
'ஆடுங்கடா என்னச் சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக் கத்தி'
இடுப்பில் ஒரு கையை வைத்தபடியும்
ஒரு காலை தரையில் லேசாய் உதைத்தபடியும்
தலையை இடமும் வலமுமாய்
அசைத்தபடியுமாய்
என் முன்னிருந்தபடி பாடிக்கொண்டிருக்கிறாள் தர்ஷி
இரண்டாவது முறையும் அதே வரிகளை
சத்தமாய் பாடுகிறாள்
இந்த முறை அய்யனாருவில்
சிறிது அழுத்தம் சேர்த்து
லேசாய் தலை சாய்த்துச் சிரிக்கிறாள்
வாரியெடுத்துக்கொள்கிறேன்
வயிற்றிலிருந்து பீறிட்டெழும் அவளது சிரிப்பில்
தளும்புகிறது வீட்டின் கூடம்
பேரரசுக்களையும் அக்கணத்தில்
நேசித்துவிடலாம் போலத்தானிருக்கிறது...
39 comments:
Post a Comment