Wednesday, May 25, 2011

டேபிள் டென்னிஸ் கவிதைகள் 0-3

அவள்
சாதாரணமாய்
நடக்கும்போதே
முலைகள் குலுங்கும்

தாழ்முடி போட்ட
ஈரக்கூந்தல்
காட்டன் புடவையணிந்த
பிருஷ்டங்களை
முற்பகல் வரை
நனைத்துக் கொண்டிருக்கும்

பிற்பகலில்
பூனைச் சோம்பலாய்
புடவை விலகித்
தளிர் தொப்பூழ் காட்டும்

மலர்ந்த மாலையில்
முதலில் தென்படும் நட்சத்திரமாய்
முகம் ஜ்வலிக்கும்

இரவு ஆடைக்குள்
மொத்த மென்னுடலும்
சதா தளும்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருப்பதுதான்
அந்த நாளின்
மிகப் பதட்டமான தருணமாகவிருக்கும்

நள்ளிரவிற்குச் சற்று முன்பு
சன்னல்கள் அடைபடும்

எனக்காய்
விழித்திருக்கும்
கால்களற்ற
இரவின் மேசையில்
எண்ணற்றப் பந்துகள்
அசையாமல் காத்திருக்கும்

நீரிழந்த மீனாய்
பந்துகளோடு சேர்ந்து கொண்டு
மெல்லத் துடிக்க ஆரம்பிப்பேன்

டேபிள் டென்னிஸ் கவிதைகள் 2-0

அவளின் வெளுத்தப் பாதங்களில்
முத்தமிட்டுத் துவங்கினான்
சிலிர்த்தவள்
யோனி மறைய
கால்கள் குறுக்கி
பின் நேராய் நீட்டி
கால்விரல் நகங்களால்
அவன் மார்புரசி
முகத்தைப் பாதங்களில் ஏந்தி
அவனுடலை முகத்திலிருந்து இழுத்து
தன்மேல் சரித்துக் கொண்டாள்

மெலிந்த தேகத்தவளின்
நாபியில் முகம் புதைத்து
சுருண்டு படுத்துக் கொண்டான்
உடலழுத்தத்தை வெகுநேரம் தாளாதவள்
அவனைக் கீழே தள்ளி
மேலேயமர்ந்து கொண்டு பெருமூச்சுவிட்டாள்
பின்பு அவனின் கெஞ்சல்களுக்கு
குழைவும் வெட்கமுமாய் சம்மதித்தபடி
இயங்க ஆரம்பித்தாள்

மலையாளிகளின் முயக்கம் கூட இப்படித்தானா
எனக் கூச்சத்தோடே கேட்டவளிடம்
அந்நிய வெள்ளை தேவதைகளும்
இப்படித்தான் என்றான்
உனக்கெப்படித் தெரியும் என்றவளிடம்
பார்த்திருப்பதாய் சொன்னான்
இதையெல்லாம் பார்ப்பதா எனக் கோபித்தவளிடம்
நம்மையும் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என
எழுதிக் கொண்டிருக்கும் என்னைக் காண்பித்தான்

தரையில் விழுந்த
மேசைப் பந்தாய் துள்ளி எழுந்தவள்
ஆத்திரத்தில் வெகுண்டெழுந்து
நன்கு விறைத்திருந்த
அவனின் குறியை அதே
ஆசைக் கால்களால் நசுக்கினாள்
இப்போது எனக்காய் திரும்புகிறாள்
என் கழுத்து நெறிபடுமுன்
ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்
கவிதை அவ்வளவுதான்
நீங்களும் ஓடிப்போய்வி






டேபிள் டென்னிஸ் கவிதைகள் 1-0

பூமியின் குறுக்கில்
சப்தமெழுப்பாமல் நடந்து கொண்டிருப்பான்
மெல்லிய இடிக்கும் நடுங்குவான்
வெயில் முற்றிய பகலொன்றில்
பக்கத்து வீட்டுக்
குட்டிப் பூனையின்
கழுத்தை முறித்துப் போட்ட
அன்று கூட
மலரிதழின் விதைக் கண்ணிலிருந்து
அதிகாலையில் விழித்தெழுந்ததைப்
பார்த்திருக்கிறார்கள்
அதே நாளின் மாலையில்
உடல் முழுக்க காயங்களாய்
திரும்பியவனை
இறுக அணைத்துக் கொண்டேன்
லயம் பிசகாது
மேசையில் மோதும் பந்தின் சப்தம்
அவன் மார்புக் கூட்டுக்குள்ளிருந்து
கேட்டுக் கொண்டிருந்தது.




டேபிள் டென்னிஸ் கவிதைகள் 0-2

மனிதர்களை எனக்குப் பிடிக்காது
குறிப்பாக பெண்களை
வெகு குறிப்பாக ஆண்களை
ஏற்கனவே
பிதுங்கிக் கொண்டிருந்த எல்லோரையும்
கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளியாகிற்று
என்றாலும்
தினம் யாராவது ஒருவர் புன்னகைத்து
பதிலுக்கு கடுகடுப்பை பெற்றுக் கொள்கின்றனர்
மனிதர்களை நிஜமாகவே எனக்குப் பிடிக்காது
எனக்குப் பிடித்தது சுவர்களோடு மேசைப்பந்து விளையாடுவது
காலை நடை போவது
மாலை ரம் குடிப்பது
கதவை இழுத்து சாத்திக் கொள்வது

டேபிள் டென்னிஸ் கவிதைகள் 0-1

கார்னிவல் தெருவின் முகப்பு வீட்டில்
மஞ்சணாத்தி கொத்தாய் பூத்திருக்கிறது
செயிண்ட் த்ரேஸ் தெருவிலிருக்கும் கடைசி வீட்டில்
காம்பவுண்டைத் தாண்டி ஆவாரம்பூ
மஞ்சளை உதிர்த்திருந்தது
அம்பேத்கார் தெரு குடிசை ஒன்றினுள் ஒரு சிறுமி
தலையில் கேரம் பலகையை சுமந்தபடி நுழைகிறாள்
பிள்ளையார் கோவில் தெரு ஓட்டு வீட்டிலிருந்து
ப்ராவிற்குள் மேசைப்பந்தை அடைத்துக் கொண்டு
அடர் சிவப்பு லிப்ஸ்டிக் சகிதமாய் வெளியேறுகிறேன்
ரூடூமாஸ் வீட்டின் இரண்டாம் தளத்தில்
அதே டேபிள் டென்னிஸ் மேசையில்
யாரையாவது கிடத்தி
யாராவது புணர்ந்து கொண்டிருக்கலாம்

Friday, May 20, 2011

டேபிள் டென்னிஸ் கவிதைகள் 0-0

நீல டேபிள் டென்னிஸ் மேசையில்
வெள்ளைப் பந்து சப்தத்தோடு துள்ளுகிறது

மன மேசையின் வலையைத்
தகர்த்தெறிந்து
திசையெங்கும் பந்துகளைச் சிதறடித்தேன்
கற்பனைச் சுவர்கள்
கைக் கொள்ளாப் பந்துகள் மோதி
உயிர்தெழுந்தன

அந்தர மேசையில்
சுவர்களோடு
விளையாட்டைத் தொடர்ந்தேன்
பந்தைத் திருப்பியணுப்ப வேண்டிய
தன் முறைக்காய் காத்திருந்துச்
சலித்த மற்றச் சுவர்கள்
அறையை மேசையாய் கவிழ்த்துப் போட்டு
என்னைப் பந்தாக்கி
சுவாரசியமாய் ஆட ஆரம்பித்தன

அதே நீல டேபிள் டென்னிஸ் மேசையில்
வெள்ளைப் பந்து இன்னும் சப்தத்தோடு துள்ளுகிறது

Featured Post

test

 test