
வெளிறிய வீட்டின் சுவர்கள்
அகால வேளையில்
இறந்தவர்களின் முணுமுணுப்புகளை
உதிர்த்தது.
அவை
ஈக்களின் வடிவம் கொண்டு
கலவிப் பெருந்தூக்கத்தின்
நிசப்த வெளியெங்கும்
பேரிரைச்சலோடு
மொய்க்கத் துவங்கின.
“நிலா ஒளியிரவில்
வேம்படிக் குளுமையில்
நிச்சலனமாய் கிடப்பதில்
இவர்களுக்கு என்ன பிரச்சினை?”
என்றபடி
சலித்தெழுந்தேன்.
அருகிலிருந்தவளைத்
தவிர்த்துவிட்டு
உறங்கிக் கொண்டிருந்த
இன்னொருத்தியின்
கனவில் புகுந்து
முயங்கி
அவளின் கனவிலேயே
தூங்கிப் போனேன்….
12 comments:
//இன்னொருத்தியின்
கனவில் புகுந்து
முயங்கி
அவளின் கனவிலேயே
தூங்கிப் போனேன்….//
தூங்குறதுக்கு என்னாத்துக்கு அங்க போகணும்!
ஓ முயங்கின்னா அதான் அர்த்தமா?
we can read your touch in all the sentenees, very good creation.
இது எதுக்காக...?
கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
\\
“நிலா ஒளியிரவில்
வேம்படிக் குளுமையில்
நிச்சலனமாய் கிடப்பதில்
இவர்களுக்கு என்ன பிரச்சினை?”
என்றபடி
சலித்தெழுந்தேன்.
\\
எனக்கென்னவோ கவிதை இங்கிருந்து ஆரம்பமாகியதாய் தான் தோன்றுகிறது... ?
எப்படி இருந்தாலும் நல்லாருக்கு...
//இன்னொருத்தியின்
கனவில் புகுந்து
முயங்கி
அவளின் கனவிலேயே
தூங்கிப் போனேன்….//
it is a boundryless, borderless passion. one can travel without visa permission etc.. super
வாவ், அட்டகாசம் அய்ஸ். Fantasy!
என்ன மொழி! என்ன கற்பனை! தர்க்கங்களை முற்றிலும் புறக்கணிக்கும் கவிதை.
அனுஜன்யா
நானும் ரசித்தேன்.
செமையா இருக்கு தல. எனக்கு பிடிச்சிருக்கு. :)
அருண்,குப்பன்,தமிழன்
காமராஜ்,அனுஜன்யா,மன்குதிரை மற்றும் சரவணக்குமார் மிக்க நன்றி
கவிதை ..... நெம்ப அருமை .....!!! வாழ்த்துக்கள் ....!!!
you have good taste
Post a Comment