ஹாய் ஹாய் ஹாய் !!!
வணக்கம் உலக தமிழ் நெஞ்சங்களே !!!!!
எல்லா தடைகளையும் தாண்டி இதோ ப்ளாக்க தொடங்கிவிட்டேன் இங்கே தடைகள் என குறிப்பிட்டிருப்பது பயம்,அறியாமை அதோடு போனால் போகிறது பாவம் இணைய தமிழர்கள் என்ற நல்லெண்ணமும் கூட.நான் துபாய் வந்தபின்புதன் இப்படி ஒரு உலகம் இருப்பது தெரிய வந்தது அதற்கு முன்பு வரை கம்ப்யுடடர் என்பது என்னைப்பொருத்தவரை கணக்கு கருவி அவ்வளவுதான்.இணையத்தை எப்படி பாவிததிருப்பேன் என்பதை நான் சொல்லவே தேவையில்லை.
முதலில் கண்ணில் பட்டது சித்தார்த்தி ன் வலைப்பதிவுதான் அட இவங்க நம்ம ஆளுங்க போல இருக்கேண்ணு ஐக்கியமாயாச்சு பொன் ஸ் வெட்டி மதி போன்ற நண்பர்களின் உதவி பதிவுகளை நின்றபடியே படித்து ( நமக்கு புரியாத விஷயமெல்லம் நின்னுக்கிட்டு படிச்சாததான் ஏறும்) நேற்று கைவசம் இருந்த மூன்று கவிதை களையும் போட்டாச்சு.
விஷயத்திற்கு வருகிறேன்..இது ஏதோ அறிமுகப்படலம் என்பதால் இப்படி எல்லோருக்கும் புரியும் தமிழில் எழுதித் தொலைக்கிறேன் மத்தபடி யாருக்குமே புரியாத பின் நவீனத்துவம் மேஜிக்கல் ரியலிசம் நியோ ரியலிசம் அப்படின்னு இணைய தமிழ் மக்களை கததிகலங்கவைக்க போகிற முஸ்தீபு களுடன் வந்துள்ளேன். உதாரணத்திற்க்கு என் அடுத்த பதிவு பற் றிய முன் குறிப்பு ( புதுசா இருக்கு இல்ல!)
பா சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி - ஒரு அறிவுஜீவியின் மரணம்
ஒரு கோணம் இரு பார்வை -அகிரா குரசோவ வின் THE LOWER DEPTHS மற் றும் ஆல் பிரட் ஹீட்ச்காக்கின் the rope
இன்னொரு முக்கியமான விஷயம் என்னை விமானத்தில் ஏர்றிவிட்டு என் நண்பர்கள் அனைவரும் கூடி கும்மியடித்தார்கள் என்று செய்தி இனி ஒரு வருடத்திற்கு bicycle theif கதை சொல்றேன்னோ பாப்லோ நெருடா சில்விய பிழாத் னு புரியாத பேர் சொல்லி நம்ம உயிரா வாங்கரத்துக்கு ஆளே இல்லன்னு ரொம்ப சந்தோசப்பட்டா ங்கலாம் அவங்களை இனி ஒண்ணும் பண்ணமுடியாது அப்படிங்க்றதால அப்பாவி தமிழர்களே உங்களை குறி வ்ச்சு இருக்கேன் இம்சையரசி idlivadaai சங்க நண்பர்கள் போன்ற light heart காரர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது
( over build -up i கொடுத்துட்டமோ!!..இருக்கட்டும் பாத்து கிடாலாம் ..!!! )
Wednesday, February 28, 2007
Tuesday, February 27, 2007
வேண்டுவதெல்லாம்
இவ்வெம்மை
மிகுந்த நகரங்களில்
வேண்டுவதெல்லாம்
வெறுமையின்
சாயலற்ற
புன்னகைகள் - மற்றும்
சந்தேகத்தின் நிழல்களற்ற
கைக்குலுக்கல்கள்
அத்தோடு
கிளைகள் முழுதும்
பூத்திருக்கும்
ஓர் சிவப்புக் கொன்றை மரம்...
மிகுந்த நகரங்களில்
வேண்டுவதெல்லாம்
வெறுமையின்
சாயலற்ற
புன்னகைகள் - மற்றும்
சந்தேகத்தின் நிழல்களற்ற
கைக்குலுக்கல்கள்
அத்தோடு
கிளைகள் முழுதும்
பூத்திருக்கும்
ஓர் சிவப்புக் கொன்றை மரம்...
வசீகரமற்ற கவிதை
வசீகரமற்ற கவிதை
சுயம்
தனி அடையளத்திற்கான
விழைதலின் பொருட்டு
தேர்ந்தெடுக்கிறது
இருப்பதிலேயே கடினமான
ஒரு சொல்லை....
மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி..
இருப்பு குறித்த
அவஸ்தைகள்
எதுவமற்ற கவிஞன்
சூல் கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக்கொண்டு
அழிக்கிறான்....
வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்...
முடிவற்ற வெளியிலிருந்து
எழும் விசும்பல்கள்
ஏதேனும் ஒரு சுயத்தை
அசைக்கும் சிறுபொழுதில்
எழுதப்படுகிறது
வசீகரமற்ற
தட்டையான
ஒரு கவிதை......
சுயம்
தனி அடையளத்திற்கான
விழைதலின் பொருட்டு
தேர்ந்தெடுக்கிறது
இருப்பதிலேயே கடினமான
ஒரு சொல்லை....
மறுதலிக்கப்பட்ட
சொற்கள்
முடிவற்ற வெளியில்
பயணிக்கின்றன
மற்றுமொரு கவிஞனின்
இருப்பிடம் தேடியபடி..
இருப்பு குறித்த
அவஸ்தைகள்
எதுவமற்ற கவிஞன்
சூல் கொண்ட மேகத்தை
கலைக்கும் புயலைப்போல
தேர்ந்தெடுத்த சொற்களைக்கூட
இரக்கமற்ற பேனாவைக்கொண்டு
அழிக்கிறான்....
வசீகரமிழந்த சொற்கள்
மெல்ல உதிர்க்கின்றன
கவிதைக்கான வேட்கையையும்
இருத்தலின் நம்பகத்தன்மையையும்...
முடிவற்ற வெளியிலிருந்து
எழும் விசும்பல்கள்
ஏதேனும் ஒரு சுயத்தை
அசைக்கும் சிறுபொழுதில்
எழுதப்படுகிறது
வசீகரமற்ற
தட்டையான
ஒரு கவிதை......
உயிர்த்திருத்தல்
இருத்தலின்
நிரூபண சித்திரங்களை
வெளிறச் செய்கிறது
காலம்.....
முன் மாதிரிகளின்
பிரம்மாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும்- எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்...
இருப்பினும்
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?..
நிரூபண சித்திரங்களை
வெளிறச் செய்கிறது
காலம்.....
முன் மாதிரிகளின்
பிரம்மாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும்- எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்...
இருப்பினும்
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?..
Subscribe to:
Posts (Atom)
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...