Thursday, March 24, 2011

அத்தியாயம்.பதினொன்று. விளி

இங்கு வந்த மூன்று மாதத்தில் பகலில் குடித்ததில்லை. குணாவிடமும் சீராளனிடமும் பேசிவிட்டு வெளியில் வந்தவுடனேயே மண்டையில் நமைச்சல் எடுக்க ஆரம்பித்திருந்தது. வாங்கி வந்திருந்த பையை அப்படியே எடுத்துக் கொண்டு தோப்பின் நடுவிற்குப் போய் மறைவாய் அமர்ந்து கொண்டேன். குடிக்க குடிக்க நினைவில் சப்தங்கள் கேட்க ஆரம்பித்தன. விஜியும் தாமசுமாய் மாறி மாறி நினைவை மோதிக் கொண்டிருந்தனர். நான் தலையை உலுக்கிக் கொண்டே குடித்தேன். முக்கால் புட்டி முடிந்திருந்தது. சுத்தமாய் போதை இல்லை. திடீரென அழுகை வந்தது. சப்தமாய் அழுதேன். என் மீது கசப்புகளும் கோபங்களும் பெருகின. மீண்டும் குடித்தேன். எத்தனை பேரின் வாழ்வை இல்லாமல் ஆக்கி இருக்கிறேன். எத்தனை பேரை நம்பவைத்து துரோகித்திருக்கிறேன். அய்யோ! எனக் கத்தினேன். நான் கொன்ற அத்தனை முகங்களும் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வர ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் என் நினைவு முற்றிலுமாய் பிறழ்ந்து போய் எல்லா உருவங்களும் நிஜத்தில் தோன்ற ஆரம்பித்தன.

விஜி என் எதிரில் வந்து அமர்ந்து கொண்டாள். தாமஸ் எனக்குச் சமீபமாய் அமர்ந்து கொண்டு டம்ளரில் மதுவை மிக நிதானமாய் ஊற்றினான். இரண்டு பேரையும் பார்த்து நான் சப்தமாய் அழுதேன். திடீரென உதயமான நாகராஜ், அரிவாளை விஜியின் தலையைக் குறி பார்த்து வீசினான். நான் எதிரிலிருந்தவளைக் காப்பாற்ற அவள் மீது பாய்ந்தேன். குணா எங்கிருந்தோ வந்து என் வயிறில் எட்டி உதைத்தான். சீராளன் கையில் ஒரு கத்தியோடு என் மீது பாய்ந்தான். நான் எழுந்து ஓடினேன். தொலைவில் இரஷ்யப் பெண் ஆடைகளற்று கால் விரித்து நின்று கொண்டு ஒரு விரலால் என்னை அருகில் அழைத்தாள். நான் நின்றேன். திடீரென மரத்தின் மீதிருந்து ஓனரம்மா குதித்தாள். அவளும் ஆடைகளைத் துறந்திருந்தாள். ஓனரம்மா அகலமாய் சிரித்தபடி என்னை நெருங்கினாள். நான் பின்னால் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்தேன். ஓனரம்மா, மீனாட்சி! எனக் கத்தினாள். இரண்டு கரங்கள் பின் புறமாய் என்னை அணைத்தன. உடல் மெத்தென எதன் மீதோ படர்வது போலிருந்தது. கழுத்து வலிக்க திரும்பிப் பார்த்தால் ஆடைகளில்லா மீனாட்சி என்னை இறுக்கி அணைத்திருந்தாள். அவளை விலக்கி விட்டு ஓடினேன். எனக்கெதிரில் பூமி பிளந்து ஜிகினாஸ்ரீ மெதுவாய் மேலெழுந்தாள். குட்டிப் பையா! என சிரித்தாள். அவளின் ஒரு முலை பாதி பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. யோனியின் நடுவில் ஒரு கத்தி சொருகியிருந்தது. வா குட்டிப்பையா! எனக் கைகளை விரித்தாள். கண்களை இறுக்க மூடிக் கொண்டு கத்தியபடியே ஓடினேன். ஒரு தடித்த மாமரத்தின் மீது மோதித் தெறித்துக் கீழே விழுந்து மூர்ச்சையானேன்.
0
விழிப்பு வந்தபோது இருள் முழுவதுமாய் எல்லாவற்றையும் மூடியிருந்தது. எங்கு கிடக்கிறோம் என்பது நினைவில்லை. இங்கு எப்படி வந்தோம்? என யோசிக்க யோசிக்க தலை வலித்தது. எழுந்து கொண்டேன். சுத்தமாய் திசை தெரியவில்லை. இருளென்றால் அப்படி ஒரு இருள். எனக்குள் பயம் துளிர்த்தது. நினைவைத் துழாவியதில் மதியம் குடித்தது நினைவிற்கு வந்தது. இங்கு எப்படி வந்து விழுந்தேன் என நினைவில்லை. தட்டுத் தடுமாறி பாதையைக் கண்டுபிடித்து நடக்க ஆரம்பித்தேன். தோப்பு முடிந்து வயல் வந்தது. கண்கள் இருளுக்கு பழகியதும் வீடு இருக்கும் திசை துலங்கியது. மீண்டும் தோப்பிற்குள் நடந்து வீட்டுக்கு வந்தேன். சுவிட்சை போட்டதும் கண் கூசியது. நெற்றி புடைப்பாகி இருந்தது. எதன் மீது மோதிக் கொண்டேன் எனத் தெரியவில்லை. இரவு சாப்பாடு வந்துவிட்டிருக்கிறது. சாப்பிடும் உணர்வு இல்லை. தண்ணீர் மட்டும் குடித்தேன். கட்டிலில் அமர்ந்து யோசித்தேன். மெதுவாய் மதியம் நிகழ்ந்தவைகள் யாவும் நினைவிற்கு வந்தன. எப்படி இத்தனை கொலைகளையும் துரோகங்களையும் நிகழ்த்திவிட்டு இந்த அமைதியான வாழ்க்கைக்குள் என்னால் இலகுவாய் பொருந்திப் போக முடிந்தது. யோசிக்க யோசிக்க குற்ற உணர்வு பெருகியது.

தலைவலி பொறுக்க முடியவில்லை. மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. மீண்டும் தோப்பிற்குள் நடந்து மரத்தடியின் கீழ் கிடந்த பையைப் பார்த்தேன். இரண்டு புட்டிகள் இருந்தன. எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். கொஞ்சம் போல டம்ளரில் ஊற்றி தண்ணீர் விட்டுக் குடித்தேன். பரபரப்பு ஒரு நிதானத்திற்கு வந்தாற் போலிருந்தது. சாப்பாடு ஆறிப் போய் இருந்தது . எடுத்துப் போட்டு சாப்பிட்டேன். என்னவென்று சரியாய் சொல்லிவிட முடியாத துக்கம் பெருகி வழிந்தது.

மதியம் எப்படி எல்லா உருவங்களும் துல்லியமாய் என் முன் வந்தன? என்பதை நினைக்க நினைக்க உடல் அதிர்ந்தது. மனதின் கற்பனைகள் இத்தனை நிஜமாய், பயங்கரமாய் எதிரிலேயே தோன்றும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. மனச் சிதைவு அடைந்திருக்கிறேனோ? எனச் சந்தேகமாய் இருந்தது. திடீரென இந்தத் தோப்பும், தன்னந்தனி வீடும் அந்நியமாகிப் போனது. பயம் ஒரு அலையைப் போல பொங்கியும் தாழ்ந்துமாய் மனம் முழுக்கப் பரவியபடி இருந்தது. பயத்தைப் போக்க மீண்டும் குடித்தேன். இன்னும் அதிக பயம் வந்தது. இனிமேல் இங்கிருக்க முடியாது எனத் தோன்றியது. இனி எங்கு போவது? என்பதும் புலப்படவில்லை. இந்த உணர்விலிருந்து முழுமையாய் வெளியில் வர என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை. தொடர்ந்து எங்காவது பயணித்தால் என்ன? எனத் தோன்றியது. எங்கு போக வேண்டுமென்பதைப் போகிற போக்கில் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இங்கிருந்து போய்விட வேண்டும் என முடிவு செய்ததும் எழுந்து கொண்டேன். குடித்துக் கொண்டிருந்த புட்டியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். தோப்பின் முகப்பிற்கு வந்து, ஓடையைத் தாண்டி வயலைத் தாண்டி சாலைக்கு வந்தேன். நேரம் என்ன ஆகி இருக்கும் என தெரியவில்லை. மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தைத் தவிர்த்து, நட்சத்திரங்களோ நிலவோ இல்லாத கரும் இரவு. பூச்சிகளின் சப்தங்கள் இரவை முழுமையாய் நிறைத்துக் கொண்டிருந்தன. தார்சாலை காலுக்குத் தட்டுப் பட்டதும் நடு சாலையில் நடக்க ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் ஏதாவது வாகனங்கள் வருமா எனத் தெரியவில்லை. அப்படியே வராவிட்டாலும் பரவாயில்லை போகிற வரை போவோம் என நடந்து கொண்டிருந்தேன். இருள் கண்களுக்குப் பழகிவிட்ட பின்பு இரவுக்கு மட்டுமேயான தனித்த வெளிச்சத்தை உணர முடிந்தது சற்று பயம் விலகியது போலிருந்தது. இப்படிக் கால்நடையாகவே இந்தியா முழுக்க சுற்றும் யோசனை உதித்தது. வெகுநேரத்திற்குப் பின்பு அந்த இருளமைதியைக் கிழித்தபடி தொலைவில் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் வெள்ளமென இருளில் பாய்ந்தது. கண்களை மூடிக் கொண்டேன். தார்சாலையை விட்டு நகரவில்லை. ஒரு அபாயச் சங்கு போல ஹார்ன் ஒலித்தது. காதுகளைப் பொத்திக் கொண்டேன். ஒரு சரக்கு லாரி எனக்கு எதிரில் வெகு அருகாமையில் நின்று சப்தமாய் உதறிக் கொண்டிருந்தது. அதன் பக்க வாட்டிற்காய் போனேன். ஓட்டுனர் தெலுங்கில் சப்தமாய் இரைந்து கொண்டிருந்தார். நான் லாரியின் கதவைத் திறந்து கையில் வைத்திருந்த மதுபுட்டியை நீட்டினேன். வாங்கிக் கொண்டார். வண்டியில் ஏறினேன். முன் சீட்டில் யாருமில்லை. அமர்ந்தேன். எங்க போகனும் என்றார். வண்டி எங்கபோவுது? எனக் கேட்டேன். ”தமிழா? இங்க என்ன பன்ற?” என்றார். ”வழி தவறிட்டேன்” என்றேன். வண்டி திருப்பதி போவுது என்றதற்கு ”எங்க வேணா போங்க” எனச் சொல்லியபடியே அந்த அகலமான சீட்டில் படுத்துக் கொண்டேன்.
0
என்னை யாரோ உலுக்கினார்கள். பதட்டமாய் எழுந்தேன். ட்ரைவர்தான் எழுப்பினார். ”எறங்கி வந்து டீ குடி, வா” என்றார். சூரியன் மேலெழுந்து விட்டிருக்கிறது. படுத்திருந்த பஞ்சில்லாத சீட் சுட்டது. தலையில் அடையாய் அழுக்கு மண்டியிருந்தது. அணிந்திருந்த சட்டையும் பேண்ட்டும் புழுதியின் நிறத்திற்கு மாறியிருந்தன. கீழே இறங்கி ”எங்க இருக்கோம்?” என்றேன் ”திருப்பதி கிட்ட” என்றார். ஒரு சாலையோர டீ கடை. ட்ரைவர் ஏற்கனவே டீயை ஊதிக் குடித்துக் கொண்டிருந்தார். சூடாய் டீ வந்தது. மூன்றே மிடறில் குடித்து விட்டு ”இன்னொரு டீ சொல்ணா” என்றேன். அவர் மேலும் கீழுமாய் பார்த்துக்கொண்டே இன்னொரு டீ சொன்னார். அதையும் குடித்தபின்பு சற்று நிதானமானாற் போலிருந்தது. மீண்டும் ஏறிக் கொண்டோம். வண்டியை விரட்டிக் கொண்டே ”எந்த ஊர்பா நீ?” என்றார். ”மெட்ராஸ்ணே” என்றேன். அந்தப் பெயர்தான் உடனே வந்தது. ”குண்டூருக்கு எதுக்கு வந்த? நீ இருந்த எடம் ரொம்ப டேஞ்சருபா பக்கத்துல காடு இருக்குது. பூச்சி பொட்டு எதாவது போட்டிருந்தா என்ன பண்ணுவ?” ”போய்சேர வேண்டியதுதான்” என சிரித்தேன் ”அதுசரி” என அமைதியானார். ஒரு மணிநேரத்திற்கு பின்பு வண்டியை எங்கோ நிறுத்தினார். டிபன் சாப்டலாம் என்றார். ”அதுக்கு முன்ன குளிக்கனும்னே” என்றேன். ”அப்ப இங்க முடியாது அடுத்து ஒரு குளம் வரும் அங்க குளிச்சிடு அப்றமா சாப்டுக்கலாம்” என்றபடியே மீண்டும் வண்டியைக் கிளப்பினார். ஐந்து கி.மீ தாண்டியதும் வலது பக்கம் ஒரு குளம் இருந்தது. உயரமான அரச மரம் பெரிதாய் கிளைகள் விரித்திருந்தது. இறங்கிக் கொண்டேன்.


பர்ஸை மட்டும் எடுத்துக் கரையில் வைத்து விட்டு அப்படியே தண்ணீரில் விழுந்தேன். சட்டையை, பேண்டை, உள்ளாடைகளை, தண்ணீரிலேயே கழற்றி வீசினேன். பத்து நிமிடத்தில் ஹார்ன் தொடர்ந்து அடிக்கும் சப்தம் கேட்டது. அப்படியே எழுந்து கரைக்கு வந்தேன். தூரத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு முதியவர்கள் அதிர்ச்சியாய் பார்த்தார்கள். ஒரு மஞ்சள் வேட்டி தரையில் காய்ந்து கொண்டிருந்தது. அதை எடுத்துக் கட்டிக் கொண்டேன். பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர் கத்திக் கொண்டே வேகமாய் வந்தார் எதுவும் பேசாமல் பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். அமைதியாய் வாங்கிக் கொண்டார். ட்ரைவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வண்டியிலேயே அமர்ந்து கொண்டிருந்தார். போய் ஏறிக் கொண்டேன். “கிழிஞ்ச வேட்டிக்கு ஐநூறு ரூபா கொடுக்கிற யார் பா நீ?” என்றார். நான் “ஓட்டலுக்கா நிறுத்துனே பசிக்குது” என்றேன். முறைத்துக் கொண்டே “மொதல்ல துணி வாங்குவோம் எங்கிட்டயும் பழைய சட்ட எதுவும் இல்ல” என வண்டியை நகர்த்தினார். பிரதான சாலையிலிருந்து ஊருக்குப் போகும் சாலையில் வண்டியை ஒடித்தார். எந்த ஊர் எனத் தெரியவில்லை. எல்லா கடை எழுத்துக்களும் தெலுங்கில் இருந்தன. ஒரு சின்ன பஜார் குறுக்கிட்டது. வண்டியை நிறுத்திவிட்டு “பணங்கொடு நீ இப்படியே இறங்கி வந்துராதே” என்றார். “அட நீ வேரண்ணே” என்றபடியே இறங்கினேன். மேல் சட்டை இல்லாதது ஒரு பெரிய உறுத்தலாகவே இல்லை. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டே கடைக்குள் நுழைந்தேன். ட்ரைவர் தலையில் அடித்துக் கொண்டே மீண்டும் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கடைக்குள் நுழைந்தவுடன் பணியாளர்கள் விநோதமாய் முறைத்தனர். “ரெடிமேட் எங்க:” என்றேன். விரலைக் காட்டினார்கள். ஒரு பேண்ட் எடுத்து அப்படியே போட்டுக் கொண்டேன். தொங்கிக் கிடந்த டீசர்டில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டேன் எவ்ளோ எனக் கேட்டு பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். மீண்டும் பிரதான சாலைக்கு வண்டியைத் திருப்பினார் ஒரு கிமீ தாண்டி இன்னொரு சாலையோரக் கடையில் நிறுத்தினார். இறங்கிப் போய் சாப்பிட்டோம். மோசமான உணவு. சகித்துக் கொண்டு சாப்பிட்டேன். இன்னொரு டீ குடித்தோம். சிகரெட் பிடித்தோம். மீண்டும் வண்டியைக் கிளப்பினார். பத்து மணி வாக்கில் திருப்பதி வந்தோம்.
“எறங்கிப்பா அவ்ளோதான் வண்டிய ஷெட்ல விடனும்” என்றார். “சரக்கடிக்கலாமான்னே” என்றேன். சற்று யோசித்தார். “ஒரு நிமிசம் இரு” என யாருக்கோ தொலைபேசினார். “ஒண்ணு பண்ணலாம் வண்டிய கொண்டுபோய் ஷெட்ல போட்ருவோம். நம்ம பையன் ஒருத்தன் அரக்கோணம் போறான். எனக்கு சொந்த ஊர் அரக்கோணம்தான். நாம மூணு பேரும் ஒண்ணா போய்டலாம். நீ அரக்கோணத்துல இருந்து ட்ரெயின் பிடிச்சிடு” என்றார். “சரிண்ணே” எனத் தலையாட்டினேன்.

திருப்பதி கசாமுசாவென இருந்தது காலைப் பதினோரு மணிக்கே வெயில் மண்டையைப் பிளந்தது. சந்து சந்தாய் திரும்பி லாரி ஒரு நெரிசலான இடத்தில் நின்றது. “இங்கயே நில்லு வரேன்” எனப் போனார். அந்த வீதி குப்பையாலும் நெரிசலாலும் பிதுங்கி வழிந்தது. அதிகமாய் ஒப்பணை செய்துகொண்டு, வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி இதற்கும் அதற்குமாய் பெண்கள் நடந்து கொண்டிருந்தனர். பத்து நிமிடத்தில் ஐந்திற்கும் மேற்பட்டப் பெண்களைப் பார்க்க முடிந்தது. புண்ணிய ஸ்தலங்களில் வேசிகள் பிதுங்கி வழிய காரணம் என்னவாய் இருக்கும் என யோசித்தேன். ஒரு வேளை இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் கூடுதலாய் வருகிறதோ? என்னவோ என நினைத்துச் சிரித்துக் கொண்டேன். ட்ரைவர் வந்து “வா போலாம்” என்றார். அந்த குறுகல் வீதி ஒரு பிரதான சாலையில் முடிந்தது. ஓரமாய் நின்று கொண்டிருந்த இன்னொரு சரக்கு லாரியில் ஏறினார். பின்னாலேயே நானும் ஏறிக் கொண்டேன் இருவர் உட்காரும் அளவிற்கு இடமிருந்தது. ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தவனுக்கு நடுத்தர வயதிருக்கும். ஸ்நேகமாய் புன்னகைத்தான். நம்ம பிரண்டுபா என்றார் ட்வைர். வண்டியை நகர்த்தினான். திருப்பதி தாண்டியதும் ஒரு தாபா குறுக்கிட்டது. “இங்க சாப்பாடு நல்லாருக்கும்னே” என்றான் ட்ரைவர். இறங்கிக் கொண்டோம். சின்னதாய் ஒயின்ஸ் கடையும் கண்ணில் பட்டது. “வாங்கிக்கலாமா?” என்றேன். “உள்ள பசங்க இருப்பாங்க வா” என்றபடியே முன்னால் நடந்தார். வரிசையாய் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. எல்லாக் கட்டிலிலும் ஒரு மரப்பலகை போடப்பட்டிருந்தது. ஒன்றில் போய் அமர்ந்து கொண்டோம். வந்த சிறுவனிடம் எனக்கு பீர் என்றேன். இருவரும் ரம் சொன்னார்கள். உணவு சொன்னோம். பேச்சு எங்கெங்கோ சென்றது. என்னைப் பற்றிக் கேட்டதற்கு வாயில் வந்ததைச் சொன்னேன். சொந்தமாய் பிசினெஸ் வைத்திருப்பதாகவும் வியாபர நிமித்தமாய் குண்டூர் வந்ததாகவும் கடைசி பஸ்ஸை விட்ட பிறகு ஒரு காரில் லிப்ட் கேட்டு, வரும் வழியில் ட்வைரோடு தகராறு ஆகி இறக்கிவிடப்பட்டதாக சொன்னேன். இரண்டு ட்ரைவர்களும் அவர்களின் தொழிலைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். சாலைகள் நிலவரம், சுங்கவரி, சாலையோரப் பெண்கள், சமீபத்திய அனுபங்கள், அழகான/ நோய் பிடித்த பெண்கள் உலவும் நிறுத்தங்கள் எனப் பேச்சு எங்கெங்கோ சுழன்றபடி இருந்தது.

மூவருமே நிறைய குடித்தோம். சாப்பாடும் நன்றாக இருந்தது. சாப்பிட்ட பின்பு கிளம்பினோம். “ஓட்டமுடியுமா?” எனக் கேட்டேன் ட்ரைவர் ஞானியைப் போல சிரித்தான். “இதுலாம் ஒண்ணுமே கெடயாது, எறும்பு கடிக்கிறா மாதிரி. எப்படி ஓட்டுரேன்னு மட்டும் பாரு” என ஏறி அமர்ந்தான். ஒரு கிலோ மீட்டர் தாண்டியதும் வண்டியை ஓரம் கட்டினான். வரிசையாய் புளிய மரங்களும் காட்டுச் செடிகளும் சாலைக்கு வெகு அருகாமையில் மண்டியிருந்தன. என்ன? வெனக் கேட்டேன். “லேசா கண்ணசருது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாம்” என்றான். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் ஏற்கனவே மட்டையாகி இருந்தார். வேகமாய் இறங்கியவன் கையில் வைத்திருந்த துண்டை கீழே போட்டுக் கொண்டு மரத்தடியில் படுத்துவிட்டான். சூரியன் மேற்கில் இறங்கத் துவங்கி இருந்தது. நான் சற்று உள்ளுக்குள் நடந்தேன். ஒரு வேப்ப மரத்தின் கீழ் போய் படுத்துக் கொண்டேன். உடனே தூங்கிப் போனேன்.

ஏதோ ஊறும் உணர்வு வந்து விழித்துப் பார்க்கையில் ஒரு பாம்பு என் தொடை மீதேறி அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்தது. சற்றுத் துணுக்குற்று எழுந்து சாலைக்காய் வந்தேன். நல்ல இருள். இரண்டு ஓட்டுனர்களுமே எழுந்திரிக்க வில்லை. மரத்தடியில் படுத்துக் கிடந்தவனைப் போய் உலுக்கி எழுப்பினேன். கொட்டாவி விட்டபடியே எழுந்தான். உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர் இவனை எழுப்பிய சப்தத்தில் எழுந்துவிட்டு லாரியின் லைட்டைப் போட்டார். மணி எட்டரை. “டேய் நேரமாச்சி” என்றார். இருவரும் வண்டியில் ஏறினோம். “நல்லா தூங்கிட்டோம்” எனச் சொன்னான். பத்து மணி வாக்கில் அரக்கோணம் வந்தோம். வண்டியை மீண்டும் பாருக்காய் விட சொன்னான். நான் வேண்டாமென்றேன் இரண்டு ட்ரைவர்களும் கோபித்துக் கொண்டனர். “மதியம் உன் செலவு இப்ப எங்க செலவு” என்றனர் “வேணாம்னே வீட்டுக்குப் போகனும் ஸ்டேசனுக்கா விட்ருங்க “என்றேன். பத்தரை மணிக்கு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். எந்த இரயிலுக்கு டிக்கெட் எடுப்பது என குழப்பமாய் இருந்தது. சரி உள்ளே போவோம் எது முதலில் கிளம்புகிறதோ அதில் ஏறிக் கொள்வோம் என நினைத்துக் கொண்டு டிக்கெட் வாங்காமல் உள்ளே போனேன். எனக்கு முன்னால் போனவன் எதிரில் வந்த ஒரு தடிமனான ஆளை இடித்துவிட்டு நிலை தடுமாறி விழுந்தான். அவனைக் கடக்கையில் எனக்குள் சரேலென தீப்பற்றியது, அது நாகராஜ்! உடனே நின்றேன் பக்க வாட்டில் ஒதுங்கி நின்று அவனைப் பார்த்தேன் ஆம்! நாகராஜ்தான் நல்ல போதையில் இருந்தான் தடுமாறி எழுந்து மீண்டும் நடந்தான். மூன்றே மாதத்தில் தாயோலி நன்கு பெருத்திருந்தான். லோகுவின் இடத்தை இவன் கைப்பற்றி இருக்க வேண்டும். என் மூளை பரபரவென விழித்துக் கொண்டது. இவனைக் கொல்லத்தான் என்னை எதுவோ நேற்று மதியம் விரட்டியிருக்கிறது என நினைத்தேன். இதுதான் ஊழின் விளியா? என்னக் கருமமோ, ஆனால் என்னை விரட்டிய, என்னை விளித்த சாத்தானே / கடவுளே உனக்கு நன்றி. என் வாழ்வில் நான் செய்யப்போகும் ஒரே பிரதிபலன் இதுதான். என் ப்ரிய விஜி, என் ப்ரிய தாமஸ் இதோ! இதோ!! நான் உங்களுக்கு செலுத்தப் போகும் அஞ்சலி . ஆம் பழியாஞ்சலி. நினைவு பயங்கரமாய் சப்தம் போட்டது. சிரமப் பட்டு எண்ணங்களை நாகராஜின் மீது குவித்தேன். கையில் எந்த ஆயுதமும் இல்லை. பரவாயில்லை அவனைக் கைகளால் அடித்துக் கொள்வோம். என் வாழ்நாளில் விருப்பத்தோடு செய்யப்போகும் முதல் கொலை. சந்தோஷமாய் உணர்ந்தேன். உற்சாகமானேன். நாகராஜைப் பின் தொடர்ந்தேன்.

(முற்றும்)

Wednesday, March 23, 2011

அத்தியாயம் பத்து. விலகல்

சென்னை வந்ததிலிருந்தே சீராளனுக்கு லேசான நெருடல் இருந்து கொண்டேதான் இருந்தது. லோகுவின் ஆட்கள் தேடிக் கொண்டு வருவார்கள் எனதான் ஆரம்பத்தில் சென்னை வரத் தயங்கினான். இப்போது அய்யனார் மீதுதான் முழு சந்தேகமும் இருந்தது. அவனை லோகுவின் ஆட்களோ, அல்லது வேறு யாராவதோ விலைக்கு வாங்கியிருக்கக் கூடும் என நம்பினான். அந்த இரவில் குணா வந்த ஐந்து நிமிடங்கள் கழித்து, காயங்களே இல்லாமல் அவன் வந்ததும், நடுவழியில் குணாவை ஆபத்தான நிலையில் கைகழுவி விட்டு பாதியில் இறங்கி கொண்டதும் அவன் மீது சந்தேகம் வலுக்க காரணங்களாக இருந்தன. அடிக்கடி ”தாயோலி இப்படி நெருக்கமா பழகிட்டு முதுகில குத்திட்டானே” என வாய்விட்டே புலம்பிக் கொண்டான். ஒரு கையை இழந்த குணாவைப் பார்க்கும்போதெல்லாம் சீராளனின் இரத்தம் கொதித்தது. தாமசை நினைக்கும் போதெல்லாம் சீராளனுக்கு கண்கள் கலங்கின. அய்யனாரைக் கொல்வதின் மூலம்தான் தாமசின் கணக்கை நேர் செய்ய முடியும் என அவன் நம்பினான். மேலதிகமாய் தாமஸ் செத்துப் போனதிற்கும், குணாவின் கை போனதிற்கும் மானசீகமாய் தானும் ஒரு காரணம் என்பதும் சீராளனின் குற்ற உணர்விற்கு முக்கிய காரணமாய் இருந்தது.

மருத்துவமனை வந்து ஐந்து நாட்கள் ஓடிப்போயிருந்தன. குணா மெல்லத் தேறிக் கொண்டு வந்தான். இடையில் சீராளன் அவனுடைய கொல்லம் தொடர்புகளுடன் தொலைபேசி, மருத்துவ சிகிச்சைக்கும் தங்குமிடத்திற்கும் ஏற்பாடு செய்தான். டாக்டர் எப்போது குணாவை டிஸ்சார்ஜ் செய்வார் எனக் காத்திருந்தான். குணாவிடம், அய்யனாரின் துரோகம் பற்றித்தான் நாளிற்கு இரண்டு முறை ஆத்திரமாய் பேசிக் கொண்டிருந்தான். டாக்டர்கள், குணாவிற்கு முழுமையாய் காயம் ஆற ஒரு மாதம் ஆகும் என்றனர். சீராளன் கொல்லத்தில் போய் சிகிச்சையை தொடர்ந்து கொள்வதாக சொன்ன பிறகு, டாக்டர் ஏழாம் நாள் போகச் சொன்னார். செயற்கைக் கை பொருத்துவது குறித்த விவரங்களைக் கேட்டுக் கொண்டான். இப்போது நவீன செயற்கைக் கைகள் வந்துவிட்டதால் ஒரிஜினல் கைக்கும், செயற்கை கைக்கும் பயன்பாட்டு அளவில் கூட பெரிய வித்தியாசங்கள் இருக்காது என டாக்டர் சொன்னது சீராளனுக்கு ஆசுவாசமாய் இருந்தது.

ஏழாம் நாள் சீராளனின் வற்புறுத்தலின் பேரில் குணாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள். சீராளன் மீண்டும் சென்னைத் தொடர்புகளிடமே பேசி ஒரு வண்டியை ஏற்பாடு செய்தான். குணா வலி நிவாரணி மாத்திரைகளாய் விழுங்கிக் கொண்டிருந்தான். மாத்திரை இல்லாமல் அவனால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பின்னிரவில் மருந்தின் மயக்கம் தீர்ந்து விழிப்பு வந்தபோது, வலி உயிர் போவது போலிருந்தது. குணா அந்த நேரத்தில் ஏன் பிழைத்தோம்? என நொந்து கொண்டான். ஒற்றைக் கையுடன் இனிமேல் வாழ்ந்து கிழிக்க என்ன இருக்கிறது? என அடுத்த நாள் சீராளனிடம் வெளிப்படையாகவே புலம்பினான். இன்னும் இரண்டு மாதங்களில் செயற்கைக் கை பொருத்தி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என சீராளன் தேற்றினான். குணாவிற்கு இந்த மருத்துவமனையை சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதை விட்டு வெளியேறும் நாளிற்காகத்தான் காத்திருந்தான். சீராளன் பணத்தைக் கட்டிவிட்டு குணாவைக் கூட்டிப் போக சக்கர நாற்காலியோடு அறைக்குள் நுழைந்தான். குணா அதில் உட்கார மறுத்து விட்டான். நான் நடக்கிறேன் எனச் சொல்லிக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கித் தரையில் கால் வைத்தான். மின்னல் வெட்டாய் கையில் வலி வெட்டிப் போனது. பற்களைக் கடித்தபடி வலியை அடக்கிக் கொண்டான். உள்ளே நுழைந்த நர்ஸ் அதிக சிரமமெடுத்துக் கொள்ளக் கூடாது சக்கர நாற்காலியில் அமருங்கள் என கண்டிப்பாய் சொன்னார். குணா எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டான். சீராளன் வேதனையோடு சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு மருத்துவமனையின் முகப்பிற்குப் போனான். கருப்பு நிற ஸ்கார்ப்பியோ நின்று கொண்டிருந்தது. நாங்கள் வருவதைப் பார்த்ததும் ட்ரைவர் அவசரமாய் காரின் கதவைத் திறந்து வைத்தார். குணா எழுந்து நின்றான். இரண்டடி எடுத்து வைத்து, சற்று சிரமப்பட்டு பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். சீராளனும் பக்கத்திலேயே அமர்ந்தான். ஓட்டுனரிடம் மெதுவாய் போக சொன்னான். குணா ”அதெல்லாம் வேணாம் சார் ஃபாஸ்டா போங்க” என சிரித்தபடியே சொன்னான். ட்ரைவர் வண்டியை எடுத்தார்.

சென்னையை விட்டு வெளியேறியதும் குணா, சரக்கடிக்கனும் போல இருக்கு ஏற்பாடு பண்னு என்றான். சீராளன் தயங்கினான். உடல் நிலை இப்படி இருக்கும்போது குடிப்பதா என மறுத்தான். குணா வற்புறுத்தவும் வழியில் நிறுத்தச் சொல்லி ஒரு கேஸ் பியரும் வைன் புட்டிகளையும் வாங்கி வந்தான். ஹாட் வேணாம் குணா என்றபடியே பியரை பல்லால் கடித்துத் திறந்து குணாவிடம் கொடுத்தான். வேகமாய் பீர் புட்டியை வாங்கியவன் மடக் மடக் என ஒரே மூச்சில் முக்கால் பியரைக் குடித்துவிட்டு பெரிதாய் ஏப்பம் விட்டுவிட்டுச் சொன்னான்.
”என்ன மறுபடியும் கொண்டு போய் ஆஸ்பத்திரில போட்ராத சீராளா”
சீராளன் உடைந்து போனான்.
”இல்ல குணா கொல்லத்துல காயல ஒட்டி ஒரு கெஸ்ட் அவுஸ் இருக்கு.. அங்கதான் தங்க போறோம்.. தினம் எட்டு மணி நேரம் ஒரு நர்ஸ் கூட இருப்பாங்க.. டாக்டரை தினம் இரண்டு முற விசிட் பண்றாமாதிரி அரேஞ் பண்ணி இருக்கேன்… சீக்கிரம் எல்லாம் சரியா போய்டும் பாரேன்”
தன்னுடைய பியரை எடுத்து வேகமாய் குடித்தவன். கறுவிக் கொண்டே சொன்னான்
“உனக்கு கை மாட்ன உடனே அய்யனார போட்றோம்”
“ப்ச். வேணாம் சீராளா. எல்லாத்தையும் விட்ருவோம். எல்லாம் தாமசோட போகட்டும். நாம எங்காயாவது போய் புதுசா சுத்தமா வாழ்க்கய ஆரம்பிப்போம்”
”ஆரம்பிக்கலாம் குணா அதுக்கு முன்னாடி கடைசியா அவன முடிச்சிட்டு ஆரம்பிப்போம்”
எதுவும் பேசாமல் குடித்தனர். வண்டி விரைந்தது
0
இந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது. பழகிய மனிதர்கள் அனைவருமே எளிமையாக இருந்தனர். இம்மாதிரியான ஒரு வாழ்க்கையை விட்டுவிட்டு, எங்கங்கோ எதன் பின்னாலேயோ பேய் மாதிரி அலைந்திருக்கிறேன். அதிக மாற்றங்களில்லாத, இயற்கையோடு அண்டிய, இந்த வாழ்வு என் கசப்புகளையும் வெறுப்புகளையும் கழுவித் துடைத்துவிட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக விடிவது போலிருந்தது. ஊருக்கு சற்றுத் தள்ளி கொண்டலகம்மா ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கோதாவரியைப் போல அகண்ட ஆறு இல்லைதானென்றாலும் இந்தக் கிளையாறின் சன்னமான அழகுதான் என்னை வெகுவாக வசீகரித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் பறவைகளின் சப்தங்களில் விழித்தெழுந்து, சூரியன் உதிப்பதற்கு முன்பு ஆற்றுக்கு வந்துவிடுவேன். நீராவிப் புகையை மெல்லக் கசியவிட்டபடி ஓடும் கதகதப்பான நீரில் வெகுநேரம் கிடந்துவிட்டு திரும்ப வீட்டிற்குப் போவேன். காலை உணவு வந்திருக்கும். சாப்பிட்டுவிட்டு வயலுக்குப் போய்விடுவேன். சென்னா ரெட்டி வீட்டிலிருந்து வேளை தவறாமல் வரும் உணவிற்கும், தங்குமிடத்திற்கும் ஒரு நாள் பணம் கொடுக்கப் போய் பெரிய தர்ம சங்கடத்தில் முடிந்தது. இங்கிருக்கும் மனிதர்கள் பணத்தை ஒரு வஸ்துவாகத்தான் பார்க்கிறார்கள். பணம் கொடுத்து அவர்களை அவமதித்து விட்டதாய் சென்னாவின் அப்பா பொருமினார். நகரத்திலேயே வளர்ந்ததால் அடிப்படை பழக்க வழக்கங்கள் தெரியவில்லை என சமாளித்துவிட்டுத் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வந்தேன்.


அதற்கு மாறாய் தினம் வயலுக்குச் சென்று மக்களோடு மக்களாய் வேலை செய்ய ஆரம்பித்தேன். அறுவடை முடிந்த காலமென்பதால். கட்டி வைக்கப்பட்ட நெற்கட்டுகளை அடித்து நெல் தனியாய் வைக்கோல் தனியாய் பிரிப்பது, களத்தில் அம்பாரமாய் சேமிக்கப்பட்ட நெற்குவியலைப் புடைப்பது, பின்பு அளந்து சிறு சிறு சாக்குகளில் கட்டி, நெல் மண்டிக்கு அனுப்புவது என எல்லா வேலைகளிலும் உதவினேன். மனிதர்களைக் கொல்லும் ’மகத்தான’ பணியிலிருந்த என் மனம், இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட்டுத் தன் இயல்பை அடைந்தது. ஒவ்வொரு வேலையையும், ஏன் ஒவ்வொரு அசைவையுமே என் அடி மனதிலிருந்து செய்தேன். சென்னாவின் அப்பா என்னைக் களத்தில் வேலை செய்ய விடுவதில்லை. நெல் மண்டி விவகாரங்கள், பணம் கொடுக்கல் வாங்கல், போன்றவற்றை நான் எடுத்துச் செய்தால் போதும் என மிகத் தயக்கத்தோடு சொன்னார். நான் புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டாலும். களத்திலும் வேலை செய்து கொண்டுதானிருந்தேன். வைக்கோல் சுனை புடுங்க தணிந்த மாலையில் கிணற்றில் குளிக்கும் உற்சாகத்தை நான் வேறெப்போதும் அடைந்ததாய் நினைவில்லை. அபூர்வமாய் நானும் சென்னாவும் குடித்தோம். குண்டூரில் இரண்டாவது காட்சி தெலுங்கு படம் பார்த்தோம். என்னை முழுமையாய் இந்த வயல் அதன் ஈரச் சேற்றால் இழுத்துக் கொண்டுவிட்டது. நடுவில் மாந்தோப்பு வேலைகள், உரம், பூச்சிக்கொல்லிகள் வாங்குவது, வேளாண்மை அலுவலகம் போய் வருவது, மற்ற விவசாயிகளின் கடன் சம்பந்தமான வேலைகள் என எல்லாவற்றையும் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டேன். காலையிலிருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் இருந்தது. என் வாழ்வின் மிக சந்தோஷமான, நிம்மதியான நாட்களாய் இவை இருந்தன.

நடுவில் குணா மற்றும் சீராளனின் நினைவு வரும். அவர்களுக்குத் தொலைபேசி பண விவகாரங்களை செட்டில் செய்துவிடலாம் எனத் தோன்றும் ஆனாலும் அதை மறக்கடிப்பது போல் ஒன்றன் பின் ஒன்றாய் வேலைகள் தினம் வந்து கொண்டிருந்தன. ஒரு அறுப்பு முடிந்து, மீண்டும் நாற்று விட்டு நடும் வேலைகளையும் முடித்த பின்பு சற்று ஓய்வு கிடைத்தது. ஒரு பகலில் சீராளனிடம் பேசி, முகவரி வாங்கி வங்கி விவரங்களை கொரியர் அனுப்ப முடிவு செய்தேன். நானும் சென்னாவும் குண்டூர் போனோம். என் அலைபேசி வேலை செய்வதை நிறுத்தி இருந்தது. பொது தொலைபேசியிலிருந்து சீராளன் எண்ணிற்கு கூப்பிட்டேன்.

”சீராளா அய்யனார் பேசுறேன்”
மறுமுனையில் அமைதி
சீராளா?
..
”சீரா”
”ம்ம் சொல்லு”
”எப்படி இருக்க? குணா எப்படி இருக்கான்? கை எப்படி இருக்கு?”
மறுமுனையில் பதில் வரவில்லை
”சீராளா பேசுரது கேட்குதா”
”கேட்குது. சட்னு விஷயத்துக்கு வா, எதுக்கு போன் பண்ண?”
”உங்களோட பேங்க் அக்கவுண்ட் டீடெய்ல்லாம் ப்ரிண்ட் எடுத்திருக்கேன். எந்த அட்ரஸ்க்கு அனுப்ப?”
”உனக்கு இப்ப என் அட்ரஸ் வேணுமா? சொல்லிட்டா ஆள விட்டு வெட்டுவியா?
நான் அதிர்ந்தேன் ”சீராளா என்ன பேசுற? நான் ஏன் உங்கள வெட்டனும்?”
”அப்புறம் எதுக்குடா நட்டாத்துல விட்டு போனவன் ரெண்டு மாசம் கழிச்சி அட்ரஸ் கேக்குற?”
”இல்லடா பேங்க் டீடெய்ல்ஸ் அனுப்பதான் கேட்டேன்”
”அதான் என் மெய்லயும் இருக்கே நான் பாத்துக்க மாட்டனா”
”இல்லடா அது எனக்கு நினைவுக்கு வரல”
”நடிக்காதடா ங்கோத்தா, நான் கொல்லத்துல இருக்கேன் எவனுக்கு சொல்லனுமோ சொல்லு”
”சீராளா நீ என்ன பேசுரேன்னு புரியல. நான் எவன் பூலையும் ஊம்ப வேண்டிய அவசியமில்ல. தாமஸ் செத்ததுக்கும், குணா கை போனதுக்கும் நானும் ஒரு காரணம்தான். அதுல எந்த மாத்துக் கருத்துமில்ல. அதுக்கு நீ என்ன பழி வாங்கனும்னு நினைச்சனா வந்து என்ன வெட்டு வா!. இல்லனா நானே உங்கிட்ட வரேன் என்ன கண்ட துண்டமா வெட்டிப் போடு. ஆனா எவன்கிட்டயோ உங்கள காட்டிக் கொடுத்துட்டேன்னு மட்டும் சொல்லாத” எனக்கு குரல் உடைந்தது.

இப்போது குணா பேசினான்
”எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லு, அன்னிக்கு நைட் நீ எங்க போன?”
”குணா அந்த ஜெயா வேற யாரும் இல்ல என் காதலி. நான் பாண்டில ஒரு பொண்ணோட வாழ்ந்தன்னு சொன்னனே அவதான் அது”
இப்போது சீராளன் கத்தினான் ”அதுக்காக கூட வந்தவங்கள நட்டாத்துல விட்டுடுவியாடா ங்கோத்தா”
”சீராளா அவள அங்க திடீர்னு பாத்ததும் என்ன பன்ரதுன்னே தெரியல. படிக்கட்டுக்கு அடில ஒரு ரூம் இருந்தது அங்க கூட்டிப் போய் பழைய கதலாம் சொன்னா. இப்ப அவ இந்த நிலமைக்கு வந்ததுக்கு காரணம் நான் தான்னு திட்டினா. எனக்கு எல்லாம் மறந்து போச்சு. திடீர்னு துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேட்டுத்தான் சுதாரிச்சேன். வெளில ஓடிவர பாத்தேன். ஆனா அவ என்ன விடல. அஞ்சி நிமிசத்துல அவ புருசன் ரூம்ல பூந்து, என்ன வெட்ட வந்தான். என்ன காப்பாத்தப் போய் அவ செத்துப் போனா.”
அதற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை. குரல் கம்மிப் போனது
குணா சீராளன் யாருமே பேசவில்லை
ஒரு நிமிடம் எல்லாம் அமைதியாக இருந்தது.
மூக்கை உறிஞ்சிக் கொண்டு தொடர்ந்து பேசினேன்
”நான் இப்ப குண்டூர்ல எல்லா அடையாளத்தையும் அழிச்சிகிட்டு ஒரு விவசாயியா வாழ்ந்திட்டிருக்கேன். நான் பண்ணது தப்புதான். அதுக்காக நீங்க கொடுக்கிற தண்டனைய சந்தோஷமா ஏத்துக்கிறேன். எப்ப வேணா என்ன வந்து வெட்டுங்க வாங்க” எனச் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தேன்.

தொலைபேசி பூத்தை வெட்டு வெளிவில் வந்தேன். முகத்தை அழுத்தமாய் துடைத்துக் கொண்டேன். சென்னா தூரத்தில் நின்றுகொண்டிருந்தான் ஒயின் ஷாப்பிற்கு போய் மதுபுட்டிகளை வாங்கினேன். பேசாமல் வண்டியிலேறி அமர்ந்து கொண்டேன். சென்னா மாலை ஒரு கல்யாணத்திற்கு அப்பா அம்மாவோடு போவதாய் சொன்னான். நாளைதான் வருவோம் என்றான். எனக்கும் தனியாய் குடிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. சரி என்றேன். தோப்பிற்கு வந்து சேர்ந்தேன்.

ஓவியம்: வான்கோ

மேலும்

Tuesday, March 22, 2011

அத்தியாயம் ஒன்பது. சுழல்

மழை வந்துதான் என்னை எழுப்பியது. எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். மாமரத்தின் அடர்த்தி இத்தனை நேரம் என்னை நனைவதிலிருந்து காத்திருக்கிறது. காற்றின் சாரல்தான் முகத்தை நனைத்தது. சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருப்பதால் மழையை அதிகம் கேட்கத்தான் முடிந்தது. அவ்வப்போது எல்லை மீறும் காற்று, மழை வெறும் இசை மட்டுமல்ல என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. நேரத்தை யூகிக்க முடியவில்லை. காலையில் இங்கு வந்தபோது அத்தனை வெயிலடித்தது. திடீரென எப்படி வானமும் பூமியும் ஒரே சாம்பலும் கருமையுமாய் மாறிப்போனதெனத் தெரியவில்லை. கட்டிலை விட்டு எழுந்து தோப்பின் முகப்பிற்கு வந்தேன். மழையின் பிரம்மாண்டம் முழுமையாய் தெரிந்தது. வயல்வெளியின் மீது நீர்த்தாரைகள் ஆவேசமாய் இறங்கிக் கொண்டிருந்தன. மழைதான் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த முயக்கமாக இருக்க வேண்டும். பிரபஞ்ச உயிரிகள் யாவும் மழையின்போது கலவியில் ஈடுபடுகின்றன. இயலாத உயிர்களுக்குக் கூட கலவியின்பத்தின் சிறு சிலிர்ப்பை இந்த மழை தந்து விட்டுத்தான் போகிறது.

விஜியுடன் கடைசியாய் மழையில் நனைந்த கடற்கரை இரவு, நினைவை ஆக்ரமித்தது. அன்று மழை இன்னும் ஆக்ரோஷமாக இருந்தது. மின்னலும் இடியுமாய் பெய்தப் பெருமழையது. நீரில் நனைந்த விஜியின் உடல், இருளில் ஒளிர்ந்த தொடைகள், புடவை ஏறின வெண்திண்ம ஸ்தனங்கள் யாவும் பிம்பங்களாய் நினைவில் மோதின. சடாரென இரத்தம் பீய்ச்சியடிக்க அவளின் வெட்டுப்பட்டுத் தலை நினைவின் தரையில் உருண்டது. நான் பாரம் தாங்காமல் கண்களை மூடிக்கொண்டேன். நெஞ்சு விம்மியது. அய்யோ விஜி! என வாய்விட்டுக் கதறினேன். அடைந்திருந்த அழுகை ஒரு காட்டாற்றைப் போல உள்ளுக்குள் இருந்து பீறிட்டது. சப்தமாய் கேவிக் கதறினேன். மழையின் இசையில் அழுகையின் சப்தம் குறைவாய்த்தான் கேட்டது. இன்னும் சப்தமாய் அழுதபடி மழையில் இறங்கினேன். உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. மெத்தை விரித்திருந்த புல் தரை, என்னை அணைத்துத் தேற்றக் கரங்களை விரிப்பது போலிருந்தது. போய் படுத்துக் கொண்டேன். கை கால்களை அகலமாய் விரித்துப் போட்டுக் கொண்டு, கண்களை விரித்து வானத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. அழுகைப் பொங்கி பொங்கி அடங்கியது. மூச்சை உள்ளிழுத்து, மூக்கை உறிஞ்சி, பொங்குதலைக், கரைவைக் கட்டுப்படுத்தினேன். பின் கண்களை மூடிக் கொண்டேன். மழை கன்னங்களில் வழிந்த கண்ணீரைக் கழுவிக் கரைந்தது. சப்தங்கள் மெல்லக் குறைந்து, தூறலாகிப் பிசுபிசுப்பாகி மழை நின்றதும் எழுந்து கொண்டேன். மனமும், உடலும் சுத்தமாய் கழுவி விடப் பட்டதைப் போல உணர்ந்தேன். பரிசுத்தம் என்கிற வார்த்தை சம்பந்தமே இல்லாமல் நாவில் உழன்றது. திரும்பத் தோப்பிற்கு போகாமல் ஓடைவரை போய் வெள்ளத்தைப் பார்க்கும் ஆசை எழுந்தது. சிறு வயதில் மழை பார்ப்பதை விட, மழை எப்போது முடியும் என்கிற பரபரப்புதான் எல்லா மழை தினங்களிலும் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கும். முழுதாய் நிற்பதற்கு முன்பே வயக் காட்டுக்கு ஓடிப் போய் கிணறில், குட்டையில், ஏரியில், குளத்தில் உயர்ந்திருக்கும் நீர் மட்டத்தைப் பார்த்து வருவேன். வழியெங்கும் தேங்கி இருக்கும் மழை நீரில் கால் துழாவித் துழாவி நடப்பது மழையில் நனைவதை விட அலாதியானது. கிட்டத்தட்ட அதே பரவச மனநிலையில்தான் இப்போதிருந்தேன்.

நெருங்கிப் போய் பார்த்தேன். ஓடையில் பாதியளவு மழை நீர் கலங்கலாய் ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருக்கும் மலையிலிருந்து இந்த ஓடை துவங்கலாம். மலையை வெண்புகை மூடியிருந்தது. அறுப்பு முடிந்த வயலில் கால் முட்டியளவுத் தண்ணீர் தேங்கியிருந்தது. வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை. ஓடையில் நீளமான தண்ணீர் பாம்பு ஒன்று நீரின் ஓட்டத்தில் நீந்திப் போனது. பின்னாலேயே ஒரு குட்டிப் பாம்பு வாலசைக்காமல் சோம்பலாய் போய்கொண்டிருந்தது. திரும்பி தோப்பிற்கு நடந்து வந்தேன். எனக்கு முன்னால் குடை பிடித்தபடி அந்த இளைஞன் போய்கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்தவன் அதே வேகத்தில் வெளியில் வந்தபோது நான் எதிரில் வந்து கொண்டிருந்தேன்.

சற்று ஆசுவாசமானவன் முழுக்க நனைந்திருந்த என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். வீட்டிற்குள் வரச் சொல்லிவிட்டு அவன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கொடுத்தான். அந்தப் பையில் ஒரு வேட்டி சட்டையும் இருந்தது. இன்னொரு ஒயர் கூடையில் சாப்பாட்டுக் கேரியர் இருந்தது. உடலைத் துவட்டிக் கொண்டு சாப்பிடச் சொன்னான். அவன் என்னை அறைந்தது வசதியாய் போயிற்று என நினைத்துக் கொண்டேன். ஈர ஆடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு உடல் துடைத்தேன். அவன் கொண்டுவந்திருந்த ஆடைகளை அணிந்து கொண்டு சாப்பிட அமர்ந்தேன். சற்று குண்டான அரிசி சாதம். காரமான மீன் குழம்பு. வேகமாய் சாப்பிட ஆரம்பித்தேன். அந்த இளைஞன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என உள்ளுணர்வு சொன்னாலும் நாவும் பசியும் அதை பொருட்படுத்தவில்லை. அவன் கொண்டு வந்திருந்த மொத்த சாப்பாட்டையும் ஒரு பருக்கை கூட மீதம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தேன். பெயரளவிற்குக் கூட அவனைச் சாப்பிட அழைக்காதது சாப்பிட்டு முடித்த பின்பே நினைவிற்கு வந்தது. லேசாய் கூச்சமாய் இருந்தது. இன்னும் அவன் பெயரைக் கூட கேட்கவில்லை.

பெயர் கேட்டதற்கு சென்னா ரெட்டி என்றான். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்திருக்கிறான். சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை அதிகம். படிப்பு ஏறவில்லை. பனிரெண்டாவது பெயிலாகி வீட்டில் அடிவாங்கி சென்னை ஓடிப்போயிருக்கிறான். எப்படியாவது பெரிய நடிகனாகிவிட வேண்டுமென்பதுதான் அவன் கனவு. கோடம்பாக்கத்தில் வாய்ப்பிற்காக அலைந்து திரிந்த இலட்சங்களில் சென்னாவும் ஒருவன். பின்பு வயிற்றுப் பாட்டிற்காக ஏதோ ஒரு உணவகத்தில் வேலை பார்த்திருக்கிறான். கோபம் தணிந்து சென்னா ரெட்டியின் அப்பா அவனைத் தேடி உறவினர்களுடன் கூட்டமாய் சென்னையில் அலைந்து,அவனைக் கண்டு பிடித்திருக்கிறார். யதார்த்தம் உணர்ந்து, மனம் திருந்தி அப்பாவுடன் ஊருக்கு வந்து விட்டானாம். இப்போது அவருக்கு உதவியாய் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறான். இந்தத் தோப்பும்,வயலும் சென்னா ரெட்டியின் அப்பாவினுடையது.
என்னை இந்த வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொன்னான். அவன் வீட்டிலிருந்து சாப்பாடு வந்துவிடுமென சொன்னான்.

இது எந்த ஊரெனக் கேட்டேன். குண்ட்டூர் தாண்டி ஐந்து கி மீ தொலைவில் இருக்கும் எதுக்குரு கிராமம் எனப் பதில் வந்தது. இந்த ஊருக்குப் பத்து மைல் தள்ளி கொண்டவீடு மலைக்காடு இருக்கிறது. கொண்ட வீடு கிராமத்தில் பழங்காலக் கோட்டைகளும் இருப்பதால் சுற்றுலா வரத்தும் இந்தப் பக்கம் இருக்கும் என்றான். மாலை ஆறு மணியைத் தாண்டி இருந்தது. ஏற்கனவே இருந்த இருள் இப்போது முற்றிலுமாய் சூழ்ந்து கொண்டது. நான் சில மாதங்கள் இங்கு தங்கியிருக்க முடிவு செய்தேன் அருகாமையிலிருக்கும் நகரத்திற்குப் போய் உடைகள் மற்றும் உடமைகள் வாங்கி வரலாம் என சென்னாவை அழைத்தேன். பஸ்ஸில் போவது இந்நேரத்தில் கடினம், வீட்டிற்குப் போய் பைக்கை எடுத்துக் கொண்டு போகலாம் என்றான். நான் அவனோடு கிளம்பிப் போனேன். தோப்பின் இன்னொரு முடிவிற்காய் நடந்தோம். தோப்பு முடிந்து மீண்டும் வயல் குறுக்கிட்டது. வரப்புகளின் மீது நடக்க ஆரம்பித்தோம். பத்து நிமிட நடைக்குப் பின்னர் தொலைவில் வெளிச்சம் தென்பட்டது. மண்சாலை தொடங்கியது. நடக்க ஆரம்பித்தோம். முதலில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த கோயில்தான் வரவேற்றது. சின்ன ஊர்தான். தெரு விளக்கு கம்பங்களில் டியூப் லைட் பளீரென எரிந்து கொண்டிருந்தது. மழை நீர் தெருவில் அங்கங்கே தேங்கி இருந்தது. வீட்டுத் திண்ணைகளில் சப்தமாய் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். முதல் தெருவின் கடைசி வீடு சென்னாவினுடையது. இரண்டு பெரிய திண்ணைகளைத் தாண்டி உள்ளே போனோம். சென்னா அவன் அப்பாவை சப்தமாய் அழைத்தான். ஐம்பது வயது மதிக்கத்தக்க உயரமான ஒருவர் வேட்டி மட்டும் அணிந்தபடி உள்ளிருந்து வந்து கைகூப்பினார். தெலுங்கில் ஏதோ சொன்னார். மையமாய் சிரித்து வைத்தேன். வண்டி சாவியை எடுத்துக் கொண்டு இரவு தோப்பிலேயே படுத்துக் கொள்வதாய் சொல்லியபடியே வந்தான். வெளியில் வந்தோம். வீட்டின் பக்கவாட்டில் ஹோண்டா சிடி100 வண்டி இருந்தது. சிவப்பு நிற வண்டி. சென்னாவையே ஓட்டச் சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்து கொண்டேன். அந்த வீதி இன்னொரு கோயிலில் முடிந்தது. நான்கு பக்கமும் வீதிகள் பிரிந்தன. கடைத்தெருவும் கோயிலை ஒட்டியே இருந்தது. நான் நினைத்ததை விடப் பெரிய ஊர்தான். மழையில் நனைந்த மண் சாலைகள் வழுக்கின. நிதானமாய் வண்டியைச் செலுத்தினான். இருபது நிமிடத்தில் குண்ட்டூர் வந்தோம். அங்கு தரை நன்கு காய்ந்திருந்தது. ஒரு ரெடிமேட் துணிகடைக்கு சென்று ஆடைகள் வாங்கினேன். கடையிலிருந்து வெளியே வரும்போது இண்டர்நெட் செண்டர் கண்ணில் பட்டது. சீராளன் மற்றும் குணாவின் வங்கி விவகாரங்கள் நினைவிற்கு வந்தது. சோப்பு, பிரஷ், டூத் பேஸ்ட், கண்ணாடி, பாய், தலையணை, போர்வை இதெல்லாம் வாங்கச் சொல்லி சென்னாவிடம் பணம் கொடுத்தேன். நான் அருகிலிருந்த இண்டர்நெட் செண்டரில் இருப்பதாய் அவனிடம் சொன்னேன். சரியெனப் போனான்.
பண விவகாரங்களை எல்லாம் தாமஸ்தான் பார்த்துக் கொண்டான். எங்கள் நால்வருக்கும் பத்திற்கும் மேற்பட்ட தனித் தனி வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. தாமஸ்தான் இதையெல்லாவற்றையும் நிர்வகித்து வந்தான். வரும் பணத்தை சமமாய் பிரித்து எல்லோர் கணக்கிற்கும் பட்டுவாடா செய்துவிடுவான். பொதுவான செலவுகளுக்குத் தனிக் கணக்கு ஒன்றும் இருந்தது. நால்வருக்கும் தனித் தனி மின்னஞ்சலகளை உருவாக்கி அதில் வங்கிக் கணக்கு விவரங்களை சேமித்து வைத்திருந்தான். இன்று வரை என் கணக்குகள் எந்தெந்த வங்கிகளில் இருக்கிறதென்றோ, எவ்வளவு பணம் இருக்கிறதென்றோ எனக்குத் தெரியாது.

மின்னஞ்சலைத் திறந்தேன் வங்கிகளின் பெயர்கள், கணக்கு எண், நிலுவையிலிருக்கும் தொகை எல்லாமும் துல்லியமாய் ஒரு எக்ஸெல் பைலில் சேமிக்கப்பட்டு ட்ராஃப்டில் இருந்தது. என் கணக்கில் மூன்று கோடியும் சில இலட்சங்களும் இருந்தன. அதே தொகை நால்வரின் கணக்கிலும் இருந்தது. ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். சீராளனுக்குத் தொலைபேசி முகவரி வாங்கி, இந்த பிரிண்ட் அவுட்டை கொரியர் செய்து விடலாமா? என யோசித்தேன். பின்பு ஒரு வாரம் கழித்து அனுப்பிக் கொள்ளலாம் என முடிவை மாற்றிக் கொண்டேன். அங்கு நிலமை எப்படி இருக்கிறதெனத் தெரியவில்லை. பாதியிலே பிய்த்துக் கொண்டது வேறு மனதை அறுத்தது. சென்னா பைகளோடு வந்தான்.
மழை மீண்டும் வரும்போல இருந்தது. சென்னா எதையோ சொல்ல முற்படுவது போலிருந்தது. என்ன என்றேன் ஒன்றுமில்லை என முறுவலித்தான். அருகில் ஒயின்ஸ் கடை இருந்ததைக் கவனித்தேன். போய் மூன்று முழு புட்டிகளை வாங்கினேன். ஹாட் அடிப்பியா என்றதற்கு சிரிப்பாய் தலையசைத்தான். பைகளை மடியில் வைத்துக் கொண்டு வண்டியில் அமர்ந்தேன். மீண்டும் கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். வயல் துவங்கும் இடத்திற்கு முன்பு வண்டியை நிறுத்தினான். அங்கிருந்து நடந்துதான் போக முடியும். இருள் முழுமையாய் வயலை மூடியிருந்தது. சென்னா கையில் சிறிய டார்ச் வைத்திருந்தான். அதன் வெளிச்சத்தில் பைகளை சுமந்தபடி வழுக்கும் கால்களோடு நடந்து போனோம்.

தோப்பு வீட்டில் இரண்டு குண்டு பல்புகள் இருந்தன. வீட்டின் வெளிச்சுவரில் ஒன்றும் உள்ளே ஒன்றுமாய் தொங்கின. அந்த வெளிச்சமே போதுமானதாய் இருந்தது. உடைகளை மாற்றிக் கொண்டு குடிக்க அமர்ந்தோம். எதுவும் பேசாமல் மூன்று ரவுண்ட்களை வேகமாய் முடித்தோம். இருட்டில் ஒரு ஆள் வந்துகொண்டிருப்பது மங்கலாய் தெரிந்தது. சென்னாவின் உறவினராம். உணவு கொண்டுவந்தார். அவரிடம் வண்டி சாவியைக் கொடுத்து வீட்டிற்கு வண்டியை எடுத்துப் போகச் சொன்னான். வேகமாய் சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டோம். எதையும் பேசும் மனநிலையும் இல்லாமல் இருந்தது.
0
மாலை மூன்று மணிக்கு பூந்தமல்லியிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. பூந்தமல்லியை நெருங்குவதற்கு முன்பே சீராளன், சென்னைத் தொடர்புகளுக்குத் தொலைபேசி எல்லா வசதிகளும் தயாராய் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான். மருத்துவமனை வாயிலை அடைந்ததும் ஸ்ட்ரெட்சரோடு மூவர் காத்துக் கொண்டிருந்தனர். ட்ரைவரும் சீராளனுமாய் குணாவைத் தூக்கி ஸ்ட்ரெட்சரில் கிடத்தினார்கள். உடன் வந்த டாக்டர் சிகிச்சை கொடுக்கப் போகும் டாக்டரிம் பரபரப்பாய் சில தகவல்களைச் சொன்னார். மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் குணாவைக் கொண்டு போய் கதவை மூடிக்கொண்டனர். டாக்டரும் நர்சும் விடை பெற்றுப் போனபின் ஒல்லியான ஒரு நபர் சீராளனிடம் நெருங்கி வந்து உடன் வருமாறு கிசுகிசுத்தார். சீராளன் அவரோடு போனான். மருத்துவமனை வளாகத்திலேயே அவனுக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே போனவுடன் சீராளன் கத்தையாய் பணமெடுத்து அவரிடம் கொடுத்தான். நன்றி சொல்லி அந்த நபர் விடைபெற்றுப் போனார். அயற்சியாய் படுத்துக் கொண்டான். ஏழு மணி வாக்கில் அவன் அறைக்கதவு தட்டப்பட்டது. குணாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், இனி எதுவும் பயமில்லை என்றும், ஆனால் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டுமென்றும் ஒருவர் தகவல் சொன்னார். சீராளன் நிம்மதியானான்.

ஒரு மணி நேரத்தில் குளித்துக் கிளம்பி மருத்துவமனை போனான். குணாவை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்தான். குணா ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான். இரண்டு மணி நேரம் கழித்தே பேசமுடியும் என்றார்கள். பத்து மணி வாக்கில் குணா பேசினான்.
”பொழச்சிட்டனா?” எனப் புன்னகைக்க முயன்றான்.
சீராளனுக்கு அழுகை வந்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். ”என்னாலதான்” என விம்மினான்.
குணா மெதுவாய் தலையசைத்து ”இல்ல அந்த பாடு தான் எல்லாத்துக்கும் காரணம், எங்க அவன்?” என கடுமையான குரலில் கேட்டான்.
”அவன் வரல வழிலயே இறங்கிகிட்டான்”
“நேத்து நைட் எங்க போய் தொலைஞ்சானாம்?”
சீராளன் அதிர்ச்சியாய் கேட்டான் “உங்களோட இல்லயா அவன்?”
குணா பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டு பின்பு சொன்னான். ”தாமஸ் தல என் கண் முன்னாலயே உருண்டது, என்னால ஒண்ணும் பண்ண முடியல, ரொம்ப அசிங்கமா ஓடி வந்தேன். அந்தத் தாயோலி எங்க போனான்னே தெரியல”
சீராளன் விரைப்பானான் ”அப்படியா? அவனும் நீயும் மேல் மாடி ரூமுக்குள்ள போறதுதான ப்ளான்?”
”ஆமா ஆனா ஒரு மணிக்கு அவன் வரல. நானும் தாமசும் காத்திருந்து வெறுத்து போய் இனிமேலும் தாமதிக்க கூடாதுன்னு ஒரு குருட்டு தைரியத்தோட ஆரம்பிச்சோம். லோகுவையும் கூட இருந்த எட்டு பேரையும் போட்டுட்டோம் ஆனா கீழ இருந்து நிறைய பேர் வந்துட்டாங்க சமாளிக்க முடியல”

சீராளன் அதிர்ச்சியடைந்தான். ”என்ன சொல்ற குணா?.. நீங்க மூணு பேரும் ஒண்ணாத்தான் பண்ணீங்கன்னு இல்ல நெனச்சிட்டிருந்தேன்.. நேத்து நீ துண்டாப் போன கையை, ஒரு கைல எடுத்துகிட்டு, தாமச போட்டாங்கடான்னு கத்திட்டே வண்டில ஏறின.. கொஞ்ச நேரத்துல பின் சீட்ல விழுந்து மயக்கமாகிட்ட. அஞ்சு நிமிசம் கழிச்சி அவனும் முகம் முழுக்க இரத்ததோட ஓடி வந்தான். பின்னால ஆளுங்க வேற தொரத்திட்டு வந்தாங்களே”
”ஒரு வேள எவகூடவாச்சிம் படுத்துத் தூங்கி இருப்பானோ?” என்றான் குணா
சீராளன் இறுக்கமாய் சொன்னான் ”என்ன காரணமா இருக்கலாம்ங்கிறது நமக்கு அவசியமில்ல குணா... ஆனா அவன் தாமஸ் சாவுக்கு பதில் சொல்லியே ஆகனும்”

சீராளனின் முகம் சிவந்திருந்தது. மிகவும் சிரமப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டான்.

குணா மீண்டும் அசதியாய் கண்களை மூடிக் கொண்டான்.

photo: Memories of murder

மேலும்

Sunday, March 20, 2011

அத்தியாயம் எட்டு. அடைக்கலம்

கார் எந்தச் சாலையில் விரைகிறதெனப் புரியவில்லை. சீராளன் கிட்டத்தட்ட கண்களை மூடிக் கொண்டு ஆக்சிலேட்டரை மிதித்தான். எங்காவது, எதன் மீதாவது மோதி செத்துப் போய்விட்டாலும் நிம்மதியாகப் போகுமென அவன் நினைத்திருக்கக் கூடும். நான் குற்ற உணர்வில் ஏற்கனவே செத்துப் போயிருந்தேன். குணா அதிக இரத்த இழப்பில் மூர்ச்சையாகியிருந்தான். சற்று நேரம் கழித்து ஒரு நிலைக்கு வந்தேன். எப்படியாவது குணாவைக் காப்பாற்றியாக வேண்டும்.

சன்னமான குரலில்“வழில எங்காவது ஹாஸ்பிடல் இருக்குமா சீராளா?” என்றேன்.
“எங்க போனாலும் மாட்டிப்போம்” என்றான்
”யாராவது தெரிஞ்ச டாக்டருங்க?”
வண்டியை ஓட்டியபடியே சீராளன் யாருக்கோ தொலைபேசினான்.
”காக்கிநாடால தெரிஞ்சவங்க ஆஸ்பிடல் இருக்காம்”
“இடம் எங்கன்னு கேட்டுக்கோ. ஆஸ்பிடல்ல சேக்க வேணாம். ஆம்புலன்ஸ் இருந்தா நல்லது, அதுல குணாவ படுக்க வச்சிட்டு டாக்டருங்கள ட்ரீட் பண்ண சொல்லலாம். ஆம்புலன்ஸ்லயே மெட்ராஸ்க்கு தூக்கிட்டுப் போய்டலாம்” என்றேன்.
“பார்க்கலாம்” என்றான்.
வண்டி பிரதான சாலையைத் தொட்டது. அதிர்ஷ்டவசமாக காக்கிநாடா சாலையில்தான் இருந்தோம். வண்டியை விரட்டினான். பத்தாவது கிலோமீட்டரில் ஒரு தனியார் மருத்துவமனை கண்ணில் பட்டது. சீராளன் வண்டியை ஓரம் கட்டினான். மீண்டும் தொலைபேசி மருத்துவமனையின் பெயர் சொன்னான். பின்பு வண்டியை மருத்துவமனைக்குள் செலுத்தினான். தூரத்தில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதற்கு சமீபமாய் காரை நிறுத்தி விட்டுக் காத்திருந்தான். பத்து நிமிடத்தில் வெள்ளைக் கோட்டணிந்த ஒரு இளைஞர் வெளியே வந்தார். முன்னும் பின்னுமாய் பார்த்தார்.

சீராளன் கார் விட்டு இறங்கி அவரிடம் போனான். ஏதோ பேசிக் கொண்டார்கள்.
நானும் இறங்கிப் போனேன். எப்படியாவது குணாவைக் காப்பாற்றும் படி கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆம்புலன்ஸிலேயே வைத்து ட்ரீட்மெண்ட் தரவேண்டுமென்றும் கொல்லம் வரை ஆம்புலன்ஸிலேயே போகவேண்டுமென்றும் தெலுங்கில் சொல்லிக் கொண்டிருந்தான். டாடா சுமோ கார் சாவியை வைத்துக் கொள்ளுமாறு டாக்டரிடம் தந்தான். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் எனச் சொல்லியபடி பாக்கெட்டில் கை விட்டு பணக்கட்டுக்களை எடுத்துக் கொடுத்தான். டாக்டர் பணத்தை வாங்கிக் கொண்டார். உள்ளே வேகமாய் போனார். ”எதற்கு கொல்லம்?” என்றேன். நிலமை சீராகும் வரை அங்குபோய் சில மாதங்கள் தங்கி இருக்கலாம் என்றான். அங்கு அவனுடைய பழைய தொடர்புகள் நிச்சயம் உதவுவார்கள் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு நர்சும், ஆம்புலன்ஸ் ட்ரைவரும் உடன் வந்தனர். டாக்டர் ஒரு பெரிய மருந்து அட்டைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். நானும் சீராளனும் மயங்கிக் கிடந்த குணாவைத் தூக்கி ஆம்புலன்ஸில் கிடத்தினோம். நர்ஸ் குணாவின் இரத்தம் என்ன குரூப்? என்றாள் தெரியவில்லை என்றோம். சோதித்து விட்டு பி பாசிட்டிவ் என்றாள்.

டாக்டர் குணாவைச் பரிசோதித்து விட்டு தொடர்ச்சியாய் ஊசிகளைப் போட்டார். திரும்ப உள்ளே ஓடிப்போய் ப்ளட் பாங்கிலிருந்து தேவையான இரத்தம் வாங்கி வந்தார். நான் மெதுவாய் வண்டியைச் செலுத்தலாம் என்றேன். டாக்டர், ட்ரைவருக்கு சைகை காண்பித்தார். ஆம்புலன்ஸ் அலறலோடு மருத்துவமனையை விட்டு வெளியேறியது. வண்டியை நிதானமாகவே ஓட்டச் சொன்னோம். இரத்தம் ஏறிக் கொண்டிருந்தது. டாக்டர் தொடர்ந்து பல்ஸைச் சோதித்துக் கொண்டிருந்தார். அரை மணிநேரத்தில் குணா அபாய கட்டத்தை தாண்டி விட்டதாய் சொன்னார். ஆனால் அடுத்த பனிரெண்டு மணி நேரத்திற்குள் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என்றார். கையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்றார். சீராளன் சற்று யோசித்தான். காக்கிநாடாவிலிருந்து கொல்லம் ஆயிரத்து நானூறு கிலோ மீட்டர். நிச்சயம் ஒரு நாள் ஆகும். இடையில் சென்னையில் மருத்துவமனையில் சேர்க்காவிட்டால் நிலமை விபரீதமாகலாம்.

எனக்காய் திரும்பி ”மெட்ராஸ்ல ஆளுங்கள புடிக்க முடியுமா?” என்றான்
உடனே சென்னையிலிருக்கும் தொடர்புகளுக்குத் தொலைபேசினேன். நிலமையைச் சொன்னேன். பூந்தமல்லி வந்துவிடச் சொன்னார்கள். ஹாஸ்பிடல் பெயரைச் சொன்னார்கள். அதே எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் போதுமென்றும் மற்ற விவகாரங்களை பார்த்துக் கொள்ள ஆட்கள் மருத்துவமனையில் காத்திருப்பார்கள் எனவும் பதில் வந்தது. எண்ணை சீராளனிடம் தந்தேன். ட்ரைவர் விரைவாய் போனால் பத்து மணி நேரத்தில் சென்னை போய் சேர்ந்து விடலாமென்றார். விடிந்தது. ஏழு மணி சமீபமாய் விஜயவாடா வந்து சேர்ந்தோம். குணா சீராய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

சீராளன் சீட்டில் படுத்துக் கொண்டான். நான் உட்கார்ந்த வாக்கிலேயே கண்களை மூடினேன். முகத்தில் இரத்தம் காய்ந்து போய் நாற்றமடித்தது. விஜியை வெட்டிய அரிவாள் ஆசை தீராமல் என் நெஞ்சிலும் நீளமாய் மெல்லிதாய் கோடு கிழித்திருக்கிறது. அணிந்திருந்த சட்டை பனியன் எல்லாமும் இரத்தத்தில் தோய்ந்து காய்ந்து முடமுடெவென இருந்தது. சட்டையையும் பனியனையும் நர்ஸ் இருப்பதைப் பொருட்படுத்தாமல் கழற்றிப் போட்டேன். ட்ரைவரை வண்டியை ஓரமாய் நிறுத்தச் சொல்லி, தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தைக் கழுவிக் கொண்டேன். அவரிடம் ஒரு பழைய சட்டை இருந்தது. வாங்கி அணிந்து கொண்டேன். இதற்கு மேல் இந்தச் சூழலில் என்னால் தொடர்ந்து இருக்க முடியாதெனத் தோன்றியது. சீராளனை எழுப்பி இங்கேயே இறங்கிக் கொள்வதாய் சொன்னேன். சீராளன் எந்த உணர்ச்சியுமில்லாமல் என்னைப் பார்த்தான். இரண்டு நாளில் சீராளனுக்குத் தொலைபேசுவதாகவும். வங்கிக் கணக்கு விவரங்களை கொரியரில் சீராளனுக்கு அனுப்பி வைப்பதாகவும் சொல்லிவிட்டு இறங்கிக் கொண்டேன். குணாவப் பாத்துக்கோ எனச் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டேன். அப்படிச் சொல்வதற்கான எந்த அருகதையுமே எனக்கு இல்லை
From தனிமையின் இசை

இது எந்த இடம் எனத் தெரியவில்லை. கண்களுக்கெட்டியவரை வயலாய் இருந்தது. லேசாய் மயக்கம் வருவது போலிருந்தது. இமைகளை மூடினால் வெட்டுப்பட்ட விஜியின் தலையும், தாமசின் தலையும் விடாது நினைவில் உருண்டு கொண்டிருந்தன. என்ன செய்வதென்றே புரியாமல் நடந்து கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெரிய ஆலமரம் விழுதுகளை விரித்துக் கொண்டு பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்தது. அந்த நிழலில் போய் படுத்துக் கொண்டேன். ஒரே இரவில் அடுக்கடுக்காய் இத்தனை திருப்பங்களை எதிர் கொண்டதுண்டு என்றாலும் விஜியையும் தாமஸையும் அப்படிச் சுலபத்தில் கடந்து வர முடியவில்லை. இரண்டிற்கும் நான் தான் காரணம் என்கிற எண்ணம்தான் பயங்கரமான அழுத்தத்தைக் கொடுத்தது. கண்களை மூட முயன்றும் முடியவில்லை. எழுந்து கொண்டேன். தொலைவில் ஒரு மோட்டார் பம்பு நீரை இறைத்துக் கொண்டிருந்தது. நீரில் போய் விழலாமென அதை நோக்கிப் போனேன். கிணறிலிருந்து பம்பு நேரடியாய் கால்வாயில் நீரை இறைத்துக் கொண்டிருந்தது. நீர் விழுந்த இடம் மட்டும் பெரிய குழியாகி இருந்தது. ஆடைகளோடு போய் நின்றேன். தலைமேல் நீர் அழுத்தமாய் கொட்டியது. கொதிப்படைந்த உடல் தணியும் வரை நின்றுகொண்டே இருந்தேன். எங்கிருந்தோ ஒரு முதியவர் வந்து தெலுங்கில் இறைந்தார். நான் மேலேறி வந்தேன்.

மீண்டும் சாலைக்காய் நடக்க ஆரம்பித்தபோது நிற்கச் சொல்லி ஒரு குரல் முதுகின் பின்னாலிருந்து வந்தது. திரும்பிப் பார்த்தேன். இருபது வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
”மீரு எவரண்டி?” என்றான்
பதில் சொல்ல முடியாத அளவிற்கு உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தது. எதுவும் பேசாமல் பார்வையை மாற்றிக் கொண்டு வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன். அந்த இளைஞன் இப்போது கோபமாய் கேட்டான்.
”எவரனி அடுகுத்துன்னானு மாட்லாடுகொண்டா வெளுத்துன்னாவு?” நான் திரும்பியே பார்க்காமல் நடந்தேன்
இளைஞன் ஓடிவந்து என் தோளைப் பிடித்துத் திருப்பினான்
”எவரு நூவு? என்றான்
வழி தவறிவிட்டதாய் தமிழிலேயே சொன்னேன்
”தமிழா?”
தலையசைத்தேன்.
எங்கிருந்து எங்க போன? இங்க எப்படி வழி மாறி இருக்க முடியும்? தெலுங்கு கலந்த தமிழில் தொடர்ச்சியாய் கேள்விகள் கேட்டான்.
நான் கையை உதறிவிட்டு நடந்தேன்.
திடீரென அந்த இளைஞன் திரும்பி நின்று கத்த ஆரம்பித்தான்
ஆட்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் கையில் ஆயுதங்களோடு ஓடி வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர். அந்த இளைஞன் உரத்து ஏதோ சொன்னான்.
கட்டுக்கோப்பான உடலுடன் ஒரு விவசாயி முன்னால் வந்து
யார்பா நீ? இங்க என்ன பன்ற? என தமிழில் கேட்டார்
நான் மீண்டும் வழிமாறிவிட்டேன் என்றேன்
”இலாக அடுகாமெண்டே செப்படு” என்றபடி அந்த இளைஞன் வேகமாய் முன்னால் வந்து என்னை பலமாய் அறைந்தான். நான் பொத்தென அறுப்பு முடிந்த வயலில் விழுந்தேன்.
”பொலம்ல உறி கொய்யிடம் பணி உந்தான்னனி சூட ஒச்சின மர்ம வெக்தி” எனக் கத்தினான். என்னால் எழமுடியவில்லை. உடலை விட மனம் அதிக சோர்வடைந்திருந்ததால் அப்படியே படுத்துக் கொண்டேன்.
கூட்டத்திலிருந்து ஒரு குரல் ”தரவாத்தா ஆ அன்னி சூஸ்தம் முந்து தீஸ்க்கெல்லி மரமுல கட்டியையண்டி” என்றது. இருவர் முன்னால் வந்து என் கைகளை இரண்டு பக்கமாக பிடித்து இழுத்துச் சென்றனர். பாதி உடல், அறுப்பு முடிந்த வயலில் தேய்ந்து கொண்டே வந்தது. கிணறை ஒட்டியிருந்த புங்கை மரத்தடியில் கிடத்தினர்.

ஒருவன் என் சட்டை,பேண்ட் பாக்கெட்டுகளில் கை விட்டு சோதித்தான். நனைந்து போயிருந்த பர்ஸையும் செல்போனையும் வெளியில் எடுத்தான். துப்பாக்கியை காரிலேயே விட்டுவிட்டது நல்லதாகப் போயிற்று. பர்ஸைத் திறந்து பார்த்தவன் வியப்படைந்தான். கத்தையாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள், நான்கைந்து ஏடிம் கார்டுகள் இத்துடன் ஒரு அடையாள அட்டையும் இருந்தது. நாங்களாய் வைத்துக் கொண்ட அடையாள அட்டையது. என்பெயருக்கு கீழ் மேனேஜிங் டைரக்டர் மீனாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் என இருக்கும். அந்த அட்டையை என்னை அறைந்த இளைஞன் தான் சப்தமாய் வாசித்தான். ஒரு சின்ன பதட்டம் அந்த குழுவில் தொற்றிக் கொண்டது. இளைஞன் ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்தான். கூட்டமாய் இருந்தவர்கள் அவனைத் திட்ட ஆரம்பித்தனர். அந்த இளைஞன் கீழே உட்கார்ந்து என் தலையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு வாயில் நீர் புகட்ட முயற்சித்தான். நான் எழுந்து அமர்ந்து கொண்டு தண்ணீர் வாங்கிக் குடித்தேன். மிகவும் பதட்டமாய் அந்த இளைஞன் மன்னிப்புக் கேட்டான்

நான் சன்னமாய் பேசினேன் என் தவறுதான் நான் சரியான பதிலை சொல்லவில்லை என்றேன். வியாபாரத்தில் கடுமையாய் நட்டமடைந்ததால் கால் போன போக்கில் நடந்து கொண்டிருப்பதாய் சொன்னேன். இளைஞன் கூட்டத்தைப் பார்த்து நான் சொன்னதை தெலுங்கில் சொன்னான். நிறைய உச் உச் கள் எழுந்து அடங்கின
யாரோ ஒருவர் எவர்சில்வர் தூக்குப் போசியை கொண்டு வந்து நீட்டினார்.
சாப்பிடச் சொன்னார். என் பசி அப்போதுதான் எனக்கே உறைத்தது. போசியைத் திறந்தேன் பழைய சாதத்தில் மோர் ஊற்றப்பட்டு வெண்ணெய் மிதந்து கொண்டிருந்தது. அள்ளி அள்ளி சாப்பிட ஆரம்பித்தேன்.

அனைவரும் கலைந்து போயினர். அந்த இளைஞன் ஓரளவுக்கு தமிழ் பேசினான். கூட்டத்தில் தமிழ் பேசிய கட்டுமஸ்தான உடல் கொண்டவரும் அருகிலேயே நின்றார்.
இப்ப எங்க ஸார் போவுது? என்றான் “தெரியல” என்றேன்
அந்த இளைஞன் சில நாட்கள் இங்குத் தங்கிப் போகும்படி சொன்னான். பேச்சில் குற்ற உணர்வு மிகுந்திருந்தது. நான் தூங்க வேண்டும் என்றேன். பின்னால் வரச்சொல்லிவிட்டு வரப்பின் மீது நடக்க ஆரம்பித்தான். வயல் முடிந்ததும் சிறிய ஓடை ஒன்று குறுக்கிட்டது. ஓடையில் சன்னமாய் நீர் ஓடிக்கொண்டிருந்தது. சரிவிலிருந்த கற்களைத் தாண்டி மேலேறியதும் மரங்கள் அடர்ந்த தோப்பு ஒன்று வரவேற்றது. நடக்க நடக்க மஞ்சம்பில் வேய்ந்த கூரை வீடு ஒன்று தென்பட்டது. அதை நோக்கிப் போனோம். ஒரு பெரிய மாமரம் வீட்டின் முற்றத்தில் நிழல் விரித்திருந்தது. ஏற்கனவே ஒரு கயிற்றுக் கட்டிலும் அங்கயே கிடந்தது. அவன் சொல்லுமுன்பே போய் படுத்துக் கொண்டேன்.

ஓவியம் : வான்கோ

மேலும்

Wednesday, March 16, 2011

அத்தியாயம் ஏழு. படுகளம்

என் ஈகோவின் வீழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை. என் குரல் எனக்கே தெரியாமல் உயர்ந்திருந்தது.

“ரெண்டு நாள்டி, ரெண்டே நாள் ராத்திரி, நான் உன் கூட படுக்கல, அவ்ளோதான் அன்னிக்கு வந்த உன் புருசனோட படுத்துகிட்ட, நீ என்ன குத்தம் சொல்றியா?”

“நான் என் புருசனோட படுத்ததில என்ன தப்பு? நீதான இடையில வந்தவன்” என்றாள்
“அதான் நான் போய்ட்டேன். சும்மா போல விஜி, உன் கூட பழகின ஆறு மாசத்துக்கு லட்சம் லட்சமா அள்ளி கொடுத்துதான் போனேன். நீ நல்லா இருக்கனும்னுதான் நினைச்சேன்”
“நான் ஒண்ணு கேக்குரேன், ஒலகத்துல எவனுமே ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிறது இல்லயா? புருசன் ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டான்னு, ரெண்டு பொண்டாட்டில எவளாவது ஒருத்தி ஓடிப்போய்டுறாளா என்ன?”
நான் திகைப்பாய் பார்த்தேன். விஜி தொடர்ந்தாள்.
“எனக்கு ஏன் ரெண்டு புருசங்க இருக்க கூடாது? நீதான் பயங்கரமா படிச்சவனாச்சே? கவிதயா பேசுவியே? நிர்வாணம்தான் சுதந்திரம்னு மூச்சுக்கு மூச்சு சொன்னவனாச்சே? மாற்றுக் கலவி, மாற்று உச்சம், காமத்தின் அடியாழம்னு ஏதேதோ குடிச்சிட்டு பேசுவியே? எல்லாமே பொய்யா? அன்னிக்கு ராத்திரி ஒரு மூணாந்தர ஆண் மாதிரி ஓடிப்போனியே, ஏதோ பெரிய கற்புக்கரசன் மாதிரி”
நான் சிலையாய் சமைந்தேன். அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு சொன்னேன்.

“விஜி நான் அன்னிக்குப் போனது நீ இன்னொருத்தரோட படுத்திருந்தேன்னு இல்ல. எங்க நான் உன் வாழ்க்கைய பாழாக்கிடுவனோன்னு நினைச்சிதான் போனேன்”
விஜி சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தாள்.
“நல்ல ஜோக் இது. நான் இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சிதானே என்கிட்ட பழகின? ஆரம்பத்துல இருந்தே நான் இன்னொருத்தன் பொண்டாட்டிதானே, அன்னிக்கு ராத்திரி மட்டும் என்ன உனக்கு திடீர் ஞானோதயம்?”
எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவளே தொடர்ந்தாள்
“ரொம்ப சிம்பிள் இது. ஒரு பொண்ணு மத்தவங்களுக்கு வேணா துரோகம் பண்ணலாம். ஆனா உனக்கு பண்ணக்கூடாது. உன் கிட்ட வர்ரதுக்கு முன்னாடி தெவுடியாவா இருந்தாலும் பரவால்ல, ஆனா உன் கிட்ட வந்ததும் உடனடியா பத்தினியாகிடனும். நீ அடிக்கடி சொல்வியே மிடில்க்ளாஸ் ஆண் சைக்காலஜின்னு அதுதானே இது? ஒரு வேள புரட்சிகர ஆண்ங்கிறவன் பொண்ணோட அம்மணத்த மட்டும் பாக்குறவனோ?

நான் திகைத்துப் போனேன். இப்படி ஒரு கோணம் இருக்குமென்பது எனக்குப் பிடிபடவே இல்லை. எல்லா விஷயத்தையும் என் பார்வையிலேயே என் அளவுகோலிலேயேதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வார்த்தை கூட பேசாமல் தளர்ந்து சோபாவில் அமர்ந்தேன்.
விஜி பக்கத்து மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக் கொண்டாள். நான் குற்ற உணர்விலும் தன்னிரக்கத்திலும் தவித்தேன்.
0
விஜி தொடர்ந்து பேசினாள். ”அன்னிக்கு நைட் நீ போனது அப்ப எனக்கு நிறைவாதான் இருந்திச்சி. உன் மேல மரியாதை கூடுச்சி. இனிமே எந்த தப்பும் செய்யாம புருசனோட உத்தமியா வாழனும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா அப்படி நடக்கல வாழ்க்கை கசாமுசான்னு ஆகிப் போச்சி. என் புருசன் உன் கிட்ட வாங்கிட்டுப் போன பணம் மொத்தத்தையும் சித்தூர்ல ஏதோ தெவுடியா வீட்ல அழிச்சிருக்கான். அத லோகுதான் நடத்திட்டு இருந்திருக்கான். எல்லாத்தையும் வுட்டுட்ட இவன் மேல ஒரு இரக்கம் வந்து, அவனோடவே சேர்த்துகிட்டிருக்கான். கங்காவரத்துல தொழில் நடத்துனம்னு முடிவு பண்ணி, என் புருசன இங்க அனுப்பி இருக்கான். இந்த எடத்த புடிச்சி, பொண்ணுங்கள தேடிப் பிடிச்சி கொண்டாந்தும் என் புருசனால சரியா மேய்க்க முடியல. வாகா பொண்ணுங்களும் மாட்டமப் போவவே, கிராக்கி ஒண்ணும் வரல. என்னப் பழி வாங்கனும்னு நினைச்சிதான் திரும்ப என்கிட்ட வந்திருக்கான். என் உடம்பு சரியா வில போகும்னு நினைச்சித்தான் வந்திருக்கான். நீ போன பதினைஞ்சி நாள் ஈஸ்வரன் கோயில் தெரு வீட்லதான் இருந்தோம். வீட்ல இருந்த சாமான் செட்டு எல்லாத்தையும் வித்துப் பணமாக்கி அதையும் எடுத்துகிட்டு ஆந்திரா வந்தோம். நிறைய கனவோட வந்தேன். புருசன் பிசினெஸ்ல பெரிய ஆளாகி, பெரிய கார்லதான் பாண்டிக்கு திரும்பப் போவனும்னு ஆசப்பட்டேன். மொத நாள் இந்த வீட்டுக்கு வந்ததும் எல்லா கனவும் காணாம போய்டுச்சி. பாத்ததுமே இது அந்த மாதிரி இடம்னு எனக்கு புரிஞ்சிடுச்சி. அப்ப ரெண்டு பொண்னுங்கதான் இருந்தது. தப்பிச்சிப் போகவும் முடியல. செத்துப் போகவும் முடியல. எப்பவும் ரெண்டு ஆம்பளைங்க என் பின்னாலயே இருந்தானுங்க. இவனுக்குத்தான்னு இல்லாம, வறவன் போறவனெல்லாம் என் மேல வுழுந்து புடுங்கினானுங்க. என் ஒடம்பு மேல அத்தன பேருக்கும் பேராச இருந்தது. ரெண்டு வாரத்துல எல்லாம் மறத்துப் போச்சி. இந்த சூழ்நிலைக்குப் பழகிட்டேன். அரசாங்கத்துல சில பெரிய மனுசங்களுக்கு என்ன ரொம்பவே புடிச்சது. அவனுங்கள பயன்படுத்திட்டு மத்தவனுங்கள கிட்ட வர விடாம பாத்துகிட்டேன். லோகுவையும் என் கைக்குள்ள போட்டுகிட்டு என் புருசன இங்க இருக்க தடியனுங்களோட ஒருத்தனா ஆக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே எல்லாரையும் கட்டி மேய்க்கிற குணம் வந்திடுச்சி. ஒரு ஆம்பளய பழி வாங்க இன்னொரு ஆம்பளைய பயன்படுத்திகிட்டேன். இந்த வீடு ரொம்ப பேமஸ். நான் இப்ப நினைச்சா ஆந்திராவுல என்ன வேணா பண்ண முடியும். எல்லா மட்டத்துலயும் எனக்கு ஆளுங்க இருக்காங்க. என் புருசன வெட்டிக் கூறு போடனும்னுதான் ஆரம்பத்துல ஆத்திரம் வந்தது. ஆனா நான் இவ்ளோ அதிகாரமா இருக்க அவனும் ஒரு காரணம். இதுக்கெல்லாம் ஆரம்பக் காரணம் நீ. சொல்லப்போனா உன்னாலதான் நான் அழிஞ்சேன். அந்த அழிவை மறைக்கதான் இந்த வேசம்னும் எனக்கு நல்லா புரியுது. ஆனா இந்த அதிகாரம் இப்ப எனக்குப் பழகிடுச்சி. உன் மேலயும் சரி, என் புருஷன் மேலயும் சரி விருப்பமோ வெறுப்போ எதுவுமே இல்ல”

பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் தண்ணீர் குடித்தாள்.
0
நான் எதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன். விஜி வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். நெருங்கிப் புன்னகைத்தாள்.
“நான் உன்ன பாப்பேன்னு நினைக்கல. நீ என்ன காதலிச்ச இல்ல?” எனச் சொல்லிவிட்டு சிரித்தாள்.
மெல்லமாய் “இப்பவும்தான்” என்றேன்
ப்ச் என சலித்தபடி சொன்னாள். “எத்தன வருசம் ஆனாலும் ஆம்பள புத்தி இவ்ளோதான்”
“நிச்சயமா சொல்றேன் விஜி, இப்ப இந்த நிமிசம் வந்தா கூட நான் உன்னோட வாழத் தயரா இருக்கேன்”
“நெசமாஆஆவா சொல்ற?” என நெருங்கி வந்து கண்ணைப் பார்த்துச் சிரித்தாள்
நான் எழுந்தேன் “என்னோட வந்துரு விஜி” என்றேன்
விஜி ஆத்திரமாய் பேசினாள் “நான் இவ்ளோ பேசியும் நீ திரும்ப அதே இடத்துக்குதான் வர இல்ல. நீ மட்டுமில்ல எந்த ஆம்பளையும் சாகுற வர இப்படித்தான் இருப்பானுங்க”
“என்ன பேசுர நீ? உன்ன நேசிக்கிறேன்னு சொல்ரது உனக்கு அல்பமா இருக்கா?” என இறைந்தேன்.
“என்ன நேசிக்கிறதா இருந்தா ஏன் கூப்டுற? எல்லாத்தையும் விட்டுட்டு நீ வா. இதே ரூம்லயே வாழ்வோம். உனக்கு எல்லா வசதியும் நான் பண்ணித் தரேன். என்ன வேணும் உனக்கு?
நான் அதிர்ந்தேன். அமைதியானேன்.
“முடியாது இல்ல. இத இதத்தான் இவ்ளோ நேரமா சொல்லிட்டிருந்தேன்” இந்த பேச்ச வுட்ரு, உனக்கு புரியாது. அவ்ளோதான் விஷயம். நீ சாகுற வர இப்படித்தான் இருப்ப”


திடீரெனத் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. பதறி எழுந்தேன். நேரம் ஒரு மணியைக் கடந்து விட்டிருக்கிறது. அவசரமாய் வெளியில் போக முனைந்தேன். விஜி என்னைத் தடுத்தாள். வீடே வேட்டுச் சப்தத்தில் அதிர்ந்தது. ஆட்கள் கத்தியபடியே இங்கும் அங்குமாய் ஓடினர். அலறல் சப்தங்களும் கூப்பாடுகளுமாய் வீடு அலறியது.
“விஜி நான் போகனும் விடு” என்றேன்.
“வெளில போனா செத்துப் போய்டுவ, யாரா இருக்கும்னு தெரிலயே” என யோசனையாய் என்னைப் பார்த்தாள்
“ஆமா உன் கூட வந்த அவங்க யாரு?” எனப் பதட்டமாய் கேட்டாள்
நான் அவளைத் தள்ளிவிட்டுப் போக யத்தனித்தேன்
விஜி என் கைகளை பிடித்து இழுத்து சோபாவில் தள்ளி என் மீது முரட்டுத்தனமாய் படர்ந்தாள்.
“என்ன நடக்குது இங்க? யார் அவங்க?” என்றாள்
அறைக் கதவு படீரெனத் திறந்தது. விஜியின் புருசன் நாகராஜன், கையில் அரிவாளோடு நின்று கொண்டிருந்தான். இடது தோள்பட்டையில் துப்பாக்கித் தோட்டா துளைத்து இரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
விஜி பட்டென எழுந்தாள்.
நாகராஜன் என்னைப் பார்த்து ஆத்திரமாய் கத்தினான்
“இவன் இன்னுமாடி உன்னப் பாக்க வரான் தாயோலி செத்தடா இன்னிக்கு” என்றபடி முன்னால் வந்தான்.
நான் எழுந்து நின்றேன்.
விஜி எனக்கு முன்னால் வந்து என்னை மறைத்தாள்
“நாகு இவர விட்ரு. இவருக்கு சம்பந்தம் எதுவும் இருக்காது”
“என்னாடி பேசுர, இவனோட வந்த ரெண்டு பேர் லோகுவ போட்டானுங்கடி.. நம்ம ஆளுங்க பத்து பேருக்கு மேல செத்துக் கெடக்குறானுங்க.. ஓத்தா மரியாதயா நவுந்துடு, அவன் தல இப்ப உருளணும்” என்றபடியே முன்னால் வந்தான்.
விஜி எனக்கு முன்னால் நின்றுகொண்டு என் இரு கைகளையும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள். என் உடலோடு ஒட்டி நின்றாள்.
“நாகு விட்ரு வேணாம்.”
ஒத்துடி ஒத்துடி எனக் கத்தியபடியே அரிவாளை வீசிக்கொண்டே முன்னால் வந்தான்.
நான் விஜியின் கைகளை உதறிவிட முயற்சித்தேன். விஜி இன்னும் பலமாய் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
“விடு விஜி, விடு விஜி” எனக் கத்தினேன்
இன்னும் என் உடலோடு ஒட்டிக் கொண்டாள்.

நாகராஜன் நெருங்கி வந்து அரிவாளை வீசினான். விஜியின் கழுத்தில் அரிவாள் ஆழமாய் பாய்ந்தது. ஒரே வெட்டில் முக்கால் கழுத்துப் பிளவுண்டு தலை தொங்கியது. விஜியின் இரத்தம் பீறிட்டு என் முகத்தை நனைத்தது. விஜி சரிந்த மரமாய் பொத்தென விழுந்தாள். துப்பாக்கியைப் பிரயோகிக்க அவகாசம் இருக்கவில்லை. நாகராஜின் அடுத்த வீச்சிற்கு குனிந்து அவன் அடிவயிற்றில் தலையால் மோதினேன். ”ஹம்மா” என்றபடியே அரிவாளைத் தவற விட்டான். மாடியிலிருந்து நான்கைந்து உருவங்கள் அறைக்காய் ஓடி வந்தன. சடாரென வெளியேறினேன். இடது பக்கமிருந்த கைப்பிடிக் கம்பியில் கை வைத்து எகிறி, மாடியிலிருந்து குதித்தேன். விரைந்து வெளியேறுகையில் என் காலை ஒரு உடல் இடறியது. குனிந்து பார்க்கையில் கடைசிப் படிக்கட்டில் தாமஸின் தலை தனியாய் கிடந்தது.

“அய்யோ” எனக் கத்தியபடியே வெளியேறி கேட்டை உதைத்துக் கொண்டு ஓடினேன்
பத்தடித் தொலைவில் கார் உறுமிக் கொண்டிருந்தது
பாய்ந்து ஏறினேன். பின் சீட்டில் குணா படுத்துக் கிடந்தான்
முன் சீட்டில் குணாவின் கை மட்டும் தனியாய் கிடந்தது
நான் மீண்டும் அலறினேன்.
சீராளன் முகத்தை அறைந்து கொண்டு அழுது கொண்டிருந்தான்
ஒரு அரிவாள் காற்றில் பறந்து வந்து காரின் பின் கண்ணாடியில் தொம்மென மோதியது.
“வண்டிய எட்றா” எனக் கத்தினேன்
சீராளன் ஆத்திரமும் அழுகையுமாய் ஆக்சிலேட்டரை மிதித்தான்
வண்டி இருளில் பாய்ந்தது.

மேலும்

Tuesday, March 15, 2011

அத்தியாயம் ஆறு. ஊழ்

சீராளன் குணாவின் யோசனையை மறுத்தான். தன் தனிப்பட்ட விவகாரத்தைத் தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். நான் சீராளனை அமைதிப்படுத்தினேன். இந்த விஷயத்தில் வேறு முடிவுகள் எடுக்க எந்த வாய்ப்புமே இல்லாமல் இருந்தது. லோகுவைத் தீர்த்துக் கட்டினால்தான் மறுபடியும் மதுரைக்குப் போய், விட்ட இடத்திலிருந்து தொடர முடியும். அவனுக்குப் பயந்து வேறெங்காவது தப்பித்துப் போய் மீண்டும் துவக்கத்திலிருந்து ஆரம்பிப்பதெல்லாம் இயலாத காரியமாய் பட்டது. லோகுவைத் தீர்த்துக் கட்டுவது சீராளனின் பழிக்காக மட்டுமின்றி நம் நால்வரின் தேவையாகவும் மாறிப்போனதை அவனுக்கு விளக்கினேன்.

விரைவாய் வீட்டைக் காலி செய்தோம். வாசலில் பெரிய பூட்டு இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். வண்டியை ராஜமுந்திரி சாலையில் விரட்டினோம். ஜெயாவின் இருப்பிடம் எங்கிருக்கிறது? எனத் தெரியவில்லை. அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதும் தெரியவில்லை. மேலதிகமாய் லோகு எத்தனை பேருடன் வந்திருக்கிறான் என்றோ, என்ன விதமான ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்றோ ஒன்றுமே தெரியாமல் இருந்தது. எப்படித் தாக்குதலை நிகழ்த்துவது என்பதும் புரியவில்லை. வேறு யாரையாவது வைத்து லோகுவைத் தீர்த்துக் கட்டினால் என்ன? என தாமஸ் கேட்டான். அதற்காக செலவழிக்கும் தொகை ஒருபுறம் இருந்தாலும், லோகு நம்மை நெருங்கிக் கொண்டே இருக்கிறான். இன்னொரு குழுவை எதிர்பார்க்காமல் நாமே நேரடியாய் இறங்குவதுதான் சரியான வழி என்பதுதான் குணாவின் எண்ணமாக இருந்தது.

எனக்கு குழப்பமாய் இருந்தது. சீராளனின் உறவினரை வரவழைத்து அவரிடம் வீட்டின் அமைப்பு, கங்காவரத்தில் வீடு இருக்கும் பகுதி, தோராயமாக எத்தனைப் பேர் இருப்பார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டால் அடுத்த கட்ட நகர்விற்கு உதவலாம் என்றேன். சீராளன் உறவினருக்குத் தொலைபேசி வரவழைத்தான். அவர் லேசான பதட்டத்தோடுதான் வந்தார். எதற்கு இந்தப் பிரச்சினையெல்லாம்? என்றும் சீராளனை எங்காவது போய்விடும்படியும் வற்புறுத்தினார். அவருக்கு வயது சுமார் நாற்பதிற்கு மேலிருக்கலாம். தமிழ் புரியவில்லை. தெலுங்கில்தான் பேசினார். அவரின் தெலுங்கிலிருந்து புரிந்து கொண்டது.

ஜெயாவின் வீடு குடியிருப்புப் பகுதியைத் தாண்டிய ஒதுக்குப் புறமான வீடு. பிரதான சாலையிலிருக்கும் ரைஸ் மில்லிற்கு வலது புறமாய் திரும்பினால் ஒற்றைப் பாதை, அதில் முதலில் குறுக்கிடும் செம்மண் சாலையில் கடைசி வீடு. அந்தத் தெரு இரவு ஏழு மணிக்கே இருட்டிவிடும். தெருவில் மின் விளக்குகள் கிடையாது. இரண்டு மாடி கொண்ட வீடு. கீழ்தளம் சமையல் கட்டும், டைனிங்கும், இரண்டு படுக்கையறைகளையும் கொண்டது. அங்குதான் லோகுவின் ஆட்கள் தங்கி இருக்கிறார்கள். முதல் தளம் நான்கு அறைகளும் ஒரு ஹாலும் கொண்டது. வாடிக்கையாளர்கள் புழங்கும் பிரதான இடம் அதுதான். ஒவ்வொரு அறையிலும் மூன்று தடுப்புகள். ஒரே நேரத்தில் பனிரெண்டு பேர் புழங்கமுடியும். இரண்டாவது தளத்தில்தான் லோகு இருக்கிறான். உடன் எத்தனை பேர் இருப்பார்கள் எனத் தெரியாது. ஜெயாவின் படுக்கையறையும் அங்குதான். அவள் புருஷனும் உடன் இருப்பான்.

இந்த விவரங்கள் எனக்குப் போதுமானதாக இருந்தது. அவர் விடைபெற்றுப் போன பிறகு திட்டத்தை விவரித்தேன். இரவு எட்டு மணிக்கு நான், குணா மற்றும் தாமஸ் மூவரும் அங்கிருக்க வேண்டும். ஆளுக்கொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அறைக்குப் போய்விடவேண்டும். சரியாக ஒரு மணிக்கு உடனிருக்கும் பெண் தூங்கிவிட்டாள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு மெல்ல இரண்டாவது தளத்திற்கு வந்துவிட வேண்டும். குணா ஒரு அறைக்கும், நான் ஒரு அறைக்குமாய் ஒரே நேரத்தில் நுழைய வேண்டும். வெளியில் தாமஸ் நின்று கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக சுடமுடியுமோ அவ்வளவு விரைவாக சுட்டுவிட்டு மொட்டை மாடிக்கு விரைந்து, அங்கிருந்து குதித்து விட வேண்டும். சீராளன் வீட்டிற்கு சமீபமாய் காரை நிறுத்தி வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். அவ்வளவுதான் திட்டம். கச்சிதமாக இருப்பது போலத்தான் தோன்றியது.

சீராளன் மட்டும் முரண்டு பிடித்தான். தானும் உடன் வந்தால் விரைவாய் செயல்படலாம் என்றான். ஆனால் சீராளனை அங்கிருப்பவர்கள் யாராவது அடையாளம் கண்டுகொண்டால் பிரச்சினைதான். மதுரையில் சீராளனை வெட்டியவர்கள் யாரேனும் உடன் வந்திருக்கலாம். அவர்கள் பார்த்துவிட்டால் திட்டம் சொதப்பலாகிவிடும் என்றேன். வேறு வழியில்லாமல் சீராளன் அமைதியானான்.

இரவு வரை காத்திருந்தோம்.
0

இரவு ஏழு முப்பது. கங்காவரம் வந்து விட்டோம். அரிசி மில்லை ஒட்டிய ஒற்றைத் தடத்தில் ஐந்து நிமிடப் பயணம். சுற்றிலும் இருள் முழுமையாய் மூடியிருந்தது. வானத்தில் பொட்டு நட்சத்திரமில்லை. தூரத்து வெளிச்சப் புள்ளிகளாய் சில வீடுகள் மினுங்கின. ஒரு பரந்த மைதானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பதினைந்து வீடுகள் சிதறிக் கிடந்தன. வண்டியின் முகப்பு விளக்கை சீராளன் அணைத்துவிட்டான். ரியல் எஸ்டேட் காரர்களால் போடப்பட்ட ஒரு செம்மண் சாலை குறுக்காய் பிரிந்தது. அந்த சாலையின் கடைசி வீடுதான் ஜெயா வீடு. முனையிலேயே இறங்கிக் கொண்டோம். சீராளனை பனிரெண்டு மணிக்கு மேல் இந்தப் பகுதிக்கு வரச் சொன்னேன். எப்படியும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். தனியாய் ஒரு கார் நின்று கொண்டிருந்தால் சந்தேகம் வரலாம். நீ கிளம்பு என்றபடியே மூவரும் இறங்கி இருளில் நடக்கத் துவங்கினோம். துப்பாக்கிகளைத் தடவி உறுதிபடுத்திக் கொண்டோம். மேலதிகமாய் இரண்டு ரவுண்டு சுடவும் புல்லட் இருந்தது. வீட்டை நெருங்கினோம். கேட்டில் ஒரு குண்டு பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. கீழ் தளக் கதவு சாத்தப்பட்டிருந்தது. யாருமில்லை. முகப்பு கேட் லேசாகத் திறந்திருந்தது. நாய் இருக்குமென எதிர்பார்த்திருந்தேன். இல்லை. வலது பக்கம் படிக்கட்டுகள் இருந்தன. அதிக சப்தமெழுப்பாமல் மேலேறினோம். மாடிக் கதவும் திறந்தே கிடந்தது. ஹாலில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. ஏதோ தெலுங்கு சானல் சப்தமில்லாமல் பாடிக் கொண்டிருந்தது. நான்கு அறைகளும் சாத்தப்பட்டிருந்தன. இரண்டு நீள சோபாக்கள் போடப்பட்டிருந்தன. பேசாமல் போய் அமர்ந்து கொண்டோம். தாமஸ் தொண்டையை சப்தமாய் கனைத்தான். ஒரு அறைக்கதவு லேசாய் திறந்தது. ஒரு பெண் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தாள். எங்களைப் பார்த்த அவள் கண்கள் உடனே கூரையைப் பார்த்தது. அக்கா என சப்தமெழுப்பிவிட்டு மீண்டும் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். இழுக்கப்பட்டும் இருக்கலாம். சற்று நேரத்தில் மாடியிலிருந்து கொலுசு ஒன்று இறங்கி வரும் சப்தம் கேட்டது.


”யாரு?” என்றபடியே வந்து நின்ற உருவம் பார்த்து எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது

விஜயலட்சுமி!

விஜியின் கண்களில் சற்றுத் தாமதமாய் அதிர்ச்சி தெரிந்தது. தழையத் தழைய நீலப் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். மல்லிகைப்பூவை பந்தாய் சுருட்டித் தலையில் வைத்திருந்தாள். உடல் மட்டும் சற்றுத் தளர்ந்தார் போலிருந்தது. மற்றபடி அதே கிறக்கமான கண்கள். துளியும் கூடாத, குறையாத உடல். அழுத்தமான சிவப்பு உதட்டுச் சாயம். கண்களுக்கு அடர்வாய் மையிட்டிருந்தாள். நான் அதற்கு மேல் அவளைப் பார்க்க முடியாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டேன்.

தாமஸ் பேச ஆரம்பித்தான். ”பிசினெஸ் விசயமா வந்தோம். உங்க இடம் பத்தி கேள்விப் பட்டோம். தங்கிட்டுப் போலாம்னு ஹிஹி!” என இளித்தான்
விஜி கஷ்டப்பட்டு புன்னகைத்தாள்
திடீரென முகத்தை வாசல் பக்கமாய் திருப்பி
”எங்கடி போய் ஒழிஞ்சீங்க” எனக் கத்தினாள்.
ஹாலில் அவளது குரல், சுவர்களில் மோதி ஆங்காரமாய் எதிரொலித்தது.
இரண்டு பெண்கள் கீழிருந்தும் இரண்டு பெண்கள் அறைகளுக்குள்ளிருந்தும் பரபரப்பாய் ஓடி வந்தனர்.
”ஹால்ல ஆளு உட்கார்ந்திருக்கு என்ன மசிர் புடுங்கிட்டிருந்தீங்களா?” என இறைந்தாள்.
நான் தலையை குனிந்தபடியே அமர்ந்திருந்தேன். விஜி தாமஸ் பக்கமாய் பார்த்து சொன்னாள்.
“இப்ப நாலுதான் இருக்கு. யாரை புடிச்சிருக்குன்னு பாருங்க” என்றாள்.

தாமசும் குணாவும் ஆளுக்கொரு பெண்ணுடன் அறையை நோக்கிப் போனார்கள். நான் அப்படியே அமர்ந்திருந்தேன். விஜி மற்ற இரண்டு பெண்களுக்காய் திரும்பி உள்ளே போகுமாறு ஜாடை காண்பித்தாள். அவர்கள் உள்ளே போனதும் எழுந்து எனக்காய் வந்தாள். நான் நிமிர்ந்து பார்த்தேன். “வாங்க” எனச் சொல்லிவிட்டு படிக்கட்டுப் பக்கமாய் நடந்தாள். எழுந்து பின்னால் சென்றேன். படிக்கட்டுக்கு அடியில் ஒரு அறை இருந்தது. அதில் நுழைந்தோம். விஜி உடனே கதவடைத்தாள்.

“நான் உங்கள எதிர்பாக்கல” என்றாள் மென்மையாக. நான் கிட்டத்தட்ட உடைந்து போயிருந்தேன். பேச்சே வரவில்லை.

சற்றுப் பெரிய அறைதான் அது. அகலமான கட்டில் ஒன்று அறையின் நடுவில் போடப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி ஒரு சிறிய சோபா இருந்தது. உட்காரச் சொன்னாள். அமர்ந்தேன். எதிரில் கைகட்டி நின்று கொண்டாள்.
“இப்ப என்ன பன்றீங்க?”
அமைதியாய் இருந்தேன்
“எந்த ஊர்ல இருக்கீங்க? கல்யாணம் பண்ணிகிட்டீங்களா?”
என்னால் எதுவும் பேசமுடியவில்லை. தலையை குனிந்தபடியேதான் அமர்ந்திருந்தேன். விஜி நெருங்கி வந்தாள். குனிந்து விரல்களால் என் தாடையை உயர்த்தினாள்.
“ஏன் எதுவும் பேசமாட்டேங்கிறீங்க ரொம்ப அதிர்ச்சியா இருக்கா?” என்றாள்
“இல்ல விஜி” என்றேன்
இதைக்கேட்டதும் சிரிக்க ஆரம்பித்தாள். சிரிப்பை நிறுத்தியதும் அவள் குரல் இதுவரை நான் கேட்டிராத கடுமைக்குத் தாவியது. சற்று சப்தமாய் பேச ஆரம்பித்தாள்.
“விஜிலாம் செத்துப் போய் ரொம்பநாளாச்சி. இதுக்குத்தானே மயங்கினேன். பற்களைக் கடித்துக் கொண்டாள். விஜியாம் விஜி. நான் இப்ப இந்த நிலைமைல நிக்கிறதுக்கு நீங்கதான் காரணம். எப்பவாச்சிம் இதுக்காக வருத்தபட்டிருக்கிங்களா?” என்றாள்
அதுவரைக்கும் அவள் மேல் இருந்த இரக்கம் திடீரென துண்டுபட்டது. “நானா என்ன சொல்ர?” என்றேன்
“பாண்டில நான் உண்டு என் குடும்பம் உண்டுன்னு நிம்மதியாதானே இருந்தேன். என் புருஷன் நல்லவனா இல்லன்னாலும் கூட, என் மேல கண்மூடித்தனமான அன்பத்தான் வச்சிருந்தான். அவன் பொண்டாட்டிங்கிறதால அந்த ஏரியால, ஊர்ல எல்லாருமே என்கிட்ட கொஞ்சம் பயத்தோடதான் பழகினாங்க. நீதான் எல்லாத்தையும் காணாமப் பண்ண. என்ன உன் வலைல விழவச்ச”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னப் பேசுகிறாள் இவள்?

“நடந்ததுக்கு நான் மட்டுமே எப்படி விஜி காரணமா இருக்க முடியும்? நீயும்தான என்ன விரும்பின? நான் கடைசி வர உன் கூட வாழனும்னுதானே ஆசைப்பட்டேன். நினைவிருக்கா நாம ஃப்ரான்ஸ் போக எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு இருந்தேன். உன்ன மகாராணி மாதிரிதானே வச்சிருந்தேன்”

“ஆமா அம்மணக்கட்ட மகாராணியா வச்சிருந்த. நீ எனக்கு தாலியே கட்டல தெரியுமா? உனக்கு என் உடம்பு மேலதான் மோகம். என் ஒடம்புல ஒரு இணுக்கு கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் அனுபவிச்ச. என்ன கழட்டி விட எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்திட்டிருந்த. கிடைச்சதும் ஓடிப்போய்ட்ட. ச்சீ” என்றாள்

யாரோ பலங்கொண்ட மட்டும் என் தலையில் சம்மட்டியால் ஒங்கி அடித்தார் போலிருந்தது.

ஓவியம் : rembrandt

மேலும்

Monday, March 14, 2011

அத்தியாயம் ஐந்து. தீராப்பழி

சூரியன் முகத்தைச் சுட்டவுடன் விழித்துக் கொண்டேன். சாய்விருக்கையில் படுத்தபடியே தூங்கி விட்டிருக்கிறேன். குணா எப்போது போய் படுத்தான் எனத் தெரியவில்லை. அந்த இரவில் வீட்டை விட்டு வெளியேறிய குணா எங்கு சென்றான்?. எப்படி இம் மாதிரியான ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுத்தான்? என்பது பற்றியெல்லாம் அவன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்லக் கூடும். எழுந்து முன் கட்டிற்கு வந்தேன். திண்ணையில் எதிரே அமர்ந்து சீராளனுடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். சீராளன் முகம் சரியாக இல்லை. தெலுங்கில் பேசிக் கொண்டார்கள். நான் படுக்கையறைக்குப் போய்விட்டேன். சற்று நேரம் கழித்து தாமஸ் வந்தான்.

“குணா இன்னும் தூங்கிட்டிருக்கான், நைட் ரொம்ப லேட்டாகிடுச்சா?” என்றான்
“ஆமா” எனப் புன்னகைத்தேன்.
நீ எழுந்திட்டியா? குளியல் போட்டுட்டு வந்துருவமா?
“ம்ம்” என்றபடி தாமசுடன் கிளம்பினேன்

நாங்கள் வெளியே வந்தபோது,சீராளனுடன் திண்ணையில் எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் சட்டெனப் பேச்சை நிறுத்தினார். சீராளன் முகம் தீவிர யோசனையில் இருந்தது. காலை ஏழு மணி இருக்கும். வீதியில் சந்தடி மிகுந்திருந்தது. மாடுகள் கூட்டமாய் வயல் பக்கம் சென்று கொண்டிருந்தன. ஆற்றில் குளித்துவிட்டு பள்ளிக்குப் போகும் சிறார்கள் சீருடையோடு எதிரே வந்து கொண்டிருந்தனர். நான்கைந்து நாய்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாய் ஓடிக்கொண்டிருந்தன. அவர்களோடு நாய்களும் குளித்திருந்தன. உடலை லேசாய் உதறியபடியே ஓடின. சிறார்கள் பேசுக்கொண்ட தெலுங்கு கீச் கீச் என கிளிக் கத்துவது போலிருந்தது. ஆற்றில் ஓரிரு முதியவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். கிராமமே ஏற்கனவே குளித்துவிட்டிருக்கக் கூடும். காலை ஏழு மணி என்பது கிராமங்களில், தளர்ந்த முதியவர்கள் குளிக்கும் நேரம்தான். நீர் கதகதப்பாக இருந்தது. சீக்கிரம் குளித்து விட்டு வெளியேறினோம். குணா எதிரில் துண்டைத் தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு வாயில் ஒரு பல்குச்சியுடன் எதிரில் வந்தான். புன்னகைத்துவிட்டுக் கடந்தோம்.

அந்த நபர் போய்விட்டிருக்கிறார். சீராளன் திண்ணையில் தனியே அமர்ந்து கொண்டிருந்தான். உள்ளே நுழைந்ததும் புன்னகைக்க முயன்று தோற்றான். ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. அவனாய் சொல்லட்டும் என நினைத்துக் கொண்டே பின் கட்டை நோக்கிச் சென்றோம். கொடியில் ஈர உடைகளை காயவைத்துக் கொண்டிருந்தபோது சீராளன் முன் கட்டின் உத்திரத்தைப் பிடித்தபடி தொண்டையைக் கனைத்தான்.

“நாம ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தோம். ஆனா சும்மா இருக்க விடமாட்டாங்க போல”
“என்ன சொல்ற?” என்றான் தாமஸ்
“மதுரைல என்ன வெட்டினது யார்னு தெரிஞ்சிடுச்சி”
“யார்?” என்றேன்
“இது என்னோட பழைய கணக்கு. என் அப்பாவோட எதிரிங்க. அவர் விட்டுவைச்ச மீதி என்ன துரத்திட்டு இருக்கு. இனிமே ஒளிய முடியாது”
“முழுசா சொல்லு” என்றான் தாமஸ்
“குணாவும் வந்திரட்டும். நீங்க ரெடியாகி வாங்க. சாப்டுட்டே பேசுவோம்”

0
ஜிகினா விவகாரத்திற்குப் பின்பு சீராளனுக்கு மீண்டும் பெண் உடல் மீதான விருப்பம் அதிகரிக்கத் துவங்கியது. மதுரையில் காலூன்ற ஆரம்பித்த நாளிலிருந்து ஜிகினாவைப் புணரும் நாள் வரை அவன் பெண்களை முற்றிலுமாய் தவிர்த்திருந்தான். கொடைக்கானலில் இருந்து திரும்பியதும் அவனால் இரவுகளில் சும்மா தூங்க முடியவில்லை. மனம் பரபரத்துக் கொண்டே இருந்தது. மதுரையில் எல்லாத் தரப்பு ஆட்களோடும் சீராளனுக்குத் தொடர்பு இருந்தது. ஆனாலும் அவர்களிடம் கேட்க யோசித்தான். மற்ற மூவருக்கும் இவ்விஷயம் தெரிந்துவிடக் கூடாது என்பதில் திடமாய் இருந்தான். போலவே அவனால் இன்னொரு உறவிலும் ஈடுபட முடியவில்லை. இதற்கு மேல் ஒரு பெண்ணைப் பார்த்துப், பின்னால் அலைந்து, பேசிப்பேசிப்பேசி படியவைத்து, புணர்வதெல்லாம் அலுப்பாய் தோன்றியது. தொழில் முறை பெண்களிடம் போகவும் பெரும் தயக்கம் இருந்தது. வெளியூர் செல்ல ஒரு வாய்ப்பும் அமையவில்லை.

கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த நேரத்தில்தான் தேவி அறிமுகமானாள். ஒரு மதியத்தில் ட்ராவல்ஸில் வெளியே நின்றபடி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். நடுத்தரவயதில் ஒரு பெண் அவனிடம் ஐநூறு ரூபாயை நீட்டி ”சில்லறை இருக்குமா?” என்றாள். ஏதோ யோசனையில் இருந்தவன் சற்று திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். ஐந்தடிக்கு குறைவான உயரம். பருத்துச் சிவந்த உடல். குண்டு முகம். செழித்த கன்னங்கள். சீராளன் மனதிற்குள் மழையடித்தது. பெண்களைப் பார்த்த உடனேயே, ரெண்டும் ரெண்டும் நாலு எனச் சொல்லிவிடும் ஆற்றல் சீராளனுக்கு இருந்தது.

“என்கிட்டயும் இல்லயே.எவ்ளோ வேணும்?” என்றான்
“பக்கத்து கடைக்கு இருநூறு ரூபா தரனும். சில்லர இல்லங்கிறாங்க” என்றாள்
அவள் விழிகள் அலைபாய்ந்து கொண்டே இருந்ததைப் படித்தான். சிணுங்கலான குரலும், உடல்மொழியும் அவனுக்குப் பழக்கமானதுதான். பேச்சில் தெலுங்கு வாடை இருந்தது.
இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைத் தந்தான்.
“தீனினு இச்சையண்டி” என்றான்.
“மீரு தெலுகா? எனச் சிரித்தாள்.
சீராளன் புன்னகைத்தான்.
அவள் பணத்தைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தாள்.
“நா பேரு தேவி, நேனு இக்கட மாட வீதில உன்னானு. மீரு நாத்தோ ஒச்சாரண்டே, நேனு அக்கட பெட்ரோல் பங்க்ல சேஞ்ச் மாற்சேஸி இச்சேஸ்தானு”
“நேனு போஜனம் செய்தானிக்கு வெளுத்தானுன்னு அனுக்குண்டானு” என்றான்
“நேனு இங்கா போஜனம் செய்லேதண்டி” என்றாள்
“மீரு ஒச்சகண்டி முந்து போஜனம் சேஸ்தம் ஆ தரவாத்தா சேஞ்ச் சேசி இச்சஸ்தானு” என்றான்

அடுத்த அரை மணி நேரத்தில் தேவியை கிழக்கு மாட வீதியின் நெருக்கடியான சிறு சிறு சந்துகளுக்கு உள்ளிருந்த, இலக்கம் அறுபத்து ஒன்பதாம் எண் கொண்ட வீட்டின், மூன்றாவது கட்டு இருட்டு அறைக்குள் தரையில் கிடத்தி, வியர்க்க வியர்க்கப் புணர்ந்தான். இப்படியாகத் துவங்கியதுதான் தேவியுடனான பழக்கம். அந்த வீட்டில் தேவியுடன் இன்னும் ஆறு பெண்கள் இருந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தரகன் தொழில் நடத்திக் கொண்டிருந்தான். சீராளன் பெரும்பாலும் மதிய நேரத்தில்தான் போவான். அங்கிருக்கும் மற்ற பெண்களை அவன் நிமிர்ந்தும் பார்ப்பதில்லை. தேவி இருக்கும் கடைசி அறைக்கு விடுவிடுவெனப் போவான். ஒரு மணி நேரத்திற்குள் திரும்பப் போய்விடுவான். இருட்டான அந்த அறையும், கலவியுடன் பொங்கும் வியர்வையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அறைக்குள் இவனைத் தவிர யாரையும் அனுமதிப்பதில்லை என்றாள். வாடிக்கையாளர்களுக்கு தனியாக முன் வீட்டில் தடுப்பு மறைவுகள் இருந்தன. மதிய நேரத்தில் வரும் தனி வாடிக்கையாளர்கள், மற்றப் பெண்களுக்கும் இருந்ததால் யாரும் யாரையும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

தேவி இருந்த அறையின் ஒரு மூலையில் சிறிய நாடா ஸ்டவ் இருந்தது. அதில்தான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அறையின் இன்னொரு மூலையில் இரண்டு சுவர்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக் கயிறில் அவளின் உடைகள் தொங்கிக்கிடக்கும். கும்மிருட்டு எப்போதுமிருந்து கொண்டிருந்தது. சற்றுக் கண்கள் பழகினால் வெளிச்சமிருப்பதைப் போன்ற உணர்வு வரும். வெற்றுத் தரையில் தலையணையை மட்டும் தலைக்கு வைத்துக் கொண்டு கலவுவார்கள். தொங்கிக் கிடக்கும் அவளின் உடைகளில் இருந்து வரும் விநோத மணம் அறையை நிறைத்திருக்கும். தேவியின் உடல் வியர்க்க வியர்க்க சீராளனுக்கு காமம் பொங்கும். ஒரு மணி நேரத்தில் மூன்று முறை கலவி கொள்வார்கள். சில நாட்களில் சீராளன் சும்மா இருந்து விட்டுப் போவதுமுண்டு.

சென்ற மாதம் பதினேழாம் தேதி சீராளன் முதல் முறையாய் தன் கவனத்தில் பிசகினான். தேவியுடன் சல்லாபித்து விட்டு வெளியில் வந்தபோது, பின்னாலிருந்து ஒரு கரம், அரிவாளை அவன் பின்னங்கழுத்தில் பாய்ச்சியது. சுதாரித்துத் திரும்பி தன் மினியேச்சரை எடுத்து இரண்டு முறை சுட்டான். நான்கைந்து பேர் சிதறி ஓடினர். அணிந்திருந்த டி-சர்டை கழற்றி கழுத்தைச் சுற்றி இறுக்கக் கட்டிக் கொண்டான். பத்தடித் தொலைவில் ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பக்கவாட்டில் பூட்டப்பட்டிராத, அவனது யமாஹா 100 சிசியில் பாய்ந்தமர்ந்து பறந்தான்.
இரத்தம் முதுகை நனைத்து, யமஹாவின் வழி இறங்கி, கருப்புத் தார் சாலையில் கோடிழுத்துக் கொண்டே வந்தது. கண்கள் முன் மினுக்கட்டாம் பூச்சிகள் பறந்தபடியிருக்க, நழுவும் நினைவை கெட்டியாய் பிடித்தபடி, எனக்குத் தொலைபேசினான். வண்டியை ஓரம் கட்டச் சொன்னேன். அவன் நிற்கும் இடத்திற்கு சமீபமாய் இருப்பவனை இன்னொரு தொலைபேசியில் அழைத்தேன். இவனிடம் பேசிக்கொண்டே, அவனிடம் விசயத்தைச் சொன்னேன். அவன் சீராளனை பார்த்துக் கொண்டிருப்பதாய் சொன்னான். விரைந்து செயல்படுவென இரண்டு தொடர்புகளையும் துண்டித்து விட்டு, நானும் அந்த இடத்திற்கு வண்டியில் விரைந்தேன். நான் சென்று சேரும்போது சீராளன் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

யார் வெட்டியிருப்பார்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. உள்ளூர் அரசியல்வாதியிடம் உறவு சுமுகமாகவே இருந்தது. ஜிகினா துண்டு துண்டாய் வெட்டப்பட்ட வீடியோவைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ந்து போனான். மேலும் ஒரு பந்தாய் சுருட்டிய மஞ்சள் பை அவனிடமிருந்து வந்து சேர்ந்தது. இதுவரை எந்தச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ளவும் இல்லை. பின் யார் வெட்டி இருப்பார்கள்? என மண்டையை உடைத்துக் கொண்டோம். விபசார விடுதி நடந்துபவர்களுக்கு இவனை வெட்டக் காரணம் எதுவும் இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு பலமான எதிரி எங்களுக்கு உருவாகி இருப்பதாய் நினைத்துப் பரபரப்படைந்தோம். சீராளன் உடல் தேறி வந்ததும் எங்காவது போய் சில மாதங்கள் ஓய்வு எடுக்கத் திட்டமிட்டது கூட இந்த சிக்கலில் இருந்து தற்காலிகமாய் தப்பிப்பதற்காகத்தான்.
0
குணாவும் வந்து சேர்ந்தான். நால்வரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். சீராளன் சொல்ல ஆரம்பித்தான்.

”என்னை வெட்டினது பக்கத்து ஊர்காரன். கிட்டத்தட்டப் பத்து வருஷப் பகை. இவங்க கிட்ட இருந்து தப்பிச்சிதான் கேரளாவிலயும் தமிழ்நாட்லயும் சுத்திட்டிருந்தேன். நான் பண்ண ஒரே தப்பு, மாட வீதி வீட்டுக்கு ரெகுலரா போனதுதான். அங்க தொழில் நடத்திட்டு இருந்தது இவனுங்க ஆளுங்கதான்”
0

சீராளனுடைய தாத்தா இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். அவர் காலத்திலிருந்தே எண்ட்ட பள்ளி கிராமத்தின் அறிவிக்கப்படாத தலைமைக் குடும்பமாக சீராளனுடைய குடும்பம் இருந்து வந்தது. தாத்தாவைப் போலவே சீராளனின் அப்பாவும் மிக நேர்மையானவர். கடுமையான உழைப்பாளி. ஆனால் படிப்பு வரவில்லை. விவசாயம் பார்த்துக் கொண்டார். சித்தப்பாக்கள் படித்து வெளிமாநிலம், வெளிநாடு என ஆளுக்கொரு திசையில் சென்றுவிட்டனர். சீராளனுடைய அப்பாவிற்கு அந்த ஊரில் நல்ல செல்வாக்கு இருந்தது. மாடு வாங்குவதிலிருந்து, வரப்புத் தகராறு வரை எல்லாவற்றுக்குமான தீர்வை அவரால் தந்துவிட முடியும் என அந்த ஊர்மக்கள் நம்பினர். மேலதிகமாய் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள், விவசாயக் கடன்கள் என அரசாங்க நிமித்தமான காரியங்களுக்கும் மக்கள் சீராளனுடைய அப்பாவையே நம்பியிருந்தனர். எண்ட்ட பள்ளி கங்காவரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது. அந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ வையும் சீராளன் அப்பா தெரிந்து வைத்திருந்தார். அவரின் குடும்பத்தோடும் சீராளன் குடும்பத்திற்கு நல்ல உறவு இருந்தது. எம்.எல்.ஏவின் கடைசி மகனும்,சீராளனும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். உடல் நலக் குறைவினால் எம்.எல்.ஏ இறந்த பிறகு அடுத்த தேர்தலில், அவரின் மூத்த மகன் எம்.எல்.ஏ வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அப்பாவின் நேர்மை மீது அவனுக்கு கடும் வெறுப்பு ஆரம்பத்திலிருந்தே இருந்தது. அவன் பொறுப்பிற்கு வந்ததும் கங்காவரம் பகுதி தலைகீழானது. கள்ளச்சாராயத்திலிருந்து விபசாரம் வரை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. அரசாங்க அலுவலகங்களில் மெத்தனமும், லஞ்சமும் இயல்பானது. கங்காவரத்திற்கு கீழிருந்த பதினேழு பஞ்சாயத்து கிராமங்களும் தனித்து விடப்பட்டன. மக்களுக்கு எந்த வசதிகளும் போய்ச்சேரவில்லை.

கொதித்தெழுந்த சீராளனின் அப்பா அரசாங்க அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். விவசாயிகளைத் திரட்டி எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு தர்ணா செய்தார். மெல்ல இவரின் குரல் வலுக்க ஆரம்பிக்கவே, எம்.எல்.ஏ தனிப்பட்ட முறையில் சீராளனின் அப்பாவை வாங்கப் பார்த்தான். முடியாமல் போனது. அடுத்த கட்டமாக சீராளனின் அப்பா எம்.எல்.ஏ மீது புகார் மனுக்களை முதல்வருக்கு அனுப்பினார். விஷயம் கேட்டுக் கொதித்த எம்.எல்.ஏவின் குண்டர்கள், ஒரு நள்ளிரவில் சீராளனின் வீட்டிற்குத் தீவைத்தனர். விடுமுறைக்கு மாமா வீட்டிற்குப் போயிருந்த சீராளனைத் தவிர்த்து அனைவரும் அத் தீயில் கருகிப் போயினர். சீராளன் அப்போது மேல் நிலை வகுப்பைத் தாண்டியிருந்தான். பதினேழு வயதில் தன் குடும்பத்தையே இழந்த அவனுக்குப் பழி உணர்வு முதன்முதலாய் வேர்விட ஆரம்பித்தது. அவனும் அவன் மாமாவும் இன்னும் சில கிராமத்து மனிதர்களுமாய் சேர்ந்து எம்.எல்.ஏ வீட்டிற்குத் தீ வைத்தனர். கூடவே ஓரிரு பெட்ரோல் குண்டுகளையும் வீட்டிற்குள் வீசினர். வெடித்துச் சிதறிய தீப்பிழம்பில் எம்.எல்.ஏவும் அவர் குடும்பமும் கருகியது.

அந்த இரவிலேயே சீராளனை சித்தூரிலிருக்கும் உறவினர் வீட்டிற்கு அவன் மாமா அனுப்பி வைத்துவிட்டார். ஓரிரு நாளில் அவன் மாமாவையும் எம்.எல்.ஏ உறவினர் கும்பல், வெட்டிச் சாய்த்தது. சீராளனுடன் பள்ளியில் படித்த கடைசி மகன் லோகு உயிர் பிழைத்து விட்டிருக்கிறான். அவனைத் தவிர எல்லாரும் அன்று மாண்டு போயிருக்கிறார்கள். எப்படியும் சீராளனை மோப்பம் பிடித்து விடுவார்கள், என பயந்து அவன் தஞ்சம் புகுந்திருந்த உறவினர்கள் அவனை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு நள்ளிரவில் சித்தூரிலிருந்து வெளியேறிய சீராளன், நெடுஞ்சாலை லாரி ஒன்றில் தஞ்சம் புகுந்தான். திருவனந்தபுரம் சென்ற அந்த லாரியின் ட்ரைவர்தான் சீராளன் இவ்வாழ்வைத் தேர்ந்தெடுக்க காரணமாய் இருந்திருக்கிறார். கேரளாவில் அப்போது முளைவிட ஆரம்பித்திருந்த தலைமறைவு இயக்கங்களுடன் சீராளன் ஐக்கியமானான். நான்கு வருடங்கள் அவர்களோடு இயங்கிவிட்டுப் பின்பு வெளியேறி, கூலிக்காய் கொலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

எம்.எல்.ஏ ஆட்களால் அதற்கு மேலும் கங்காவரத்தில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மக்களிடையே செல்வாக்கு மோசமடைந்ததால், முதல்வர் நேரடியாய் தலையிட்டு லோகுவை கங்காவரத்திலிருந்து வெளியேற்றி தமிழ் நாடு ஆந்திரா பார்டரில் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுமாறு அனுப்பி விட்டிருக்கிறார். சித்தூரில் அண்ணன் விட்டுப் போன விபச்சாரத் தொழிலை லோகு மீண்டும் தொடங்கி இருக்கிறான். அவனுடைய விபசார நெட்வொர்குகள் மதுரை வரை வியாபித்திருக்கின்றன. அதைப் பார்வையிட வந்த ஒரு மதியத்தில்தான் சீராளனைப் பார்த்துவிட்டிருக்கிறான். அடுத்த நாள் சீராளனை வெட்ட ஆட்களை ஏவியிருக்கிறான். இது எதுவுமே தெரியாத சீராளன் பத்து வருடத்தில் ஊர் மாறியிருக்கும் என நினைத்து உறவினர்களைத் தொடர்பு கொண்டு, ஓய்விற்காக எங்களையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்ததாய் சொல்லி முடித்தான்.

நேற்று இரவு தம் ஆட்களுடன் கங்காவரம் ஜெயாக்கா விபசார விடுதியில் லோகுவையும் அவன் ஆட்களையும் சீராளன் உறவினர் ஒருவர் பார்த்திருக்கிறார். அவரிடம் சீராளனைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். சீராளனின் தலையை வெட்டி எண்ட்ட பள்ளி கிராம எல்லையில் வைக்கும் வரை ஓயமாட்டோம் எனவும் மதுரையில் அவன் தப்பி விட்டான் என்றுமாய் கறுவிக் கொண்டிருந்தார்களாம். அவர் சீராளனை யார் என்றே தெரியாது எனச் சொல்லிவிட்டு நேராய் சீராளனிடம் வந்து விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். எப்படியும் இன்று அவர்கள் சீராளனைத் தேடி வரக்கூடும் எனக் காலையிலேயே வந்து எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார்.
0

சாப்பிட்டு முடித்தோம்.
“இப்பவே ரொம்ப லேட்னு நினைக்கிறேன். எல்லாத்தையும் பேக் பண்ணி கார்ல போடு. நாம இங்க இருந்த அடையாளமே தெரியக்கூடாது. உடனே வேற எங்கயாவது போய்டுவோம்” என்றான் தாமஸ்
”இனிமே எங்க போறது தாமஸ்? மதுரைல இந்நேரம் நம்ம ஜாதகத்தையே நோண்டி இருப்பாங்க. அவ்ளோ சீக்கிரம் தப்பிக்க முடியாது” என்றான் சீராளன்
”ஒரே வழிதான் இருக்கு” என்றான் குணா
என்ன? என்பதுபோல் மூவரும் அவனைப் பார்த்தோம்.
”அவனுங்க ஆரம்பிக்கிறதுக்குள்ள நாம முந்திக்கனும்” என்றான் குணா.

மேலும்

Friday, March 11, 2011

அத்தியாயம் நான்கு அ. ஜிகினா வதம்

கண் விழித்துப் பார்த்தபோது சன்னல் வழியாய் புல்வெளியில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. யாரையும் காணோம். குளிர் அவர்களுக்குப் பதிலாய் அறையில் படுத்திருந்தது. நான் மிக அழுக்காய் இருந்ததாய் உணர்ந்தேன். இந்த சுத்தமான அறையில் நான் நாற்றமடிப்பதாய் உணரத் துவங்கினேன். எழுந்து ஹாலிற்கு வந்தேன். புதிய உடைகள் பிரிக்கப்படாது சோபாவில் கிடந்தன. கதவைத் திறந்து கொண்டு வெளியில் போக கூசியது. குளியலறையில் நுழைந்து வெந்நீரை ஷவரில் வழியவிட்டு குளித்தேன். உடம்பிலுள்ள அத்தனை அழுக்கையும் சுரண்டி எடுத்து வீசும் வேகம் பிறந்தது. அதே போல் உடம்பிற்கு உள்ளேயும் இருக்கும் உறுப்புகளையும் சுத்தப் படுத்திக் கொள்ள முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்! என நினைத்துக் கொண்டேன். குளித்தபடியே. பற்களை அழுத்தி தேய்த்தேன். மது நாற்றத்தை நினைத்தாலே குடலைப் பிறட்டியது. மது நாற்றம், சிகரெட் நாற்றம் ச்சீ! தூ! என்றபடியே பற்களை சுத்தமாய் தேய்ந்தேன். நாக்கு தொண்டை எல்லாமும் சப்தமாய் சுத்தமானது. தலையிலிருந்து நீர் சொட்ட, நிர்வாணமாய் குளியலறைக் கண்ணாடி முன் நின்றேன். அப்பழுக்கில்லாத சுத்தமான உடலாய் ஆனாற் போலிருந்தது. பசி பயங்கரமாய் நடனமிட்டது. லேசாய் குளிரில் உடல் நடுங்கியது. ஹாலிற்கு வந்து பிரிக்கப்படாத ஆடைக் குவியல்களில் சிவப்பு நிற நெக் பனியனையும் நீல நிற அரைக்கால் டவுசரையும் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டேன். ப்ளாஸ்கில் டீ ஆறாமல் இருந்து. கோப்பையில் சரித்துக் கொண்டு, முன் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். புல்வெளி பெஞ்சில் தாமஸ் அமர்ந்து கொண்டிருந்தான். குணா காட்டேஜின் பின்புறம் மரங்களைப் பார்த்தபடி புகைத்துக் கொண்டிருந்தான். சீராளனைக் காணவில்லை. நான் தாமஸ் அருகில் போய் அமர்ந்தேன்.

“சாரி பா கொஞ்சம் தடுமாறிட்டேன்”
தாமஸ் புன்னகைத்தான். “ஒண்ணும் நடந்திடலயே” என்றான்

பனிப்புகை மரங்களின் மீது கவிழ்ந்திருந்தது. குளிர் உடலை ஊடுருவிக் கொண்டிருந்தது. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். புல்வெளியைத் தாண்டி ஹோட்டலின் ரிசப்ஷனுக்காய் நடந்தேன். மனதிற்குள் திடீரெனப் பெண் துணை இருந்தால் இந்தக் குளிருக்கு நன்றாக இருக்குமெனத் தோன்றியது. ஹோட்டல் காபி ஷாப்பில் போய் அமர்ந்தேன். தூரத்தில் சீராளன் பேரரிடம் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தான். அருகில் வருமாறு கை அசைத்தான். அவன் இருக்கைக்குப் போனேன்.

“இங்க நிலவரம் எப்படின்னு விசாரிச்சிட்டு இருக்கேன். எல்லாமே கிடைக்குதாம். கேரளா ஸ்பெசலாம், என்ன சொல்ற நைட் புக் பண்ணிடலாமா? என இளித்தான்.
“பண்ணிடு சீராளா ரொம்ப நாளாச்சி”
“நைட் நாம ரெண்டு பேரும் பப்புக்கு வந்திடலாம். இங்கயே செலக்ட் பண்ணிட்டு இங்கயே தங்கிடலாம். நம்ம காட்டேஜிக்கு வேணாம், ரெண்டு யோக்கியசிகாமணிங்க இருக்காங்க” என்றான்
சரி எனப் புன்னகைத்தேன்.

இருவருமாய் திரும்ப காட்டேஜிற்கு வந்தோம். அனைவரும் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தோம். சரியாய் பத்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து போய் கதவைத் திறந்தேன். கருப்பு பர்தா அணிந்த பெண்ணுருவம் சடாரென உள்ளே நுழைந்து கதவை அவசரமாய் தாழிட்டது. பின் எனக்காய் திரும்பி முகத்திரையை விலக்கியது.
ஜிகினா!
நான் சற்று திடுக்கிட்டேன். ஜிகினா என்றேன்.
”ஹாய் குட்டிபையா எப்படி இருக்க?” என நெருங்கி வந்து லேசாய் அணைத்துக் கொண்டாள்.
“நல்லாருக்கேன்” என்றபடியே விலக்கினேன்.
பர்தாவை முழுவதுமாய் கழற்றி அருகிலிருந்த சோபாவில் போட்டாள். சிவப்பு நிற ஷிபான் புடவை அணிந்திருந்தாள். கையில்லாத ஜாக்கெட். சந்தன நிறம். சரிந்த பெரு முலைகள். திமிர்ந்த பின் புறம். ஐம்பது வயதென்றால் எவனும் நம்ப மாட்டான். ஆனால் ஐம்பது வயதுதான். மீண்டும் வந்து கட்டிக் கொண்டாள்.
“மூணு வருஷம் ஆச்சில்ல” என்றாள்.
நண்பர்கள் என அறிமுகப்படுத்தினேன். கைக்குலுக்கினாள்.
“எப்படி நான் இங்க இருக்கிறது தெரியும்?” என்றேன்
”காபி ஷாப்ல பாத்தேன். சட்னு நினைவுக்கு வரல. கொஞ்ச நேரம் யோசிச்சதும், நீ நினைவுக்கு வந்த. மி த பாலோபையிங்” என சத்தமாய் சிரித்தாள். ஏற்கனவே அவள் உற்சாக மிகுதியில் சப்தமாய்த்தான் பேசிக்கொண்டிருந்தாள்.
“நீ குண்டடிச்சிட்ட” என்றபடியே வயிறில் செல்லமாய் தட்டினாள்.
“என்னை நினைவு வச்சிருக்கிறது ஆச்சரியமா இருக்கு ஜிகினா” என்றேன்
“அடப்பாவி என்ன இப்படி சொல்லிட்ட, நீ மட்டும் வந்து என்ன காப்பாத்தலனா செத்தே போயிருப்பேன். அதுக்கு பிறகு உனக்கு நன்றி சொல்லனும்னு, உன் துப்பறியும் கம்பெனில கேட்டேன். உன்ன பத்தின எந்த தகவலையும் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நீ இந்திய இராணுவத்துக்கு கூட வேலை செய்யுறியாமே! அப்புடியா? என்றாள்
எனக்கு அவளின் மீது பரிதாபமும் அன்பும் ஒரே சமயத்தில் எழுந்தது.
மையமாய் புன்னகைத்தேன்.

அவள் உடனே மற்ற மூவரையும் பார்த்து நாக்கை லேசாய் கடித்துக் கொண்டாள். “சாரி, சாரி நீ சீக்ரெட் ஏஜெண்ட்னு இவங்களுக்கு தெரியாதோ?” என நெருங்கி வந்து காதில் கிசுகிசுத்தாள்.
“நான் அந்த வேலைய விட்டுட்டேன் ஜிகினா. இப்ப இவங்கதான் என் பார்ட்னர்ஸ். பிசினெஸ் ஆரம்பிச்சிருக்கோம்.”
“ஓ! நல்ல விஷயம் குட்டிப்பையா. எவ்ளோ நாள்தான் ரிஸ்கான வேலைல இருக்கிறது.”
“சரி உட்கார்” என்றேன்.
“யெஸ்” என்றபடியே அமர்ந்தாள்
“என்ன இருக்கு சாப்ட ?எனக்கு நல்ல பசி”
“ரெமி மார்டின்”
“ஓ நோ, அது அப்புறம்”
“என்ன வேணும் சொல்”
“ஏதாச்சும் ஸ்நாக்ஸ்”
ரிசப்சனை அழைத்து மெனு சொன்னேன்.
”நீ எப்படி திடீர்னு இங்க?” என்றேன்
”துணிகடை கெழடுக்கு இங்க வந்தாதான் மூடு வருதாம். அதான். நாளைக்குதான் ப்ளான். சென்னைல இப்ப கூட யாரும் இல்ல. ரொம்ப போர் அடிக்கவே ஒரு நாள் முன்ன கிளம்பி வந்தேன்”
”அக்கா எங்க?”
”அவ யுஎஸ்ல செட்டிலாகிட்டா. ஆக்சுவலி ரூம் நாளைல இருந்துதான். அந்த ஆள்க்கு போன் பண்ணி இன்னிக்கு மாத்துன்னு சொல்லலாம்னு காபி ஷாப்ல உட்கார்ந்து இருந்தேன். அப்பதான் உன்ன பாத்தேன். நல்லவேள போன் பண்ணல. நான் இன்னிக்கு உன் கூடதான் தங்க போறேன்” என கண்ணடித்தாள்.
”அப்ப நீ இங்க வந்தது அந்த ஆள்க்கு தெரியாதா?”
”தெரியாது” என்றாள்
சீராளனை அழைத்து ”இவன் உன் தீவிர இரசிகன்” என்றேன்
”அப்ப அவங்கலாம் இல்லையா?” என்றாள். தாமஸ் புன்னகைத்தான். குணா இறுக்கமாகவே இருந்தான்
சீராளன் அருகில் வந்து நின்று புன்னகைத்தான்
ஜிகினா அவனை தனக்காய் அழைத்து காதில் கிசுகிசுத்தாள்.
சீராளன் சிரித்துக் கொண்டே ”என்ன இப்படி கேட்டுடீங்க போன மாசம் கூட ஒரு முறை.. உங்கள நெனச்சித்தான் ஹிஹி” என்றான்
”அடப்பாவி” எனப் பொய்யாய் வாய் பொத்திக் கொண்டாள்
”இன்னுமா தமிழ்நாடு என்ன நினைக்குது?” என என்னைப் பார்த்துக் கேட்டாள்
”அது நினைக்கும் நீ செத்தபின்னாலும்” எனச் சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
ம்ஹிம் என்றாள்
சீராளன் சற்றுத் தைரியமாகி அவளின் பின்புறத்தை தொட்டுப் பார்த்தான்.
“இதுக்கே சொத்த எழுதி தரலாம்” என்றான்.
ஜிகினா திரும்பி அவன் சட்டையை பிடித்து ”ஒழுங்கா எழுதிக் கொடுத்திடு” என்றாள். சீராளன் ஜிகினாவை சோபாவில் தள்ளி அவள் மீது பாய்ந்தான்.
“ஓ நோ நோ” என சிணுங்கினாள்
குணா எழுந்து படுக்கையறைக்குப் போனான்.
ஜிகினா சீராளனை தள்ளி விட்டு எழுந்து முந்தானையை தேடிப் பிடித்து இடுப்பில் சொருகியபடி எனக்காய் வந்தாள்.

பேரர் கதவைத் தட்டினான். ஜிகினாவை உள்ளே போகச் சொன்னேன். சோபாவில் கிடந்த பர்தாவை எடுத்துக் கொண்டு ஜிகினா என் படுக்கையறைக்குப் போய் தாழிட்டுக் கொண்டாள். ஒரு பெரிய ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தான் அதில் எல்லா வகையான மதுவும் இருந்தது. ஹாட் பாக்சில் இறைச்சி துண்டாய் நறுக்கப்பட்டு, காரமாய் பொரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு ஆவி பறந்து கொண்டிருந்தது. நாங்கள் பரிமாறிக் கொள்வதாய் சொல்லிவிட்டு பேரரை அனுப்பிவிட்டு கதவைச் சாத்தினேன். ஜிகினாவையும் குணாவையும் அழைத்தேன்.



ஹாலில் வட்டமாய் அமர்ந்தோம். குணா ஜிகினாவைப் பார்த்து புன்னகைத்தான். குணாவிடம் சொன்னேன்
”தமிழ்நாடே இருபது வருடங்களுக்கு முன்பு இவள் காலடியில் கிடந்தது” என்றேன். ஜிகினா சிரித்தாள்.
“என்ன குடிக்கலாம்”.
“குளிருக்கு ரம் என்றாள்.
“இல்ல குளிருக்கு நீ” என அவளை முத்தமிட்டேன். தாமஸ் கண்ணாடித் தம்ளர்களில் கருப்புநிற ரம்மை வார்த்தான். ரம்மும் எங்களைக் குடித்தது. ஜிகினா தன் ஷிபான் புடவையை கழற்றி எறிந்தாள்
”ரம் உள்ள போன உடனே சூடாகிடுச்சி கசகசன்னு இருக்கு” என்றாள். அவளின் பெரு முலைகள் சிறிய ஜாக்கெட்டினுள் திமிறிக் கொண்டிருந்தன. சிவப்புக் காட்டன் பாவாடையும் முட்டி வரை ஏறியிருந்தது. நான் அவளை அள்ளிக் கொண்டு படுக்கையறையின் கதவை சாத்தினேன். ஜிகினாவுடன் எனக்கிது முதல் முறை இல்லைதான் என்றாலும் நான் முழுமையாய் அவளினுள் இயங்கினேன். திரவம் வெளியானுதும், புதைக் குழி இது என்கிற சுளிப்புகள் ஓரமாய் துளிர்த்தன. ஜட்டியுடன் வெளியில் வந்தேன். சற்று நேரத்தில் ஜிகினா என் சிவப்பு பனியனை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.

மீண்டும் குடிக்க ஆரம்பித்தோம். குணா டிவியை உயிர்ப்பித்தான். அதில் ஏதோ ஒரு குத்துப் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. ஜிகினா எழுந்தாள் ”அவ என் சுண்டு விரலுக்கு கூட ஈடாகமாட்டா, இந்த பாட்டுக்கு நான் ஆடுரம் பார்” என டிவியின் முன்னால் போய் காலகற்றி நின்றாள். பாட்டின் இரண்டாவது பாதியிலிருந்து ஆடத் துவங்கினாள். வளைந்து நெளித்து சுழித்து பாட்டின் இசைக்கு பிசகாமல் ஆடிக் கொண்டிருந்தாள். சீராளன் எழுந்து போய் அவள் அணிந்திருந்த பனியனை கத்தியால் கிழித்து அவளின் உடலிலிருந்து தூக்கி எறிந்தான் அறையின் மஞ்சள் வெளிச்சத்தில் போதை எல்லாரையும் நனைத்திருக்க, ஜிகினாவின் தொள தொள உடல் ஆடைகளற்று குதித்துக் கொண்டிருந்தது பாட்டு முடிந்ததும் அவள் நின்றாள். சீராளன் அடக்க மாட்டாமல் ஜிகினாவை அள்ளியெடுத்து சோபாவில் கிடத்தினான்.

“நான் உள்ள போ” என்றதற்கு இருவருமே ஒரே நேரத்தில் ”மாட்டோம்” எனச் சொல்லி சிரித்தார்கள். சீராளன் ஜிகினாவை மிக மென்மையாயும் ஆழமாயும் புணர்ந்தான். நாங்கள் குடித்த படியே பார்த்துக் கொண்டிருந்தோம். சீராளனின் வேகம் சீராய் அதிகரித்து உச்சத்தில் குறியை வெளியிலெடுத்து ஜிகினாவின் சதை குலுங்கும் தொப்பையில் பீய்ச்சினாள். ஏய் ச்சீஈ என சிணுங்கியபடியே துடைத்தாள். சீராளன் மீண்டும் வந்து குடிக்க ஆரம்பித்தான். ஜிகினா கால்களையகற்றியபடி சோபாவில் படுத்த வாக்கில் மதுவை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். குணாவைப் பார்த்து நடுவிரலால் அழைத்தாள்.
“ஏய் பாடிகாட் இங்க வா. காட்டான் மாதிரி இருக்க வந்து விடு வா” என சீண்டினாள்.

குணா எழுந்து அவளுக்காய் சென்றான். நாங்கள் ஆவலாய் அவன் புணரப் போவதை பார்க்க விரும்பினோம். குணா சோபாவின் பக்க வாட்டிலிருந்த ரம் புட்டியை எடுத்தான். யாரும் எதிர்பார்க்க வண்ணம் ஜிகினாவின் தலையில் அப்புட்டியை உடைத்தான். அனைவரும் பதறினோம். அய்யோஓ எனக் கத்தின அவளின் வாயை ஒரு கையினால் அடைத்து, உடைந்த பாட்டிலை அவளின் அடிவயிற்றில் ஆழமாய் சொருகினான், நாங்கள் அதிர்ந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்து விட்டது. ஜிகினா வாய் பிளந்து சோபாவிலிருந்து மடங்கி கீழே சரிந்தாள். குணா எச்சிலைக் காறி அவளின் முகத்தில் துப்பி ”தெவுடியா” என்றான்.

சீராளன் குளியலறைக்கு சென்று வாளியில் தண்ணீர் கொண்டு வந்தான். என் கந்தலான சிவப்பு பனியனைக் கொண்டு சோபாவில், தரையில் தேங்கியிருந்த இரத்தத்தை துடைக்க ஆரம்பித்தான். நான் ஹாலில் இரைந்திருந்த மது புட்டிகளை, தம்ளர்களை, உணவை ஒழுங்க படுத்த ஆரம்பித்தேன். தாமஸ் உள்ளே இருந்து ஒரு போர்வையைக் கொண்டு வந்து ஜிகினா உடலை முழுவதுமாய் மூடி தலைப்பக்கமும் கால்பக்கமும் நைலான் கயிறைக் கொண்டு கட்டினான். இரத்த வாடை குப்பென அறை நிறைத்தது. உடலை கூடத்தில் கிடத்திவிட்டு, டைனிங்க் டேபிளில் அமர்ந்து மெளனமாய் சாப்பிட்டோம். மேலும் குடித்தோம். குணா தன் இரத்த ஆடைகளை கழற்றிப் போட்டான் ஒரு பாலிதீன் பையில் அவளின் ஆடைகளையும் சேர்த்துத் திணித்தோம்.

பாலீதீன் பையை சமயலறைக்கு எடுத்துப் போனான் சீராளன். சற்று நேரத்தில் துணி கருகும் வாடை அறையை நிறைத்தது. நானும் குணாவும் உடலை தூக்கிக் கொண்டு போய் வீட்டின் பின் புறம் கிடத்தினோம். குணா ஒரு வாளி நிறையத் தண்ணீரை ஹாலில் ஊற்றினான். சன்னல் கதவு எல்லாவற்றையும் திறந்து வைத்தேன். அவரவர் நிலைகளில் சற்று நேரம் அமர்ந்திருந்தோம்.
”குணா வண்டிய திருப்பி ரிவர்ஸ்ல வை” என்றேன்..

நானும் தாமசும் கொண்டு வந்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீட்டின் பின் பக்கம் போனோம். சீராளன் இன்னொரு அகலமான பெட்ஷீட்டை கோணிப்பையாக்கினான். உடலை முதலில் நான்கு துண்டாக்கினோம். பிறகு எட்டாய் பதினாறாய் வெட்டினோம், குடலும் சதையும் உடல் துண்டுகளும் அந்த போதையிலும் வயிற்றைப் பிரட்டியது. குணா துண்டிக்கப்பட்ட தலையின் முகத்தை தரையில் தேய்த்து சிதைத்தான். எல்லாவற்றையும் சீராளன் வீடியோ எடுத்தான். பெட்ஷீட்டினால் பை போல செய்து உடல் துண்டுகளை போட்டுக் கட்டினோம். நானும் தாமசுமாய் தூக்கி வந்து டிக்கியில் கிடத்தினோம். சீராளனை வீட்டிலிருக்க சொன்னோம். வீட்டை இன்னும் ஒரு முறை கழுவச் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினோம்.

பதட்டம் பயம் எதுவும் இல்லாமல் இருந்தது. தாமஸ் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். வண்டி சீராக சென்று கொண்டிருந்தது. மிகக் குறுகலான வளைவுகளை குணா நேர்த்தியாய் கடந்தான். ஒரு வளைவில் நிறுத்தினான். ”இது அகல பாதாளம். ஒரு துண்ட இங்க போடு” என்றான். பையை திறந்து ஒரு துண்டை தூக்கி பள்ளத்தில் எறிந்தேன். வண்டி நகர்ந்தது.


ஓவியம்: salvador dali

மேலும்

Wednesday, March 9, 2011

அத்தியாயம் நான்கு. ஜிகினா வதை

காலை பத்து மணிக்கு ஹில்வியூ ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். நாளை மாலைதான் ஜிகினா வருவதாய் தகவல். ஹில் வியூ ஐந்து நட்சத்திர வசதி கொண்டது. தனித்தனிக் காட்டேஜ்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். கொடைக்கானல் மலை ஏறும்போதே சீராளன் உற்சாக மிகுதியில் திளைத்தான். வழியெங்கும் சீட்டியும் விசிலுமாய் வந்தான். வரவேற்பில் சீராளன்தான் பேசினான். நான்கு படுக்கையறைகள் கொண்ட காட்டேஜை புக் செய்தோம். காட்டேஜ்க்கு பக்கத்திலேயே பார்க்கிங் வசதி இருந்தது. காரை உள்ளேயே ஓட்டிக் கொண்டு போய்விட்டோம். காட்டேஜைச் சுற்றிலும் அழகான தோட்டம். விதம் விதமான பூக்களும், செடிகளும் மென் சூரிய ஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. இந்த மலைப்பிரதேசமும் சுத்தமான காற்றும் ரம்மியமாக இருந்தது. என்னால்தான் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஜிகினாவிடம் உண்மையைச் சொல்லி அவளை எங்காவது தலைமறைவாக இருக்கச் சொல்லலாமா? என்கிற யோசனை எழுந்தது. ஜிகினா ஒரு குழந்தையைப் போலத் தூய்மையானவள். ஏன் வாழ்வு அவளை இப்படி விரட்டியடிக்கிறது? என்பதுதான் தெரியவில்லை.

அவள் அறிமுகப்படுத்திய ஆண்களின் உலகம் மிக விகாரமாய் இருந்தது. பொதுவாகவே ஆண்கள் மீது எனக்குப் பெரியதாய் நம்பிக்கை இருந்ததில்லை. ஆளுமைகள், அரசியல் தலைவர்கள், இளைஞர்கள், கிழவர்கள் என்கிற பாகுபாடுகள் இல்லாது, பணமிருக்கிற எல்லா நாய்களுமே ஜிகினாவை வேட்டையாடின கதைகளைத்தான் அவளுடனிருந்த நான்கு நாட்களிலும் கேட்டுக் கொண்டிருந்தேன். முதலாளிக் கிழவர்கள் பற்றிய கதைகளைச் சொல்லும்போது ஜிகினா உற்சாகமானாள். தமிழ்நாட்டின் கொழுத்த பணக்காரக் கிழவன் ஒருவன், போதைக்குப் பிறகு நீள மறுத்த அவனின் பச்சை மிளகாயை இரவெல்லாம் கையில் பிடித்துக் கொண்டு அழுத கதையை சிரிப்பை அடக்க முடியாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். பெரும்பாலான ஆண்கள் அவளை ஆடைகளில்லாமல் நடனமாடவிட்டு சுயமாய் இன்பித்துக் கொண்டார்களாம். நடிக்க வந்த புதிதில் பிரபல நடிகன் ஒருவன் ஜிகினைவை தலைகீழாய் உத்திரத்தில் கட்டித் தொங்க விட்டு, இரத்தம் தோய வன் புணர்ந்தானாம். இரண்டே வருடங்களில் அட்ரஸ் இல்லாமல் போன அவனை, வீட்டிற்கு வர வழைத்து நாய்களை ஏவிப் பழி தீர்த்துக் கொண்டதாகவும் சொன்னாள். அரசியல்வாதிகள் எப்போதும் கூட்டமாய்த்தான் வருவார்களாம். தகப்பனும் மகனும் ஒரே இரவில் வந்த கதையையும் வெறுப்போடு சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரு மூத்த அரசியல்வாதி குடித்த மதுவில், தன் மூத்திரத்தைச் சேர்த்துக் கொடுத்த கதையைச் சொல்லித்தான் வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு முறை தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பரம்பரை நடிகன் ஒருவன், சிறுவனாக இருந்தபோதே இவளிடம் வந்து ஆடைகளைக் கழற்றிக் காண்பிக்கச் சொல்லியிருக்கிறான். கோபத்தில் இரண்டு அறை கொடுத்து அனுப்பி இருக்கிறாள். சினிமாவில் தளர்ந்து போன பின்பு, அவன் மீண்டும் ஒரு நாள் வந்திருக்கிறான். பனிரெண்டு வயதில் தன்னை அவமானப் படுத்தியதற்கு பழிவாங்குவதற்காக இப்போது வந்திருப்பதாகவும் அவளைக் கதறக் கதற புணரப்போவதாகவும் சொல்லிவிட்டு அவளை அறைந்தானாம். வெகுண்டெழுந்த ஜிகினா கோபத்தைக் காண்பிக்காமல் தன் ஆளுமையை அவன் மேல் பிரயோகித்திருக்கிறாள். அவன் சாகும் நிலையைத் தொட்டவுடன், பயந்துபோய் மூச்சிரைத்துப் பாதியில் எழுந்து ஓடியிருக்கிறான். இதைச் சொல்லும்போதும் அவள் குரலில் கேலியையும் உறுதியையும் ஒருங்கே உணரமுடிந்தது.

ஜிகினாவைச் சந்திக்கும் முன்பு தமிழ்நாட்டின் ஓரிரு ஆளுமைகளின் மீது எனக்கிருந்த மரியாதையும் சுத்தமாய் காணாமல் போனது. அவர்களின் வக்கிரங்களை அவள் சொல்லிக் கேட்டபோது ஆத்திரத்தின் உச்சத்தை அடைந்தேன். ஜிகினா கடைசியில் சொன்னதுதான் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ’என் வாழ்வு பரவாயில்லை. என்னை ஓரளவுதான் இவர்கள் சீரழித்தார்கள். என்னை விட சீரழிந்து போனவர்களின் பட்டியல் இங்கு ஏராளம்’ என்றாள். ஒரு இரவு முழுக்கப் பேசியே கழிந்தது. விடியலில் ஜிகினா கமறும் குரலில் இப்படிச் சொன்னாள். ”இந்த அறம்,புனிதம், ஒழுங்கு, கலாச்சாரம், அன்பு, கருணை, நேர்மை போன்ற வார்த்தைங்களுக்கெல்லாம் எந்த அர்த்தமுமில்லை குட்டிப்பையா, நான் வாழ்க்கைல ஒருமுற கூட இந்த உணர்வுகளை அடைந்ததே இல்லை. சரியா சொல்லனும்னா நான் வாழறத விட இழிவானது வேறொண்ணுமில்ல”

இந்த வாக்கியம் பல வருடங்கள் என்னைத் தொந்தரவு செய்தது. என் வாழ்விற்கும் அந்த வாக்கியம் சரியாய் பொருந்துவதாய்த்தான் தோன்றியது. அவ்வப்போது சொல்லிக் கொள்வேன். ”ஆம் என் வாழ்வை விட இழிவானது வேறொன்றும் இல்லைதான்” இடையில் விஜயலட்சுமி சில நம்பிக்கைகளைத் தந்திருந்தாலும், சொற்பகாலமே அந்த நம்பிக்கைகள் இருந்தன. பிறகு ஏற்பட்ட வெறுமை, முன்பை விட மோசமாய் இருந்தது. இப்போதும் கூட ஜிகினாவின் அந்த விடியற்காலை வாசகத்தை நினைத்துக் கொள்வதுண்டு. நான் வாழ்வதை விட இழிவானது வேறொன்றுமில்லை.


தோட்டத்தை ஒட்டிய படுக்கையறையை நான் எடுத்துக் கொண்டேன். எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொண்டேன். காலை உணவு வந்ததும் தாமஸ் அழைத்தான்.
”சாப்பிட வா”.
படுத்த வாக்கிலேயே “வரேன் நீங்க எல்லாம் சாப்பிடுங்க” என்றேன்
தாமஸ் சொன்னான் “ஜிகினாவை நாம கொல்ல வேண்டாம்”
நான் எழுந்து வெளியே வந்தேன் ”நன்றி தாமஸ்”
”உன் முகம் எனக்குத் தெரியும், என்ன பிரச்சின ஆனாலும் பரவால்ல அவள நாம காப்பாத்துறோம்”
நான் உற்சாகமானேன். குணாவும் சீராளனும் புரியாமல் பார்த்தார்கள்.
என்ன? என்றான் குணா
“சொல்றேன். மொதல்ல சாப்டுவோம். நல்ல பசி” என்றபடியே டைனிங் டேபிளில் அமர்ந்தேன்.
சாப்பிடத் துவங்கினோம்.
புரியாமல் பார்த்த குணாவிடமும் சீராளனிடமும் ”ஜிகினா என்னுடைய நண்பி என்றேன்”. ஓ! என சிரித்தான் சீராளன்.

குணாவின் முகம் இறுகியது போலிருந்தது. நால்வரும் அமர்ந்து சாப்பிட்டோம். பின்பு அவரவர் அறைக்குப் போய் படுத்துக் கொண்டோம். ஒரு மணி வாக்கில் உணவு வந்திருப்பதாய் சீராளன் எழுப்பினான். மேசையில் ரெமி மார்டினும் இருந்தது. குடிக்கும் பிராண்ட் பற்றிய அக்கறைகள் எங்கள் நால்வருக்குமே கிடையாது. பெரும்பாலும் டாஸ்மாக்கில் என்ன கிடைக்கிறதோ அதையே எந்தப் புகாருமில்லாமல் குடித்தோம். அதுவும் கடந்த இரண்டு வருடமாய் குறைந்து போனது. தாமஸ் எல்லாருக்கும் மதுவைக் கலந்தான். எதுவும் பேசிக் கொள்ளாமல் குடிக்க ஆரம்பித்தோம். அறை குளிர்ந்து போயிருந்தது. சன்னலுக்கு வெளியே உறைப்பில்லாத சூரியன் மந்தமாய் தாவரங்களைக் கலவிக் கொண்டிருந்தது. பகல் குடியை பாண்டிச்சேரியில் வெகுவாய் அனுபவித்திருந்ததால், குடிக்கும் போது பாண்டி நினைவு வந்தது. கூடவே விஜியின் முகமும். நினைவுகளை உதறித் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

”ஜிகினாவைக் கொல்ல முடியாது. ஆனா கொன்னுட்டா மாதிரி அவனை நம்பவைக்கனும் எப்படி?”
குணா கேட்டான் "ஏன் கொல்ல முடியாது?"
”ஏன்னா அவ ரொம்ப நல்லவ. குழந்த மனசு. நாலு நாள் அவளோட பழகி இருக்கேன்.”
”இதுவரைக்கும் நம்மால கொல்லப்பட்டவங்க மட்டும் என்ன கெட்டவங்களா? இது நம்மோட வேலை அவ்ளோதான்.”
”இதுவரைக்கும் நான் கொன்ன யாரையுமே எனக்குத் தெரியாது. முதல் முறையா எனக்குத் தெரிஞ்ச ஒருத்திய கொல்லனும்ங்கிற நிலமை வரும்போது கஷ்டமா இருக்கு. நெஜமா என்னால ஜிகினாவ சாகடிக்க முடியாது”
”சரி அப்ப நீ ஒதுங்கிக்க. நான் முடிக்கிறேன்.”
நான் திகைத்தேன். ”என்ன குணா இப்படி சொல்ர?”
”இதெல்லாம் வேலைக்காவதுப்பா. நாளைக்கு அந்தத் தாயோலிக்கு விஷயம் தெரிஞ்சதுன்னா, நம்மள ஒண்ணுமில்லாமப் பண்னிடுவான். நாம இன்னும் ரெண்டு வருஷம் மதுரைல இருக்கனும். அவன பகைச்சிட்டு ஒண்ணும் பண்ண முடியாது.”

”நீ சொல்றதும் சரிதான். நான் இத பக்காவா ப்ளான் பண்ரேன். நாளைக்கு இங்க வர்ர ஜிகினா கிட்ட விஷயத்த சொல்லி, உடனடியா எங்காச்சிம் வெளிநாட்டுக்கு அனுப்பிடலாம். ரெண்டு வருஷத்துக்கு எந்த காரணத்தைக் கொண்டும் வெளி உலகத்துக்கு வரக்கூடாதுன்னும் சொல்லிடுறேன். ஒரு வாரம் கழிச்சி ஜிகினாவோட அக்கா போய் ஜிகினாவை காணோம்னு போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கட்டும். போலிஸ் விஷயத்தை மீடியாக்கு சொல்லும். அதன் மூலமா அவ செத்துதான் போய்ட்டான்னு இவனும் நம்பிடுவான்.”

தாமஸ் குறுக்கிட்டான். ”வேலைக்காவது. ஜிகினா கடைசியா வந்த இடம் இதான்னு போலிஸ் இங்க வரும். தங்கி இருந்தவங்க டீடெய்ல்ஸ் கேக்கும். நாம கொடுத்த அட்ரஸ் போலின்னு தெரியவரும். சந்தேக லிஸ்ட்ல வருவோம். நம்ம அடையாளம் இதான்னு நிச்சயம் ஒருத்தனாவது சொல்வான். ரிசப்சன்ல இருக்க லைவ் கேமரால கூட நாம விழுந்திருக்கலாம். ரொம்ப சுலபமா மாட்டிப்போம்.”

நான் சொன்னேன் “அட அவளைக் கொன்னாலும் இதே நிலமைதான். எப்படியும் அவங்க அக்கா கம்ப்ளைண்ட் கொடுக்கத்தான் போறா, போலிஸ் நிச்சயம் இங்க வரும்.”
அமைதியாய இருந்த சீராளன் சொன்னான். ”அப்ப நாம இங்க வந்தது தப்பு நாளைக்கே காலி பண்ணிடலாம்”
நால்வருக்குமே விபரீதம் புரிந்தது. இங்கு வந்தது எத்தனைப் பெரியத் தவறு!
சீராளன் தொடர்ந்தான்
”ஜிகினாவை காப்பாத்தனும்னு நினைக்கிறது டேஞ்சர். இங்க வச்சி முடிச்சாலும் மாட்டிப்போம். நாம நாளைக்கு காலைல கிளம்பிடலாம். ஜிகினா ட்ரிப்பை முடிச்சிட்டு ரிடர்ன் வரும்போது மலைப்பாதைல பிடிச்சிடலாம். ஆனா எப்ப ரிடர்ன் வரா, எப்படி வராங்கிறதலாம் தெரிஞ்சிக்கனும்”

நான் தலையைப் பிடித்துக் கொண்டேன். எப்படிச் சொதப்பி இருக்கிறேன். எப்படி இந்த செண்டிமெண்ட் என் மூளைக்குப் போனது எனத் தெரியவில்லை. ஜிகினா மட்டுமா நல்லவள்? நாங்கள் கொன்ற அனைவருமே நல்லவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். குடும்பம், குழந்தைகள் என சந்தோஷமாய் சமூகத்தில் எவரையும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்திருக்க கூடும். தனக்குத் தெரிந்தவரைக் கொல்வதுதான் பாவம் என்ற மனநிலை திடீரென எப்படி வந்ததெனத் தெரியவில்லை. அடிப்படையிலேயே என்னிடம் ஏதோ தப்பு இருப்பதாகத் தோன்றியது. மீண்டும் குடித்துவிட்டு சொன்னேன்.

“லேசா தடுமாறிட்டேன். ஜிகினாவை முடிச்சிடலாம். இங்க வச்சி வேணாம். என்னிக்குத் திரும்பிப் போறா? எப்படிப் போறாங்கிற விஷயத்தை நான் தெரிஞ்சிக்கிறேன். மலைப்பாதைலயே வச்சி முடிச்சிருவோம். விபத்து மாதிரி பண்ணிடலாம். யாருக்கும் சந்தேகம் வராது”
“அவன் துண்டு துண்டா வெட்டனும்னு சொன்னான்” என இறுகிய குரலில் சொன்னான் தாமஸ்
நான் அமைதியாக இருந்தேன்.
தாமஸின் அலைபேசி ஒலித்தது.
மதுரைல இருந்து, அவன் தான் என்றபடியே அலைபேசியை உயிர்பித்தான்.
“வந்தாச்சிண்ணே”
…………………..
“அங்கதான் இருக்கோம்”
…………………………..
“வீடியோவா?”
…………
“செர்ணே. பண்ணிடலாம்ணே”
வைத்தான்
”நாம ஜிகினாவை துண்டு துண்டா வெட்டி வீடியோ எடுத்து அவன்கிட்ட கொடுக்கனுமாம்”
நான் துணுக்குற்றேன். மேலும் சொன்னான்
“நம்ம முகம் தெரியாத மாதிரி எடுத்துக் கொடுக்க சொல்றான்”
நான் அதிர்ச்சியாய் கேட்டேன். “இதுக்கு எப்படி தாமஸ் ஒத்துகிட்ட?”
“வேர வழி”
“அதுலாம் முடியாதுன்னு சொல்”
“இனிமே சொல்ல முடியாது. செஞ்சுதான் ஆகனும்.”

குணா சொன்னான் “செஞ்சி முடிச்சப்புறம் சிதறிக் கிடக்கிறத வீடியோவா எடுத்துக் கொடுக்கலாம். அவ்ளோதான் வந்திச்சின்னு சொல்லிப்போம். நமக்கு மட்டும் என்ன வீடியோ எடுக்கனும்னு ஆரம்பத்துலயேவா சொன்னான். மொபைல்லயே எடுப்போம். பெரிசா ஒண்னும் கிளாரிட்டி இல்லாம இருக்கிறது பெட்டர்”

நான் எதையும் சாப்பிடாமல் இன்னும் இரண்டு ரவுண்டுகளை ஒரே கல்பில் அடித்து விட்டுப் போய் படுத்துக் கொண்டேன். போதை விழிகளை ஆக்ரமித்தது.

ஓவியம் : salvador dali

மேலும்

Featured Post

test

 test