0
அலுவலக சக மல்லு ஒருவன் எதையோ தரவிறக்கம் செய்யப்போய் சர்வரைக் கொன்றுவிட்டான். கடுப்பான ஐடி மக்கள் ஜிமெய்லை மட்டும் விட்டுவிட்டு மத்ததைப் பூட்டி விட்டார்கள்(என் சிறு வயது இம்சைகள் தாளாமல் "உன் கண்ண ரெண்டும் விட்டுட்டு ஒடம்பு தோலை உரிக்க சொல்றண்டா உங்கப்பாகிட்ட"என்ற என் அம்மாவின் வாசகம் சம்பந்தமில்லாமல் நினைவில் வந்துபோனது..ஒருபோதும் சொன்னதில்லை என்பது வேறுவிசயம்) சட்டென்று உலகமே ஸ்தம்பித்துப் போனது. இரண்டு நாட்கள் சவுண்ட் கொடுக்காமல் மூன்றாவது நாள் லிமிடட் ஹவர்ஸ் என எதையோ சொல்லி இரண்டு மணி நேரம் வாங்கிவிட்டேன். கண்டதையெல்லாம் படித்து கடுப்பாகத் தேவையில்லை என்ற நன்மை இருப்பினும் கண்ணில் பட்டுத் தொலைவதெல்லாம் கடுப்பாவதற்கே
என்பது போலத்தான் இருக்கிறது..
0
தமிழச்சிக்கான எதிர்வினைகள் எத்தனை அவசியம்?என்றெல்லாம் யோசித்துப் பார்த்து எழுதும் மனநிலையில் இல்லை. இருப்பினும் மேம்போக்கான வறட்டுக்கூச்சலுக்கு, விளம்பர மோகத்திற்கு, மூலத்தை சிதைக்கும் அபத்தங்களுக்கான எதிர்வினைகளை வைத்தேயாகிவிடுவது என்ற நிலைக்குத் தள்ளியது என் உள்வெளி.மேலும் இந்த இடுகைக்குப் பிறகு அவரை முற்றிலுமாய் புறக்கணித்து விடுவது என்கிற முன் தீர்மானங்களோடு இதை எழுதத் தொடங்குகிறேன்.தமிழச்சிக்கான பின்னூட்டங்களைக் கூட மிகுந்த யோசனைகளுக்குப் பிறகே எழுதத் தோன்றும். பெண் என்ற பிரத்யேக காரணங்களுக்கான சலுகையே இத்தனை நாட்கள் என் கடுப்பை தள்ளிப்போட்டதென்றும் சொல்லலாம்.எதுவிருப்பினும் தமிழச்சியின் தீரம் பாராட்டத்தக்கது.பெண்கள் இயங்கத் தயங்கும் ஒரு தளத்தை இவர் தேர்வு செய்ததற்காகவும் தொடர்ச்சியான ஆபாசத் தாக்குதல்களை புறந்தள்ளிக்கொண்டு போவதற்காகவும் தமிழச்சியினைப் பாராட்டியே ஆகவேண்டும்.ஆனால் ஆபாசப் பின்னூட்டங்களை எவ்வித தயக்கங்களும் இல்லாமல் வெளியிடும் இவர் என் எதிர் கருத்து சார்ந்த பின்னூட்டத்தை வெளியிட மறுத்தது ஏன் எனத் தெரியவில்லை.ஒரு வேளை நான் ஆபாசமாக எழுதாமல் விட்டது புரியாமல் போனதோ என்னமோ..
எப்போதாவது எழுதும் இவரது சொற்பமான சொந்த எழுத்துக்கள் இவரை அதிகார வர்க்கத்தின் குறியீடாகத்தான் அடையாளம் காட்டுகிறது. (தட்டுக்கழுவி முதல் தேவடியா வரையிலான சொல்லாடல்கள்) பெரிய டைப்பிஸ்ட் பெரியாரிஸ்ட் இல்லை என்கிற கொழுவியின் வாக்கியம் கச்சிதமாக இவருக்குப் பொருந்துகிறது.இந்த குற்றச் சாட்டிலிருக்கும் உண்மையை இவர் புரிந்துகொண்டாரா? எனத் தெரியவில்லை.அப்படிப் புரிந்துகொண்டிருப்பின் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் எதையும் இவர் எடுத்ததாய் தெரியவில்லை.பகுத்தறிவு வாதி என்கிற சக்தி வாய்ந்த ஒரு அடையாளத்தை மேம்போக்காக புரிந்துகொள்வதின் சரியான அடையாளம்தான் தமிழச்சியின் எழுத்து.பெருமதிப்பிற்குரிய பகுத்தறிவுவாதிகளே! உங்களுக்கான அடையாளங்கள் கீழ்கண்டவைகள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
1.கருப்பு நிற ஆடை அணிவது..
2.உடையில் பெரியார் அல்லது சேகுவாராவின் உருவத்தை பதிந்துகொள்வது
3.தோழர்,புரட்சி,வெங்காயம் என்கிற சொல்லாடல்களை சம்பந்தமே இல்லாமல் திரும்ப திரும்ப பேச்சு வழக்கில் நுழைப்பது...
4.எங்காவது ஓரமாக நின்று நோட்டிஸ் கொடுத்துவிட்டு பெரிய சீர்திருத்ததை செய்ததாய் புளகாங்கிதம் அடைவது,அதை போட்டோ எடுத்து கண்ணில்பட்டவர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பது..
5.பெண்,பெண்ணியம் எனக் காதில் விழுந்த சொற்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு நூல் விடுவது.
நம்முடைய வாழ்வு,நம்முடைய மிகச்சிறந்த தலைவர்கள்,புனிதர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர் அனைவரும் சித்தாந்தங்களை அதன் சாராம்சத்தோடு புரிந்துகொள்கிறார்களா/கொண்டார்களா என விளங்கவில்லை. அவர்களை அடியொற்றியே நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டங்களைப் போல் ஜே! போட்டுப் பின் தொடர்கிறோம். தொடர்ச்சியான தலையாட்டல்களில்,வாழ்க! கோஷங்களில் சொந்த மூளை சிந்திக்கும் திறனை எப்போதோ இழந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.மேலும் சமீப காலங்கலாய் இவரது புரட்சித் தலைப்புகள் தாங்கி வரும் பெரியார் மற்றும் ஓஷோவின் உள்ளடக்கங்கள் அதன் மூலங்களை சிதைப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.ஓஷோவை நேசிக்கும் பெரியாரை நேசிக்கும் ஒருவன் இவ்வித வறட்டுக் கூச்சல்களால் சந்திக்க நேரிடும்
பெரும் அசூசையை மொழியில் எவ்வாறு கடத்துவதெனத் தெரியவில்லை.
தமிழச்சி இப்படித்தான் எழுதவேண்டும் என நான் எதையும் வலியுறுத்தவில்லை இருப்பினும் இவரின் அபத்தங்கள், அரைகுறைப் புரிதல்கள் ஏற்படுத்தும் எரிச்சல்கள் எழுத்தில் சொல்ல முடியாதது.இவை மட்டுமில்லாது தன்னை ஒரு இலக்கியவாதி என்றும் எழுத்தாளர் என்றும் இவரே சொல்லிக்கொள்வது வன்முறையின் உச்சம்.பெண்மொழி,இலக்கியம் என்றெல்லாம் இவர் பேசும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்ணின் மொழியைப் பற்றியோ இலக்கியத்தைப் பற்றியோ இவர் சொல்லி நான் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலையில் இல்லை என்பது என் பதிவுகளையும் அவர் பதிவுகளையும் தொடர்ச்சியாய் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.பெண் என்பவள் பெண்ணால் மட்டும் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதில்லை.சக பெண்ணை தேவடியா! என்றழைக்கும் கண்டவன் போகட்டும்! என விளம்பரப்படுத்தும் இவரின் சிந்தனைகளை விட பெண்ணை நான் ஓரளவு புரிந்துகொண்டுள்ளேன் என்பது ஆசுவாசத்தை அளிக்கிறது. பெண்மொழிகளை /உடல்மொழிகளை மொத்தத்தில் பேதமில்லா மொழிகளைப் புரிந்துகொண்ட சுகுணா போன்ற தமிழச்சியின் தோழர்கள் தமிழச்சியின் புரிதல்களின் எல்லைகளை ஓரளவிற்கேனும் விரிவுபடுத்தினால் என் போன்றவர்கள் சந்திக்க நேரிடும் அசூசை உணர்வு ஓரளவேனும் தவிர்க்கப்படலாம்.
0
ஜெயமோகனின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தமானவை. இவரது எல்லா எழுத்துக்களையும் தேடித் தேடி படிக்கும் வசீகரத்தை இவரது மொழி தன்வயப்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரியிலிருந்து நான்காவது கொலை வரை இவரின் எல்லா எழுத்துக்களையும் முழுமையாய் வாசித்திருக்கிறேன். கொற்றவை மட்டும் இன்னும் படித்து முடிக்கவில்லை.ரப்பர், காடு, திசைகளின் நடுவே, குறுநாவல் தொகுப்பு, அறிபுனைவு கதைகள் என எனக்குப் பிடித்தமான இவரின் பட்டியல்கள் நீளமானவை. இவரின் மிகப் பெரிய நாவல்களைக் கூட விலை கொடுத்து வாங்கித்தான் படித்திருக்கிறேன்/படிக்க வேண்டும் என்கிற தீவிர சிந்தனைகளும் இருக்கிறது.கம்யூனிசம் பற்றிய அறிமுகத்தை இவரது பின்தொடரும் நிழலின் குரலிலிருந்துதான் பெற்றுக்கொண்டேன் என்பது தீவிர சிந்தாந்தவாதிகளுக்கு கேலியாய் படலாம் ஆனால் என்னளவில் அதுதான் உண்மை.ஆனால் அதை ஒரு தொடக்கமாகத்தான் நான் புரிந்துகொண்டேனே தவிர தீர்க்கமானதாய் இல்லை.இருப்பினும் பொதுவெளியில் ஜெயமோகனின் பங்களிப்பு குறித்து எனக்கு பல்வேறுவிதமான மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன.வலை ஊடகத்தின் மீதான இவரின் ஏளனப் பார்வை,விருதுகள் பற்றிய மதிப்பீடுகள் மற்றும் சுந்தரராமசாமி கொடி என்பன போன்று பல்வேறு பங்களிப்பில் இவரின் அரசியல் எரிச்சலைத் தருகிறது.எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமிடையேயான இடைவெளிகளின் தூரத்தை நிரூபிக்கும் இன்னொரு எழுத்தாளனாகவே ஜெயமோகன் எனக்குப் படுகிரார். சா.கந்தசாமியின் எழுத்துக்கும் பேச்சுக்கும் இடையிலான வித்தியாசத்தை கறுப்பியும்,அசோகமித்திரனின் மீதெழுந்த கோபங்களை மதியும், ஜெயமோகனின் இயல் அரசியல்களை பகிரங்கப்படுத்திய டிசேவும், இணைய ஏளன விமர்சனங்களுக்கு வெகுண்டெழுந்த சன்னாசியும்,அனாதை ஆனந்தனையும் எனது முன்னோடிகளாகச் சொல்லலாம்.
ஒரு படைப்பாளியை நாம் ஏன் படைப்பாளியாகவே அணுகுவதில்லை?இவர் சிங்கத்தைப் போன்று நடக்கிறார்,புலியைப் போன்று உறுமுகிறர், டைனோசர் போல எழுதுகிறார், தீர்க்கமாய் பார்க்கிறார் என்பன போன்றெல்லாம் சிலாகிக்க வேண்டிய அவசியம் என்ன?தனிமனித துதிக்களை விட்டு நாம் வெளிவரவே முடியாதா?சுகுமாரனின் தனிமையின் வழி எனக்குப் பிடித்தமான கட்டுரைத் தொகுப்பு அதில் அவர் காட்டியிருந்த சுந்தர ராமாசாமி பக்தி எரிச்சலின் உச்சத்திற்கு என்னைக் கொண்டு சென்றது.கலைஞர்/ஜெயலலிதா அடிபொடிகளுக்கும், ரஜினி/விஜய் ரசிக குஞ்சுகளுக்கும், சுரா/ஜெமோ பக்தியாளர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?எவனையாவது ஒருத்தனை தலைவனாக்கி அவன் காலை வருடிக்கொண்டிருப்பதில் அப்படியென்ன திருப்தி?மணிகண்டன் போன்ற நுட்பமான கவிஞர்களுக்கும் இன்னமமும் ஷங்கரின் சுஜாதாதான் முகவரியா? இந்த சிந்தனைகள் ஏற்படுத்திய கடுப்பை எப்படிச் சொல்ல?
0
அச்சு ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்குமிடையேயான வேறுபாடுகள்/ மதிப்பீடுகள் மிகுந்த கசப்பைத் தருகிறது.அச்சு ஊடகங்களின் பங்களிப்பு காலாவதியாகிவிட்டடது என நான் தீர்க்கமாய் சொன்னால் நம் மிகப்பெரிய எழுத்தாளர்கள்/பதிப்பகத்தார் அடையும் அதிர்ச்சிகள் எந்த அளவு வலிமையோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இணைய எழுத்துக்களின் மேல் தொடர்ச்சியாய் வைக்கப்படும் சுஜாதா மற்றும் ஜெமோக்களின் திட்டவட்ட அறிவிப்புகளும்.இதை இதே சூழலில் இயங்கும் சக வலைப்பதிவர்களும் ஏற்றுக் கொள்வதும் சிலாகிப்பதும் எத்தனை பெரிய அபத்தம்? உதாரணத்திற்கு ஹரன் பிரசன்னாவின் சமீபத்திய பதிவில் ஏதோ சுஜாதாவைத்தான் எல்லாரும் காப்பி அடிக்கிறார்கள் என்பது போலச் சொல்வதெல்லாம் படு அபத்தமாகத்தான் படுகிறது.பல்வேறு விசயங்களைத் தொட்டிருக்கும் அவரது வலை ஆய்வு அச்சு ஊடகத்தை மட்டுமே பிரதானமாய் முன்னிருத்துவது ஏனெனத் தெரியவில்லை.அச்சில் இருக்கும் அதிகாரத்தன்மைகள், ஒற்றைச் சாளர குறைகள் களையப்பட்டுவிட்டன இனி வலைப்பதிவே இலக்கியத்திற்கான முன்னோடியாய் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.இலக்கியப் பிதாமகர்கள் என எவரும் இல்லை.எவரும் எதையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. உனக்குத் தெரிந்ததை நீ எழுது! எனக்குத் தெரிந்ததை நன் எழுதுகிறேன். இதுதான் இலக்கியம்.. இதுதான் வாழ்வு.பூனையின் உலகம் எனப் பகடி செய்வீர்களேயானால் நாளொன்றுக்கு அறுபது பேருக்கு குறையாதவர்களால் ஒரு வலைப்பக்கம் படிக்கப்படுகிறது உங்களின் எழுத்துக்கள் எத்தனை பேரால் படிக்கப்பட்டு உள்வாங்கப்படுகிறது ரீதியிலான விளம்பர ஆய்வுகளையும் செய்ய சித்தமாக உள்ளேன்.உங்கள் அச்சு இலக்கியவாதிகளின் காலம் காலாவதியாகிவிட்டது.மேலும் வலையில் சினிமாப் பொண்ணையாக்களாலும், ஜெமோக்களாலும், சுஜாதாக்களாலும் தாக்குப் பிடிக்கமுடியாதென்பது நிரூபணமான உண்மை. முடிவாய் ஆனந்தனின் சில வரிகளை மீள்பதிவிப்பதின் மூலம் இன்றைய கடுப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
இந்த மசிரான்கள் தான் நவீன தமிழிலக்கியத்தை கட்டிக் காப்பவர்கள் மற்றும் ஞானகுருக்கள் என்றால் ஓக்காளி இந்தத் தமிழ் நாசமத்துப் போகனும்
தொடர்புச் சுட்டிகள்
http://anathai.blogspot.com/2008/01/blog-post.html
http://nizhalkal.blogspot.com/2008/01/blog-post_21.html
http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_24.html
http://mathy.kandasamy.net/musings/archives/2007/08/16
http://karupu.blogspot.com/2007/05/blog-post.html
http://padamkadal.blogspot.com/2008/01/blog-post_11.html
http://thamizachi.blogspot.com/2008/01/blog-post_9536.html
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
42 comments:
அய்யனார், கோபம் கொப்பளிக்க ஒரு பதிவு, அதுவும் கடைசி பத்தி.. ஹ்ம்ம் நாசமத்து போவட்டுங்கிறது. அவரவர்க்கு அவரவர் படித்தது பெரிது. இதுல அளவு கோல் ஏதுங்க.
அய்யனார் சரியா சொன்னீங்க தமிழச்சி பார்ப்பவர்களை எப்பிடியாவது ஆபாச தலைப்புகள் மூலம் கவர நினைக்கிரா பெரியரை நான் குறை சொல்லவில்லை பெரியாரின் சீடன் என கூறும் சிலர் தான் எப்பிடி
அய்யனார் நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகளை பார்த்த பிறகு "உங்கள் கடுப்பில் நானும் கலந்துகொள்கிறேன்" என்றே சொல்லத்தோன்றுகிறது. தமிழச்சியை பற்றி பேசினால் "டேய்" என்று ஏகவசனத்தில் திட்டு விழலாம் அல்லது ஓசை செல்லா போன்ற அவருடைய கலகக்கார தோழர்கள் அரைவேக்காடுகள் என்று அர்ச்சிக்கலாம், இருப்பினும் கூட தமிழச்சியை பற்றி சரியான பார்வையை இங்கு முன் வைத்திருப்பதற்கு முதலில் எனது பாரட்டுக்கள், அடுத்து இந்த இலக்கிய புலி ஜெயமோகன் வலைப்பூக்களை அலட்சியப்படுத்துவதன் பின்னுள்ள அரசியலையும் கூட இங்கு சரியாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், உயிர்மை போன்ற இலக்கிய ஆதினங்களின் நிழலில் பதுங்கிக்கொண்டு, அவர்களால் அங்கீகரிக்கப்படுபவர்கள்தான் நல்ல எழுத்தாளர்கள் என்று போதிக்க முற்படுகிறது இந்த இலக்கிய புலி., இந்த இலக்கிய தூதர்கள் மின் ஊடகத்தில் வந்து இறங்குவார்களேயானால் அவர்களது பிம்பமும் கூட உடைபட்டுப்போகும் என்பதையும் அழகாக வெளிபடுத்தியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!!
தோழமையுடன்
ஸ்டாலின்
என்னாச்சு அய்யனார், பயங்கர வெப்பம்? ஆனாலும் உங்கள் கோபத்தின் பின்னுள்ள தார்மீக அறவுணர்ச்சியைப் (ஆனால் இந்த 'தார்மீக அறம்' மாதிரியான வார்த்தைகளை காலச்சுவடு கண்ணன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களெல்லாம் உபயோகிக்க ஆரம்பித்து ஆரம்பித்து அதைப் பயன்படுத்தவே தயக்கமாகவும் கூச்சமாகவுமிருக்கிறது.) புரிந்துகொள்கிறேன்.
/பெண்மொழிகளை /உடல்மொழிகளை மொத்தத்தில் பேதமில்லா மொழிகளைப் புரிந்துகொண்ட சுகுணா போன்ற தமிழச்சியின் தோழர்கள் தமிழச்சியின் புரிதல்களின் எல்லைகளை ஓரளவிற்கேனும் விரிவுபடுத்தினால் என் போன்றவர்கள் சந்திக்க நேரிடும் அசூசை உணர்வு ஓரளவேனும் தவிர்க்கப்படலாம்./
நானும் முழுமையாகப் புரிந்துகொண்டேனா என்று தெரியவில்லை. ஆனாலும் இப்போதைக்கு யாருக்கும் டியூஷன் எடுக்கும் எண்ணம் எதுவும் எனக்கில்லை. ((-. மேலும் இணையத்தில் உங்களுக்குத் தமிழச்சி எப்படியோ அப்படித்தான் எனக்கும். தமிழச்சி குறித்து கருத்து சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளலாமென்று எனக்கு (எனக்கு மட்டும்தான்) தோன்றுகிறது. ஆனால் இப்போதைய பரிந்துரை, இப்போதுதான் 2008 தொடங்கியிருக்கிறதென்றாலும் 2008ன் கன்பைட் காஞ்சனா விருதைத் தோழர் தமிழச்சிக்கு வழங்கலாம் என்பது என் தாஆஆஆஆழ்மையான கருத்து. ((-.
/கம்யூனிசம் பற்றிய அறிமுகத்தை இவரது பின்தொடரும் நிழலின் குரலிலிருந்துதான் பெற்றுக்கொண்டேன்/
விளங்கும்டா, அப்புறம் குணாவிலிருந்து பெரியாரைக் கற்றுக்கொள்ளலாம், அரவிந்தன் நீலகண்டனிடமிருந்து இஸ்லாம் பற்றிக் கற்றுக்கொள்ளலாம். உங்களை மாதிரியான ஆட்கள் ஜெயமோகனைப் 'படைப்பாளி' என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதன் இன்னொரு விளைவுதான் இந்த கோபம் என்பது என் புரிதல். கம்யூனிசம் குறித்தோ கம்யூனிச இயக்கங்கள் குறித்தோ யாரும் விமர்சிக்கலாம் என்பது ஒருபுறமிருக்க, 'பி.தொ.நி.கு' கம்யூனிச இயக்கங்களின் நடைமுறைகள் குறித்த் எந்த அறிவுமில்லாமல் உளறப்பட்ட வன்மவாந்தி. அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி ஞானக்கூத்தன் போன்றவர்களை ரசிக்க முடிகிற என்னால் சு.ராவையோ ஜெ.மோவையோ ரசிக்கமுடியவில்லை. ஆனால் இதைச் சொன்னால் அது வெறுமனே அரசியல் வெறுப்பாகவோ அதிரடி ஸ்டேட்மெண்டாகவோ புரிந்துகொள்ளப்படுகிறது, என்ன செய்ய?
/ஒரு படைப்பாளியை நாம் ஏன் படைப்பாளியாகவே அணுகுவதில்லை?இவர் சிங்கத்தைப் போன்று நடக்கிறார்,புலியைப் போன்று உறுமுகிறர், டைனோசர் போல எழுதுகிறார், தீர்க்கமாய் பார்க்கிறார் என்பன போன்றெல்லாம் சிலாகிக்க வேண்டிய அவசியம் என்ன?தனிமனித துதிக்களை விட்டு நாம் வெளிவரவே முடியாதா?சுகுமாரனின் தனிமையின் வழி எனக்குப் பிடித்தமான கட்டுரைத் தொகுப்பு அதில் அவர் காட்டியிருந்த சுந்தர ராமாசாமி பக்தி எரிச்சலின் உச்சத்திற்கு என்னைக் கொண்டு சென்றது.கலைஞர்/ஜெயலலிதா அடிபொடிகளுக்கும், ரஜினி/விஜய் ரசிக குஞ்சுகளுக்கும், சுரா/ஜெமோ பக்தியாளர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?/
இதைத்தானய்யா நான் சு.ரா பற்றிச் சொன்னப்ப சண்டைக்கு வந்த? (சித்தார்த்தும் கூட)
/இந்த மசிரான்கள் தான் நவீன தமிழிலக்கியத்தை கட்டிக் காப்பவர்கள் மற்றும் ஞானகுருக்கள் என்றால் ஓக்காளி இந்தத் தமிழ் நாசமத்துப் போகனும்/
((-. யாரோ உன்னைக் கெடுத்துருக்காங்க ((-. அதெல்லாம் இருக்கட்டும், தமிழச்சி கிசுகிசு எழுதறாங்கன்னு கோபப்பட்ட நீ உன்னைப் பத்திக் குசும்பனை வச்சு கிசுகிசு எழுதச்சொன்னது நியாயமா? ((-. 'அயித்தையும் மாமனும் சுகம் தானா, ஆத்துல மீனும் சுகம்தானா'ன்னு பாட ஆரம்பிச்சாச்சா?
//ஹரன் பிரசன்னாவின் சமீபத்திய பதிவில் ஏதோ சுஜாதாவைத்தான் எல்லாரும் காப்பி அடிக்கிறார்கள் என்பது போலச் சொல்வதெல்லாம் படு அபத்தமாகத்தான் படுகிறது.//
வன்மையாகக் கண்டிக்கிறேன் அய்ய்னார். ஹரன் பிரசன்னாவின் பதிவில் **இது** மட்டுமே அபத்தம் என்பது போல எழுதியிருப்பதை
சாத்தான்குளத்தான்
//குணாவிலிருந்து பெரியாரைக் கற்றுக்கொள்ளலாம், அரவிந்தன் நீலகண்டனிடமிருந்து இஸ்லாம் பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.//
அது :-))))
//இதைத்தானய்யா நான் சு.ரா பற்றிச் சொன்னப்ப சண்டைக்கு வந்த? (சித்தார்த்தும் கூட)//
ஆமா. ஜெமோன்னா ரெண்டு போடலாம். சுரான்னா விட்டுடணும் சுஜாதான்னா ஒண்ணு குடுக்கலாம்ன்னு திட்டுறதுக்கும் அளவுகோல் வச்சிருக்காங்க.
ஜெமோவைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அவர் நல்லவர் வல்லவர் என்று நாலுவார்த்தை டிஸ்கி போட்டுத்தான் திட்ட வேண்டுமென்ற தமிழ் வலைப்பதிவுலக மரபையும் மீறவில்லை இந்த எல்லையோர காவல் தெய்வம் :-)
சாத்தான்குளத்தான்
இளா
இதுவும் என் அளவுகோல்தான்..
ஸ்டாலின்
தமிழச்சிக்களை விட செல்லாக்கள் ஆபத்தானவர்கள் ..எல்லாவற்றும் வாழ்க! (குறிப்பாய் பெண்களுக்கு)போடும் இவர்களாலேதான் சம்பந்தப்பட்டவர்கள் ஒரே இடத்தில் தேங்கும் அல்லது தான் உளறிக்கொட்டுபவைகளின் மீது அசைக்கமுடிய நம்பிக்கைகளும் பிடிவாதமாய் ஏற்பட காரணங்களாகவும் இருக்கின்றனர்..
பகிர்வுக்கு நன்றி
சுகுணா
அந்த சுரா சண்டையை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது.எத்தனை குழந்தைத் தனமாக இருந்தேன் என்பதை இப்போது நினைக்க வெட்கமாக இருக்கிறது.தொடர்ச்சியான வாசிப்புகள் என்னை நகர்த்திக் கொண்டே இருக்கிறது.. நான் வளர்கிறேனே சுகுணா தான் :)
குசும்பர் செயதது திட்டமிட்ட சதி எந்த வகையிலும் நான் சம்பந்தப் படவில்லை :)
அண்ணாச்சி
எந்த ஒன்றையும் முற்றாக புறந்தள்ளமுடியாது இல்லையா?ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் ஜெமோ வின் புனைவுகளின் மீது எனக்கு விருப்பம் இருப்பதென்னமோ உண்மை.ஒருவேளை இது மாறவும் கூடும்..எந்த ஒன்றையும் மேம்போக்காக அணுக நான் விரும்புவதில்லை..என்னளவில் எப்போது பொய்க்கிறதோ அப்போது எவ்வித மானே! தேனே! பொன்மானே!க்களுமில்லாதவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம்....
//உனக்குத் தெரிந்ததை நீ எழுது! எனக்குத் தெரிந்ததை நன் எழுதுகிறேன். இதுதான் இலக்கியம்.. //
அய்யனார், எனது நம்பிக்கையின்மையை நான் எழுதினேன். உங்கள் நம்பிக்கையை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். எனது நம்பிக்கையின்மையின்மீது உங்களுக்கு கடுப்பு ஏற்பட வழி உண்டென்றால், உங்கள் நம்பிக்கையின்மீது அலுப்புக் கொள்ள எனக்கு வழி உண்டு. அதன் வெளிப்பாடே என் பதிவு. எனது எண்ணம்போல் வெறும் டைரிக்குறிப்பாக அமையாமல், உங்கள் நம்பிக்கை போல் வலைப்பதிவுகள் அச்சுலகத்தைப் புரட்டி, இலக்கியத்தின் புதிய வீரியமிக்க முகமாக விளங்குமானால், உள்ளபடியே மகிழ்ச்சிதான். மாறாக நான் சொல்வதுபோல் மீந்துவிட்டால், நிச்சயம் வருத்தமே அன்றி மகிழ்ச்சி அல்ல. வலைப்பதிவுலகம் அதன் வீச்சை சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்பதே என் எண்ணம்.
எல்லாரும் சுஜாதாபோல் என்று சொல்லவில்லை. பல வலைப்பதிவர்கள் என்பதே நான் சொன்னது, அதை இப்போதும் நம்புகிறேன். அதற்காக, உங்கள் எழுத்தையோ பி.கே.சிவகுமார், ரோசா வசந்த், பெயரிலி போன்றவர்களின் எழுத்தையோ சுஜாதாவின் எழுத்துப் போல் இருக்கிறது என்று நான் சொல்ல நினைப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். (நீங்கள் அப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றும் நான் சொல்லவில்லை. :) )
இங்கு சொல்வது கூட வாதத்திற்காக அல்ல, எனது கருத்தை நான் சொன்னேன், உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள் என ஏற்று, அதன் ஒரு பகுதியாக மட்டுமே.
உங்கள் க(டு)ருத்துக்கு மிக்க நன்றி. :)
அய்யனார், உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வரும் சக பயணி நான். இதுவரை பின்னூட்டம் எழுதியதில்லை. உங்கள் பதிவை படித்துவிட்டு ஆழ்ந்து புகைப் பிடிக்க மட்டுமே விரும்பினேன். என்னை பொறுத்தவரை அந்த மன எழுச்சியும், புகையுமே தங்கள் பதிவுக்கு நான் செலுத்தும் மரியாதையாக நினைக்கிறேன். எழுத்தின் தீவிரத்தை விட மனதின் உக்கிரம் முக்கியம். எழுத்து, இரவலானது. அடுத்தவர்களின் வார்த்தைகளே நமக்கான வார்த்தைகளை உற்பத்தி செய்கின்றன. மனம் அப்படியில்லை. மனமே இல்லை என்பதை உணர்ந்து கொண்ட மனதின் தீவிரம் அபாரமானது. கலவையானது. சிக்கலானது. சிடுக்கு நிறைந்தது. மனமும் இரவலானதுதான் என்றாலும் சிதைந்த மனதில் நொறுங்கிக் கிடக்கும் பிம்பங்களை ஒரே நேரத்தில் பார்க்கும் சந்தோஷம் ஆர்கஸத்தைவிட உச்சமானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கை கூடாதது. அப்படி பார்த்த பிம்பத்தை இருக்கும் வார்த்தைகளுக்குள் அடக்க முயல்வதையே இந்த நூற்றாண்டின் வாக்கியங்களாக நினைக்கிறேன். அந்த வாக்கியங்களின் சாலையில் ஊறும், நடக்கும், பறக்கும் வார்த்தைகளை தூண்டிலிட்டு பிடிக்கும் திறமை உங்களுக்கு இருக்கிறது.
ஆனால், இந்தப் பதிவு எனக்கு வருத்தத்தை தருகிறது நண்பா. உங்கள் கோபம், ஆற்றாமையை குறித்து நான் விமர்சிக்கவில்லை. அப்படி விமர்சிப்பது நண்பனை இழிவு படுத்துவதற்கு சமம். மதிக்கிறேன் நண்பா. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.
ஆனால்... அரசியல் தத்துவம் என்பதுபோல், தத்துவ அரசியல் என்பதுபோல், புரிந்து கொள்வதும் அரசியல் சார்ந்ததுதான். தோழர் தமிழச்சியின் புரிதல் குறித்து பதிவு எழுத வேண்டிய அவசியமில்லை. அவரது பதிவை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு அது தெரியும். அதற்காக உங்கள் வார்த்தைகளை செலவு செய்திருக்க வேண்டாம். டைப்பிஸ்ட் என்ற வார்த்தையை வழிமொழிந்ததும் வன்முறையாகத்தான் தெரிகிறது. பெரியாரிய சிந்தனையை உள்வாங்கவும் முடியாமல், பூர்ஷ்வா வாழ்க்கையை விடவும் முடியாமல் தோழர் தமிழச்சி தத்தளித்துக் கொண்டிருக்கிறார். எந்தக் கரையில் அவர் ஒதுங்குவார் என்று தெரியாத நிலையில் - விரைவில் பூர்ஷ்வா நிலைக்கு கரை சேர்ந்து விடுவார் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன - எதற்காக ஒரு பதிவை வீணாக்குகிறீர்கள்? குழு மனப்பான்மை ஊற்றெடுக்கும் தருணம் இது. கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் ஆதரவு, எதிர்ப்பு என்பதான எல்லைகளுக்குள் சிக்கி, உங்கள் வார்த்தைகள் புதையும் அபாயமிருக்கிறது.
எல்லாவற்றையும் பகடி செய்து பார்க்கும் சிதைந்த மனது சுகுணாவுக்கு உண்டு. கன் பைட் காஞ்சனா என ஒரே வார்த்தையில் கடந்து சென்றுவிட்டார்.
சக மனிதனை வழிபடும் தருணங்கள் எல்லோருக்கும் வந்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றிலிருந்து எல்லோருமே ஒரு கட்டத்தில் விலகுவார்கள். விலகுவதற்கான அவகாசத்தையும், விலக வேண்டியதன் அவசியத்தையும் உணர வைப்பது தார்மீக அறநெறி! (நன்றி சுகுணா!). அதை மணிகண்டனின் பின்னூட்டத்திலேயே குறிப்பிட்டு விட்டீர்கள். பிறகும் இந்தப் பதிவு அவசியமா நண்பா?
அநேகமாக இந்தப் பின்னூட்டத்தை நான் உங்களுக்கு எழுதி முடிப்பதற்குள் இரண்டு, மூன்று பதிவாளர்களாவது இதை குறித்து பதிவு எழுதி தமிழ் மணத்தில் வெளியிட்டிருப்பார்கள்.
சரி, இந்த வார பரபரப்பு உங்களிடமிருந்து ஆரம்பித்திருக்கிறது!.
அய்யனார் உங்கள் வார்த்தைகளிலிருந்து வெளிப்படும் வீச்சு, உங்கள் கோபத்தின் அளவை எனக்கு புரிய வைக்கிறது.
//1.கருப்பு நிற ஆடை அணிவது..
2.உடையில் பெரியார் அல்லது சேகுவாராவின் உருவத்தை பதிந்துகொள்வது
3.தோழர்,புரட்சி,வெங்காயம் என்கிற சொல்லாடல்களை சம்பந்தமே இல்லாமல் திரும்ப திரும்ப பேச்சு வழக்கில் நுழைப்பது...
4.எங்காவது ஓரமாக நின்று நோட்டிஸ் கொடுத்துவிட்டு பெரிய சீர்திருத்ததை செய்ததாய் புளகாங்கிதம் அடைவது,அதை போட்டோ எடுத்து கண்ணில்பட்டவர்களுக்கெல்லாம் அனுப்பி வைப்பது..
5.பெண்,பெண்ணியம் எனக் காதில் விழுந்த சொற்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு நூல் விடுவது.//
இந்த வரிகளுக்கே ஒரு பெரிய்ய சபாஷ் போட வேண்டும்.
பதிவைப் பற்றி எழுத்தாளர்களை ஆதர்ஷ புருஷர்களாய் நினைக்கும் மன நிலையைப் பற்றி, இன்னும் பல விஷயங்களைப் பற்றி இன்னும் நிறைய்ய பேச வேண்டி இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் திரும்ப பெரிய்ய பின்னூட்டத்துடன் வருகிறேன். இப்பொ ஆணிகள்....
விரைவில் உங்களின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவை போடுங்கள்...
அதற்காக தானே இந்த பதிவுன்னு எல்லாம் சொல்லக்கூடாது..;)))
அய்யனார்,
சாதாரணமா இந்தப்பக்கமெல்லாம் வரமாட்டேன்.(இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்னவேலை:-) இன்னிக்கு
அதிகமா இந்தப் பக்கமெல்லாம் வரமட்டேன். வந்து,படிச்சு கொஞ்சம் புரிஞ்சும்போகவே ஒரு சின்ன விளம்பரம்:-)
//ஒரு படைப்பாளியை நாம் ஏன் படைப்பாளியாகவே அணுகுவதில்லை?இவர் சிங்கத்தைப் போன்று நடக்கிறார்,புலியைப் போன்று உறுமுகிறர், டைனோசர் போல எழுதுகிறார், தீர்க்கமாய் பார்க்கிறார் என்பன போன்றெல்லாம் சிலாகிக்க வேண்டிய அவசியம் என்ன?தனிமனித துதிக்களை விட்டு நாம் வெளிவரவே முடியாதா//
கிட்டத்தட்ட இதே சிந்தனையை என் சாதாரண மொழியில் சொன்னது
http://kasilingam.com/?item=90
எச்சரிக்கை: பலருக்குப் பிடிக்காத இடுகையும்கூட.;-)
பிரசன்னா
உங்களின் வலை ஆய்வுகள் குறித்தான பல விசயங்களில் என்னால் ஒத்துப்போக முடிந்தது.சுஜாதாவையும், அச்சு ஊடகங்களைப் பிரதானப் படுத்தியிருந்து மட்டுமே எனக்கு நெருடலைத் தந்தது.உங்களின் புரிதல்களுக்கு நன்றி நீங்கள் எழுதுவது டைரிக்குறிப்புகள் என நீங்கள் சொல்லிக்கொண்டாலும் அவை சிறந்த இலக்கிய வடிவங்களாகத்தான் எனக்குப் படுகிறது.. மேலும் டைரிக்குறிப்புகளில் இருக்கும் நேர்மையின் முன் பிரதான இலக்கியங்கள் பெரிதானதில்லை என்பது துணிபு.
பைத்தியக்காரன் உங்களின் அக்கறையும் அன்பும் நெகிழ்வுத் தன்மைக்கு என்னைத் தள்ளுகிறது.தமிழச்சியின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது என் நோக்கமல்ல.. மேலும் அவர் இயங்கும் தளம் என்னால் புறக்கணிக்க முடியாத ஒன்றாய் இருந்தது.. அதனால்தான் தொடர்ச்சியாய் அவரின் செயல்பாடுகளை கவனித்து வரும்போதெல்லாம் ஏற்பட்ட கசப்புகளை முழுவதுமாய் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாது தள்ளிப் போட்டேன்..நமக்கான சிந்தனைகள் இயல்பிலே முழுவதுமாய் வளர்ச்சி அடைந்ததில்லை.. நாம் கற்கும், விஸ்தரிக்கும் எண்ணங்களே நம்மை வளர்த்தெடுக்கிறது என் எதிர்வினைகளும் அவரின் புரிதல்களை ஆழமாக்க உதவுமெனில் நான் மிகவும் மகிழ்வேன்..
மணிகண்டனைக் குறித்துப் பேசியிருக்க தேவையில்லைதான் இருப்பினும் மணிகண்டனைப் போலவேதான் ஒருவருடத்திற்கு முன்பு நானும் இருந்தேன்..சுகுணாவின் பகடிகள் தனிமனித துதிக்களை புரிந்து கொள்ள ஏதுவாய் இருந்தது.மேலதிகமாய் நேற்று தொடர்ச்சியான இந்த சிந்தனைகள் ஏற்படுத்திய அலக்கழிப்பின் உச்சம் அல்லது வெகு நாட்களாய் தேங்கி கிடந்தவைகளின் வெளிப்பாடாக இப்பதிவு அமைந்துவிட்டது.வார இறுதிகளில் பார்ப்பதற்காக சேமித்த திரைப்படங்கள் பிரிக்காமல் மூலையில் கிடப்பதை உங்களின் பின்னூட்டம் நினைவுபடுத்தி வெட்கம் கொள்ளச் செய்கிறது..நன்றி...
நந்தா புரிதலுக்கு நன்றி
காசி
உங்களின் சுட்டியைப் படித்தேன் ..முன்பே படித்திருந்தால் இன்னும் இயல்பாய் எழுதிருக்க முடிந்திருக்கும் எனத் தோன்றிற்று..இந்தத் தனிமனித துதிக்களை மூடநம்பிக்கையில் சேர்த்திருப்பது பாராட்டுக்குறியது ..நன்றியும் அன்பும்
தெரியாத்தனமா இந்தப் பக்கம் வந்துட்டேனோ? சத்தியமா டவுசர் கிழிஞ்சி, தாவூ தீருது!!!
தோழர் பைத்தியக்காரனின் பின்னூட்டத்தை படித்தேன். சுடலைமாடன், பெயரிலி வகையறாக்களை விட அற்புதமாக எழுதியிருக்கிறார். இன்னும் நான்கைந்து முறை படித்தால் தான் புரியுமென்று தெரிகிறது. படித்துவிட்டு இன்னொரு பின்னூட்டம் பொடுகிறேன்.
//வன்மையாகக் கண்டிக்கிறேன் அய்ய்னார். ஹரன் பிரசன்னாவின் பதிவில் **இது** மட்டுமே அபத்தம் என்பது போல எழுதியிருப்பதை//
ஆசிப் அண்ணாச்சி!
ஏன் இந்த பக்கம் வந்தேள்? அங்கே வாங்கோ கும்மியடிக்கலாம் :-)
தொடர்ந்து உங்கள் பக்கத்திற்கு வந்தாலும் பின்னூட்டமிடுவதில்லை.
//வார இறுதிகளில் பார்ப்பதற்காக சேமித்த திரைப்படங்கள் பிரிக்காமல் மூலையில் //
விரைவில் தங்களது பிரிக்கப்பட்ட உலகத்திரைப்பட விமர்சனமோ அல்லது விழித்திருக்கும் புத்தகம் பற்றிய ஒரு கவிதையையோ படிக்க ஆவல்...
பெரியாரின் சீடி செய்யும் யோனிப் புரட்சி தமிழ்மணத்தை நாறடிக்கிறது
கொஞ்சம் லேட். அதுக்குள்ள
இவ்வளவா?
//தமிழச்சிக்கான எதிர்வினைகள் எத்தனை அவசியம்?என்றெல்லாம் யோசித்துப் பார்த்து எழுதும் மனநிலையில் இல்லை. இருப்பினும் மேம்போக்கான வறட்டுக்கூச்சலுக்கு, விளம்பர மோகத்திற்கு, மூலத்தை சிதைக்கும் அபத்தங்களுக்கான எதிர்வினைகளை வைத்தேயாகிவிடுவது என்ற நிலைக்குத் தள்ளியது என் உள்வெளி//
அவரின் கடந்த சில பதிவுகளைப் படித்துவிட்டு என் பிறழும் மனம், அந்த பக்கம் இனி தலைவைத்தால்... என்று என்னையே எச்சரித்துக்கொண்டிருந்தது. புரிதலுக்கும் புரிந்தததாக நினைத்துக்கொண்டு தடம் மாறும் பயணத்துக்கான அல்லாடலில் அவர் இருப்பதையே காட்டுகிறது. உங்கள் கடுப்பு சேர்ந்திசை கடுப்பு.
//ஜெயமோகனின் எழுத்துக்கள் எனக்குப் பிடித்தமானவை. இவரது எல்லா எழுத்துக்களையும் தேடித் தேடி படிக்கும் வசீகரத்தை இவரது மொழி தன்வயப்படுத்தியிருக்கிறது//
சு.ரா.சண்டையில் எப்படி குழந்தைத்தனமாக இருந்தீர்களோ... அதை இன்னுமொருமுறை சில கால இடைவெளியில் இவரிடமும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
நன்றி.
என்னய்யா இது ஆந்திரா ஸ்பைசி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி செம காரம்!
ஏதும் உதவி வேண்டும் என்றால் கூப்பிடு ராசா!:)
அப்புறம் சுகுணா கிசு கிசுவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை சும்மா போகிற போக்கில் கொலுத்தி போட்டு விட்டு போவதுதானே!
அய்யனாரு கடுப்புல கையில அருவாள எடுத்துக்கிட்டு கம்பீரமா கிளம்பீட்டாப்போல. நாமல்லாம் இனி எங்க தாக்குப் பிடிக்கறது.விடு ஜூட்..
//உங்கள் எழுத்தையோ பி.கே.சிவகுமார், ரோசா வசந்த், பெயரிலி போன்றவர்களின் எழுத்தையோ சுஜாதாவின் எழுத்துப் போல் இருக்கிறது என்று நான் சொல்ல நினைப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். //
பிரசன்னா,
இவர்கள் சுஜாதவைப்போல எழுதவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டடும். சந்தடி சாக்கில் பி.கே. எஸ்.ஐ, பெயரிலி, ரோசாவசந்தோடு ஒரே தட்டில் வைத்துவிட்டீர்களே. பெயரிலியின் மொழி நடையும், ரோசாவின் தர்க்கத் திறமையும், தலைகீழ் நின்று தண்ணி குடித்தாலும் பி.கே. எஸ்.க்கு வராது. அவருக்கு வாய்த்ததெல்லாம் தகரடப்பா சத்தமும், எலிமெண்டரி ஸ்கூல் தரத்து தம்பட்டமும் தான்.
ஐயனார்,வணக்கம்!
தங்கள் பதிவும் அதற்கான பின்னூட்டுக்களும் தமிழச்சிமீதான-அவர்சார்ந்த மதிப்பீட்டு- ஒருவகை எதிர்பார்ப்பிலிருந்து முன்வைக்கப்படுவதுபோன்ற தோற்றத்தைத் தருகிறது.
இஃது, முற்றிலும் தனிநபர்சார்ந்த மதிப்பீடுகளால் உருவாகிறது.
ஒருவரை அவரது பலம் பலவீனத்தோடு ஏற்பதும்,அவரது அநுபவத்தை மேலும் விரிவாக்குவதற்குமான நோக்கத்தின் புள்ளியிலிருந்து அணுகும்போது முன் தீர்ப்புகள் எழ நியாயமில்லை!
தமிழச்சி தனித்தியங்கி வருவதும்,அதீத தன்முனைப்புச்சார்ந்து கருத்துக்களை முன்வைக்கும் தரணங்களும் சூழலால் உருவாகிறது.
அவரது சூழலைப் புரிவதும்,அதுசார்ந்து மதிப்பிடுவதும் நிபந்தனைகளோடு கருத்துக்களைப் பகிர்வதும் அவசியமானதொரு உண்மையாகும்.இதைத் தவிர்த்தபடி ஒரு சட்டகத்துள் அவரைத் தள்ளிவிட முனையும் எழுத்துக்கள் புறநிலையை-சூழலை மதிப்பிடாத அவசர எதிர்வினைகளாகவே இருக்கும்.
இதற்கான உதாரணங்கள் பல இருக்கின்றன.
மேற்கு-கீழத்தை என்ற சிந்தனைத் தளத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள் கீழத்தேய மனிதரை கோபக்காரர்களாகவும்,இலகுவில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் தயாரித்த நிலைமைகளை விழி முன் நிறுத்திப் பார்க்கவும்.
விளைவின் மறுவிளைவை ஒதுக்கிவிட்டுத் தனிநபர்களின் சமூகப் பாத்திரத்தை மிகைப்படுத்திக்கொள்வது இயல்புக்கு மாறானது- நாம் மீள்வதெப்போ?
ஸ்ரீரங்கன்.
//கம்யூனிசம் பற்றிய அறிமுகத்தை இவரது பின்தொடரும் நிழலின் குரலிலிருந்துதான் பெற்றுக்கொண்டேன் என்பது தீவிர சிந்தாந்தவாதிகளுக்கு கேலியாய் படலாம் ஆனால் என்னளவில் அதுதான் உண்மை.//
உண்மையை சொன்னதற்கு பாராட்டுகள். சொல்லப்போனால், நீங்கள் சொல்வதுதான் சரியான முறை. அறிவை விமர்சனத்தின் மூலமே அடைய முடியும். பெரியாரை யார் விமர்சனம் செய்திருக்கிறார்களோ அவர்களை எல்லாம் படிப்பதன் மூலமே பெரியாரை பற்றிய சுதந்திரமான தனிப்பட்ட உங்கள் பார்வையை அடையமுடியும். இல்லையென்றால், படிப்பதற்கும் மனனம் செய்வதற்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். ஒரு புத்தகத்தை படிக்கும்போது மனத்தில் தொடர்ந்து எதிர்வாதங்கள் எழுந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் புனித பிம்ப உருவாக்கமே நடைபெறும்
தலித்தான எங்க தாத்தா வெள்ளைக்காரனுக்கு அடிதாங்கி பின்னர் செல்வச் செழிப்பாகி கிறித்துவா மாறினான், எங்க ஆத்தாவை வெள்ளைக்காரனுக்கு கூட்டிக்கொடுத்து வேலிக்கணக்கா வெள்ளைக்காரன் கொடுத்த காசிலே நிலம் வாங்கினான். எங்க அப்பன், சித்தப்பன் எல்லாம் ரொம்ப நல்ல பசங்க. எனவே எங்க குடும்பமே இந்திய தேசிய விடுதலைக்கு உழைத்தது என்று எழுதலாம். அப்படியே எங்க ஆத்தா போட்டிருந்த ஜட்டியை எவனோ(புலி?) தூக்கிட்டு போயிட்டான் என்றும் எழுதினால் அவந்தான் சிறந்த பீநவீனத்துவ வாதி. செந்தழல் ரவி மாதிரி.
நான் ஒரு பறையன், என்னை தலித்துன்னு திட்டிட்டானுங்க என்று நமக்கு நாமே நம் பின்னூட்டத்தில் போட்டுக்கலாம். அப்படி போட்டுக்கொண்டால் நம் மேல் அனுதாபம் அதிகமாகி எல்லாரும் பாசத்தினை பொழிவார்கள். இதற்கு முன்னர் நாம் விரல்களால் காமம், பேஸ்ட் மேல பிரஸ் ஏறுவது, வீக் எண்டு செக்ஸ் ஜோக், வீக் எண்டு செக்ஸ் கதை இப்படி காமாந்தரமா எழுதி இருந்தாலும் இந்த இளிச்சவாய் மக்கள் சுத்தமா மறந்துடுவாங்க. அப்படியும் மறக்காம ஒன்றிரண்டு பேர் கேள்வி கேட்டா "தமிழ் ரெடி" இங்கிலீஷ் ஜூட்டுன்னு சொல்லிக்கலாம். தமிழே எழுதத் தெரியாத பூலாபிள்ளைதான் தமிழ் மொழிக்கே கடவுள், அவந்தான் நம் மொழியையே கண்டு பிடித்தான் என்று பாராட்டி பதிவுகள் போடலாம். இதன்மூலம் சிறந்த தலித்திய சிந்தனையாளர் ஆகலாம். ஓசை செல்லா மாதிரி.
நான் ஒரு வன்னியன், இந்த ஜாதியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன். எங்கள் வன்னிய ஜாதி பறையன் பள்ளனை விட படு கேவலமான நிலையில் இருக்கானுங்க. இல்லாததையா எழுதறேன்? எங்க வன்னியஜாதி ரொம்ப மோசமான நிலையில இருக்கு, பீ அள்ளுறானுங்க. எனவே எங்க வன்னிய ஜாதியை மேம்படுத்த நான் ஜாதி சார்பாக எழுதுவதில் என்ன தவறுன்னு கேட்கலாம். அப்படியே மரம்வெட்டி ராமதாசை பெரிய அய்யா என்றும் அவனோட மகன் அன்புமணியை சின்ன அய்யா என்றும் தைலாபுரம் தோட்டத்தை கோவில் என்றும் எழுதினால் னின்னும் சிறப்பு. பெரியார், திராவிடர் என்று வலைப்பதிவுகளில் தாவுதீர கத்திவிட்டு பொண்டாட்டியை அழைத்துக் கொண்டு மாரியம்மன் கோவில் சென்று நெத்தியில் பட்டையுடன் காட்சி தரலாம். நம்ம ஜாதிக்காரன் எவனாச்சும் திரட்டில இருந்தா அவனை வெச்சு நமக்கு பிடிக்காத பதிவுகளை எல்லாம் தூக்கிடலாம். ராமதாசு பேரன் பேத்தியை மேட்டர்டேயில் படிக்க வெச்சானே என்று எவனாச்சும் முழிச்சுக் கொண்டு கேள்வி கேட்டால் போடா கேப்மாறி, போடா மொள்ளை மாறி, நீ குலத்தினை கெடுக்க வந்த கோடாறிக் காம்பு என்று படை திரட்டி அவனை திட்டலாம். இதன்மூலம் நாம் பெரிய இலக்கியவாதியாக மாறிவிடலாம். குழலி புருஷோத்தமன் மாதிரி.
தமிழச்சியைப் பற்றிய தரக்குறைவான இந்த பதிவுக்கு ஓசை செல்லா, செந்தழல் ரவி, குழலி புருசோத்தமன் ஆகிய மூவரிடம் இருந்தும் உங்களுக்கு கொலை மிரட்டல்தான் வரப்போகிறது அய்யனார் விஸ்வநாதன் அவர்களே.
நீங்கள் சொல்வது ஒரளவு சரியே..
பெரியார் கருத்து சொல்கிறேன் என வந்த தமிழச்சி அரம்பிக்காலத்தில் நன்றாக எழுதிவந்தார்... காலப்போக்கில் மாற்றம் தெரிந்தது... ஆன் குறி, பென் குறி, ஆணாதிக்கம், யோனி என்ற சொல்லாடல்களே பெரியாரிசம் என்ற தவறான முடிவுக்கு வந்துவிட்டார்.. இப்போது அவைகளை பற்றியே எழுதுகிறார். பெண் என்று சப்பைக்கட்டு கட்டிகொண்டு பாசாங்கு செய்கிறார். அவர் வலை காஇ செய்யப்பட்ட்தில் இருந்து இப்படி ஆகிவிட்டார் பாவம்.
மீண்டும் அவர் மாறுவார் என நம்புவோம்
தமிழச்சியின் பதிவில் என்னுடைய இரண்டு பின்னூட்டங்களை அவர் நிராகரித்து விட்டார்.
1. பேசுவேன், இன்னுமும் பேசுவேன் என்ற இடுகையில் பெண் என்பதால் தானே என்று எழுதியிருந்தார். அப்படியில்லைங்க, ஏன் தப்ப்பாவே புரிஞ்சுக்கறீங்க என்று எழுதியிருந்தேன்.
2. பைத்தியக்காரனின் பின்னூட்டத்திற்கு, அய்யனார் எழுதியது புனைவென்றால் என் தலைப்பு என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு, 'என்னங்க தெரியாமத்தான் கேக்கறீங்களா, அவர் எழுதியது புனைவு, நீங்க ஓஷோ பத்தி எழுதிய விஷயத்த்துக்கும் நீங்க வச்ச தலைப்புக்கும் சம்பந்தம் இருக்குதா' என்று கேட்டிருந்தேன்.
இந்தப் பின்னூட்டங்களைக் கூட நிராகரிக்கும் அவரோடு எப்படி உரையாடுவது.
நீங்கள் வா மணிகண்டன் பற்றி எழுதியிருக்க வேண்டாமென்று தோன்றுகிறது. உங்கள் கருத்துகளை அவர் பதிவிலேயே சொல்லிவிட்டீர்கள் (நானும் தான்). பிறகு தனியாகப் பதிவிலே வேறு எதற்கு.?
ஹரன் எழுதியது பற்றியும் எனக்கிருந்த மாறுபாடுகளை அவர் பதிவிலேயே சொல்லியிருந்தேன். நீங்களும் அதையே செய்திருக்கலாம். நிறைய விஷயங்கள் அவர் தெளிவாக அலசியிருந்தார்; அந்த வகையில் அவருடையது ஒரு முக்கியமான பதிவு.
பெண்மொழிகளைச் சுகுணா தெளிவாகப் புரிந்துள்ளார் என்கிறீர்கள். அவரோ கன் பைட் காஞ்சனா என்கிறார் (பகடியாம்.!) இதற்கும் தமிழச்சி எழுதுவதற்கும் என்ன வித்தியாசம். கொஞ்சம் கூட gender sensitivity இல்லாமல் எழுதும் இவர்கள்தாம் இன்றைய வலைப் பதிவுலகின் முன்னோடிகள்.! தலையெழுத்துடா சாமி.!
தட்டுக் கழுவி, தேவடியா போன்றவற்றை சொல்லாடல்கள் எனச் சொல்ல முடியுமா என்ன.?
//ஓக்காளி இந்தத் தமிழ் நாசமத்துப் போகனும்//
வன்மையாகக் கண்டிக்கிறேன்
அய்யனார்,
இரண்டு மூன்று நாட்களாக தமிழ் மணம் பக்கமே வர இயலவில்லை.
இன்று மதியம் நண்பர் சுந்தர் நிகழ்ந்து கொண்டிருக்கிற விஷயங்களை தெரியப்படுத்திய பிறகே என்ன ஏது என்று பார்க்க வந்தேன்.
நல்ல காரியத்தை செய்திருக்கிறீர்கள்.
தமிழச்சிக்கு பெரியாரின் எழுத்துக்களை பதிவிலிட்டதாலேயே அனைவர் மத்தியிலும் ஒரு மரியாதை உருவானது. (அதனாலேயே அவரது பக்கத்திற்கு எனது பக்கத்தில் தொடர்புச்சுட்டியும் கொடுக்க நேர்ந்ததது). அதற்காகவே அவர் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. இவை அனைவரும் அறிந்தவை.
ஆனால், சென்ற மாதம் "ஒரு எழுத்தாளரை அம்பலப்படுத்தப் போகிறேன்" என்று ஆரம்பித்து அவர் எழுதத் தொடங்கிய உடனேயே அருவருப்பு தட்டிவிட்டது. கடும் சினமும்.
முதல் வேலையாக அவரது பக்கத்திற்குக் கொடுத்திருந்த தொடர்புச் சுட்டியை நீக்கினேன். அவர் எழுதியிருந்த மிக மோசமான விஷயங்களுக்கு மறுப்பு ஒன்று எழுதவும் யோசித்திருந்தேன். என்றாலும் பொறுத்துப் பார்ப்போம் என்று அமைதியாக இருந்தேன்.
பிறகு "அந்த எழுத்தாளர்" மீதான தாக்குதலை சுவடு தெரியாமல் நிறுத்திக் கொண்டார். என்ன காரணமோ தெரியவில்லை.
அதன் பிறகு அவரது அபத்தக் கூச்சலின் அருவருப்பு கண்ட திசைகளில் அலைந்து கொண்டிருக்கிறது. எழுதும் விஷயங்களின் அடிப்படைகளைக்கூட அறியாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சொல்லி விளங்க வைப்பது? சாத்தியமே இல்லை!
புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
முடிந்தால் ஒரு முறை செவிட்டில் அடித்துவிட்டு நகர்ந்து விடுவது நல்ல காரியம்.
அதைச் செய்திருக்கிறீர்கள்.
நன்று.
எனக்கும் ஒருமுறை அறையும் விருப்பம் இருக்கிறது :)
இந்த மசிரான்கள் தான் நவீன தமிழிலக்கியத்தை கட்டிக் காப்பவர்கள் மற்றும் ஞானகுருக்கள் என்றால் ஓக்காளி இந்தத் தமிழ் நாசமத்துப் போகனும்
//////////
இதை சொன்னவன் தீர்க்கதரிசி. பரிமாணத்துக்கு, பரிணாமத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை தன்னையே spontaneous எழுத்தாளர் என அறிவித்து கொண்ட ஒரு அறிவுகொழுந்துக்கு இங்க. இந்த வித்தியாசம் தெரியாம இவரு அவருக்குள்ள இருந்த பல பரிணாமங்கள (அவரு வார்த்தைபடி) தோண்டி எடுத்தாராம் !! அதுசரி, தமிழ்ல முக்கியமா, கெட்ட வார்த்தைகள் தெரியாம இருக்கிறதுதான் சுத்த தமிழச்சிகளுக்கு (Note, its plural) அழகு. இதத்தான் செந்தழல் ரவி ஒரு மாமங்கத்துக்கு முந்தி தலை அடிச்சு சொன்னார். என்னோவோ போங்க, கடைசியா வலையுலக சூப்பர்ஷ்டார் முகமூடி வந்து அவரு பாணியில ஆப்படிச்சாதான் அடங்குவாங்க.
முகமூடிய சொன்னவுடனே இந்த தமிழிழிகள் எல்லாம் கொதிச்சு எழுந்தா சைக்யாட்டிரிஷ்ட பார்க்கவேண்டியாதுதான்.
முகமூடினவுடனே, இது சுரா மாதிரியானதுன்னு புரிஞ்சுகாதீகப்பு.
ஒரு விஷயம் கவனிச்சியா பாஸ். நீ சத்தம் போட்டு கத்திட்டு நிராகரிக்கிற. இந்தப் பெண்களெல்லாம் ஒரு சவுண்டுகூட விடாம ஆரம்பத்துல இருந்தே நிராகரிச்சிட்டாங்க. எந்தப் பெண் பதிவராவது தமிழச்சிக்குப் பின்னூட்டம் போட்டுப் பார்த்திருக்கியா. துளசி மாதிரி ஆளுங்களை விட்டுடலாம். ஆனா செல்வ நாயகி, மதி கந்தசாமி, பொடிச்சி, பத்மா அர்விந்த், லக்ஷ்மி, மங்கைனு தீவிர தளத்துல இயங்கிறவங்க ஒரு பின்னூட்டமாவது போட்டுப் பார்த்திருக்கியா. இவங்க சரி, பொதுவான மத்தப் பெண் பதிவர்கள் சரி சரியான வேலை செஞ்சுருக்காங்க. நாமளும் அதை செய்வம் பாஸ்.
ஒரு பதிவர்தான்.
(செல்லா வகையறாகிட்ட வாயாட விருப்பம் இல்ல)
KGB-KGP ஆராய்ச்சி நடத்திய சொல்லாராய்ச்சி அறிஞர் இப்போ பரிணாமம்-பரிமாணம் ஆராய்ச்சியோடு வந்து இறங்கியிருக்கிறார். அடுத்து முகமூடி வந்து ஆப்படிப்பார். எல்லாரும் பயந்து சைக்யட்டிரிஷ்டிடம் ஓடுவார்கள். பிறகு பிரசன்னா விரும்புகிற மாதிரி வலைப்பதிவுலகில் இலக்கிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தமிழ்கூறும் நல்லுலகு சுபிட்சமடையும்.
ஒரு கேள்வி: பிரசன்னா என்ன பெரிய வலையாராய்ச்சி செய்து விட்டாரென்று ஜ்யோவ்ராமும், அய்யானரும் கிளுகிளுப்பு அடையறீங்க? புதுசு புதுசா வரும் இணைய வாசகர்கள் இவர்களை கண்டுகொள்வதில்லை என்கிற கடுப்புக்குப் பேரு ஆராய்ச்சிங்களா?
கொழுப்பெடுத்து கூறுகெட்டதனமாக பதிவு போடுவதை எப்போது நிருத்துவாரோ தமிழச்சி?
அய்யனார்,
தமிழச்சி பற்றி நீங்கள் எழுதி இருக்க தேவை இல்லை என்றே தோன்றுகிறது.
நீங்கள் எழுதப் போய் கடைசியில் எங்கே வந்து நிக்கிறது பார்த்தீர்களா?
சில விடயங்கள் சொல்லப்பட வேண்டியவை.
தமிழச்சி ஒரு உசார் மடைச்சி. அவருக்கு எப்போதும் சொந்த புத்தி இருந்ததில்லை. அவர் சார்ந்து இருப்பவர்களாலேயே அவரது மனம் கட்டமைக்கப்படுகின்றது. பெரியாருக்கு கொம்பு முளைச்சதென்று எழுத தொடங்கிய தமிழச்சி (உண்மையாகவே பெரியாருக்கு கொம்பு இருக்கா என்று விசாரிக்க கூடும்.) காலப்போக்கில் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களோடு கூட்டு சேர்ந்தார். அதிலும் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்கள் தலித்திய பிரச்சனைகளை பற்றிய அக்கறை கொண்டுள்ளதால் அப்படியான கூட்டு நிகழ்ந்திருக்க கூடும். ஆயினும் இவருடன் கூட்டு சேர்ந்தவர்களில் பலர் தங்களது சுய லாபத்துக்காக தமிழ்தேசியத்தை எதிர்த்து தலித் வேடம் பூண்டவர்கள். அத்துடன் அதற்காக ரா மற்றும் இலங்கை இராணுவ உளவுப்பிரிவுகளிடம் காசு வாங்குபவர்கள். (ரயாகரனையும் சிறீரங்கனையும் இதில் உள்ளடக்க முடியாது. இவர்கள் கருத்தியலில் மூன்றாவது தளத்தை கட்டமைக்க முயல்பவர்கள். அத்துடன் தமிழ் மக்களின் அழிவை மனசளவில் ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள். மனிதாபிமானிகள். இவர்களது கருத்தியல் தளம் அரசியல் நடவடிக்கைகள் அற்று வெறிச்சோடி இருந்த போதிலும் விஸ்வானந்த தேவன் ஐயாவின் வாரிசுகளாக இன்றும் தொடர்பவர்கள். மற்றும் இந்திய எதிர்ப்புணர்வாளர்கள். தமிழர் போராட்டத்தை இந்தியாவே முழுமையாக நாசமாக்கியது. ஈழத்தில் ஓடும் ரத்தம் இந்தியத் தேசிய அன்னையின் கொலைவெறி என நம்புவர்கள். அவர்கள் இவ்வாறானா வேலைகளில் ஈடுபடப் போவதில்லை.)
பிரன்சில் உள்ள இலங்கை ராணுவ உளவுப்பிரிவினர் தமிழச்சியை அணைத்து மண்டையை கழுவினார்கள். தமிழச்சி ஆமா போட்டார். அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டார். தலித் மாநாட்டில் உரையாற்றினார். ஈழத்தமிழனை தட்டு கழுவி என்று பேசினார். விளக்கமில்லாது லூசுதனாமாக நடந்து கொண்டார். சுற்றி இருந்தவர்கள் கும்மி அடித்தார்கள். உசாருக்கு ஒன்றும் விளங்கவில்லை. சுமுகமாக உறவு போய் கொண்டிருந்த போது, தழ்நாடு பெரியாரின் கட்சியை சேர்ந்த சிலர்ருக்கு தமிழச்சியின் கூட்டு பற்றிய தகவல் போனவுடன் தமிழச்சியை கண்டித்து வைக்க தமிழச்சி கொஞ்சம் அடங்கி அவர்களை பேச ஆரம்பித்தார். அத்துடன் அந்த 'தேனிலவு' முடிவுக்கு வந்தது. இந்த நேரத்தில் அடுத்த விளங்கா மன்னன் ஓசை செல்லா அங்கே தனது பிரவேசத்தை நிகழ்த்துகிறார். தமிழச்சியின் மண்டை மீண்டும் ஒரு முறை கழுவப்படுகிறது. தமிழச்சி தான் முதல் இருந்த நிலையில் இருந்து மாறுகிறார். பின்னவீனத்துவத்தை மார்க்கியத்தை தோற்கடிக்க வந்ததாக நினைக்கு ஓசை செல்லா போன்ற ஒரு புகழ் விரும்பியின் கையால் தமிழச்சியின் மண்டை மீண்டும் கழுவப்படுகிறது. ஊரில ஒரு பழமொழி சொல்லுவாங்க 'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' அப்படியென்று. அதற்கு தமிழச்சியை விட வேறு உதாரணம் தேவையே இல்லை. மற்றும் ஓசை செல்லா காட்டும் படம் நீண்ட நாட்களுக்கு ஓடுகிறது என்றால், எங்களது சமூகம் இன்னும் நீண்ட காலத்துக்கு திருந்த போவதில்லை என்று துணிந்து கூறலாம். மற்றும் பெரியாரியம் இன்று ஒரு மதமாகி விட்டது. தமிழச்சி, ஓசை செல்லா போன்றோர் தாங்கள் அதன் பிரதிநிதிகள் என்று மூடத்தனமாக நம்புகிறார்கள். பெரியார் உயிருடன் இருந்தால் தமிழச்சியையும் ஓசை செல்லாவையும் கூப்பிட்டு ரெண்டு அறை விட்டு அனுப்பி இருப்பார். மார்க்சியம் எவ்வாறு 'மார்க்சிய கருத்துமுதல்வாதிகள்' கையில் பட்டு சீரழிகிறதோ அவ்வாறே பெரியாரியமும் இன்று உசார் மடையர்கள் கையிலும் புகழ் விரும்பிகள் கையிலும் பட்டுச் சீரழிகிறது. ஓசை செல்லா போன்ற செல்லா காசுகளை தூக்கி கொண்டாடும் சமூகம் பெரியாரில் இருந்து இன்னும் அந்நியப்பட்டு போகின்றது. அண்மையில் கூட ஓசை செல்லாவின் நண்பன் 'நவீன பெரியார்' என தன்னை நினைத்து கொள்ளும் பாமரன் லீனாவிடம் கிழிவாங்கினார். ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வாறு உடை அணிய வேண்டும் என சொல்லும் பாமரன் போன்றோர் தமிழின் முக்கிய பத்திரிகைகளில் எழுதும் அளவுக்கு தான் தமிழ்ச் சுழல் கேவலமாக உள்ளது. அதுக்கு பெரியாரும் சேகுவேராவும் அவர்களின் வழிகாட்டிகள். உண்மையில் இதுதான் முதலாளியத்தின் வெற்றி. இவ்வாறான முதலாளியப் போக்குக்கு எதிரான பார்வை கொண்டோரையே 'பிராண்டாக' மாற்றி தன்னை நிலைநிறுத்துகிறது. ஓசை செல்லா போன்ற பூர்ஸ்வா க்கள் அதனை தமது கிளுகிளுப்பை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் பெரியாரை தலித்திய விடுதலை உருவமாக முன்னிறுத்தியவர்கள் பின்னவீனத்துவ வாதிகளே. தலித்துக்களை நிராகரிக்கும் (பொதுமைப்படுத்தலூடாக) தமிழ்த்தேசியம் என்னும் பெரும் கதையாடலில் இருந்து தலித்துக்களை மீட்டு எடுக்க உதவிய தத்துவம் பின்னவீனத்துவமே. இன்றைய தலித்திய மீள் எழுச்சிக்கு தத்துவ பின்பலமாக இருந்தது பின்னவீனத்துவமே. பின்னவீனத்துவத்தை சாடினால் அய்யனாரைச் சாடியது போல என நினைத்து ஓசை செல்லா வழமை போல மொக்கை பதிவு ஒன்று போட்டிருக்கிறார். தனக்கு தானே மூத்திரம் பெய்துகாட்டுகிறார். எல்லோரும் ஓடி போய் பாருங்கோ.
மற்றும்,
தமிழச்சியின் கிசுகிசுக்கள தொடர்பாகவும் பேசவேண்டி உள்ளது. ஒருவரை பற்றி தெளிவாக பேசமுடியாத கோழை, மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்டெடுக்க போகின்றார். முதலில் தமிழச்சியை யாராவது சேற்றில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தாலும் அவர் மண்டையை கழுவினால், தமிழச்சி ஓசை செல்லாவை பற்றி கிசு கிசு எழுதுவார். 'நண்பிகளை தோழி என விளித்து, உருகி கவிழ்க்கும் ஒருவர்...' என்றவாறு.
தமிழச்சி எழுதிய பொம்பளை பொறுக்கி ஏற்கனவே போட்டு தள்ளுவதில் அனுபவம் உள்ளவர். யாழ்ப்பாணத்தில் கன பேரைப் போட்டுத்தள்ளியவர். பிரான்சில எப்பிடி வசதியோ தெரியல.
//நான் நேற்று எழுதிய பின்னூட்டத்திற்கு பதில் இல்லை. உங்கள் தளம் பற்றி நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை.. ஏன்? நான் செய்தது ஏதேனும் தவறா?// இவ்வாறு தமிழச்சியின் பதிவில் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். எல்லாரும் உசாராய் தான் இருக்கிறாங்கள். இது விளங்கவில்லை தமிழச்சிக்கு. அதுக்குள்ளை மற்றவர்களின் மூட நம்பிக்கையை உடைக்க போறாவாம். தமிழச்சி, சுத்தியல் ஒண்டு எடுத்து உங்க மண்டையை உடையுங்க. மூடநம்பிக்கைகள் விழுகுதா பார்க்கலாம்.
ஊரில ஒரு பழமொழி சொல்லுவாங்கள்.
'முட்டாள் பீய மிதிச்சா 3 இடம் நாசம்'
ஏன்னா முட்டாள் பீய மிதிச்சுட்டு எல்லா இடமும் தேய்ப்பான்.
தமிழ்மணத்து புதுமொழி.
'தமிழச்சி கூட சீண்டினா தமிழ்மணமே நாசம்'.
3 இடமில்லை 30 இடம் நாசம்.
இந்த 'கன்பைட் காஞ்சனா' குறித்து தோழர்கள் பைத்தியக்காரனுக்கும் ஜ்யோராமுக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. கொஞ்சம் விரிவாக விவாதித்தால் என் பார்வைகள் குறித்துப் பரிசீலிக்க ஏதுவாயிருக்கும். ஆனால் சில பின்னூட்டங்கள் தமிழச்சியின் மீதான வெறுப்பாய்ப் போவது வருந்தத்தக்கது. பைத்தியக்காரன் சொன்னதைப் போல, பெரிய டைப்பிஸ்ட், பெரியாரிஸ்டாக முடியாது என்பது வன்முறைதான். பெரியாருக்கென்று முறைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் அருகியுள்ள தமிழ்ச்சூழலில் தமிழச்சியின் பணி மிகவும் முக்கியமானது. பெண்பதிவர்கள் தமிழச்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பின்னூட்டங்கள் இடாதது குறித்து ஒருவர் புல்லரித்திருக்கிறார். அரசியல் சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ள விரும்பாத எச்சரிக்கையுணர்வைத்தவிர அதில் ஒரு கருமமும் கிடையாது.
அறிவழகன் என்ற பெயரில் யார் எழுதியிருப்பது என்பது தெரிகிறது. அப்படி இல்லாவிட்டாலும், செந்தழல் ரவி மற்றும் குழலி பற்றி இந்தப் பதிவில் எதற்குப் பேச வேண்டும்.? போலவே செல்லாவைப் பற்றி அவர் சொல்லியிருப்பது பேசும் விஷயத்திற்குத் தொடர்பில்லாதது.
ஏன் அய்யனார் இது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்கிறீர்கள்.? என் இஷ்டம் என நீங்கள் சொல்லுவீர்களேயானால், அதுவும் சரிதான். :)
அய்யனாரே வணக்கமுங்க!
முதலில் ஒரு விசயம் தெளிவில்லாம.. ஓகே வா?
அவரவர்கள் தத்தம் கருத்துக்களை தத்தம் நடையில் எழுதும் அழகிய ஊடகத்தை உங்கள் அளவுகோள்களால் கேவலப்படுத்துவதையே உங்களின் சிறுமையென வெகுண்டேன்!
தமிழச்சி தமிழே பேசப்படாத சூழலில் போரட்டங்களுக்கிடையே தமிழ் கற்று எழுதிவருபவள். மிக மிக தைரியமானவள். விசாலமானவள். நாங்கள் பலருக்கும் புரிவதற்க்காக இங்கு எழுதவந்தவர்கள். என் மேதைமையை காட்டுவதற்கு சத்தியமாக எழுத வரவில்லை! இதற்குமுன் அளவுகோள்களை தூக்கிகொண்டு வந்தவர்களையும் நான் இவ்வாறே என் பாணியில் எதிர்கொண்டேன் என்பதை பலரும் அறிவார்கள். மேலும் நான் தேங்கிக்கிடப்பவன் அல்ல.. இங்குள்ள பலரைப்போல் என்பதை சூழ்நிலைகளை புறந்தள்ளிவிட்டு பாய்ந்தோடும் என் பதிவுத்தலைப்புகளே சாட்சி! மேலும் என் தெளிவின்மையை, ஊசலாட்டங்களை ஆவணப்படுத்தும் அளவுக்கு தைரியமும் உள்ளவன். இவைகள் என் பயணத்தின் படிக்கட்டுகள். ஆனால் நீங்கள் இரண்டு விச்யங்களில் என்னால் வெறுக்கப்பட்டீர்கள் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒன்று நான் மறுத்து எழுதினாலும் வெறுத்து எழுதினாலும் ஒருவரது தன்னம்பிக்கையை குழைக்கும் வகையில் ”நீ விமர்சனத்திற்கே இலாயக்கற்றவன்(ள்)” என்ற தொணியில் எழுதியது ஒரு மகாமட்டமான தேவையற்ற செயல். உளவியல் ரீதியாகச்சொன்னால் ஒருவரை மிகவும் நோகடிப்பது “எதிர்த்து செயல்படுவதால் அல்ல... அலட்சியப்படுத்துவதாலேயே” என்ற அடிப்படை உண்மையை ஞாபகம் உணர்வீர்கள் தானே?! The biggest pshycological offence against someone is IGNORING a person than opposing him!
இரண்டு தமிழ்சூழலில் பின்னவீனத்துவம் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்துகள்... கட்டமைப்புகள்... மதிப்பீடுகள்.. அரைகுறை விளக்கவுரைகள்... அதன் அடிப்படையையே தற்கொலைசெய்யும் சிலந்திப்புணர்ச்சிகள்..
என் தாழ்மையான வேண்டுகோள்... என் எதிர்ப்பாளர்களை நான் மிகவும் விரும்புபவன்! ஹா ஹா! கோவிந்தாக் கூட்டங்கள் வேஸ்ட்! எனவே உங்கள் பின்னூட்டங்களை மிகவும் வேகமாகப்பிரசுரியுங்கள். என்னைப்பற்றி பேண்டுவைக்க பலரும் இங்கே வர முடிச்சவுத்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் போல இருக்கு! கடைசியில் இந்தப் பதிவு செல்லா வெறுப்பாளர்களின் டாய்லெட்டாக உங்கள் அமைதியின் ஆசீர்வாதத்தால் பரிணமித்திருக்கிறது!
அதுவும் சரிதான்... பின்னாலிருந்து போடப்படும் சாணிகள் கூட பின்னவீனத்தின் உச்சம்... சாரி எச்சம் தானே... இந்த தமிழ் இலக்கியச் சூழலில்!
பின்னூட்டமிட்ட நண்பர்கள் லக்கி,கையேடு,ஆடுமாடு, குசும்பன்,ஸ்ரி ரங்கன்,தமிழ்மணி,அறிவழகன்(?),தகர நெடுங்குழை காதன்(??)நடராஜன்,சுந்தர்,வளர்மதி,சத்திய நாராயணன்,திலீபன்,சுகுணா,சுந்தர், ஓசை செல்லா,மற்றும் இன்ன பிற அனானி களுக்கு நன்றி...
பிரசுரிக்கப்பட்ட/படாத பின்னூட்டங்களின் பெரும்பான்மை சாராம்சம் தமிழச்சியின் செயல்பாடுகள் குறித்த மாற்றுப் பார்வைகளே..இது எந்தவகையிலேனும் தமிழச்சியின் புரிதல்களை அவரின் பார்வைகளின் அளவுகோல்களை சற்று விரிவுபடுத்துமேயானால் இந்த உரையாடல்களுக்கு ஏதேனும் பிரயோசனமிருக்கலாம்..
அடுத்ததாய் இந்த பதிவை நான் எழுதியிருக்கத் தேவையில்லை ரீதியிலான நண்பர்களின் அக்கறை சார்ந்த கருத்துகளின் வாயிலாக இதுவரை நான் எழுதிக் கிழித்ததற்கான பிரதிபலன்களை பெற்றுக் கொண்டேன்.என் மீதான அக்கறைகளுக்கும் அன்பிற்கும் காரணமாய் இருந்தவற்றை நினைத்துக் கொள்கிறேன்...எனக்கான தளம் எதுவென்பதை என்னை விட நன்றாய் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு நன்றி... இதுபோன்ற க(டு)ருத்து கந்தசாமிகளை தவிர்க்க முயல்கிறேன்....
செல்லா
எந்த ஒன்றையும் மேம்போக்காக அணுகுவது, விளம்பர வசப்படுவது உங்களின் இயல்பு என்பதை நிரூபிக்கும் வகையில் இன்னொன்று..இதை தட்டச்சும் நேரத்தில் அய்யனார் ஒரு ---- என எதையாவது தட்டச்சி சூடானதில் சேர்த்திருக்கலாம் இருப்பினும் எனது பதில்களை உள்வாங்கிக் கொள்ளும் நோக்கத்தோடு இந்த பின்னூட்டமிடப்பட்டிருப்பதாய் நினைத்துக் கொண்டு பதில் சொல்கிறேன்..
என்னுடைய அளவுகோல் என்பதை விட என்னுடைய பார்வை எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்..பொதுவெளியில் இயங்கும் / ஒரே தளத்தில் இயங்கும் ஒருவர் இன்னொருவரின் செயல்பாடுகளை விமர்சிக்க கூடாதா?மாற்றுக் கருத்துக்களை வைப்பதை எப்படி அளவு கோல் என்கிறீர்கள் எனப் புரியவில்லை..இதே பதிவில் மணிகண்டன்,ஹரன் பிரசன்னா போன்றோரின் செயல்பாடுகளை குறித்தும் விமர்சித்திருந்தேன் அதை அவர்கள் அணுகிய விதத்திற்கும் நீங்களும் தமிழச்சியும் அணுகிய விதத்திற்குமான வித்தியாசங்களை உங்களால் எப்போதாவது புரிந்துகொள்ள முடிந்தால் உங்களுக்குள்ளும் ஒரு குறைந்த பட்ச சிந்தனாவாதி இருக்கிறான் என நினைத்துக் கொள்ளுங்கள்....
தமிழச்சியை நான் அலட்சியப்படுத்த நினைத்திருந்தால் இது போன்றதொரு பதிவை என் பக்கத்தில் இட்டிருக்கமாட்டேன்..அவரின் பக்கத்தில் என்னுடைய கருத்துக்கள் மறுக்கப்படவே வேறு வழியில்லாமல் என்னுடைய பக்கத்தில் எழுத வேண்டியதாய் போயிற்று.விமர்சனங்களை எதிர் கொள்ள துணியாதவர்/ பின்னூட்டங்களை வெளியிட விரும்பாதவர் என்பது தெரிந்ததும் அவருடன் விவாதித்துப் பயனில்லை என்பதனால் புறக்கணிப்பே சிறந்தது என முடிவெடுத்தேன் என்பதையும் இப்பதிவில் தெளிவு படுத்தியிருக்கிறேன்...
மற்றபடி இந்த பதிவின் பின்னூட்டப் பெட்டி மூடப்படுகிறது நண்பர்கள் தயவு செய்து பின்னூட்டத்தை தவிர்க்கவும்....
Post a Comment