https://www.amazon.in/dp/B0778TCFP4
எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ கவிதைத் தொகுப்பை கிண்டிலில் பதிவேற்றி இருக்கிறேன். ஏற்கனவே என் வலைப் பக்கத்தில் PDF ஆகத் தரவிறக்கிக் கொள்ளும்படி வைத்திருந்தேன். அமேஸான் விதிமுறைகளின் படி அதை நீக்கி இருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சிதான். வெளியிடுகையில் இலவசமாகத் தரும் வசதி அமேசானில் இல்லை. எனவே அதன் ஆரம்ப விலையான 49 ரூ. இது சரிவரும் எனத் தோன்றினால் சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு என அடுத்தடுத்து கொண்டு வருவேன். இந்த எண்ணம் தோன்ற மாமல்லனே காரணம். அவருக்கு என் நன்றி.
கவிதைகள் மலிந்த இக்காலகட்டத்தில் கவிதைத் தொகுப்பை அச்சில் வெளிக் கொண்டு வரக் கூச்சமாக இருந்தது. எனவே மூன்றாண்டுகளுக்கு முன்பு ’எனக்கு மனிதர்களைப் பிடிக்காது’ தொகுப்பை பிடிஎப் ஆக மாற்றி வலையில் ஏற்றினேன். இப்போது வாசிக்கவும் நன்றாக இருப்பது போல் தோன்றவே இந்த கிண்டில் வெளியீடு. மேலும் எப்படித்தான் இருக்கிறது பார்ப்போமே என்கிற உடனடி ஆவலும் இந்த வெளியீட்டுக்கான இன்னொரு காரணமாக இருக்கலாம்.
உரையாடலினி தொகுப்பிற்குப் பிறகு எழுதிய கதைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். கூகுல் பஸ் காலகட்டத்திலிருந்து எழுதிக் குவித்த சினிமா விமர்சனங்களையும் அலுவலக வெட்டி நேரத்தில் தொகுக்க வேண்டும். இப்படியாக இணையத்தில் எழுதிக் குவித்தவைகளை தனித் தனி தொகுப்புகளாக கிண்டிலில் கொண்டு வரப் பார்க்கலாம். நிச்சயமாக இத்தொகுப்புகளில் ஓசிதானே என்கிற அசட்டை மனப்பான்மை இராது. ஒரு கறார் ஆசாமியின் உயிர்ப்புதான் என்னை இன்னும் இயங்க வைக்கிறது. அந்த நேர்த்தி தொகுப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.
பொதுவாக என்னுடைய ஒரு நாள் என்பது வழமையைத் தாண்டி எதுவுமே நிகழாத ஒன்றாகத்தான் இருக்கும். அல்லது அப்படி நான் வைத்துக் கொள்வேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வளவு பரபரப்பு. மனிதர்களாலும் நிகழ்வுகளாலும் நிறைந்த நாட்கள் இவை. மனநிலை வாய்க்கும்போது ஒவ்வொரு பரபரப்பையும் விலாவரியாக எழுதப் பார்க்கிறேன்.

No comments:
Post a Comment