Tuesday, February 27, 2007

உயிர்த்திருத்தல்

இருத்தலின்
நிரூபண சித்திரங்களை
வெளிறச் செய்கிறது
காலம்.....

முன் மாதிரிகளின்
பிரம்மாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும்- எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்...

இருப்பினும்
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?..

7 comments:

Ken said...

"இருப்பினும்
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?.."

வெகு அருமையான நுட்பமான கவிதை பாராட்டுக்கள்

சேதுக்கரசி said...

பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்..

அன்புடன் கவிதைப் போட்டி

கடைசித் தேதி ஏப்ரல் 14 :-)

செல்வநாயகி said...

நல்ல வரிகள். தொடர்ந்து எழுதுங்கள்.

Ayyanar Viswanath said...

நன்றி செல்வநாயகி

உங்களின் 'சாத்தப்பட்ட' பதிவு எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று
உங்களின் ஊக்கம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

Ayyanar Viswanath said...

/வெகு அருமையான நுட்பமான கவிதை பாராட்டுக்கள்/

மிகவும் நன்றி கென்

Ayyanar Viswanath said...

அழைப்பிற்க்கு நன்றி சேதுக்கரசி

-ganeshkj said...

//முன் மாதிரிகளின்
பிரம்மாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும்- எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்...//

மிகவும் உண்மை. எந்த பாதையில் பயணித்தாலும் அதில் ஏற்கனவே அநேகம் பேர் அல்லது யாரோ ஒருவராவது பயணித்திருப்பதை உணரமுடிகிறது. இன்னொன்று தானா நான் என்ற கேள்வியும் எழுந்து அயர்ச்சியடையச் செய்கிறது. but thats how life is !!

சின்ன கவிதை நிறைய யோசிக்க வைக்கிறது. Good one !!

Featured Post

test

 test