Saturday, September 1, 2007

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-5



நேற்றைய பிற்பகலில் பச்சை விளக்குகள் மினுங்க
ஆங்கிலத்தில் என் திரையில் தோன்றிய
தமிழெழுத்துக்கள்
என் இடுகைகளை தவறாது படித்துவிடுவதாகவும்
பின்னூட்டமிட்டால் எங்கே இந்தப் புனிதர்கள்
தன்னைத் தவறாய் புரிந்துகொண்டுவிடுவார்களோ
என பயந்து
பின்னூட்டத்தை தவிர்ப்பதாகவும் சொல்லிற்று

சாயந்திரத்தில் தமிழில் வந்த தமிழெழுத்துக்கள்
மார்பும் தொடையும் தரையில் அழுந்த
படுத்திருந்த பகற்பொழுது விழித்தெழுந்து
ஈரமான கழிவறையின் சன்னல்களைத் திறந்து
வெளியிலலைந்து
பின் சோர்ந்து
திரும்பி வந்து சமைத்ததாய் சொல்லிற்று

பிற்பகலில் சொல்லிவைத்தாற் போன்ற புன்னகையை
எவ்வித தயக்கங்களுமில்லாமல்
தந்துவிட முடிந்தது

சாயந்திரத்தில் சொற்கள் புறப்பட்டு வந்த திசையினை
மட்டுமல்லாது
சொற்கள் உருவான உருவத்தையும்
அணைத்துக் கொள்ளத் தோன்றிற்று

5 comments:

TBCD said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எனக்கு சுத்தமா புரியல....

கண்மணி/kanmani said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
காலையிலேயே டி.வி.யில தினப் பலன் சொன்னான்
இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு
சரியாப் போச்சுதா?
[ஆனாலும் ஒரு நிம்மதி தப்பான புரிதல்களின் தாக்கம் சரிசெய்யப்பட்டதென்று]

கதிர் said...

டிசம்பர் மாசம் டாக்டர் வாராங்க.
புல்செக்கப் பண்ணியே ஆகணும்.
அதுவரைக்கும் வெளியகிளிய சுத்தாம ஒழுங்கா வீட்டுலயே இரு ராசா

கோபிநாத் said...

தமிழ்மணம் முழுக்க உங்க கவிதை தான்...உங்க ஆசை நிறைவேறி விட்டாதா அய்ஸ் :)

Ayyanar Viswanath said...

டிபிசிடி,டீச்சர்,தம்பி,கோபி ரொம்ப டேங்க்ஸ் :)

Featured Post

test

 test