Monday, July 23, 2007

தமிழ்மணமேட்டிசுகளிலிருந்து ஒரு குரல்



வணக்கம் நண்பர்களே!!

நட்சத்திர வாரத்திற்க்கான அழைப்பு வந்தபோது சிறிது பரபரப்பு தொற்றிக் கொண்டதென்னவோ உண்மை.இத்தனை சீக்கிரம் எதிர்பார்த்திராததாலும் கட்டுரை அல்லது செறிவான ஒரு விதயத்தை முன் வைக்கும் மனோநிலை இன்னும் கிட்டியிடாத நிலையில் ஆராய்ச்சிகளும் வாசிப்பும் பன்முக அலசலும் தேவைப்படாத கவிதை என்கிற ஒற்றை சல்லியை பிடித்துக் கொண்டு தொங்கும் நான் ஏழு நாட்களை எப்படி ஒப்பேற்றப் போகிறேன் எனும் கவலையும் மிகுந்தது.

கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாய் பயன்படுத்திக் கொள்ளல் அல்லது எதிலேயும் எப்போதும் தனித்தன்மையை நிரூபித்தல் அல்லது தொடர்ச்சியாய் தனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ளல் என்பதை நோக்கிய விழைதல்கள் மூலம் என்னை அப்பட்டமான பூர்ஷ்வா பயல் என யாரேனும் விமர்சித்தால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தொடர்ச்சியான இடம்பெயர்தல்களில் நான் இழந்தது என் சமூக அடையாளம் மற்றும் ஒரு நிரந்தர முகவரி.யாரேனும் திடுமென்று உன் சொந்த ஊர் எதுவெனக் கேட்டால் சிறிது யோசித்து திருவண்ணாமலை என்கிறேன்.கடைசி 12 வருடங்களில் 6 மாதத்திற்க்கு மேல் எந்த சூழலிலும் தொடர்ச்சியாய் இருந்ததாய் நினைவில்லை(குறைந்த பட்சம் இருப்பிடங்களையாவது மாற்றிக் கொள்வதுண்டு)இந்த சிக்கலான நிகழிற்க்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.ஏதோ ஒன்று உள்ளுக்குள் பூர்த்தியடையாமலேயே இருக்கிறது.வலையெழுத வந்த பின் நிறைவு அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்று என்னை நிரப்பி இருக்கிறது.அடுத்த நகர்வுகளுக்கான அரிப்புகள் இல்லை.ஒரு கவிதையை எழுதிமுடிக்கும்போது கிளர்ந்தெழும் பரவசம் சின்ன இறுமாப்பைத் தருகிறது அடுத்ததாய் எழுதப்படும் கவிதை முந்தைய கவிதையை அபத்தமாக்குவது மீள முடியாத தவிப்பென சொல்லலாம்.மொத்தத்தில் எழுத்தென்பது ஆசுவாசமாய் இருக்கிறது.

கிடைத்திருக்கும் நண்பர்கள் அல்லது தெரிந்துகொண்ட புதிய மனிதர்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.தோன்றும் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது பெருகிக்கொண்டிருக்கும் நட்பு வட்டங்களினூடாய் என் அணுகுமுறைகளின் நம்பகத் தன்மைகள் நிரூபிக்கப்படுகின்றன.பறவையின் சிறகைப்போல காற்றில் முகவரியற்று வரும் கடிதங்கள் என் மொக்கை கவிதையை மூன்று வரிகளில் பாராட்டிச் செல்கிறது.ஆச்சர்யங்களும் வியப்பும் மேலிட திருவிழாவில் வழி தப்பிய குழந்தையொன்றின் காலடித் தடம் பற்றி கடந்து கொண்டிருக்கிறேன் இத் தமிழ்மணத்தையும் வலைப்பதிவையும்.

கருத்தாடல்கள்,அரசியல் நுட்புலம்,சந்தேகித்தல்,கூர்மையான விமரிசனப் பார்வை குறித்தான புரிதல்கள் சற்று புலப்பட துவங்கியிருக்கிறது.இசங்கள்,சித்தாந்தங்கள்,கொள்கைகள்,இயக்கங்கள் போன்றவைகளைப் பற்றிய விழிப்பும் பரவலான வாசிப்பின் சாரங்களை சுலபமாய் பெற்றுக்கொண்டபடியுமாய் கடந்துபோகின்றன நாட்கள்.

இந்த ஏழு நாட்களில் செறிவாய் எழுத ஆசை.கலந்துரையாடல்களுக்கான அழைப்பெனவும் இவ்வறிமுகத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

வலைக்கு வந்தசேர்ந்த விதயங்களை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.மேலதிக தகவல்கள் விரும்புகிறவர்கள் இங்கே செல்லலாம்.

புகைப்பட கிராபிக்ஸ் தம்பி கதிர்
தமிழ்மணமேட்டிஸ் சொல்லாடலும் புதிய வார்ப்புருவும் பொன்ஸ் கொடுத்தது
டெஸ்ட் கயமையை சேர்த்தும் வலைச்சர பதிவுகளை தவிர்த்தும் பார்த்தால் இது என்னுடைய 50 வது இடுகை

64 comments:

ILA (a) இளா said...

50க்கும், நட்சத்திரக்கும் சேர்த்து ஒரு பெரிய "ஓ". வாழ்த்துக்கள்!

சிவபாலன் said...

வாழ்த்துக்கள்!!

மாயா said...

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் அய்யனார்...

அபி அப்பா said...

வாய்யா அய்ஸ்! கிடேசன் பார்க் பேரை கண்டிப்பா காப்பாத்துவய்யா நீர்! வாழ்த்துக்கள்.

இப்படிக்கு

கோபி&அபிஅப்பா

கதிர் said...

பூந்து விளையாடு நைனா..

போட்டோவை பாத்தாவே அதிருதுல்ல...

குசும்பன் said...

சும்மா "கலக்கு கலக்குன்னு" கலக்கிடனும்...வாழ்துகள் அய்யனார்

Ayyanar Viswanath said...

டெஸ்ட் பதிவில் முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்த கோபி மற்றும் கோவி கண்ணன் அவர்களுக்கு நன்றி

லொடுக்கு said...

வாழ்த்துக்கள்.

இந்த ஏழு நாட்களாவது எங்களுக்கு உமது கவிதைகளை புரிந்துகொள்ளும் திறனை இறைவன் என(ம?)க்கு அருளட்டும்.

Ayyanar Viswanath said...

நன்றி இளா,சிவபாலன்,டெல்பின் மேம்,மாயா,முத்துலக்ஷ்மி,அபிஅப்பா மற்றும் தம்பி

Ayyanar Viswanath said...

கலக்கிடலாம் குசும்பரே

லொடுக்கு உங்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி இந்த வாரத்தில் கவிதை எழுதப்போவதில்லை :)

Anonymous said...

//
லொடுக்கு உங்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி இந்த வாரத்தில் கவிதை எழுதப்போவதில்லை :) //

ays ungaluku oru koviyile kattalam...neega avalavu nallavar.best wishes :)

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தல!

Deepa said...

வாழ்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் அய்யனார். இந்த வாரம் களைகட்டப் போகுதுன்னு சில்றீங்க அப்படித்தானே????

கலக்குங்க. கவிதை எழுதாத அய்யனாரோட இன்னொரு முகத்தைப் பார்க்க எங்களுக்கும் ஆசையாதான் இருக்கு.

Ayyanar Viswanath said...

நன்றிகள்!

துர்க்கா,கப்பி,தீபா,திகழ்மிளிர் (நல்ல பேருங்க)மற்றும் நந்தா

அய்யனார் said...

தல... வாழ்த்துக்கள். :)

லொடுக்கு said...

//லொடுக்கு உங்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி இந்த வாரத்தில் கவிதை எழுதப்போவதில்லை //

அய்யா... நெஞ்சுல பாலை வார்த்துட்டே அய்யா... நல்லாயிருக்கனும் மகராசன் நீ!!!

Jazeela said...

அறிமுகமே அருமை. வலைப்பூவின் புது பொலிவு, இசைக்கேற்ற படங்கள் அழகு.

குரல் கொடுக்கும் நீங்கள் ஒரு பெண்ணுடையப் படத்தை கொடுத்திருக்கிறீர்களே?

லக்கிலுக் said...

இந்த வாரம் எங்கள் டவுசர் கிழியாமல் இருக்க எங்களுக்கே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

- அமுக (முன்நவீனத்துவ பிரிவு)

Ayyanar Viswanath said...

ரசிக கண்மணி நன்றி

லொடுக்கு :)

Ayyanar Viswanath said...

நன்றி ஜெஸிலா ஆண் பெண் எல்லாம் ஒண்ணுதாங்க :)

லக்கி

ஒருவாரமா உங்க அட்டகாசம் தாங்கல இந்தவாரம் எங்க வாரம் :)

அபி அப்பா said...

// லக்கிலுக் said...
இந்த வாரம் எங்கள் டவுசர் கிழியாமல் இருக்க எங்களுக்கே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

- அமுக (முன்நவீனத்துவ பிரிவு/

லக்கி! ஆனா அய்யனாரு கொலவெறில அதுக்கு அடுத்தவாரம் நம்ம டவுசர் கிழிக்க போறார் பாருங்க!

அய்ஸ் செல்லம்! அப்டீல்லாம் செஞ்சுடாதப்பா ராசா!

Unknown said...

ம் நல்லா எழுதுங்க ஆனா லெப்ல ஏறனும் பதிவு ஓகே?

ஏன்னா நான் இடதுசாரி பார்வை கொண்டவன் லெப்ட்ல சூடா இருந்தா மட்டும்தான் படிப்பேன்

:)))

ilavanji said...

அய்யனார்,

நட்சத்திர வாழ்த்துக்கள்!

கவிதை இல்லைன்னு சொல்வது ஏமாற்றமளிக்கிறது. உம் இயல்பே கவிதைதானைய்யா!

அய்யனார் said...

தல.. இங்கன பாரூ.. :))))

http://jaallyjumper.blogspot.com/2007/07/blog-post_22.html

Ayyanar Viswanath said...

அபி அப்பா செய்திடுவோம் :)

இடது'சாரி மகி நன்றி

இளவஞ்சி மிக்க நன்றி

சாலிசம்பர் said...

//லொடுக்கு உங்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி இந்த வாரத்தில் கவிதை எழுதப்போவதில்லை //

நல்ல நியூஸ் தான் இது.அருமையான சொல்லோவியங்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.வாழ்த்துக்கள்.

குசும்பன் said...

"லொடுக்கு உங்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி இந்த வாரத்தில் கவிதை எழுதப்போவதில்லை "

உங்களின் சுயமே கவிதை தான் அதை எழுத போவது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது!!!
(பின் குறிப்பு: நீங்களும் கவிதை எழுதவில்லை என்றால் நாங்க யாரை கலாய்பது) எழுதுங்க தல எழுதுங்க.

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்.

என்ன? இந்த வாரம் கவிதைகள் இல்லையா?

அதுக்கும் சேர்த்து இன்னொருமுறை வாழ்த்து(க்)கள். :-))))

Ayyanar Viswanath said...

ஜாலி சொல்லோவியமா உங்க பின்னூட்டமே கவித நன்றி

குசும்பரே கிர்ர்ர்ர்ர்

முரளிகண்ணன் said...

கலக்குங்க

Ayyanar Viswanath said...

துளசி டீச்சர் கவித இல்லைன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு வந்திருக்கிங்க :) நன்றி

ஏ ரசிக கண்மணி

உன் தொண்டு போதும்யா ..உன் பாச மழையை நிறுத்து

இராம்/Raam said...

அய்யனார்,

நட்சத்திர வாழ்த்துக்கள்... :)

கோவி.கண்ணன் said...

// ஆராய்ச்சிகளும் வாசிப்பும் பன்முக அலசலும் //

உங்களுக்கு பின் நவினத்துவம் தெரிஞ்சு இருக்கு...கலக்குங்க !

நட்சத்திர வாழ்த்துக்கள் !

Ayyanar Viswanath said...

நன்றி முரளி & ராம்

கோவி உங்களை பிந புயல் ங்கிறாங்களே :)

கோவி.கண்ணன் said...

//அய்யனார் said...

கோவி உங்களை பிந புயல் ங்கிறாங்களே :)
//

ஹிஹி !!! இப்போ புயல் கரையை கடந்துவிட்டது.

:)

முத்துகுமரன் said...

நட்சத்திர வாழ்த்துகள்

லக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் அய்யனார்.
//கலந்துரையாடல்களுக்கான அழைப்பெனவும் // நல்லா இருந்தாச் சரிதான்... :)

Ayyanar Viswanath said...

நன்றி முத்து

லக்ஷ்மி பயமுறுத்தாதீங்க :)

கானா பிரபா said...

கலக்குங்க கவிஞரே ;-)

அய்யனார் ரசிகர் மன்றம் சிட்னி கிளை

Unknown said...

வாழ்த்துக்கள் அய்யனார்.
ஒரு வாரம் அய்யனாரின் (இதுவரை பதிவேற்றாத ) மறுபக்கமா?

Ayyanar Viswanath said...

பிரபா நன்றி

ஏற்கனவே உள்ள ரசிகர் மன்றம் போதும்..நீங்களுமா :)

நன்றி சுல்தான்

கண்மணி/kanmani said...

வாஆஆஆஆஆஆஆழ்த்துக்கள் அய்யனார்.
உடம்பு சுகமில்லையா?குளிர் ஜுரமா போட்டோவப் பார்த்தா அப்படித் தெரியுது;)

கண்மணி/kanmani said...

அதென்ன தமிழ்மண மேட்ட்டிசு?
விளக்கம் தேவை

ALIF AHAMED said...

வாழ்த்துக்கள்!!

கதிரவன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அய்யனார் !கலக்குங்க !!

லக்ஷ்மி said...

பயமுறுத்தலெல்லாம் இல்லையப்பா. என்னோட அனுபவமப்படி. சும்மா நம்ம பாட்டுல எழுதினாக்கவே கூப்பிட்டு வச்சு கும்முற ஊருல கூப்பிட்டு கும்மியடிக்கச் சொல்லி அதுக்கு ஸ்டாட் மியூஜிக்ன்றீங்களே நீங்க, என்னாவப்போறீங்களோன்னுட்டு ஒரு அக்கறைதான். வேற என்ன?

மங்கை said...

வாழ்த்துக்கள் அய்யனார்...கலக்குங்க

தமிழ்நதி said...

அன்புள்ள அய்யனார்,
ஏற்கெனவே பின்னவீனத்துவம் அது இதுவென்று 'பொங்கி'ப் படைப்பவர் நீங்கள். நட்சத்திர வாரமென்று வந்தால் அரிவாளோடு சன்னதம் ஆடித் தீர்த்துவிடுவீர்களென்று தெரியும். சாராயம்,இறைச்சி,சுருட்டு என்று பல்வகையாகப் படையல் வைக்க வாழ்த்துக்கள். 'தோழி'களையும் புலியையும் சற்றைக்கு விட்டுவைத்து புதுப்பொருளில் கவிதை எழுதுவீர்களென எதிர்பார்க்கிறேன்.

Ayyanar Viswanath said...

கண்மணி டீச்சர் நன்றி
எப்பவும் தமிழ்மணத்துல மேய்ந்து கொண்டிருப்பவர்களை தமிழ்மணமேட்டிஸ் னு சொல்லலாம்..க்ளாஸ் மேட்ஸ் காலேஜ் மேட்ஸ் இப்படி தமிழ்மணமேட்ஸ்
:)

கதிரவன் மிக்க நன்றி


மின்னல் நன்றிப்பா ..ஏன் லேட்?

Ayyanar Viswanath said...

அக்கறைக்கும் அன்பிற்க்கும் நன்றி லக்ஷ்மி

மங்கை நன்றி

Ayyanar Viswanath said...

தமிழ்நதி

மிக்க நன்றி ..புலி தோழி எல்லாத்தையும் போஓஓஓ னாச்சி இனிமேத்தான் எழுத ஆரம்பிக்கனும்
:)

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அய்யனார் ;-)

50வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் ;-)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அய்யனார் ;-))

சென்ஷி

காட்டாறு said...

வாழ்த்துக்கள் அய்யா.... கலக்கவும். கலக்குவீங்க. கலக்கணும்.

பாராட்டுக்கள்!

Anonymous said...

ஆங்! இதே ரேஞ்சுல டெபினிசன் வுட்டா கணக்கு க்ளாசுல கூட இருக்குறவுங்க மாத்மேட்டிக்ஸ்
பீச்சுல சைட்ல வாக்போறவுங்க மணல்மேட்டிக்ஸ். பின்னவீனத்துவகவித கூட எழுதுறவுங்க மலமேட்டிக்ஸ்.
தேறமாட்டீங்க சார்

ஏங்க குப்புசாமிய குப்ஸ்ன்னு அரைலூசு பீட்டர்பசங்கதான் சொல்றாங்கன்னா, ஒங்களுக்கு என்னங்க ஆச்சு?
ஒங்க வாரமுன்னு என்னமோ எதிர்பாத்தேன். சொதப்பீட்டிங்க சார் _/\_

Ayyanar Viswanath said...

கோபி சென்ஷி மற்றும் காட்டாறு

மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

அனானி
நோ டென்சன் ப்ளீஸ் :) உங்க பின்னூட்டத்திலிருக்கும் அரசியல் புரிகிறது தலைவா நான் இந்த ஆட்டத்துக்கு வரல மேலும் விளம்பரத்திற்க்கான தேவையோ அவசியமோ இல்லை..ஒரே இடுகையிலே ஏமார்ந்து போய்விட்டீர்களா?

வெங்கட்ராமன் said...

வாங்க அய்யனார் குசும்பன் மூலம் உங்கள் பதிவு பரிச்சயம் ஆனது.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். . . . .

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திர ,ஐம்பதாவது பதிவுக்கான வாழ்த்துகள் அய்யனார்.

கவிதை எல்லாம் சொல்லி அசத்திட்டீங்க.
அப்பப்போ எனக்கும் புரியற மாதிரி எழுதுங்க:)))

இந்த வாரம் வெகு சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்.

Ayyanar Viswanath said...

வெங்கட்ராமன் நன்றி

வல்லிம்மா மிக்க நன்றி

அபிமன்யு said...

வாழ்த்துக்கள் அய்யனார்...

தருமி said...

வாழ்த்துக்கள்........

Featured Post

test

 test