Thursday, March 13, 2008

சுகுணா திவாகர் மற்றும் அய்யனார் பிரதிகளினூடாய் அதிகார மய்யங்களை எதிர்த்து எழுதப்படும் பிரதிகளில் கட்டமைக்கப்படும் அதிகாரங்கள்

சுகுணாவின் சமீபத்திய பிரதியொன்றில் அவர் சுட்டியிருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மிகப்பெரிய இளக்காரத்தையே வரவைத்தது. முதலில் பார்ப்பனியம் என்கிற சொல்லாடல் மூலமாக கட்டமைக்கப்படும் உண்மை என்னவென நோக்குகையில் அஃதொரு அதிகார மய்யத்திற்கான எதிர்ப்பு என்பதுதான் உண்மையான விழைவாய் இருக்கமுடியம்.பார்ப்பனியம் என்ற சொல்லாடல் மீது எனக்கு மிகப்பெரிய மனக்கசப்புகள் இருக்கின்றன.மறைமுகமாக இச்சொல்லாடல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் கட்டமைப்பதால் இச்சொல்லாடல் ஒற்றைப்பரிமாணத் தன்மைக் கொண்டது என்பதாய் நம்புகிறேன்.நவீன யுகம் சிதைந்து விளிம்பு நிலை கதையாடல்களை பேசத்துவங்கிய காலகட்டத்தில் பார்ப்பனிய எதிர்ப்பென்பது மிகச்சக்தி வாய்ந்த இடது சாரித் தன்மையாய் கோலோச்சியது.அப்போது அவ்வெதிர்ப்புகள் மிகத் தேவையானதுமாய் இருந்தது.ஆனால் பின்நவீன சூழலில் இப்பார்ப்பனீயம் என்கிர சொல்லாடல் விஜயகாந்த படம் பார்த்த இண்டர்வெலில் ஒரு நோஞ்சானைக் குத்துவிடுவது என்பது போன்ற படிமத்தையேக் கட்டமைக்கிறது இப்போதையை தேவை / இப்போதைய சொல்லாடல் அதிகார மய்யத்திற்கெதிரான சிறுகதையாடல்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்க முடியும்.இன்னமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே முன்னிறுத்தி நமது அதிகாரங்களை நிலைநாட்டிக் கொள்வதென்பது நேர்மையற்றதாய் உண்மைக்குப் புறம்பானதாய் மட்டுமே இருக்க முடியும்..

ஆகவே பார்ப்பனியம் என்பதிலிருந்து நகர்ந்து அதிகார மய்யம் என்கிற பெருங்கதையாடலைக் கைக் கொள்ள வேண்டியது மிக மிக அத்தியாவசியமானதாய் / மிகப்பிரம்மாண்டமானதாய் முன் நிற்கிறது.இந்த அதிகாரமய்யமென்பது நம் எல்லாரிடமும் நமக்கேத் தெரியாது வேரூன்றிக் கிளைத்துப் பரவி தன் நீண்ட பற்களால் கண்ணில் படுபவற்றைக் கிழித்துப் போடுகிறது.இதிலிருந்து நாம் தப்ப முடியாது.விலங்கின் வளர்ந்த நிலையான மனிதனென்பவன் தன்னுடைய இயலபுச் சூழலிலிருந்து வெளிவரல் என்பது மிகப்பெரிய போராட்டமே. நாமெல்லாரும் வளர்ந்த/வளர்ச்சியடைந்த மிருகங்களென்பதால் மிருகங்கள் தனக்கே உரித்தான அதிகாரங்களை தான் அடக்கியாள வேண்டிய போராட்டங்களை முன் நிறுத்துவதால் நாம அனைவரும் அதிகார மய்யத்தின் பிரதிகளே..

தன்னளவில் இதைப் புரிந்து கொள்வதென்பது இயலாத காரியமென்பதால் பிறிதொருவர் சுட்டி புரிந்து கொண்ட அதிகார பிம்பங்களை இங்கே முன் வைக்கிறேன்..சமீபத்தில் நண்பர் ஓவியர் அசோக்குடனான உரையாடல்களின் முடிவில் அவர் வைத்த வாதங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை வரவைத்தது. ஓவியம, பிரதி இவ்விரண்டுக்குமான வேற்றுமைகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பிரதியை முழுமையாய் புரிந்து கொள்ள பிரத்திக்கான ஓவியங்கள் எந்த அளவு துணையாய் இருக்கிரதென சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் பிரதிக்கான ஓவியமென்பது கிடையவே கிடையாது.. நீ உன்னுடைய பிரதியை முன்னிருத்தி, அதிகாரத்தைக் கட்டமைத்து உன் பிரதியைப் பிரதானப்படுத்தி அவ்வோயியங்களை பயன்படுத்திக் கொள்கிறாயே தவிர ஓவியமென்பது ஓவியமாகவே இருக்கிறது... அது உனக்கானதில்லை... அது அதற்கானது.. எனச் சொல்லி என்னில் அதிரச்சிகளை உண்டாக்கினார்.நான் என் பிரதிகளை எவரோக்களின் ஓவியங்களினூடாய் காட்சிப்படுத்துகிறேன் இஃதொரு அதிகார மய்யத்தின் மிக ஆணவமான நடவடிக்கையே என்பதை உணர்ந்த கணத்தில் நான் மிகவும் அதிர்ந்து போனேன் என் இதுநாள் வரைக்குமான நிலைப்பாடென்பது சிதைந்து போன சிதைவுகளை உள்ளடக்கிய ஒன்றானதாய் இருந்து வந்திருக்கிறது. மிகக் குறைந்த பட்ச நியாயமென அவ்வோவியம் எங்கிருந்து எடுக்கப்பட்டதென்கிற சுட்டிகளைக் கூட கொடுக்காதிருந்தது என்னை குற்ற உணர்வுகளின் கீழ் தள்ளியது..

நானொரு அதிகாரமய்யப் பிரதி..

சுகுணா தமிழச்சியின் பதிவொன்றின் பின்னூட்டத்தில் என் பின்னூட்டத்திலிருந்த வீரம் என்பதை இவர் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை என்கிற வாக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பிரச்சினைகளின் அல்லது சர்ச்சைகளின் கரு என்னவென்பதே தெரியாது வீரம் என்றால் என்ன? என்றொரு பின்னூட்டத்தை இட்டிருந்தார் இதில் பல்லிளித்த அதிகார மய்யம் மிகக் கூர்மையான பற்களைக் கொண்டிருந்தது.ஒரு பிரதியினை முழுமாய் வாசிக்காது அதன் எதிர்கருத்துகளை சிதைப்பதென்பது அதிகார மய்யத்தின் செயல்பாடே.. தெரிந்தோ தெரியாமலோ அவர் அதை நிறுவியிருந்தார். அதனோடு மட்டுமில்லாது அவர் சமீபத்தில் எழுதியிருந்த பிரதி நீர்த்துப்போன நோஞ்சானைக் குத்துவிடுகிற செயலாகவே இருந்ததென்பது என் அனுமானமாய் இருக்கிறது.

இனிமேலும் பார்ப்பனீயம, சுரா, சுஜாதா என ஜல்லியடிததுக் கொண்டிருப்பதிலிருந்து மீண்டு அதிகார மய்யம் என்பதினை நோக்கி நகரத் துவங்குவோம. அதற்கு முதலில் நம்மளவில் தூக்கலாய் நிற்கும் அதிகாரத்தினைச் சிதைப்போம்.இப்போதைய வலைச்சூழலில் மிகப்பெரிய அதிகார மய்யமென நான் உணர்வது தமிழச்சி பதிவுகளையும் அதற்கு ஒத்து ஊதும் திராவிட ப்ளா ப்ளாக்களை மாத்திரமே. பார்ப்பனியத்திற்கெதிரான திராவிடமென்பது தன்னளவிள் இன்னொரு பார்ப்பனியமாக வளர்ந்து நிற்பது மிகவும் ஆபத்தானது..

சற்றுத் தாமதமான பின்குறிப்பு: இப்பதிவிற்கு வரும் / வரப்போகும் பார்ப்பனீய சார்பு பின்னூட்டங்களுக்கு : இப்பிரதியில் நான் சொல்லியிருப்பதெல்லாம் / சொல்ல வந்திருப்பதெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்பு நிலைப்பாடே இஃதொரு ஒற்றைப் பரிமாணமாய் இருப்பதின் அபாயங்களைச் சுட்டியிருக்கிறேனே தவிர சார்பு நிலைப்பாடில்லை.எந்த ஒரு வடிவிலும் அதிகாரத்தினை மகிழச் செய்ய நான் எப்போதுமே விரும்புவதில்லை
Post a Comment

Featured Post

தினசரிகளின் துல்லியம் - கிண்டில் வெளியீடு

தினசரிகளின் துல்லியம்             புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சில உதிரிக் குறிப்புகள் உள்ளே.. 1.    தினசரிகள...