
புறாவின் இறக்கைகளைப்போன்று
அவளுக்கு
இரண்டு முலைகள்
இருந்தன
அத்தனை மிருது
அத்தனை இதம்
அத்தனைக் குளிர்ச்சி
இடைவெளியில்லா
இடைவெளியில்
முகம் புதைத்துச் சொன்னேன்
”முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது”
முகம் விலக்கி
சொற்களைச் சேகரித்துக் கொண்டு
வந்த வழி மறைந்தாள்
விழிக்கையில்
காணக்கிடைத்தது
பால்கனியில்
ஓர் ஒற்றைச் சிறகு
18 comments:
//ஓர் ஒற்றைச் சிறகு//
தனித்தலையும் ஏதோ ஒன்றை விட்டுச்செல்கிறது
நான் தான் முதலில் வந்திருக்கிறேன்..
எப்படி தல இப்படியெல்லாம் தோணுது உங்களுக்கு..!
\\
”முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது”
\\
அதே அதே...:)
arumai :)
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல :)
அருமை அய்ஸ்.
@ சுந்தர்
//அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல :)//
பாம்பின் கால்....:)
அனுஜன்யா
பறவையின் இறகிலிருந்து பிரிந்த சிறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் எழுதி செல்கிறது என்று பிரமிள் கவிதை எழுதியிருந்தார். அந்த ஒற்றை சிறகு இது அல்ல.
//ஓர் ஒற்றைச் சிறகு//
ஒண்ண விட்டுட்டு போயிட்டாங்களா?
ஒண்ணும் மட்டும் வச்சிகிட்டு எப்படி அசிங்கமா இருக்காது!
கவிதை மென்மையா இருக்குங்க :)
வால்பையன்!
ஒப்புக்கொள்கிறேன்....
உங்களுக்கு வால் இருப்பதை.
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...
தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க..
:))
Its so poetic and erotic as well :)
கவிதை அழகு தல..! ஆனா அது ஏன் பால்கனில..? கொஞ்சம் வீட்டுக்குள்ள இருந்துருக்கலாமோ..?:)
ஹா...... கவிதை மிக அழகு அய்யனார்.
தேர்ந்த கவிதை நடை... தொடருங்கள்...
nice
Post a Comment