ஹாய் அய்யனார் விஸ்வநாத்(பெயர் சரிதான் என நினைக்கிறேன்).
தொடர்ந்து அற்புதமான வாசிப்பு அனுபவம் தந்துக் கொண்டிருப்பதற்கு முதலில் வாழ்த்துக்கள்.
அதற்குமுன் மன்னிக்க இந்நாள்வரை பின்னூட்டங்களில் கூட பாராட்டாமைக்கு. ஓரிரு பாலா படங்களை பார்க்க நேரிடும்போது இறுதியில் உண்டாகும் ஒருவித கனமான அழுத்தத்தை உங்களின் பல படைப்புகளின் வாசிப்பின் இறுதியில் உணர்ந்திருக்கிறேன். சமீபத்திய உதாரணம் விஜி, தாமஸ் கேரக்டர்களை உள்ளடக்கிய குறுநாவல். கணக்கின்றி நிகழும் மீள்வாசிப்புகளில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்.
எழுத்தில் வாசகனை கட்டிப்போட்டு ஆளுமை செய்யும் தங்களின் இந்த திறமை மேன்மேலும் பெருகி எங்களுக்கு அற்புதமான படைப்புகள் கிடைக்கவேண்டும் என்பது பேராவல்.
சில வருடங்களாக தொடர்ந்து தனிமையின் இசை குறிப்புகளை படித்துக் கொன்டிருந்தாலும் முதல்முறையாக இப்படி தனிமடலில் சொல்லத் தோன்றியதற்கு எனது அசாத்திய துணிச்சல் அல்லது எழுதும் முயற்சியும் காரணமாக இருக்கக்கூடும்.
ஆம். விஜி ஏற்படுத்திய பாதிப்பில் (அ) அய்யனாரின் பாதிப்பில் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொளுங்கள். நானும் முதல்முறையாக ஓர் குறுநாவல்(ரொம்ப ஓவரா இருக்குல்ல...) அப்போ தொடர் அப்படின்னு வைச்சுக்கலாம்.
ஆம். எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஈ காக்கைகளும் வந்திராத என் வலைப்பூவில்.
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாய் என் அனாமதேய கிறுக்கல்கள் தங்களின் கடைக்கண் பார்வையில் என்றாவது ஒருநாள் படும் என்னும் நம்பிக்கையில்.
அன்புடன்
-சிவி
http://sssh24.blogspot.com/
வணக்கம் சிவி,
உங்கள் கடிதம் ஸ்பேமில் கிடந்தது. கவனிக்கத் தவறி விட்டேன். புலி பூனை என்றெல்லாம் எதுவும் கிடையாது சிவி. உங்களுடையதை நீங்களும் என்னுடையதை நானும் எழுதிப் பார்த்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
மாலை உங்கள் பக்கத்தைப் படிக்கிறேன்.
கடிதத்திற்கு நன்றி
2 comments:
arumaiyaaka irukkirathu kadithaththin pookku... vaalththukkal
"பழி சில கடிதங்கள்”என்ற தலைப்பைப் பார்த்ததும், அடடா நமது நண்பன் ஜெயமோகனைப் போல ஆகிக்கொண்டிருக்கிறானே என்று நினைத்துக்கொண்டேன். நீ வேறு அர்த்தம் கொள்ள வேண்டாம்.-- புகழில் என்று சொல்ல வந்தேன்:)))
Post a Comment