ஒருபோதும் திரும்பமுடியாத
இடத்திற்கு வந்துவிட்டோம்
நம் பாலுறுப்புகளையும் ஏற்கனவே
அறுந்தெறிந்துவிட்டாயிற்று
உடலின் ஒத்ததிர்வோ
தனியதிர்வோ
இனி நரம்புகளை
மலர்விக்கப் போவதில்லை
பனி வாரியலின்
கூர் அகல முனையாலும்
சாம்பல் மேடுகளின்
கடின மெளனங்களைப்
பிளக்க முடியவில்லை
உலகின் கடைசி
எச்சங்களாவதையாவது
தவிர்த்திருக்கலாம்
உபயோகப்படாத
வாரியலின் கூர்மையையும்
உன் கோணல் தலையையும்
பார்த்தபடி
தீவாவது குறித்து
யோசிக்கத் துவங்குகிறேன்.
ஓவியம் : வான்கோ
2 comments:
மிகவும் நீண்ட பாலை இடைவெளிக்குப் பிறகான ஒரு கவிதைத் தீவு. தங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்த நீண்ட மின்னஞ்சல் ஒன்று தயங்கியபடியே தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது, முயற்சிக்கிறேன், அய்யனார் நீங்கள் ஒரு சமவெளி மான்.
அழகு
Post a Comment