
1
கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் கிடைத்தது.நாறபத்தெட்டுப் பக்க புத்தகம். உட்கார்ந்து டைப்பினால் மொத்தத்தையும் பதிவேற்றிவிடலாம். இந்த புத்தகம் கொண்டு வந்த முகங்களும் சூழல்களும் அப்பட்டமானது.தொடர்புகளற்ற குறிப்புகள் அல்லது பிறழ்ந்த குறிப்புகளென இங்கே கொட்டிக்கொண்டிருக்கும் /பவை யாவும் ஏற்கனவே கொட்டப்பட்டவைகளின் சாயல்கள்தாம,எனத் தெரிந்தபோது அவனை வெகு நெருக்கமாக உணர்ந்தேன். ரோஸி, கேதி, எட்வினா, டெபோனர் அழகி,ஐரிஷ் அழகி,டீக்கடைக்காரன் பொண்டாட்டி,ஆன்னி, அயானா,ஜான்ஸி என எத்தனை பிம்பங்கள!.உண்மைத் தன்மைக்கு ஒரே வழி மனம் பிறழ்வதுதான்.பிறழ்ந்த கோபியின் சில எழுத்துக்கள்..
அந்த ஆன்னி, அறையில் என்னை எப்பொழுது சந்தித்தாலும் என் குறியை எழும்பவைத்துக் கைகளால் அதைப் பற்றிக் குலுக்கி தோழமையுடன் நலன் விசாரிப்பாள்.எவ்வாறு இருக்கிறாய்?வாழ்க்கை உன்னை எப்படி நடத்திக்கொண்ண்டிரூக்கிறது?உள்ளே நுழைய விழைவானால் சொல்,பேண்டீசை அகற்றி விடுகிறேன்.அனுபவி உன் இஷ்டம்போல்...Walking in the clouds படத்தில் அறுவடை செய்யப்பட்ட கருந்திராட்சைப் பழங்களை மிகப்பெரிய அகலமான கலனில் கொட்டி பெண்களை மிதிக்க விடுவர். அணிந்திருக்கும் கவுன் / பாவாடை / அங்கிகளை தொடைக்கு மேல் ஏற்றிச்செருகி பெண்கள் அப்பெரிய கலனில் குத்தித்தபடி திராட்சைக் குவியல்களைப் பிழிவர்.பின்னனியில் அதிரும் இசைக்குத் தேர்வாய் நடனமிட்டபடி, அப்பெண்கள் திராட்சையை மதுவாக்குவர். கோபி உயிரோடு இருந்திருந்தால் எப்படியாவது அந்த தேர்ந்த மதுவினை தேடிப்பிடித்துக் கொடுத்திருக்கலாம. மேலும் அவனுக்கு கொடுக்க அதைவிட சிறந்த பரிசு வேறெதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
என் முகமறியாத் தோழிகளே தங்கள் ஒத்துழைப்பில்தான் நான் மூச்சி விட்டுக்கொண்டிருக்கிறேன்.அயானா எடுத்துச்சொல்லுங்கள் இவர்களுக்கு.அனைவரது உதடுகளும் எனக்கு அவசரமாய் தேவை.
violet panties அழகிகள்.ஒவ்வொருத்தியிடமும் ஓர் உணர்வு.பேராசை,கூச்சம்,தன்னம்பிக்கை, கோபம், நிதானம், தர்மசங்கடம், அன்பு. அவளுக்கு என்னாகிவிட்டது இன்றிரவு? தலையில் இருந்த பூச்சரத்தை எடுத்து குறிக்குச் சுற்றிவிட்டாள். மணம் பிரமாதம்.
உஷா! பன்னிரெண்டு வருடங்கள் எனக்கு மட்டுமே சொந்தமாக நீ எப்படி இருக்கிறாய்?தயவுசெய்து மணவிலக்கு செய்துவிடு.பதினெட்டு வயது வித்தியாசம்.பயங்கர incest.ஏன் என்னைப் பாவியாக்குகிறாய் மீண்டும் மீண்டும்?
ஜான்ஸி உஷாவுக்குத் தெரிந்துவிட்டது.நடுவிலேயே உருவி எறிந்துவிட்டாள்.தங்கள் பொச்சில் மீதியை முடித்தூக் கொள்ள வேண்டுமாம்.வாருங்கள் ஜான்ஸி,தொலைதூரம் சென்று தோழமை வாழ்வைத் துவங்குவோம்.ஸ்தோத்திரம் ஜான்ஸி.தங்கள் கணவரும் உடன் வரலாம்.அவர் என் தோழர்.
என் இறப்பிற்கு தங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பதெல்லாம் இரண்டுச் சொட்டு நேச நேத்திரக் கசிவுகள்தாம்.உங்களை எல்லாம் நான் எவ்வளவு ஆழமாகக் காதலிக்கிறேன் தெரியுமா?என்றேன்.ரோஸபெல் பதறிப்போனாள்.
என் காதலி கூட காலையில் கக்கூஸிற்கு தான் போகிறாள்.
ஆக்டோபஸ் போல எல்லாத் திசைகளிலும் கைகளை நீட்டி விட்டேன் இனி ஆமை ஆக முடியாது.
கோடை மழை அயானா. ஆடைகளை களைந்தெறியுங்கள்.நானும் எறிந்துவிட்டேன்.வாருங்கள்.சேர்ந்து நனைவோம்.இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்ளுங்கள்.ஒரு துளி மழை கூட நம் இடையே நுழைந்து விடக் கூடாது.ஏன் தங்கள் அழகிய உடல் இவ்வளவு வெம்மையாக இருக்கிறது?காய்ச்சல் இல்லையே அயானா?.முத்தங்களை நிறுத்தாதீர்கள் ப்ளீஸ்.எனக்குத் திகட்டவில்லை.இன்னும் வேண்டும்.
என் மரணம் தங்கள் நினைவோடுதான்.அதிகாலையில் எழுந்ததும் நான் தங்கள் அன்பான மார்பகங்களிலிருந்து சரிந்து தங்கள் மடியில சவமாக கிடப்பதற்கான கற்பனைதான் வருகிறது.ஏன் அயானா நீங்கள் என்னைக் கொலை செய்யக் கூடாது?
2

No country for old men ல் Javier bardem தூக்கி கொன்டு திரியும் பூண் போட்ட கன் இதற்கு முன்பு பார்த்திராதது. கன்றுக்குட்டிகளுக்கு பால் குடித்து விடாமலிருக்க போடப்படும் மூங்கில் கூடையினாலான வாய்ப்பூட்டினை, உலக்கைகளுக்கு பிடிமானத்திற்காய் போடப்படும் எவர்சில்வர் பிடியினை, ஷாக் அப்சார்பர் மேல் பாகத்தினை, அக் கன் பூண் நினைவூட்டியது.சதக் சதக் என உயிரைக்கொல்லும் அக் கன் கிடைத்தால அடிக்கடி ஆளை மாற்றும் ஒரு பெருமுலைக்காரியின் முலைகள் பட்டுத் தெறிக்கும்படி நவீனக் கொலை செய்யலாம்.
உணவைப் பற்றிய பிரக்ஞை அல்லது விருப்பம் எனக்கு மிகக் குறைவானதே. சிறுவயதிலிருந்தே உணவென்பது கதை புத்தகங்களுக்கு நடுவில் வந்து போகும் ஒரு செயலாகத்தான் இருந்து வந்திருக்கிறது.சில காலம், விழிப்புணர்வு, இருத்தலியம, என்றெல்லாம் பினாத்திக் கொண்டிருந்தபோது, ஒரு கோப்பைத் தேநீர் ரீதியிலான கிளிட்சேக்களை முனகியபடி, உணவை உணர்வோடு உண்ட நினைவும் உண்டு.வயதில் பாதிக்குச் சமமான வருடங்களை ஓட்டல்களிலேயே செலவழித்துவிட்டதால், ரசித்துச் சாப்பிடுவதெல்லாம் இல்லை.அமிர்தம் என்பதின் மொழிபெயர்க்கப்பட்ட நரன் களின் உணவாக அம்மாவின முருங்கைக்கீரை இருக்கக்கூடும்.தெரியாத்தனமாக நாஞ்சில்நாடனை படித்துத் திரியும் / வளரும் /வளர்ந்த எலக்கியவாதி, அவரின் உணவு குறித்தான கட்டுரைகளைப் படித்துவிட்டனாம். தூங்கி எழும்போதே பசியோடு எழுவதும், இதை இதனோடு சாப்பிடுவோம் , அதை அப்படிச் சாப்பிடுவோம், என சாப்பாட்டைப் பற்றியே சிலாகித்து, எனக்கும் உணவின் மீதான காதலை வரவைத்துவிட்டுப் போனான்.
கடந்த ஒரு வருடமாக அலுவலகத்திலும் வீட்டிலுமாய் தலை இணையத்திலேயே தொங்கி கிடந்ததை நினைத்தால் எரிச்சலாக வருகிறது.masochist களையும் என்னுள்ளிலிருந்து தேடிக்கண்டுபிடிக்கலாம். கிட்டதட்ட ஒரு மனோ வியாதிக்காரனாய் மாற்றிவிட்டிருக்கிறது இந்த பாழாய்ப் போன உலகம்.செய்வதற்கெதுவுமில்லை, என உளறிக் கொட்டியபடி புதைந்திருந்த இருக்கைகளில் புற்றுக்கள் வளரத் தொடங்கிவிட்டிருக்கின்றன. எல்லாம் உதறி வெளி நடக்கையில், என்னை அச்சமயத்தில் எதிர்பார்த்திராத விநோத பறவையொன்று சபித்துப் பறக்கத் துவங்கியது.
சமீபத்தில் படித்திருந்த சில புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் வரிந்து கட்டிக் கொண்டு, சண்டை போடும் சண்டைக்காரனாய் மாற்றிவிட்டிருந்தது.அவை குறித்தான எந்த குற்றவுணர்வுகளும் இல்லை என்கிற போதும் ,உனக்கிது தேவையாடா? எனச் சொல்லும் நண்பர்களின் அக்கறைகளுக்கு செவிமடுக்கிறேன். என் சுட்டுவிரலை என் முகத்திற்கு நேராய் நீட்டி, உனக்கிது தேவையாடா? எனக் கேட்டு கடந்து வந்தாயிற்று.
இங்கே கொட்டியிருப்பவைகளைத் தொகுத்தாயிற்று. என்ன பெயர் வைப்பதென குழம்பிப் போயிருக்கிரேன்.ஒன்றைச் செயலாக்கும்போது கதவுகள் இறுக்கமாய் மூடிக் கொண்டுவிடுகின்றன.தன்வயப்பட்ட உலகம் என சொல்லிக் கொள்கிறேன். மிக அந்தரங்கமான மொழியில் எழுதுவதாய் சமாதானப்படுத்திக்கொள்கிறேன. எவனுக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை என இருமாப்புக் கொள்கிறேன்.நான் கவிஞனோ, எழுத்தாளனோ,புரட்சியாளனோ, சிந்தனயாளனோ அல்ல. எனக்கான இடம் பதுங்கு குழிதான். எனக்கான தளம் என் நாட்குறிப்புதான். நானொரு நகரும் மேகம் அவ்வளவுதான்.