்பற்றிய
உங்கள் கருத்து என்ன? ஒரு சமூகத்தின் குணநலன்களை மிக எளிதாக பொதுப்புத்தி என நிராகரித்து விடமுடியும். ஆனால் பொதுப்புத்தி மட்டுமே ஒரு சமூகத்தை கட்டமைக்கிறது என்பதை நிராகரிக்க முடியுமா? காமத்தின் கூறுகள் பலவகைகள் இருப்பினும் மருத்துவரீதியாக எதுவும் குற்றமில்லை. தவிர்க்கப்பட வேண்டியதும் விலக்கப்பட
வேண்டியதும் சமூக ரீதியாக குற்றங்கள். ஓரினச்சேர்க்கை முறையாக மாற்றப்பட்ட நாடுகள் பல இருந்தாலும் இந்தியாவில் இன்னும் சட்டமாக்கப்படவில்லை. சட்டத்திற்குட்பட்ட ஒருவன் வாழ்க்கைய அமைத்துக்கொள்ளும்போது
அது பொதுப்புத்தியாக இருப்பின் இருந்து விட்டுப்போகட்டுமே! இதில் பெருமை கொள்ளவும் இகழவும் என்ன இருக்கிறது?

ஒரு சமூகத்தின் மாற்றங்கள் இயல்பாய் வருபவையே. நேற்றைய விதவைத்திருமணங்களும் நாளைய லிவிங் டுகெதரும் மாற்றங்கள் தான். தன் கருத்துகளில் உறுதியாகவும் அது தான் சார்ந்த சமூக நலனுக்கு
நேர்மையாகவும் இருக்கும் பட்சத்தில் புரட்சியாளர்களின் கருத்துக்கள் எடுபடுகின்றன. அந்த மாற்றங்களும் இயல்பாய் அமைந்து விடுகின்றன. சே, பெரியார் போன்ற புரட்சியாளர்கள் எவரேனும் மனம்பிறழ்ந்த நிலையில் தான் சமூக
மாற்றங்களை உறுதிபட வைத்தார்களா? தான் என்ன தேடுகிறோம். என்னவாக விரும்புகிறோம் என்ற தெளிவு இல்லாத ஒருவன் சமூக மாற்றங்களுக்கான கருத்தை உறுதியாக முதலில் முன்வைக்க முடியுமா? மனம்பிறழ்ந்த ஹிட்லர்,
இடிஅமீனும் தலைவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எந்தமாதிரியான மாற்றங்களை கொண்டுவந்தார்கள்?!

பெரியாரின் கருத்துக்களுக்கு ஆயிரத்தெட்டு எதிர்ப்புகள் இருந்தாலும் அவரது செயல்களுக்கான நோக்கத்தை யாரும்
சந்தேகிக்கவில்லை. ஏனெனில் அவரது சொல்லும் செயலும் ஒன்று. அதன் மூலம் கிடைத்த நம்பகத்தன்மையே அவரது வெற்றி. வாழ்க்கை ஒன்றாகவும் சமூகத்துக்குக்கான தீர்வு ஒன்றுமாக செய்யப்படும் செயல்களும்
புனையப்படும் இலக்கியங்களும் வெறும் புனைவுகளுக்குறிய மரியாதையை மட்டுமே பெறக்கூடும். அருமையான கற்பனையென சிலாகிக்கப் படக்கூடும். அதற்குமேல் வேறெந்த மாற்றங்களை கொண்டுவரும்?! மனம்பிறழ்ந்த
நிலையிலும், வாழ்க்கைக்கான போராட்டங்களுக்கு இடையேயும், பிறந்த படைப்புகள் எவையும் சமூகத்திற்கு இதுதான் தீர்வு என்கிற முன்முடிவுகளுடன் வந்தவைகள் அல்ல. அவைகள் எந்த முன்முடிவுகளும் தீர்வுகளும் இன்றி உணரப்பட்டவைகளை உண்மையாகச் சொல்லுபவை. அந்த உண்மையின் மீதான சமூகத்தின் எதிரொலிகளே மாற்றங்களாக இருக்கக்கூடும்.

// தமிழில் சிறந்த போர்னோ வாக நான் கருதிக்கொண்டிருந்த கோபிகிருஷ்ணனையும் ஆதவனையும் பத்தாய்
நிராகரிக்கிரார்.பத்தாயை ப்யூக்கோவெஸ்கி.. என இந்த தொடர்ச்சி முடிவில்லாதது...//

ஆதவனையெல்லாம் நீங்கள் போர்னோவாக பார்க்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. போர்னோ என்பதன் மீதான வரையரையில் நம்மிருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கக்கூடும்!: )

இந்த உலகத்தில் யாராவது யாரையாவது ிராகரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். நீங்கள் சரோஜாதேவியை நிராகரிப்பது போல. நிராகரிகப்பட்டவற்றை உலகத்தில் யாராவது உபயோகப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். எம்போன்றவர்கள் எங்கள் தேவைக்கு தீர்வாக சரோஜாதேவி படிப்பதைப் போல! :)

// தட்டுப்பட்ட புத்தகத்தை நான் கொண்டாடுகிறேன். (இதுவும் கூட தற்காலிகமானதுதான்) //

அருமை! அது உங்களுடைய முதிர்ச்சி. உங்களுடைய வளர்ச்சி. அது நம் நாட்டிலுள்ள சோத்துக்கே வழியில்லாதர்கள் மற்றும் கோடியில் புரள்பவ்ர்கள் அனைவருக்கும் தீர்வாகுமா? இது ஒரு புனைவு என்ற வகையில் நான் இந்த கேள்வியை கேட்பது அபத்தமானதுதான். இருந்தாலும் இந்த முயற்சியை நீங்கள் சரோஜாதேவியை புறம் தள்ளுவதற்கும் உடலை
ஆராதிக்கும் படைப்புகளுக்கு இது முன்னோட்டம் எனவும் சொல்லியுள்ளதால் மட்டுமே இந்தக் கேள்வி.


// நீங்கள் சொல்லும் சரோஜா தேவிக்கள் உருவாக்கியிருக்கும் போர்னோ குறித்தான பிம்பங்கள் நம் அடிப்படையை சிதைப்பது. அல்லது இயற்கைக்கு மாறானது.. //

சரோஜாதேவிகள் எந்த அடிப்படையில் அய்யா அடிப்படையை சிதைக்கிறது? அல்லது இயற்க்கைகு மாறாக இருக்கிறது? இவைகளெல்லாம் நம் நாட்டிலிருக்கும் பாலுணர்வு வறட்சியின் பலனாக வெளிப்பட்டவைகள். இருக்கின்ற
அவல நிலைக்கு தீர்வாக வந்தவைகள். இவைகள் சமூகத்தில் ஒரு மாற்றம் வேண்டி வந்தவைகள் அல்ல. இருக்கின்ற நிலையை பிரதிபலிப்பவை. இவைகள் அடிப்படைகளை சிதைப்பதைல்லை. அடைப்படைகளை கட்டிக்காப்பவை
அல்லது சுட்டிக்காட்டுபவை என்று வேண்டுமானால் சொல்லலாம். நாம் விரும்பும் பாலின சுதந்திரம் வரும் வரை இதுதான் தீர்வு காமத்தை அனுபவிக்க. அல்லது பக்திமார்க்கம்தான் தீர்வு காமத்தை அடக்க. மனக்கிளர்ச்சிக்கு தீர்வாக
ஒருவன் சரோஜாதேவி படித்து ஒருவன் சுயஇன்பம் அடைவது என்பது எப்படி இயற்கைக்கு முரணாக இருக்கமுடியும்? ஏன் இப்படி சேலம் டாக்டர் போல பயமுறுத்துகிறீர்கள்? :) பாலின சுதந்திரம் எப்படி எந்த புரட்சியின் மூலம் வருமோ நானறியேன். ஆனால் இப்படி சுயத்தை தேடும் ஒருவன் நல்லதை முட்டிமோதி மனம்பிறழ்ந்த நிலையில் இருந்து படைக்கும் புனைவுகளால் வராது என்று மட்டும் நம்புகிறேன் :)

// பாதி பிதுங்கிய முலைகள்,தொப்புள்,தொடை,குலுக்கு நடனம்...இன்னும் தமிழின் பெரும்பாலான திரைப்படங்கள்
செய்வதெல்லாம் மறைமுக திணித்தல்களையே.. //

மறைமுகமாக என்ன திணிக்கின்றன? நம் சமூகத்தின் பாலியல்தன்மையின் வெளிப்பாடுகள் இவை. பாதி பிதுங்கிய முலைகள்,தொப்புள்,தொடை,குலுக்கு நடனம் போன்றவைகள் மூலம் காம உணர்வுகள் தூண்டப்படுமாயின் அதில்
என்ன தவறு? இதையெல்லாம் பார்த்து காம உணர்வு வராதென்றால் வேறு என்ன பார்த்து காம உணர்வு வரும்? பாதி பிதுங்கிய முலைகள் திணிப்புகள் என்றால் முதல் மழைத்துளியை மிகச்சரியாக அதே முலைகளின் மீது வாங்கும் காட்சி திணிக்கப்பட்டதா? தீர்வா? ஒருவேளை முலைகள் என்பதற்கு பதிலாக மார்பகங்கள் என எழுதப்பட்டதால் இது உடலை ஆராதிக்கும் படைப்பானதா?! :)

// அதன் கடமையை நேர்மையாக செய்கிறது என்பது தவறான, ஆபத்தான புரிதல்தான்.. //

காமத்தை போக்க வழியற்ற சமூகத்தில் சரோஜாதேவிகளும் குலுக்கல் நடனங்களும் ஆபத்தானது! ஆனால் தன்பால்விருப்பம் கொண்ட ஒருத்தி அதற்கு வழியின்றி ஒரு ஆண்நண்பரது ஆடைகளை அணிந்துகொள்வதன்மூலம்
வெளிப்படுத்துவதும், அவளது உணர்வுகள் வலி நீங்க ஆணாகப்பிறந்தது பற்றி வருத்தப்படும் ஒருவனும்
(இந்தப்புனைவில் மறைந்திருக்கும் கதைக்கரு இதுதான் எனப்புரிந்து கொண்டிருந்தாலும் அதை நீங்களே
வெளிப்படையாக சொல்லவிரும்பாததால் நானும் சொல்லவில்லை. ஆபத்தானது என்ற சொல்லுக்கு எதிராக
வைப்பதற்கே இப்பொழுது சொல்லுகிறேன் ) தீர்வு கிடைக்காத நிலையில் அவள் தற்கொலை செய்து சாவதாகவும் எழுதப்படும் புனைவுகள் உடலை ஆராதிப்பவையா? ஆபத்துகள் அற்றவையா? தன்பால் விருப்பம் கொண்டவர்கள்
சுயகழிவிரக்கம் கொண்டு சாவதுதான் நீங்கள் முன்வைக்கும் ஆபத்தில்லாத உடலை ஆராதிக்கும் நோக்கம் கொண்ட படைப்புகள் தரும் தீர்வா?! இப்படி மனப்பிறழ்வில் எழுதப்படும் புனைவுகளை தீர்வுகளாக வைக்கும் அபாயம் நிறந்த படைப்புகளை விட “கல்லூரி விடுதியில் மாலாவும் ஷீலாவும்...” என ஆரம்பிக்கும் சரோஜாதேவிகள் எந்த விதத்தில்
இயற்கைக்கு மாறானவை? அடிப்படையற்றவை?! .

// காமம் என்பது அந்தநிமிடத்தின் நரம்பதிர்வுகள் அல்ல என்பதை புரிந்துகொள்வதே அதிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும்.... //

சரோஜாதேவிகள் மட்டுமே படித்தவனும், ப்யூக்கோவெஸ்கியை எட்டாதவனுமெல்லாம் காமம் என்பதனை புரிந்துகொள்ளாதவனாகவே இருப்பான் என்பதுதான் உங்கள் எண்ணமாக இருக்கும் என நான் நம்பவில்லை. முதலில் ஏன் காமத்தில் இருந்து விடுபட வேண்டும்?! காமத்தில் இருந்து விடுபட்டு என்ன சாதிக்கப் போகிறோம்?! காமத்தில் இருந்து விடுபடுவது அடைப்படையற்றதும் இயற்கைக்கு முரனானதும் இல்லையா?! :) காமம் காமமாகவே இருக்கட்டும் அய்யா. ஊற்றப்படும் பாத்திரத்தைப்போல வடிவம் பெறும் தண்ணீரைப்போல அது அவரவருக்கு அதுவதுவாகவே இருக்கட்டும். அதனை உடலை ஆராதிக்கிறோம் மற்றும் நோய்க்கூறுகளற்ற போர்னோ எழுதுகிறோம் என இப்படியாப்பட்ட கழிவிரக்கப் புனைவுகளில் புகுத்தி மேலும் ”புனிதப்படுத்தி” இருட்டில் தள்ளி பொதுப்புத்தி மக்களுக்கு எட்டாக்கனியாக்கி விடுவீர்களோ என பயமாக இருக்கிறது! :)

Featured Post

test

 test