Tuesday, February 5, 2008
நீர்த்துளி சுமந்தலையும் மேகம் / சாத்தான்கள் வசிக்குமிடத்திற்கான முகவரியினைக் கொண்டவன்
0
இறுக்கமான என்னிலிருந்து கடைசிப் புன்னகையை எப்போதுதிர்த்தேன்?கடந்தும், நடந்தும், விரட்டியும், கூச்சலிட்டும் போகும் சிறார்களை எப்போதிலிருந்து சலனங்களில்லாது பார்க்கத் துவங்கினேன்?நீளமான வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட தூரதேசப் பறவைகளை ஏனிப்போதெல்லாம் நின்று கவனித்துப் பார்ப்பதில்லை? இந்தப் பனிக்குப் பிறகு தொடர்ச்சியாய் அவைகளை உன்னால் பார்க்கவும் இயலாது என்பது உனக்கு தெரியும்தானே?அட! இந்த காதல் கவிதைகளை ஏன் படித்துத் தொலைப்பதில்லை?நீ என்ன காதலைக் கடந்தவனா?காதலில்லாது,பெண்ணில்லாது இருந்துவிடமுடியுமா உன்னால்?
என்னக் கருமாந்திர பிரச்சினடா உனக்கு..???
0
அணைத்துக்கொள்ள எவளுமில்லாது போவதை விட நினைத்துக் கொள்ள எவளுமில்லாது போவதுதான் குரூரமானது.அவளவள்களை வலிந்து யோசிக்கையில் பின்னாலே வந்து வந்து படிகிறது அவளவள்களின் அன்பும், பயமும், பாதுகாப்பும், துரோகமும், இழைவும், குழைவும், சிரிப்பும், நாற்றமும், வாசமும், காதலும், கண்ணீரும் விலகி உதறித் திரும்பிப் படுக்கையில் பக்கத்திலிருந்தவன் அத்தனைத் தூக்கத்திலும் அசிங்கமாய் திட்டினான்.
0
பனிப்புகை மூடிய இருளகலாத விடியலில் மிக அபூர்வமாய் பூக்களை சூடிப்போகும் பெண்ணொருத்தி உன்னைக் கடந்திருக்கிறாள்... இதை விட அற்புதமான நிகழ்வு உன் வாழ்வில் வேறெதாவது ஏற்பட்டு விடப் போகிறாதா என்ன?
0
நீ அடிப்படையில ரொம்ப நல்லவன்டா!எது நல்லது எது கெட்டதுன்னுலாம் கேட்டு ரொம்ப கொடையாதே... நீ நல்லவன் அவ்ளோதான்..வலிந்து திணிக்காதடா! எதையும்.. எப்பவும்..பிடிச்ச மாதிரி இரு..என்னா தப்பு?....ங்கோத்தா நீ பெரிய பாடு! ன்னு எல்லாருக்கும் புரியனுமா?...கண்ண இறுக்க மூடிக்க மச்சான்..இதான் ஒலகம் ..இதான் வாழ்க்கை..யோசிக்காதடா..யோசிச்சா எல்லாமே தப்பு..இதோ பார்! இந்த ஒலகம் ..உன்ன சுத்தியிருக்க உலகம்..நீ நம்புற/அது நம்புற ஒலகம் யோசிக்குதா?..இந்த பறவய பார்..நதிய பார்..கடல பார்..மரத்த பார்..செடிய பார்...இன்னும் உன்ன சுத்தி இருக்க எல்லா எழவையும் பார்..எந்த மசிராவது சிந்தனைன்னு ஒண்ண வச்சிருக்கா?..ஒரு பெரிய உண்மைய சொல்றேன் கேட்டுக்கோ சிந்திக்காதவனாலதான் மட்டுந்தான் சந்தோசமா இருக்க முடியும்..அல்லது இந்த சந்தோசமான ஒலகம் மூளைய கழட்டி தூர போட்டவனுக்குதான்..
சரி இப்ப இன்னா பண்ணனும்?..
போய் பேரரசு படம் பார்!!
வைரமுத்து புக் படி!..
எவளுக்காவது பிட்டு போடு !!
சான்ஸ் கெடச்சா கப் புனு மேட்டர முடி..
உன்ன மாதிரி வயசு பசங்கலாம் தினவெடுத்த செட்டிலான பசங்கலாம் இதான் பன்றானுங்க..இல்லனா சீரியல் நடிகை..சான்ஸ் போன நடிகை....இல்ல பிலிப்பைன்காரிங்க,சீனாக்காரிங்க,,கொழுத்த கருப்பிங்க,,மல்லுங்க ,,காஸ்ட்லியான தமிழுங்க..சிரிலங்காங்க..மச்சான் யு ஆர் லிவிங்க் இன் ஹெவண்டா!!ஏன் புரியல உனக்கு..???
0
அந்த சிங்கள தேசத்து பெண்ணை புணர்ந்து முடித்த மறுநாள் காலை வாழ்க்கையே வெறுத்துப் போனது..எல்லாம் நன்றாகத்தான் இருந்தது..அவளது பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் சொர்க்கம் எனும் பொருள் வரும்..உண்மையிலேயே அவள் சொர்க்கம்தான்..பாப்லோ நெருடா எங்கேயோ சொல்லியிருப்பான் சிங்கள தேசத்து பெண்ணொருத்தியை புணர்ந்தது ஒரு சிலையைப் புணர்ந்த உணர்வைத் தந்தததென..அவன் ஒரு பாடு! ..அவன கன்னா பின்னான்னு திட்டத் தோணினாலும் ..ங்கோத்தா! வாழ்க்கைய அனுபவிச்சிருக்காண்டா! ன்னுதான் சொல்லத் தோணுது..அவனோட கவிதைகள் சிலதும் படிச்சி சிலாகித்தேன் என்றாலும் பாப்லோ நெருடா ஒரு நூற்றாண்டு துரோகம் எனும் பொடிச்சியின் கட்டுரை கண்முன் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை..சரி அந்த சிங்களப் பெண்ணுக்கு வருவோம்..அவளிடம் சிங்களத்து சின்ன குயிலே பாட்டு பாடி காண்பித்தேன்..ரொம்ப சிலாகிச்சா.. என்னோட குரல் நல்லாருக்குன்னா தொடர்ச்சியா ரெண்டு மூணு பாட்டு பாடினேன்..நடுநடுவில குடிச்சதால எத்தன பாட்டுன்னு தெரில...ஆறு இல்ல ஏழு பாட்டு இருக்கும்..உருகினா ..அவ மேட்டர்ல பெரிய ஆளுங்கிறதால ஏதாச்சிம் கத்துக் கொடுன்னேன்..முத்தத்த பத்திதான் பேசினா..எங்கெங்கோ முத்தம் கொடுத்தா..ஒடம்பு சிலிர்த்து ..கூசிப் போச்சு..அப்புறம் ரொம்ப நெகிழ்ந்து போய் மேட்டர் இல்லாம மேட்டர் பண்ணுன்னா நானும் பண்ணேன்..மறு நா காலைல செம பயம்..
இப்ப மறுபடியும் மொத வரிய படிங்க...
எனக்கு செத்து போயிடுவோமோன்னு பயம் வந்திடுச்சி...
0
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
11 comments:
\\இதுக்குலாம் லேபிள் வேரயா? \\\
சூப்பர் ;)
\\ஒரு பெரிய உண்மைய சொல்றேன் கேட்டுக்கோ சிந்திக்காதவனாலதான் மட்டுந்தான் சந்தோசமா இருக்க முடியும்..\\
எப்படி தல இப்படி எல்லாம் பின்னுறிங்க..
//இதுக்குலாம் லேபிள் வேரயா?//
i don know what to say..but you are the one make me sick..your writings always make me torture..really you are a great fellow!!!
- your fan
///////நீ நல்லவன் அவ்ளோதான்/////
தமிழ் செத்துச்சு போங்க.. இனிமே என்ன இருக்கு நாசமத்துப் போக..?
படிச்சு முடிச்சதும்தான் பார்த்தேன்.
சிறுகதைன்னுதான் வகைப்படுத்தியிருக்கு :)
// மேட்டர் இல்லாம மேட்டர் பண்ணுன்னா நானும் பண்ணேன்..//
should be careful here after
valpaiyan
//அணைத்துக்கொள்ள எவளுமில்லாது போவதை விட நினைத்துக் கொள்ள எவளுமில்லாது போவதுதான் குரூரமானது//
அற்புத வரிகள் சார்...
உங்களைப்பத்தி ' தம்பி ' ரொம்ப சிலாகிச்சு பேசினார்..உண்மைதான்..!
உங்க அண்ணன் குரலைப்பற்றியும் சொன்னார்.!
ayyanaar sir, really super.
Post a Comment