ஒன்று
கத்திக் கப்பலொன்றைத் தருவிக்கும் முயற்சிகள்
தோல்வியில் முடிந்தன.
சதுரமாய் மடிக்கப்பட்ட தாளிலிருந்து
சாதாக் கப்பலையே வரவழைக்க முடிந்தது.
படிந்திருந்த குப்பைகளின் இடுக்கிலிருந்து
பிரித்தெடுக்கவே முடியவில்லை
கத்திக்கப்பலின் யுத்திக்கான முனை.
விரையும் பேருந்தின் சன்னலோரக் காற்று
குப்பைகளை அகற்றியதில்
முனையின் நுனியைப் பற்றிவிட முடிந்தது
கத்திக்கப்பலைக் கேட்கச் சிறுமியும்
மழையுமில்லாத அத்தருணத்தில்
என்னால் இயன்றது
இது மட்டுமே...
இரண்டு
இன்டர்நேஷனல் டெர்மினலின்
டெசிக்னேட்டட் ஸ்மோக்கிங்க் ஏரியாவில்
எனக்கு முன்னால் அவள் புகைத்துக்கொண்டிருந்தாள்.
அடர் ரத்தநிறத்தில் உதட்டுச்சாயமிட்டிருந்த அவள்,
பினலோப் குரூசின் சாயல்களிலிருந்தாள்.
புகைத்து முடித்து,
கால்களை குறுக்கு வாட்டிலிருந்து விடுவித்தபோது
இடது பக்க மூலையிலமர்ந்திருந்தபடி
அவளின் பளிச்சிட்ட தொடைகளைப் பார்த்தேன்.
குதிகால் செருப்பினை சரிசெய்தபடி
எழுந்து வெளியில் போன அவளின்
வெள்ளைநிற டைட் ஸ்லீவ்லெஸ் பனியனின்
முதுகுப்புறத்தில்
பிரா அணிந்திருப்பதற்கான தடங்கள் தெரியவில்லை.
புகைக்கு கண்களை மூடித் திறந்தபோது
மன்னிப்புக் கேட்டபடி
குனிந்து லைட்டர் கேட்ட
பிலிப்பைன் தேசத்துக்காரியின்
மேல் சட்டை
ப்ரா அளவிற்கே இருந்தது..
மூன்று
திட்டமிடுதல்களைப் பற்றிய பிரக்ஞைகள்
மீப்பெருவெளியின் இசைத்தன்மை மீது
பெரும்திரையெனக் கவிழ்கிறது
தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து
பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை
இன்னும் ஒருதரம்
சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.
இதுவரை வந்த இல்லாமலிருத்தலின் வழிப்பாதைகள்
தீட்டிய வண்ணங்களை
கோடைமழை சடுதியில் அழித்துப் போகிறது.
கிளைகள் முழுக்கப் பூத்திருக்கும் கொன்றை மரங்கள்
பச்சையுதிர்த்து சிவப்பைச் சூடி நிற்கிறது.
தீயின் வண்ணமென்றும்
எரிதலின் தழலென்றும்
நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...
-
மக்கா இந்த அய்யனார்ங்கிற பேர் எப்பவுமே எனக்கு ஆவுறது இல்ல நாலு பேர் இருக்கச்ச சொல்ல முடியுதான்னு எனக்கு பேர் வச்ச பாட்டிய திட்டிட்டு இருப்பே...
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
18 comments:
வாங்க தல.
முப்பரிமாணத்தில் (பரிணாமமா இல்லை பரிமாணமா.?) முதல் பரிமாணம் பிடித்திருக்கிறது.
காலமற்ற பெருவெளியில் காலம் கடந்து தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
இனி காலம்தோறும் எதிர்பார்க்கிறேன்..
வந்தாச்சு...எங்க ராசா வந்தாச்சு ;)
யோவ் அடங்கவே மாட்டியா?
வருக :-).
we can travel n d world in all dimensions except 'time'.. but the way u correlate the things s really amazing.welcome back.
ரெண்டாவது நல்லா இருக்கு(சுலபமா புரியறதால)
கலக்கல் ஆரம்பம் :))
உடனடி நினைவூட்டலுக்கு நன்றி சுந்தர் மாத்திட்டேன் ..
பைத்தியக்காரன்,டிசே,கோபி,RVC,இளா, சென்ஷி : நன்றி
தல புரியுது ஆனா புரியல. உமது மறுபிரவேசத்தில் மனமகிழ்கிறேன்.
கல்யாணத்துக்கு பின்னாலுமா?
//இன்டர்நேஷனல் டெர்மினலின்
டெசிக்னேட்டட் ஸ்மோக்கிங்க் ஏரியாவில்//
பேசாம இங்கிலீசுலேயே கவுஜையை எழுதித் தொலைங்கலே.. புரியாம போனதுக்குக் காரணமாவது இருக்கும்
அன்பு அய்யனார்,
முப்பரிமாணங்களில் முதலும் மூன்றும் நன்றாக வந்திருப்பதாகத் தோன்றுகிறது :)
இரண்டாவது ... மன்னியுங்கள் ... அனுபவப் பகிர்வாக தொக்கி நிற்கிறது ... கவித்துவம் சேராமல்.
முதலாவதில் ஒரு நெருடல் ...
//சாதாக் கப்பலையே/// என்பது அதற்கு முன்னுள்ள மொழியிலிருந்து எங்கோ விலகி நின்று உறுத்துகிறது.
குறிப்பாக //சாதா// என்ற சொல் ...
வேறு ஏதேனும் சொல்லாட்சி நன்றாக இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள் :)
வருகைக்கு வாழ்த்துக்கலள் :)
"தனக்குரித்தானவைகள் கிளர்ந்தெழுந்து
பகடிகளின் வழியே சுயநலனின் இறுக்கத்தை
இன்னும் ஒருதரம்
சந்தேக உறுதியெனச் சரிபார்க்கிறது.
இதுவரை வந்த இல்லாமலிருத்தலின் வழிப்பாதைகள்
தீட்டிய வண்ணங்களை
கோடைமழை சடுதியில் அழித்துப் போகிறது."
ம்ம் புது மாப்பு,
வேலூர்ல வெயில் ஜாஸ்திதான் நடத்து,
இந்த கவிதை நல்லாயிருக்கு,
கத்திக்கப்பல் கவிதையை போலவே இன்னும் ஒரு கவிதை இருக்கு.
தமிழ்பறவை,முரளி,அண்ணாச்சி,வளர் மற்றும் கென் : நன்றி
மொத கவிதை நல்லாருக்கு அது மட்டுந்தேன் புரியுது ,
மத்ததயும் படிச்சேன் ,
விளங்கலணே
மூன்று பரிமாணங்களும் உண்மையில் வெவ்வேறு பரிமாணங்கள்தாம். முதலாவது வருடுகிறது. இரண்டாமவது புன்னகை. மூன்றாம் .... உங்களுக்கும் எனக்கும் உள்ள தூரத்தை நினைவு படுத்துகிறது.
அதிஷா,அனுஜன்யா : நன்றி
Post a Comment